(Reading time: 7 - 13 minutes)

Sangamam

மாதிரி நகரம் வேண்டோம்

மண்ணை விற்க மறுத்தோம்

உறுதியோடு மொத்த கிராமம்

உதவாது இனி அங்கு பணபலம் (26)

 

மேகத்திலே மாளிகை கட்டி

வானத்தையே கூரை ஆக்கி

சாதிக்கும் வல்லமை அவனிடம்

செய்தி அறிந்ததும் ஆனான் உலை களம் (27)

 

பறந்து கொண்டே ஆணைப் பிறப்பித்தான்

பணம் செய்யாததை மதியூகத்தால் சாதித்தான்

பள்ளிகள் மருத்துவமனைகள் மறுப்பீரோ

பல விதத்திலும் வசதி இதை எதிர்ப்பீரோ (28)

 

வானம் பார்த்த வறண்ட நிலம்

வருமோ மழை மேகம் என ஆவலுடன் அனுதினம்

வற்றாத செல்வங்கள் வாசல் வந்து தட்ட

வேண்டாம் என்று சொல்ல தெம்பு எங்களுக்கு இல்ல (29)

 

அவள் சொல் ஒலிக்கவில்லை

அங்கு கருத்துக்கும் மதிப்பில்லை

அம்பைக் கெஞ்சிப் பயனில்லை

அதை எய்தியவனே!! இனி நிம்மதி உனக்கில்லை (30)

 

வலது காலை எடுத்து வைத்து

அவன் வாசல் புகுந்தாளே அதை

அவன் அறிந்தானோ (31)

 

அக்கணம் அவன் இதயம் தாறுமாறாய்

தறிகெட்டு ஓடியது ஏன் என

அவள் தெளிவாளோ (32)

 

அங்கு அவன் இல்லை வீட்டில் 

அவனிருப்பது தற்சமயம் அயல்நாட்டில்

ப்ரித்வியின் பெற்றோர் என்ற நொடி

பணிந்தாள் தன்னியல்பாய் அவர் காலடி (33)

 

தான் வந்த காரணம் அவர்தம்

தனயனின் ஆணவம்

தரணியே திரண்டு வந்த போதும்

தரமாட்டேன் என் இதயம் துடிக்கும் வரைக்கும் (34)

 

அதே கணம் அங்கே கருத்தரங்கம்

அனலாய் வீசிய விவாதம்

அகிலமே என் ஆளுமையில் அடங்கும்

அடைந்திடுவேன் எனது கனவு திட்டத்தின் இதயம் (35)

 

அரக்கன் அல்ல அவன் பலாக்கனி

அயராத உழைப்பு பலருக்கு ஏணி

அன்போடு ஆதரித்து வாழ வைக்கும் கனலி (36)

 

தகித்தாலும் தித்திப்பானவன் 

தாய் தந்தை சொல் தட்டாதவன் (37)

 

தவறு செய்து நான் கண்டதில்லை

தோளுக்கு மேல் வளர்ந்தும் அவன் சிறு பிள்ளை

எடுத்துச் சொல்வேன் உன் வாதத்தை

எதிர் வாதம் அவன் தரப்பு கேட்காமல்

எவ்வாறு தீர்மானிக்க நியாயத்தை (38)

 

சுற்று நிலம் அவன் ஆளுகை

சிறையானாள் அங்கு முற்றுகை

சாகும் வரை உண்ணாவிரதம்  

சாதிக்க அவள் ஏந்திய ஆயுதம் (39)

 

நட்சத்திர உணவகத்தின் சுவை 

நாவிற்கு இன்று ருசிக்கவில்லை

ஏனோ அவனுக்குப் புரியவில்லை

ஏன்!! பசித்தும் உண்ண மனமில்லை (40)

 

பற்றியது தீப்பொறி - அவள் சத்தியாகிரகம்

பத்திரிக்கை தலையங்க செய்தி

பறந்து வந்தான் தன் தாய் சொற்படி

போரைச் சந்திக்க களம் இறங்கினான் நேரடி (41)

 

இருவர் பெற்றோர் சுற்றத்தோர்

புடை சூழ வீற்றிருந்தாள்

இரண்டாம் நாள் அறப்போர் (42)

 

காற்று சுழற்றியடிக்க

சூறாவளியாய் வருகிறான் 

கார்மேகம் சூழ்ந்திருக்க

சீறிப் பாய்ந்து சேர்ந்தான் அவன் (43)

 

பிற்பகலில் இருள் சூழ

புழுதியும் மின்னலும் பார்வை மறைக்க

கலைந்து விட்டது கூடிய கூட்டம்

நிலையாய் நின்றிருந்தாள் அவள் மட்டும் (44)

 

தூரத்தில் எவரோ கைகாட்ட இனம் கண்டு

துரிதமாய் அணுகினான் சினம் கொண்டு

பற்றி உலுக்கினான் அவள் கரம் தொட்டு

பாவை சிலிர்த்தாள் அவன் ஸ்பரிசம் பட்டு (45)

 

மழையழகி முத்தமிட்டாள்

மண்னரசன் வாரி அணைத்தான்

இது என்ன அதிசயம் 

இதுவல்லவோ என்னவளி(னி)ன் ஆசைமுகம்  (46)

 

கனவோ என ஒரு கணம் திகைக்க

கடகடவென இடியோசை நனவென உரைக்க

கண்ணிமைக்க மறந்தனர் இருவரும்

கருத்தினில் பதியவில்லை வேறெதுவும் (47)

 

அடைந்திடுவேன் என ஆணையிட்டவன்

அவள் கையில் பிடிமண்ணாய் அடங்கி நின்றான்

தரமாட்டேன் என சபதமிட்டவள்

தஞ்சமென அவன் நெஞ்சில் சாய்ந்து நின்றாள் (48)

 

அவன்  யாரோ!  அவள் வேறோ!

அவள்  நெஞ்சின் துடிப்பாய் அவனோ

அவன் உயிரின் வேராய் அவளோ

கனவின் காட்சி கண் முன் நிஜமாய்

காலம்  மாறினும் பிரியா உறவாய் (49)

 

மழையும் மண்ணும் கலந்து விட்ட தருணம்

மனங்கள் இணைந்தன புதியதோர் காதல் காவியம்  (50)

 

இவர்கள் காதல் சங்கமத்தில் புது ஜனனம்

 

அவள் நேசிக்கும் மண்ணின் உரமானான்

அவன் சுவாசிக்கும் திட்டத்தின் செயலானாள் (51)

 

பசுமைப் புரட்சி போற்றும்

பாரினிலே புதுவகை கிராமம்

இயற்கையோடு  இசைந்த தொழில் நுட்பம்

இது உலகத்திற்கே சிறந்த முன்னுதாரணம்   (52)

 

வான்மழை செம்மண் வழியே

வர்ஷினி ப்ரித்வி காதல் சங்கமம் - ஒரு

வளமான  மறுமலர்ச்சியின்  அஸ்திவாரம் (53)

 

என் முதல் முயற்சிக்கு நீங்கள் கொடுத்த அங்கீகாரமே மீண்டும் ஒரு கவிதை சிறுகதை எழுத என்னைத் தூண்டியது... chillzee க்கும் என் அன்புத் தோழிகளுக்கும் மனமார்ந்த நன்றி. உங்கள் கருத்துக்களுக்காக ஆவலுடன் காத்திருக்கிறேன்

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.