(Reading time: 13 - 26 minutes)

கிழ்ச்சியான திருமண வாழ்க்கைக்கு தடையான அனைத்தும் பிரவீனாவின் மனதிற்க்குள் சூறாவளியாய் சுழன்று அடித்துக் கொண்டிருந்தது. அவளுக்குள் நடந்து கொண்டிருக்கும் போராட்டம் அறியாத பிரவீனோ அவளுக்கு பிடித்த பொருட்களை வாரா வாரம் பரிசாக வாங்கி தந்து அவளை அசத்தினான்.

சின்ன சின்ன சண்டைகள் சமாதானங்களோடு சென்று கொண்டிருந்த வாழ்வுக்கு மகிழ்ச்சியூட்டும் வகையில் ஒரு சின்னக் கண்ணன் வந்து சேர்ந்தான். அவனுக்கு ஆரவ் என பெயரிட்டனர்.

அவளையும் குழந்தையையும் மகிழ்ச்சியாய் வைத்திருக்க அவனால் ஆன அனைத்தும் செய்தான். ஆனால் அவன் செய்யும் சின்ன சின்ன விஷயங்களில் கூட குறை கண்டுபிடித்து சண்டையிட்டாள்.

வேலைப்பளு அதிகம் இருக்கும் நாளான திங்கள் மதியம் 3 மணி அளவில் அலறிய அவன் பேசியை யாரென்று பார்க்காமலே அழைப்பை ஏற்றான். அழைத்ததோ அவனில் பாதி.அதை அறியாத பிரவீன் ஹலோ என்று கூறினான். அவனின் ஹலோ கேட்டதுமே இவளுக்கு உள்ளுக்குள் கோபம் பொங்கியது. ஏனெனில் இத்தனை நாட்களில் எப்பொழுதும் பிரவீன் ப்ரவீனாவுடைய அழைப்பை ஏற்றவுடன் முதலில் சொல்லும் வார்த்தை ‘செல்லம்’ மட்டும் தான்.இன்று அவன் சொன்ன ஹலோ அவளுக்கு எரிச்சலையும்,கோபத்தையும் ஏற்படுத்தியது.

சரியாக அந்த நேரம் பார்த்து அவன் கீழே வேலை செய்பவர்கள் அவனிடம் சந்தேகம் கேட்க வந்தனர். பிரவீனா பேசாததை உணரும் முன்னே அவர்கள் வந்துவிட அவளிடம் ஒரு நிமிடம் சொல்லிவிட்டு அவர்களின் சந்தேகத்தை நிவர்த்தி செய்தான். கணவன் குரலோடு ஒலித்த பெண்குரலில் அவளுக்குள் முளை விட்ட சந்தேகம் வளர்ந்தது. என்னை விட எவளோ ஒருத்தி முக்கியமா போய்ட்டளா என்ற வீம்பு அவளை அழைப்பை துண்டிக்க வைத்தது. அவர்களின் சந்தேகத்தை தீர்த்து வைத்து விட்டு பார்த்தால் அழைப்பு துண்டிக்க பட்டிருந்தது. மீண்டும் முயற்சி செய்ய முனையும் போது வேலைப்பளு அவனை அழைத்தது. வீட்டுக்கு போய் பார்த்து கொள்ளலாம் என விட்டு விட்டு அவன் வேலையை தொடர்ந்தான்.

அன்று வேலை அதிகமாக இருந்ததால் வீடு வந்து சேர நேரமாகும் என 8 மணி அளவில் தகவல் தெரிவித்து விட்டு ,வேலையில் மூழ்கினான். அவன் போனை எடுத்த உடன் எப்பவும் போல் அழைக்காதது,தன்னிடம் பேசாமல் மற்றவருக்கு முன்னுரிமை கொடுத்து பேசியது,தாமதமாக வீட்டுக்கு வருவது என அவன் மேல் குற்ற பத்திரிகை வாசித்து கொண்டு, அவன் வரும் வழியை எதிர் பார்த்து தூங்காமல் காத்திருந்தாள். அவள் மனம் உலைக்கலமாய் கொதித்துக் கொண்டிருந்தது. அவன் வீடு வந்து சேர மணி 2 ஆகிவிட்டது.

அவள் விழித்திருந்ததை பார்த்து விட்டு"ஏன் செல்லம் இன்னும் தூங்கலையா?"

இந்த பேச்சில் தானே மயங்கினேன் என எண்ணி, அவனின் பேச்சை நம்பக்கூடாது என தவறாக முடிவு செய்தாள்.

"எங்க போய்ட்டு வர்ரீங்க?"

"ஆபிஸ்க்குதான்டா."

"நடிக்காதீங்க. இவளுக்கு ஒண்ணும் தெரியாதுன்னு எத்தனை நாளைக்கு ஏமாத்துவீங்க? எப்போ பார்த்தாலும் எதாவது பொண்ணு கூட பேசிட்டு இருக்கறது.நான் போன் பண்ணப்ப கூட எவ்ளோ ஒருத்திட்ட தானே பேசிக்கிட்டுருந்திங்க.என்னை விட அவ முக்கியமா? அன்னைக்கு நான் உங்க ஆபீஸ் வந்தப்பவே பாத்தனே எவ போனாலும் உங்களை பார்த்து சிரிச்சுட்டு தான் போறா."

பிரவீன் அதிர்ச்சியடைந்தான். பிரவீனாவின் இப்படியொரு மறுபக்கத்தை அவன் எதிர்பார்க்கவில்லை.

அவன் அதிர்ச்சியில் இருக்கும்போதே சொல்லக்கூடாத வார்த்தைகளை சிதற விட்டாள். விளைவு அவனறியாமல் அவன் கை அவள் கன்னத்தை பதம் பார்த்தது.

கோவத்தின் உச்சியிலிருந்த அவளோ, தன் பெட்டி படுக்கையை எடுத்து கொண்டு குழந்தையை கூட மறந்துவிட்டு தாயின் வீடு சென்று விட்டாள். அன்று சென்றவள்.......

"டாடி" என்ற குரல் பிரவீனை நிகழ் உலகத்துக்கு திருப்பியது. தன்னை நோக்கி வரும் மகனின் முகம் பார்த்து புன்னகையை சிந்தினான்.

ஆரவ் இன்று 24 வயது வாலிபன். முக்கியமாக அவன் இன்று உலகப் புகழ் பெற்ற ஒரு மன நல மருத்துவர்.

"என்ன டாடி பண்ணிட்டு இருக்கீங்க?" என ஆரவ் கேட்டான்.

"சும்மாதான்பா. இயற்கையை ரசிச்சுட்டு இருந்தேன்" என பொய் கூறினான்.

தந்தையின் கண்களில் தெரியும் வலி அவர் பொய் சொல்வதை பறை சாற்றியது மகனுக்கு.இருந்தும் அவரை கேள்விகளால் துளைக்காமல் "அம்மா காத்திட்டிருக்காங்க. வாங்க சாப்பிடப் போகலாம்" என எழுப்பி கையோடு கூட்டிச் சென்றான்.

அவர்கள் வீட்டின் வழக்கம் இரவு உணவை ஒன்றாக சாப்பிடுவது.

இரவு உணவை தட்டில் எடுத்துக்கொண்டு தந்தையும் மகனும் ஓர் அறையை நோக்கிச் சென்றனர். அங்கு பிரவீனாவின் கைகள் சங்கிலியால் பிணைக்கப்படவில்லை. இருந்தும் அவள் பார்வை தூரத்தே நிலைத்திருந்தது. அதுவே அவள் அவளாக இல்லை என சொல்ல போதுமானதாக இருந்தது.

அவளை பார்த்ததும், மறுபடியும் பிரவீனின் நினைவுகள் பின்னோக்கிச் சென்றன.

ன்று…

பிரவீனாவை அவளுடைய தாய் வீட்டிற்க்கு சென்று சமாதானப்படுத்த எண்ணி பேசினான். ஆனால் அவள் மசியவில்லை. குழந்தையை காரணம் காட்டினான். அப்பொழுதும் அவள் அவனுடன் வர சம்மதிக்கவில்லை.         அவளுடைய பெற்றோர்களும் பிரவீனாவின் தப்பான முடிவிற்க்கு துணை நின்றனர். பிரவீனும் கிளம்பி வந்துவிட்டான்.

நாட்கள் யாருக்கும் நிற்காமல் நகர்ந்து செல்ல 1 மாதம் கடந்திருந்தது.

ஒருநாள் அவனுக்கு போன் வந்தது. அவன் மனைவி மருத்துவமனையில் இருக்கிறாளென. பதறியடித்துக் கொண்டு ஓடினான். அங்கே அவன் கண்டது பைத்தியம் பிடித்த நிலையில் தன்னையே யாரென அறியாதபடி இருந்த பிரவீனாவைத்தான். கத்தினான். கதறினான். உள்ளுக்குள்ளே மறுகினான். அவளின் இந்நிலைக்கு தானும் ஒரு காரணமோ என்ற உணர்வு அவனை சுட்டது.

அங்கு உள்ள மருத்துவர்களிடம் அவன் கேட்டான் அவளின் நிலைக்கு காரணத்தை. அவர்கள் கூறிய பதில் எதையும் அளவுக்கு அதிகமா யோசிக்கிறது, தன்னை தானே தாழ்த்தி நினைக்கிறது மற்றும் அவர்களின் தனிமை என எல்லாமும் தான். இதற்க்கு ஒரே ஒரு தீர்வு உங்கள் அன்பு மட்டும்தான் எனவும் கூறினார்.

தன்னை கூட அறியாமல் இருந்தவள், கிட்ட யாரேனும் வந்தால் கத்தி ஆர்ப்பாட்டம் செய்து கொண்டிருந்தாள். ஆனால் பிரவீனை கண்ட நொடி அவள் அடங்கினாள். அப்பொழுதுதான அவன் புரிந்து கொண்டான். அவள் தன் மேல் கொண்ட காதல் அழியவில்லையென்று. அவளை உணராத தருணத்தில் கூட என்னை உணர்ந்தாளே என எண்ணி நிம்மதியுற்றான்.

அவளுடைய பெற்றோர்களும் அவளை கைவிட்ட நிலையில் மனைவியை சேயாய் தாங்கினான். ஆரவை பார்த்து கொள்ள ஆயாவை ஏற்பாடு செய்துவிட்டு, மனைவியை முழுக்க முழுக்க தானே பார்த்துக் கொண்டான். வேளாவேளைக்கு உணவு, மருந்து என எல்லாமே தன் கையால் கொடுத்தான். அவனுடைய விடாமுயற்ச்சியால்தான் அவள் இப்பொழுது இருக்கும் நிலைமைக்கு வந்திருந்தாள்.

தன் தாயின் நிலையை சிறு வயதிலிருந்தே பார்த்து வளர்ந்ததால், மன நல மருத்துவத்தை தேர்ந்தெடுத்து படித்தான்.

ழைய நினைவுகளை ஒதுக்கிவிட்டு, இரவு உணவிற்காக அவளைச் சுற்றி இருவரும் அமர்ந்தனர்.

பிரவீன் ஒருவாய், ஆரவ் ஒருவாய் என ஊட்ட பிரவீனா அமைதியாக சாப்பிட்டாள்.

எப்படி இருந்தவள் எப்படி மாறிவிட்டாள். புதுப் பூவாக தன் முன் நின்றவள் இன்று காய்ந்த சருகாக இருக்கிறாளே என எண்ணி வெதும்பினான். இருந்தும் தன்னை தேற்றி கொண்டு அவளை கண்ணுக்குள் வைத்து தாங்கினான்.

பிரவீனாவிற்க்கு எது நடந்தாலும் பிரவீனின் அன்பு அரணாய் இருக்கும் என்பதில் எத்தகைய சந்தேகமுமில்லை. திருமணத்திற்க்கு பின் வரும் காதலில் மட்டுமே இத்தகைய அன்பு சாத்தியம்.

இனிய இல்லறம் உண்மைக் காதலில் மட்டும் முழுமையடையாது. ஒருவர் மேல் ஒருவர் வைக்கும் நம்பிக்கைதான் மகிழ்ச்சியான வாழ்விற்க்கு வழிவகுக்கும். மனதில் உள்ளதை வார்த்தைகளால் பகிர்ந்து கொண்டாலே பாதி பிரச்சனைக்கு தீர்வு கிடைக்கும். சந்தேகம் சங்கடத்தையே தரும்.

காதலோடு நம்பிக்கையும், நம் மேல் சந்தேகம் கொள்ளா துணையும் அமைந்து விட்டாலே வாழக்கை நந்தவனத் தோட்டம் தான் அனைவருக்கும்.

பிரவீனா பழையபடி மாற நாமும் பிரார்த்திப்போமாக.

This is entry #04 of the current on-going short story contest! please visit contest page to know more about the contest.

 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.