(Reading time: 3 - 6 minutes)

காற்று வீச காத்திருந்தோம் - அக்தர்

This is entry #01 of the current on-going short story contest! Please visit the contest page to know more about the contest.

மேகத்தினுள் ஒளிந்து  விளையாடிய நிலா  அவ்வப்போது இதமான குளிரை தெளித்து ஒளியுடன் பிரகாசிக்கும் அழகை ஏதோ இதுவரை காணாதது போல் திரும்பி நின்று  வானத்தை வெறித்த தோழியை  கண்ட மது பொறுமை இழந்தவளாய்

"ஸ்வாதி என்ன முடிவு பன்னிருக்க? " என்றாள் ...

மதுவின் குரலில் நிகழ்காலத்திர்கு வந்தவள் சில நொடி மௌனத்திர்கு பின்

Katru veesa kathirunthom

"ம்ம் பிரியரது தான்  ஒரே வழி மது... இதுல முடிவு பன்ன என்ன இருக்கு??"

விரக்தியாக கூறியவளை பரிவுடன் பார்த்த  மது

"அப்போ ஆதி.. இந்த ஒன்றரை வயசில அப்பாவ பிரிஞ்சு எப்படி இருப்பான்? நினைச்சுப் பாரு ஸ்வா..  ?  சில குழப்பத்துக்கு தீர்வு உன்கிட்டயே இருக்கும் ஆனா பல குழப்பத்துக்கு தீர்வு வெளிய சொன்னா தான் கிடைக்கும்..அப்படி என்ன தான் உன் பிரச்சனை? என் கிட்டயாவது சொல்லேன்டி?"

ஆதங்கமாக கேட்ட தோழியை ஏக்கமாக பார்த்தவள் கரையுடைந்த கண்ணீரை துடைத்தப்படி

"அவன் மட்டும் இல்ல மது நா....னு...ம் எப்படி இருக்கப் போறேனு தெரியல" என்று தேம்பலுக்கிடையே பிதற்றியவள் சிறு நிதானத்திர்கு பிறகு

"கல்யாணமாகி ஆதி பிறந்து இந்த நிமிஷம் வர ஒவ்வொரு நாளும் கார்த்திக் எனக்கு புதுசா தான் தெரியுறான்.. அவன் கூட எவ்வளவு வருஷம் வாழ்ந்தாலும் எனக்கு அது சந்தோஷமான தருணமா தான் இருக்கும் .. ஆனா அவனும் இதே மாதிரி நினைக்கனம்னு ஆசைப்படறது எவ்வளவு முட்டாள் தனம் ?... ..நான் இல்லாத வாழ்க்கை தான் அவனுக்கு சந்தோஷம்னா கண்டிப்பா யார் என்ன சொன்னாலும் நானும் என் மகனும் அதற்கு தடையா இருக்க மாட்டோம் மது...."

குரலில் உள்ள தெளிவு முகத்தில் இல்லாததை கண்ட மது

"அவன  பத்தி இவ்வளவு பேசற...அப்பறம் ஏன் டி ஏதோ காரணம் சொல்லி கார்த்திக்க விட்டு போகனும்னு நினைக்கற ?"

கேள்வி  கேட்ட தோழியை தலையில் அடி பட்டு விட்டதா என்ற ஒரு பார்வை பார்த்தவள்

" ஏதோ காரணமா? ..."என் கூட வாழ்ந்ததை விட அவன் காதலிச்ச கயல் கூட வாழ்ந்திருந்தா இத விட நான் சந்தோஷமா இருந்திருப்பனா என்ன?" னு அவனோட டைரியில் எழுதியிருந்தத நீயும் தான பார்த்த? அவன் என் கூட சந்தோஷமா இல்ல  மது. இப்பவும் ஒன்னும் நடந்திடல"

மூச்சு  விடாமல் பேசியவள் திடீரென்று ஏதோ காற்று வளையத்திர்குள் அகப்பட்டது போல் ஓர் உணர்வு இருந்தாலும் அதையும் மீறி ஏதோ ஓடி ஆடி கலைத்து தாய் மடி சேர்ந்தது போல் நிறைவு மனதை நிைறத்தது. தன்னவனின் கை வளையத்திர்குள் என்று உணர்ந்ததும் இன்னும் வாகாக அவனுள் தன்னை புதைத்தவள்

"என் கூட இவ்வளவு காலம் வாழ்ந்து இப்போ உனக்கு நான் அலுத்துப் போயிட்டேன்ல?" என்று பெரியதாக எதையோ இழந்த எபக்டில் பேசியவளை சிரித்தப்படி விலக்கியவன்

"ஏய் குல்பி அந்த வரி நான் சந்தோஷத்தில எழுதினது அத நீ சந்தேகத்தில படிச்சது மட்டுமில்லாம என்னை விட்டு போக வேற முடிவு பன்னிருக்க இல்ல...ஆதியும் நீயும் எனக்கு ஒரு உலகம் டி.அப்போ இந்த நாலு வருஷம் இவ்வளவு தான் என்னை புரிந்து வைத்திருக்க ? " என்றவனை அணைத்து எண்ணில்லடங்கா சாரியை பொழிய கார்த்திக் மதுவை பார்த்து

"தேங்க்ஸ்" என்று கூறினான்.

அதை ஏற்றுக் கொண்டவள் போல் தலையை அசைத்தப்படி  ஸ்வாதியை பார்த்து  குறும்புடன் கண் சிமிட்டி விட்டு இருவரின் அன்புத் தோழியாக மட்டுமே அவர்களிடமிருந்து விடைப் பெற்றாள் மது என்கின்ற   "மது கயல் "

This is entry #01 of the current on-going short story contest! Please visit the contest page to know more about the contest.

 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.