(Reading time: 14 - 27 minutes)

 

"ரி..சரி.. அதற்கு இப்படி கத்தாதே..ஏர்போர்டில் எல்லோரும் நம்மையே பார்க்கிறார்கள்" என்று தணிவாக நாகராஜன் சொல்ல அதே தொனியில்," "தெரிகிறது தானே.. யார் முதலில் ஆரம்பித்தது. நீங்களா நானா" அழுத்தமாக பாயிண்டைப் பிடித்தார்.

ம்முலு  முன்கூட்டியே சிறப்பு ஏற்பாடுகள் செய்திருந்ததால் பயணத்தில் சிரமம் ஏதும் இல்லை. கைக் குழந்தையுடன் இளம் பெண் தனியாக பயணம் செய்ய இவர்கள் இருவரும் உதவிக் கரம் நீட்டி கலகலப்பாக அந்தக் குழந்தையுடன் விளையாடி மகிழ பயணம் அமைதியாகவே அமைந்தது.

நியு யார்க் நகரத்தில் தங்களின் இளைய மகளின் வீட்டை வந்தடைந்த விஜயா ராஜன் தம்பதியினர் தங்கள் பெண் காலில் அடிப்பட்டு பிராக்சர் ஆகி இருப்பதைக் கண்டு பதறினர்.

பெரிதாக ஒன்றும் இல்லை. ஹேர் லைன் பிராக்சர் தான் என்ற போதும் அவளது கணவர் பத்து நாட்களுக்கு ஸ்பெயின் சென்றிருப்பதால் உதவிக்கு யாரேனும் உடன் இருப்பது நலம் என்று ஆலோசித்துக் கொண்டிருந்தனர்.

" அம்மா நீங்கள் அங்கேயே குட்டுலுக்கு உதவியாக இருங்கள். அப்பாவை மட்டும் ஆதியுடன் அனுப்பி வையுங்கள். வெளி நாடு என்பதால் அப்பாவுடன் நான் உடன் இருப்பது தான் சரி" என்றாள் மருத்துவரான அம்முலு.

நாகராஜனுக்கு சர்க்கரை நோய், இரத்த அழுத்தம் இவற்றால் சிறுநீரக பாதிப்பு சிறிதளவு உள்ளது. அதனால் உணவில் கட்டுப்பாடு, மருத்துவ உதவி இதெல்லாம் வேண்டும் என ஆலோசித்து  அம்முலு  சொன்னதை எல்லோரும் ஒப்புக் கொண்டனர்.

நாகராஜன் ஆதியுடன் கிளம்பி இரண்டு மணி நேரம் கூட ஆகியிருக்காது.. உடனே விஜயா தன் மூத்த மகளுக்குக் கால் செய்தார். " அப்பா இன்னும் வந்து  சேரவில்லையா அம்முலு.. நீ என்ன சமைத்து வைத்திருக்கிறாய். வந்தவுடன் காய்கறி சூப் போட்டு குடுத்துடுடா" என்று படபடவென கூறிய தாயைப் பார்த்து வியந்து போனாள் அம்முலு.

" அம்மா.. அப்பாவுக்கு மெனு போட்டுக் கொடுத்ததே நான். எனக்குத் தெரியாதா" என்று அடக்கி விட்டாள்

மூத்த மகள் வீட்டிற்கு வந்து சேர்ந்த நாகராஜன் தன் மகளை அன்புடன் அணைத்து கொஞ்சி மகிழ்ந்து மறுகணமே, " அம்முலு... குட்டுலுக்கு போன் போடு... அம்மா கிட்ட பேசணும்" என கூற அம்முலு டயல் செய்து கொடுத்தாள்.

மறுமுனை தன் மனைவியிடம், " வந்து சேர்ந்துட்டேன் ம்மா.. நீ சாப்பிட்டாயா" என்று வினவினார்.

"இன்னும் இல்லை..குட்டுலு தூங்கி இப்போ தான் எழுந்தா.. அதான் சேர்ந்து சாப்பிடலாம் என்று...நீங்கள் சூப் குடித்தீர்களா..." என்று கேட்டார் விஜயா.

"ஏன் இன்னும் சாப்பிடாம இருக்க. நீ தான் பசி தாங்க மாட்டாயே.. முதலில் சாப்பிடு" என்று கடிந்து கொண்டார் நாகராஜன்.

"சரி நான் அப்புறம் பேசுகிறேன்" என்று தொலைபேசியை அணைத்தார் விஜயா.

ரு இரண்டு  மணி நேரத்திற்கெல்லாம் குட்டுலு காலிங் என்று திரையில் வர ஆதி ," அப்பா, அம்மாவாகத் தான் இருக்கும் நீங்களே பேசுங்கள் " என்று நாகராஜனிடம் தொலைபேசியைக் கொடுத்தான்.

"என்னங்க.. அந்த குளோபிலட் மாத்திரை தானே மதியம் போடுவது அதை சிவப்பு மூடி போட்ட டப்பாவில் வைத்திருக்கேன்.. மறக்காம போட்டு விடுங்கள்" என்று விஜயா கூற," அம்முலு கொடுத்துட்டா ம்மா... இப்போ அங்கே என்ன மணி ஆகிறது" என்று கேட்டார் நாகராஜன்.

"இங்கே சாயங்காலம் ஐந்து மணி..பக்கத்துக்கு வீட்டு  உமா கடைக்குப் போகிறாளாம். எண்ணை தீர்ந்து போய் விட்டது..அதான் நான் கூட போய் கொஞ்சம் சாமான் வாங்கி வரக் கிளம்பிக் கொண்டிருக்கிறேன்" என விஜயா கூற ," அங்கு அவ்வளவு பனி கொட்டுகிறது... உனக்கு குளிர் தாங்குமா... நீ ஏன் போகிறாய்.. இருப்பதை வைத்து சமாளி. உனக்கு சொல்லித் தர வேண்டுமா என்ன" என தடா போட காரிலேயே போய் பத்திரமா வந்து விடுவேன் என உமாவிடமும் பேச வைத்து அதன் பின்னே நாகராஜன் சம்மதிக்க கடைக்குச் சென்றார் விஜயா.

ம்முலுவும் குட்டுலுவும் இவர்கள் தங்கள் பெற்றோர் தானா இல்லை ஏதும் ஆள் மாறாட்டம் நடந்து விட்டதா என தனி உரையாடல் நடத்திக் கொண்டிருந்தனர்..

இதற்கிடையில் நியுயார்க்கில் திடீரென பனிப்புயல் வீச கடைக்குச் சென்ற விஜயகுமாரி அங்கே மாட்டிக் கொண்டார். உமாவிடம் இருந்து கைபேசியில் தன் கணவனிடம் தான் கடையின் உள்ளே பாதுக்காப்பாக இருப்பதாகக் கூறினார்..

"அப்பா... இங்கெல்லாம் தகுந்த ஏற்பாடுகள் செய்து விடுவார்கள்.. அம்மாவுடன் தான் உமாவும் இருக்கிறாளே. அப்புறம் என்ன. கடைக்குள் பத்திரமாக இருக்கிறார்கள். கவலைப் படாதீர்கள்" என்று கூறியும் ஒவ்வொரு பத்து நிமிடமும் உமாவின் கைப்பேசிக்குக் கால் செய்து தன் மனைவியின் நலம் விசாரித்துக் கொண்டே இருந்தார்.

ஒரு கட்டத்தில் கைப்பேசியும் செயலற்று விட அம்முலுவுக்குத் தான் தன் அப்பாவை சமாதானம் செய்வது பெரும்பாடாகப் போயிற்று.

"குட்டுலு... நீ கொஞ்சம் அந்த கடையில் இருந்து அம்மாவின் நலம் பற்றி தகவல் அறிந்து சொல். இங்கு அப்பா மிகவும் துன்பப் படுகிறார்" என அம்முலு சொல்ல குட்டுலு வெகு முயற்சிக்குப் பின் இன்னும் ஒரு மணி நேரத்தில் வீடு வந்து சேர்ந்து விடுவார்கள் என தகவல் சொன்னாள்.

அப்படியும் நள்ளிரவு தாண்டி மனைவியின் குரல் கேட்டு கண்ணீர் கசிய முகம் மலர நிம்மதியானார் நாகராஜன். அங்கு விஜயகுமாரியும் கணவன் தவிப்பாரே  தகவல் இன்றி  என்று எண்ணி தவித்துக் கொண்டிருந்தார். தன் கணவன் குரல் கேட்டதும் ஒரு நொடி விசும்பலே மொழியாகிப் போனது.

"உங்க பேச்சைக் கேட்டிருக்கணும் நான். நீங்க போக வேண்டாம் என்று சொல்லியும் போய் மாட்டிக் கொண்டேன்" என விஜயா கெஞ்சலோடு கூற ," "இல்லமா..நான் தான் அனாவசியமா ரொம்ப பதட்டப்பட்டு விட்டேன்" என்று கொஞ்சலாக மொழிய ஆச்சரியத்துடன் பார்த்துக் கொண்டிருந்த மகள்கள் இருவரும் " இதுவல்லவோ காதல்" என்று ஒரு சேர உரைத்தனர் அவரவர் மனதினில்.

றுநாள் அதி காலையிலேயே," குட்டிமா..நான் அவசரமாக போகணும்.மதியம் வந்து விடுவேன்" என்று அரைத் தூக்கமாக இருந்த மனைவியிடம் கூறிவிட்டு சென்றான்.

காலை, நேரம் சென்றே எழுந்த தந்தையிடம் கைப்பேசியை நீட்டினாள் அம்முலு. சிரித்துக் கொண்டே தன் மனைவியிடம் பேசிவிட்டு சாப்பிட்டு அம்முலுவிடம் கதை பேசிக் கொண்டிருந்தார் நாகராஜன்.

ஆதி வர," என்ன ஆதி முக்கியமான வேலையா.. காலையிலேயே கிளம்பி போய் விட்டாயாமே" என்று நாகராஜன் கேட்க

" ஆமாம் அப்பா.. மிக முக்கிய வேலை. இங்கு வந்து பாருங்கள். நான் செய்த வேலையை என்று லிவிங் ரூமிற்கு தன் மனைவியையும் அவளின் தந்தையையும் கூட்டி வந்தான்.

விஜயா மற்றும் குட்டுலுவைக் கண்ட அம்முலு அம்மா, குட்டுலு என்று தாவி அணைத்துக் கொண்டாள். விஜயா மகளை உச்சி முகர்ந்து திருஷ்டி கழித்துக் கொண்டிருந்த போது நாகராஜன் அங்கு வந்து மெல்ல தன் மனைவியின் கரம் பற்றினார்.

ஓராயிரம் வார்த்தைகள் சொல்லாததை அந்த கரம் பற்றுதல் பறை சாற்றியது.

அக்னி சாட்சியாக திருமணம் என்ற பந்தத்தில் இணைத்து இருக்கவே அன்று பற்றினேன் உன் கரத்தை , அதை என்றும் விட்டு விடுவேனோ என அவர் கரம்  சொல்லாமல் சொல்ல

கரம் பற்றியவன் காலம் முழுதும் துணை வருவான் என  சரண் அடைந்தேன். அந்த நம்பிக்கை என்றேனும் மாறி விடுமோ என  பதில் பேசியது விஜயாவின்  கரம்.

தன் தாய் தந்தையின் முகத்தில் இருக்கும் நேசமும் அன்யோன்யமும் கண்டு அம்முலு ஆதியின் தோளில் சாய்ந்து கொள்ள," அன்று நான் சொல்ல வந்தது இதைத் தான் குட்டிமா. மனம் ஒத்து அன்பு

ழைய இணைந்தே  இருப்பது மட்டுமல்ல காதல்.. எதிரும் புதிருமாய் அடித்துக் கொண்டாலும் இணையைப் பிரிந்து ஒரு நொடி கூட இருக்க முடியாமல் தவிப்பது தான் காதல். டாம் அண்ட் ஜெர்ரி என்று கேலியாய் நீ சொன்னாலும் டாம் இல்லை என்றால் ஜெர்ரி இல்லை, ஜெர்ரி இல்லை என்றால் டாம் இல்லை. அவர்கள் அடித்துக் கொண்டாலும் சேர்ந்து இருப்பது தான் நம் எல்லோருக்கும் மகிழ்ச்சி தருகிறது.  அது போல் உன் தாய் தந்தையின் காதலின் மகிழ்ச்சிப் பூக்கள் நீயும் உன் தங்கையும்....அது அடுத்த தலைமுறையிலும் தன் கிளைகளை பரப்புகிறது " என்று தன்  மனைவியின் மேடிட்ட வயிற்றினில் கரம் பதித்தான்.

"ஐ லவ் யு என்ற மூன்று வார்த்தை மூன்று முடிச்சில் சிறைப்பட்டு திருமணம் என்னும் புனித பந்தத்தில் ஆயுள் கைதியாக ஆகட்டும் இனி" என தன் அன்னை தந்தை காதலின் சாட்சியாக நாட்டாமை அம்முலு தீர்ப்பு சொல்ல அதை அமோதித்த குட்டுலு, ஆதியுடன் அடுத்த தலைமுறை நாங்களும் வழி மொழிவோம் என குட்டி செல்வங்கள் முடிவெடுக்க வலி கண்டது அம்முலுவிற்கு.

This is entry #02 of the current on-going short story contest! Please visit the contest page to know more about the contest.

 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.