(Reading time: 4 - 8 minutes)

சிட்டு குருவியுடன் ஒரு நாள் - சஹானி

திகாலை பொழுது.  இந்த பொழுதை விரும்பாதோர் உண்டோ. இந்த அழகிய பொழுதினில் தான் நானும் இவ்வுலகில் பிறந்தேன். இதோ கடந்த இரண்டு நிமிடங்களுக்கு முன் என்ன? பிறந்து இரண்டே நிமிடத்தில் நான் எப்படி பேசுகிறேன் என்று யோசிக்கிறீர்களா? மொழி என்பது ஓசையால் வெளிப்படுதில்லை நாம் மனதில் எண்ணுவதே  மொழியாகும் இதோ நானும் இது போன்றே எண்ணுகிறேன் அது உங்களுக்கு புரிகிறது. 

ம்ம் இன்னும்  சில நிமிடஙங்களில் எங்கள் உறவினர்கள் இன்றைய நாளுக்கான இரை தேடி சென்று விடுவர் .நான் மட்டும் இந்த வீட்டில் தனித்து விடப்படுவேன்.

Chitukuruviசெல்லம், என்ன தனியா உக்கார்ந்து எதோ யோசிச்சிட்டு இருக்கீங்க?

ம்மா , கிளம்பியாச்சா நீங்க?

ஆமா செல்லம், காலைக்கான இரை தேடி கொண்டு வரேன் நீ பத்ரமா இருந்துக்கோ.

ம்ம், சரிமா  சீக்கரம் வந்துடுங்க.

என்று என் அம்மாவிடம் விடை பெற்றேன் நான்.

சிறிது நேரத்திற்கு பின்னர் என் அம்மா காலை உணவோடு வர அதை உட்கொண்ட பின் சிறிது நேரத்திற்கு ஓய்வு பெற்ற பின் மதிய உணவு சேகரிக்க சென்று கொண்டிருக்கும் சமயம் வந்தது அந்த சப்தம்

"டொப்"

அதோ அந்த ஆற்றங்கரைக்கு அருகில் இருக்கும் அந்த வீட்டம்மா கோதுமை  உமியை கொட்டி விட்டு செல்கிறார் மிகுந்த உற்சாகத்தோடு என் தாயை நோக்க, அவர்களின் முகத்திலும் சந்தோஷமே 

 ம்ம், மறுபடியும் ரொம்ப தூரம் போகனுமேனு நினைச்சேன் டா இப்போ பாரு ரொம்ப பக்கத்துலயே உணவு கிடைச்சிட்டு  நீ இங்கயே பத்ரமா இருந்துக்கோ நான் போய் இரவுக்கும் சேர்த்து தேவையான உணவை எடுத்துட்டு வந்துடுறேன். என்று கூறி என் அம்மா அந்த வீட்டின் வாசலை அடையும் சமயம் அங்கு என் உறவினர்களும்  வந்து சேர்ந்தனர். எங்கள் வீட்டிலிருந்த சிறு துளை வழியே அங்கு நடப்பவற்றை கண்டு கொண்டிருந்தேன். சிறு சிறு உணவுகளை சேகரித்து கொண்டிருந்தார்கள் எம்மவர்கள். 

இந்த மனிதர்கள் சிறுக சிறுக சேமிப்பதை எங்களிடமிருந்து தான் கற்று கொள்கிறார்கள் என்பதை உணர்ந்து கொண்டேன்.

சிறிது நேரத்திற்கெல்லாம் காதை கிழிப்பது போன்றொரு சப்தம்.

ம்மே ம்மே, என்று அங்கு வந்து சேர்ந்தான் முரட்டாடு ஆனவன். அவனை கண்டதுமே என்னுள் ஒரு பயம்

இவனை பற்றி முன்னமே அம்மா கூறியிருக்கிறார்கள், சரியான முரடன், மற்றவர்களிடம் இரக்கம் காட்டாத ஒரு கொடூரன். இவனை கண்டாலே மற்றவர்கள் தானகவே விலகி விடுவர். அது துஷ்டணை கண்டால் தூர விலகு என்ற எண்ணமுடையோர் சிலர். ் அவனின் செயல்களால் பயந்து விலகுவர். இப்போதும் இவன்  வருகையால் எம்மவர்கள் விலகி விட்டனர் மன தாங்கலோடு. கிளம்புவதற்கு முன் அம்மா கூறிய வார்த்தைளே காதில் ஒலிக்கிறது.

" செல்லம், தேவையான உணவுகள் கிடைத்த பின் உண்ணோடு சிறிது நேரம்  பொழுதை கழிக்க நல்லதோர் வாய்ப்பு" என்று.

மனமுழுதும் கவலையோடு  கண்களை அழுந்த மூடிய சமயம் நெஞ்சை பிளக்குமோர் சத்தம் ,

கிரீச்ச்ச்ச்ச்ச்ச், ம்ம்ம்ம்ம்மே

கண்களை திறந்த சமயம் தூரத்தில் ரத்த வெள்ளத்தில் அடிபட்டு கிடந்தான் அவன்.கண்களில் அப்படியோர் வேதனை ,ஆம்  மரண வேதனை, வாழ்விற்கும் சாவிற்கும் இடையேயான போராட்டம் அது.

 இறக்கும் தருவாயில் அவன் வாயை திறக்க தண்ணீருக்காக போல் என்று நான் எண்ணிய கணம் எம்மவர் அருகிலுள்ள ஆற்றங்கரையில் தங்களால் முடிந்தளவு சொட்டு தண்ணீரை கொண்டு வந்து  கொடுத்தனர். அவன் கண்களில் தெரிந்து என்ன? மன்னிப்பா?  நன்றியா?  இவை அனைத்தையும் தாங்கி இருந்தது அது. துடிதுடித்து மாண்டான் என் கண் முன்னே. என்னவென்ற காரணமே இன்றி வலித்தது என் நெஞ்சம். 

சில நிமிடங்களில் என் தாயும் வந்து விட, எதோ திக் பிமை பிடித்தது போல் அமர்ந்திருந்த என்னை தோள் தொட இது வரை என்னுள் தோன்றிய பயம் மேலும் அதிகரிக்க சட்டென்று திடுக்கிட என் தாயை இருகி அணைத்து கொண்டேன். ம்மா, ஏன்மா இப்படி  ஒரு இறப்புக்காகவா இவ்வுலகில் நான் பிறந்தேன் என்று கூறி மேலும் அழ என் தாயோ

இவ்வுலகில் பிறந்த எந்தவொரு ஜீவனுக்கும் பிறப்பு எவ்வாறு இன்றி அமையாததோ அது போல் தான் இறப்பும். ஆனால் எல்லோருக்கும் இது போன்றொரு இறப்பு ஏற்பட கூடும் என்பது அறிவின்மை

ஒவ்வொரு ஜீவ ராசிகளின் இறப்பும் அவர்கள்  வாழ்க்கை முறையே அமையும்.

இன்று நீ கண்ட.  அந்த,் மரணம் அவன் வாழ்ந்த முறையை கூறுகிறது . இதில் நீ பயப்பட என்ன இருக்கிறது. உன் வாழ்வு முறையை சிறப்பாக கையாண்டால் அதுவே நல்லது என்று பல அறிவுரைகளை கூறினார்.

இப்போது எனக்கு தெளிவு கிடைத்து விட்டது.  இவ்வுலகில் பிறந்த முதல் நாளில் என்னுள் பற்பல தெளிவுகள். இனி என் வாழ்வு முறையை சிறப்பாக அமைத்து கொள்வேன்.என் பிறப்பு -வாழ்வு- இறப்பு இவை கண்டு ஒருபோதும் அஞ்சாது தைரியமாக இவ்வுலகை எதிர் கொள்ள போகிறேன் நான்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.