(Reading time: 13 - 26 minutes)

பிரிவென்ற சொல்லே அறியாதது – கீர்த்தனா

This is entry #04 of the current on-going short story contest! please visit contest page to know more about the contest

சில்லென்ற காற்றை அனுபவித்தபடி தோட்டத்தில் அமர்ந்து பணியை முடித்து விட்டு வீடு திரும்பும் பறவைகளை ரசித்த படி அமர்ந்திருந்தான் பிரவீன். பறவைகளை பார்த்த அவன் மனம் சுதந்திர வானில் பறந்து திரிந்த காலத்தை நோக்கி பயணித்தது.

அவனுடன் சேர்ந்து நாமும் பயணிப்போம் அவன் உலகில் (திருட்டுத்தனமாதாங்க. சத்தம் போடாம வாங்க என்னை போட்டு கொடுத்தராதீங்க).

அரசாங்க பள்ளியில் படித்தும் நல்ல மதிப்பெண்களை பெற்றதால் சென்னை அண்ணா பல்கலைகழகத்திலேயே படிக்கும் வாய்ப்பு கிடைத்தது. கிடைத்த வாய்ப்பை சிறப்பாக பயன்படுத்தியதால் நல்ல மதிப்பெண்கள் பெற்றான். உதவி தொகையிலேயே MBA HR படித்தான். படிப்பு முடியும் முன்னே புகழ் பெற்ற கம்பெனியில் கை நிறைய சம்பளத்துடன் கிடைத்த பணி அவன் வாழ்க்கை தரத்தை உயர்த்தியது. இரண்டு வருட கடும் உழைப்பால் சொந்த ஊரிலேயே சொந்த வீடு கட்டினான். தங்கைக்கும் தன் சொந்த செலவிலேயே திருமணம் செய்து வைத்தான். பிரவீனுடைய கடும் உழைப்பை பார்த்த நிறுவனம் அவனுக்கு HR மேனேஜர் ஆக பதவி உயர்வு கொடுத்தது. அடுத்து அவன் பெற்றோர் அவனுடைய திருமணத்தை பற்றி கேட்க அவனும் சம்மதம் தெரிவிக்க பெண் தேட ஆரம்பித்தனர்.

Pirivendra solle ariyathathu

ஆறு மாத கால தீவிர அலசலுக்கு பின் பிரவீனின் பெற்றோர்கள் அவனுக்கு தேர்ந்தெடுத்த பெண் தான் பிரவீனா. இருவருக்கும் ஜாதகத்தில் ஒன்பது பொருத்தங்களும் பொருந்தியிருந்தது.பெயர்ப்பொருத்ததிலேயே மயங்கியவன் அவளை நேராக பார்த்ததும் தலை சுற்றி கவிழ்ந்து விட்டான் அவளிடம். அவனுடைய மயக்கம் அவன் கண்களிலேயே தெரிய அவன் பெற்றோருக்கும், பெண் வீட்டாருக்கும் மிக்க மகிழ்ச்சி. பிரவீனாவிற்க்கும் அவனை பார்த்ததும் பிடித்து விட்டது. இருவரின் பரஸ்பர சம்மதம் பெற்ற பிறகு திருமணத்திற்கு நாள் குறித்தனர்.

நிகழ்கால காதலர்கள் கொண்டாடும் திருநாள், வருங்கால காதலர்களுக்கான மணநாள் ஆனது.

மூன்று மாதங்களும் மூன்று நொடியாக கழிய எதிர் பார்த்த நந்நாளும்அழகாய் விடிந்தது. மணமேடை பூக்களால் நிரம்பியிருக்க,மணமகள் முகம் வெக்கத்தால் சிவந்திருக்க,மணமகன் முகம் பெருமையில் நிறைந்திருக்க,சுற்றத்தாரின் முகம் மகிழ்ச்சியில் பூரித்திருக்க பிரவீன் பிரவீனாவின் சங்கு கழுத்தில் தாலி கட்டி தன்னவள் ஆக்கி கொண்டான்.

பெயர்ப்பொருத்தம்,ஜாதகப் பொருத்தம்,தோற்ற பொருத்தத்தோடு மனப் பொருத்தமும் சேர அங்கு மகிழ்ச்சிக்கு குறைவேது.

திருமணம் முடிந்து ஒரு மாதம் இனிதே முடிந்திருந்தது. விருந்து, உறவினர் கூட்டம் என அனைத்து அன்பு தொல்லைகளிலிருந்து விடுபட்டு அன்றாட வாழ்க்கைக்கு திரும்பியிருந்தனர் தம்பதியினர்.

வார இறுதி நாட்களில் சினிமா,பீச் என செல்ல, வார நாட்கள் வீட்டிலேலேய இருப்பது பொழுது போகாமல் இருந்தது பிரவீனாவிற்க்கு. அதை அவனிடமே சொல்ல அவனும் ஏதாவது யோசிப்போம் என சொன்னான்.

பிரவீன் ஒருநாள் அவளுக்கு அலுவலகத்தை காட்ட எண்ணி அவளிடம் கேட்டான்.

"ஏன் செல்லம் நீ என் கூட நாளைக்கு என் கம்பெனிக்கு வர்ரியா?" என கேட்க,

அவளோ "ஏன் மாமா என்னையெல்லாம் உங்க கம்பெனிக்குள்ள விடுவாங்களா" என அப்பாவியாக கேட்டாள்.

அவளின் அப்பாவிதனத்தை ரசித்தபடி, "கண்டீப்பாகடா உன்னை உள்ளே விடலைன்னா எங்க ஆபிஸையே உன் மாமன் கொளுத்திரமாட்டேன்" என பதில் சொன்னான்.

அவளும் மகிழ்ச்சியாக தலையாட்டியபடி நாளை அவனுடன் கிளம்ப சம்மதித்தாள்.

அடுத்த நாள் புதிதாக வாங்கிய பூனம் சேலையை கட்டிக்கொண்டு பிரவீனுடன் அலுவலகம் செல்ல தயாரானாள். தன் மனைவி எப்படி இருந்தாலும் அழகு பிரவீவனை பொருத்தவரை. அதனால் அவன் பிரவீனாவின் உடையை எப்பொழுதும் போல் பாராட்டினான். கணவனுடைய பாராட்டை மகிழ்ச்சியுடன் ஏற்றவளுக்கு தெரியவில்லை அந்த சந்தோஷத்திற்க்கு ஆயுட்காலம் குறைவு என்பதை.

பிரவீன் பிரவீனாவை அழைத்துச் சென்றது மங்கைகள் அனைவரும் நவ நாகரீக யுவதிகளாய் மாறித் திரியும் வெள்ளிக்கிழமை.அங்கு சென்று அந்த யுவதிகளைள பார்த்தவுடன் அவள் மனதில் தோன்றியது தாழ்வு மனப்பான்மை. ஏனென்றால் அவர்களோ பட்டணத்து பாரிஜாதம், இவளோ பட்டிக்காட்டு பைங்கிளி.

நிறுவனத்திற்குள் இருக்கும்போது, ஒருவரை ஒருவர் கடந்து செல்லும்போது முன் பின் அறியாதவர்களாக இருந்தாலும் மேல் நாட்டு நாகரீகப்படி புன்னகைப்பார்கள்.பிரவீன் HR மேனேஜர் என்பதால் அவன் நிறுவனத்தில் அவன் மிகப் பிரபலம்.அவனுக்கும் அனைவரையும் தெரியும்.பிரவீனும் அனைவரையும் புன்னகையுடேன எதிர்கொள்வான்.பிரவீன் பிரவீனாவுடன் அவனுடைய பகுதியை அடைவதற்க்குள் அவனை கடந்து சென்றவர்கள் அனைவரும் அவனை பார்த்து புன்னகைத்தனர். இவனு ம் தன் புன்னகையை பதிலாக்கினான். பிரவீனுடைய துரதிர்ஷ்டமோ இல்லை கெட்ட நேரமோ எனத் தெரியவில்லை அவனை கடந்து சென்றவர்கள் அனைவருமே பெண்கள்.இந்த நாகரீகம் புதுசு அவளுக்கு. இதை பார்த்தவுடன் பிரவீனாவின் மனதில் வித்து விழுந்தது அந்த வித்து சந்தேகம்.

அவளுக்கு நிறுவனம் முழுவதையும் சுற்றி காண்பித்து விட்டு அவனுடைய வேலையையும் முடித்து விட்டு வீடு வந்து சேர்ந்தான்.

வீட்டிற்க்கு செல்லும் வழியிலேயே பிரவீனாவிடம் அன்றைய நாள் அனுபவத்தை கேட்டான்.

"செல்லம் என் ஆபிஸ் உனக்கு பிடிச்சிருக்கா?"

"ரொம்ப பெரிசா நல்லாயிருக்குங்க" என பிரவீனா பதில் சொன்னாள்.

மறந்தும் கூட அவனிடம் அவளுடைய தாழ்வு மனப்பான்மையையும் சந்தேகத்தையும் கூறவில்லை. கூறியிருந்தால் சில பல பிரச்சனைகளை தவிர்த்திருக்கலாம். ஆனால் விதியின் விளையாட்டு ஆரம்பமானது அங்கே.

பிரவீனுடைய தங்கை கணவருக்கு சென்னையிலேயே வேலை கிடைக்க, அவர்கள் குடும்பமும் இவர்கள் வீட்டிற்க்கு அருகிலேயே குடியேறினார்கள்.அவர்கள் வீட்டிற்க்குத் தேவையான பொருட்களை அடுக்கி வைக்க என எல்லா வகைகளிலும் அவர்களுக்கு பிரவீனும் அவன் துணைவியும் உதவி செய்தனர். எல்லா வேலையும் முடித்து விட்டு வந்து பிரவீனா அவள் தாயிடம் பேசிவிட்டு வைத்தாள்.

அன்றிலிருந்து தினமும் மாலை ஒரு மணி நேரம் பிரவீன் அவன் தங்கையின் இரண்டு வயது குழந்தையுடன் செலவு செய்தான். அந்த நேரத்தில் பிரவீனாவையும் ஏதாவது சொல்லி சீண்டியபடி குழந்தையை கொஞ்சுவான். இருந்தும் அவள் மனதில் வரக்கூடாத ஒன்று வந்தது அது பொறாமை. தங்கைக்கும் தங்கை குழந்தைக்கும் அவன் செலவு செய்வது, அவர்களுடன் நேரம் செலவிடுவது பிடிக்காமல் போனது.

ருநாள் நடு இரவு 1 மணிக்கு பிரவீனின் அலைபேசி ஒலித்தது. புது எண்ணாக இருக்க கொஞ்சம் குழப்பத்துடனே அழைப்பை ஏற்றான். அவனுடன் அலுவலகத்தில் வேலை செய்யும் பெண்ணுக்கு விபத்து என ஒருவர் விவரம் சொல்ல, பிரவீனா உறக்கத்தில் இருந்ததால் அவளிடம் சொல்லாமல் அவன் மட்டும் மருத்துவமனைக்கு கிளம்பிச் சென்றான்.

காலையில் பிரவீனா எழுந்து பார்க்கும்போது அவள் கண்டது பிரவீன் படுத்திருந்த இடம் வெறுமையாக இருந்ததைத்தான். வீடு முழுவதும் தேடி விட்டு அவனுடைய அலைபேசிக்கு தொடர்பு கொள்ளும் நேரம் பிரவீன் வீட்டின் உள்ளே நுழைந்தான்.

"எங்க மாமா காலையிலேயே போய்ட் டீங்க?"

"இல்லைடா நைட்டே ஆபிஸ்ல வேலை செய்ற ஒரு பொண்ணுக்கு ஆக்ஸிடண்ட்னு போன் வந்துச்சு. அதுக்காக ஆஸ்பத்திரிக்கு போய்ட்டேன். நீ தூங்கிட்டு இருந்தனால உன்கிட்ட சொல்லாம போய்ட்டேன்."

"உங்களுக்கு ஏன் மாமா போன் வந்துச்சு?"

"எங்க ஆபிஸ்ல ஒரு பாலிஸிடா. அது என்னன்னா ஆபிஸ்ல சேர எல்லாருக்கும் அவங்க அடையாள அட்டை கூட எமர்ஜென்சி காண்டக்ட் நெம்பர்ஸ்(Emergency Contact Numbers) கார்டு கொடு ப்போம். அதுல ஏதாவது எமர்ஜென்சினா காண்டக்ட் பண்ண சொல்லி என் நெம்பர், பாதுகாப்பு அலுவலர்(Safety Officer) நெம்பர் இருக்கும்டா."

அவளின் முகத்தில் இருக்கும் குழப்பத்தை பார்த்துவிட்டு, "ஏன் எங்களோட நெம்பர்ஸ் மட்டும் இருக்குன்னு யோசிக்கறியா?" என கேட்டான்.

அவளுடைய தலை தானாக ‘ஆமாம்’ என ஆடியது.

"நாங்கதான்டா எங்க ஆபிஸ்ல வேலை செய்றவங்களுக்கு பொறுப்பு. அவங்களுக்கு பிரச்சனைன்னா, ஆபிஸை விட்டு வெளிய இருந்தாலும், போய் எங்களால முடிஞ்ச உதவி செய்யனும். நேத்து அந்த பொண்ணோட போன்ல பாஸ்வோர்டு போட்டிருந்தனால அதை பயன்படுத்த முடியலை. அதான் அந்த பொண்ணோட கார்டுல இருக்கிற என் நெம்பர் பார்த்துட்டு எனக்கு போன் பண்ணாங்க. இப்பதான்டா அந்த பொண்ணு கண் விழிச்சா. அவளோட தோழிகளும் வந்துட்டாங்க. அவங்ககிட்ட விட்டுட்டு வந்திட்டேன்."

அவன் சொல்வது அவளுக்குள் மேலும் குழப்பத்தை ஏற்படுத்த, அவனை நம்பலாமா வேண்டாமா எனக் குழம்பினாள். அதன் விளைவால் அவளுக்குள் உருவானது நம்பிக்கையின்மை.

 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.