(Reading time: 12 - 24 minutes)

 

காலையில் இருந்தே பொம்மை படங்களை தியாகம் செய்து விட்டு தன்னை மிதமாக அலங்கரிப்பது வீட்டை சுத்தப்படுத்துவது என துறுதுறுவென இருந்தாள். காலிங் பெல் அலரியவுடன் பாய்ந்து சென்று திறந்தவள் வாயை மூடவில்லை. ஊரிலிருந்து அம்மா அப்பா ஆச்சி அத்தை என்று பெரிய பட்டாளமே நின்று கொண்டிருந்தது. வரவேற்க வாய்ப்பளிக்காமல் எல்லோரும் அவளை நலம் விசாரிப்பதிலயே குறியாய் இருந்தனர். அதன் பின் அம்மா அப்பாவிடம் கதையளந்து கொண்டிருந்தாள். அங்கு வந்த ராஜி(பரியாவின் அத்தை)

"அண்ணே இந்த சீமயழகி இம்புட்டு நாள் குடும்பம் நடத்தின அழக வந்து பாரு..." என்று கத்தியவள் ப்ரியாவின் அப்பா அம்மாவை இழுத்துக் கொண்டு இருவரின் தனித்தனி அறைகளை காட்டி குற்றப்பத்திரிக்கை வாசிக்க ஆரம்பித்தாள்.. வழியறியாமல் பே என விழித்து நின்றவளை கண்ட உடனே ரத்னபிள்ளைக்கு எல்லாம் புரிந்துவிட்டது...

"மச்சான் சாயங்காலம் இரயில புடி எதா இருந்தாலும் ஊருக்கு போய் பேசிக்கலாம்" கட்டளையிட்டவரை கண்ட ப்ரியாவிர்கு சகலமும் நடுநடுங்க ஆரம்பித்து விட்டது.. நிமிட நேரத்தில் விதி செய்த சதியை நொந்தப்படி பேசா மடந்தையாக பெற்றோரின் பின்னால் சென்றாள்.. விமானம் தரை இறங்கியவுடன் ஆபிஸில் இருந்து வந்த மேனேஜரின் அழைப்பை கண்டு பல மொழிகளில் தன் மேேஜைரை அர்ச்சனை செய்தவன் அன்று முழுதும் மீட்டிங் என்ற பெயரில் வெளிநாடு ப்ராஜக்டின் அமைப்பு, விளக்கம் என்று அலுத்து போய் ப்ரியாவை காணும் ஆவலோடு வீட்டிர்கு வந்தவனை பூட்டிய கதவே வரவேற்றது.. பக்கத்து ப்ளாட் நடுத்தர வயது பெண் பார்த்தவற்றை ஒப்பித்த விதமே ஏதோ பிரச்சனை என்பதை தெளிவு படுத்தியது...அதன் பிறகு வந்த செல்போன் அழைப்புகளும் அவனுடைய அப்பாவின் உறுமல்களும் பிரச்சனையின் தீவிரத்தை உணர்த்தியது. அடுத்த நாள் விடியும் முன்னே இரயிலை பிடித்து ஊருக்கு பயனமானான்.

அங்கு ஊரில் காது வரை மீசை வைத்த ஒரு ஐம்பத்தைந்து வயது மதிக்க தக்க ஒருவர்

"சின்னஞ்சிறுசுகலா இருந்தாலும் பிடிக்கலேன உடனே யோசிச்சு இவ்ளோ நாள் விவரமா பிரிஞ்சு வாழ்ந்திருக்குதுக...  பெரிசுக நம்ம தான் இனி அதுகலோட மனசு நோகாம நடக்க வேண்டிய காரியத்த பார்க்கனும் ஏலே பேச்சி மகன் ரத்தினம் என்ன சொல்றவே..." என்று படப்படவென்று பேசியவரை பார்த்து ரத்தினப்பிள்ளை

"பெரியவங்க என்ன முடிவு சொல்றிங்கலோ அதுக்கே நானும் சம்மதிக்கறேன்" என்று உறுதி கொடுத்தார்...

"அப்புறம் என்னய்யா  சென்னையில வக்கீலா இருக்கானே நம்ம சவுக்கய்யன் மகன் முருகேசன் கிட்ட பேசி பிரச்சனைய முடிக்கலாம் எதுக்கும் சம்மந்த வச்சிட்ட குடும்பத்த கிட்டயைும் ஒரு வார்த்த கேட்டுடலே" என்று உரக்க கூறி விட்டு சென்றவரோடு கூட்டமும் கலைந்து முடிவும் எடுக்கப் பட்டது.

ஊருக்கு வந்திறங்கியவன் வீட்டிர்குள் நுழைந்ததும் "அதுக சந்தோசம் தான் நம்ம சந்தோசம். இனி ஆண்டவன் விதிச்ச படி நடக்கட்டும்" என்று போனில் பேசியபடி வந்த தந்தையின் வார்த்தைகளே வரவேற்றது. மகனை பார்த்ததும் உறுத்து விழித்தவர் எடுக்கப்பட்ட முடிவை சுருக்கமாக சொன்னார். கேட்டவனின் உலகம் தான் பாவம் சுழல்ச்சியை மறந்த நிலையாகி விட்டதே!!

ன்று இரவு முழுதும்  யோசித்து சட்டென்று உதித்த யோசனையில் துள்ளி குதித்தவன் தன் தங்கை சங்கீதாவிடம் சென்று

"சங்கு ப்ரியாவோட புது நம்பர் இருக்கா" என்று சாதாரணமாக கேட்க

"ப்ரோ இதுக்கு பெயர் தான் தவளை தன் வாயால் கெடும்னு பெரியவங்க சொல்லுவாங்க. அண்ணி கிட்ட மொபைலே இல்ல" என்றதும் அர்ஜுனின் முகம் வார்த்தையில் வடிக்க முடியாதளவு சோகத்தை படம் பிடித்து காட்ட அவர்களை பற்றி ஓரளவு ஸ்வாதி மூலம் அறிந்த சங்கவி அர்ஜுனின் முகமே நிலைமையை விளக்க அவசரமாக

"டேய் அண்ணா ஏன்டா இந்த லெவலுக்கு மொகறைய மாத்தற. அண்ணி கிட்ட பேசனும் அவ்ளோ தான.. வெயிட் பேபி " என்று மொபைலை எடுத்துக் கொண்டு வெளியே சென்றவள் பத்து நிமிடம் கழித்து அறைக்குள் வந்து

"இந்தா நம்பர். இது அண்ணியோட அப்பா நம்பர்" என்பதர்குள் அவசரமாக குறுக்கிட்டவன்

"அடிப்பாவி சமாதானமா போக வழி கேட்டா சமாதி கட்ட வழி பன்றயா நீ" என்று பதறியவனிடம்

"டேய் முழுசா கேளுடா முள்ளம்பன்றி தலையா.. நைட் எட்டு மணிக்கு கரக்ட்டா கூப்பிடு அண்ணி பேசுவாங்க" என்றவளை வெளியே காலை தொடாத குறையாக நன்றி சொன்னவன் மனதில் ஒரு நாள் சிக்குவ அன்னைக்கு இருக்கு கச்சேரி என்ற நல்லென்னத்துடன் தன் ரூமிர்கு சென்று கடிகாரத்திர்கு காவல் காக்க அதுவும் அவனை கொஞ்ச நேரம் புலம்ப விட்டு ஒருவழியாக எட்டு மணியை தொட்டது.

பட்டனை தட்டி காதில் வைத்தவனின் இதயத் துடிப்பு அவனுக்கே வேறொரு சவ்ன்டு எபக்ட்டில் ஒலித்தது. அவனை சோதிக்காமல் போனை எடுத்தாள் ப்ரியா.

" ஹலோ"

"ஹலோ ப்ரியா நான் அர்ஜுன் பேசறேன்."

"ம்ம் தெரியுது"

"தயவு செஞ்சு நான் சொல்றத கேளு"

"ம்ம் சொல்லு"

"அது என்னனா ம்ம்... நான்... நீ...நம்ம" சரமாரியாக உளறினான். (ஏயா பொன்டாட்டி கிட்ட லவ்வ சொல்ல இவ்ளோ அலப்பரயா?)

சத்தமில்லாமல் சிரித்தவள் "யோசிச்சிட்டு நாளைக்கு சொல்றயா?"

"ப்ச் டு பி ப்ராங்க் கொஞ்ச நாளாவே நீ என்னை ரொம்ப கொடையுற... இனி என்னால உன்ன விட்டு இருக்க முடியும்னு தோனல. அடிச்சிட்டாலும் சரி அணச்சிட்டாலும் சரி வாழ்நாள் முழுசா எங்கூட நீ வேணும்...." உருகி  மருகி  சொன்னவன் திடீரென்று லூசுத் தனமாக "உனக்கு ஏதாவது புரியுதா" என்றான்

சந்தோஷத்தில் உள்ளம் குதித்தாலும் வழக்கமான வாழுத்தனம் தலைதூக்க "அப்டினா?" என்றாள் புரியாதவளாக? பொறுமை பறந்த  அர்ஜுன் "ஏய் பூசணிக்கா  மாமனுக்கு உன்ன ரொம்ப பிடிச்சிருக்குடி உனக்கு  இந்த மாமன பிடிச்சிருக்கா. ..ஓகே முடிவா கேக்கறேன். ஓடி போகலாமா" என்றான் குரலில் காதலும் கடுப்பும் கலந்த குரலில்.

"என்னதுதுது ஓடி போகறதாாாாாா?"

"இனி இங்கிருந்தா நம்மல பிரிச்சு அழகு பாத்துருவாய்ங்க.வேற வழியில்ல"

"அய்யோ அப்போ நம்ம ஓடி போயிடலாம்  மாமா " (குழந்தை பிள்ளைய பேசிய ஏமாத்திப்புட்டாப்ல) அப்படி இந்த இரு உலகறிவாழிகள் சேர்ந்து எடுத்த முடிவு தான் திருமணமாகிய பின் ஊரை விட்டு ஓடும் அருமையான திட்டம். (இப்போது அந்த சிரிப்பின் காரணம் புரிந்திருக்கும்  என நம்புகிறேன் )

ன்று.....

ஒரு புறம் முறைத்து கொண்டு உட்கார்ந்திருக்கும் ப்ரியா.. மறுபுறம் தோனியின் (dhoni) பேட் பந்தை பதம் பார்க்க இந்தியா முன்னிலையாகி வெற்றி பெற்றது. அர்ஜுனும் அஷ்வத்தும் ஹை பை கொடுத்து விட்டு இருவரும் ஒன்றாக ஆடத் தொடங்கினர்.... அஷ்வத் , அர்ஜூன் ப்ரியாவின் கள்ளம் கபடமில்லாத அன்பின் அடையாளம். இன்னும் ஓரு மாதத்தில் ஏழு வயது பூர்த்தியாகிறது. குணத்திலும் சரி தோற்றத்திலும் சரி அர்ஜுனின் நகல்.... இவர்களின் கூட்டனி பல நேரங்களில் ப்ரியாவை சிரிக்க வைக்கும்.. சில நேரங்களில் மட்டுமே முறைக்க வைக்கும். அந்த சிலதில் சோட்டா பீமை பார்க்க விடாது இதுக ஆடும் ஆட்டம் முக்கிய பங்கு வகிக்கும்.அதன் விளைவு தான் இந்த முறைப்பும் கூட.. இதற்கு பின் நடக்கும் உலகப் போரில் பார்வையாளராக அஷ்வத் பங்கேற்கும் பகுதியை தவிர வேற எந்த மாற்றமும் இல்லை என்பதை பெருமையுடன் தெரிவித்து கொள்கிறேன்..

This is entry #03 of the current on-going short story contest! Please visit the contest page to know more about the contest.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.