(Reading time: 5 - 9 minutes)

பாசம்  - தங்கமணி சுவாமினாதன்

This is entry #36 of the current on-going short story contest! please visit contest page to know more about the contest

ரவு நெடுனேரமாகியும் தூக்கம் வரவில்லை கோமதியம்மாவுக்கு.முதுகிலும்,இடுப்பிலும் தாங்கமுடியாத வலி.கூடவே குதி கால் வலியும் இரண்டுபாதங்களிலும் கடுமையான எரிச்சலும் பாடாய்ப்படுத்தியது. காலையில்எதிர் வீட்டு மீனாட்சி ...கோமதிம்மா.......பாதத்துல எரிச்சல் இருக்குன்னுசொல்றேளே...ஒருவேள ஷுகரா கூட இருக்கலாம்..எதுக்கும் ஒரு தடவப்ளட் டெஸ்ட் செஞ்சு பாருங்களேன்...கவனிக்காமவிட்டா க்ண்ணு,இதயம்,கிட்னின்னு எல்லாத்துக்கும் பிரர்ச்சனை வந்துடும்னு சொன்னது நினைவுக்குவர பயத்தில் வியர்த்துக்கொட்டியது கோமதியம்மாவுக்கு.

கோமதியம்மாவுக்கு அறுபத்தைந்து தாண்டி வயதிருக்கும்.கணவர் இறந்துஏழெட்டு வருடம் ஆயிருக்கும்.சொத்து எதையும் அவர் மனைவிக்குச்சேர்த்துவைக்கவில்லை.கோமதியம்மாளுக்கு மூன்றும் பிள்ளைகள்.முதல்இரண்டு மகன்களும் வட தேசங்களில் குடும்பம் அமைத்துக்கொள்ள கடைசிமகன் கணேசனிடம் தங்கிவிட்டார் கோமதியம்மா.முதல் இரண்டு பிள்ளை-களும் ஏனென்றே கேட்பதில்லை.கணேசனும் அப்படியொன்றும் பாசத்தோடுதாயைத் தன்னோடு வைத்துக்கொள்ளவில்லை.

ணேசனும் அவன் மனைவி குமுதாவும் வேலைக்குச்செல்பவர்கள்.பத்துமாதக் குழந்தை ஸ்வேதா. கணவனும் மனைவியும் காலை எட்டு மணிக்கேஅலுவலகம் கிளம்பிச்சென்றால் திரும்பிவர மாலை ஏழு மணியாகும்.அப்படியொன்றும் காலை ஐந்து மணிக்கே எழுந்து வேலைகளை முடித்து-விட்டு கிளம்புபவள் இல்லை குமுதா.நிதானமாக ஆறு மணிக்கு எழுந்துஅலுவலகம் செல்லத் தன்னைத் தயார் படுத்திகொள்வாள்.

paasam

பாவம் கோமதியம்மாள் விடிகாலை நாலு மணிக்கே எழுந்து முதல் நாள்இரவு கழுவாமல் போட்ட பாத்திரங்களைக் கழுவி காப்பிக்கு டிகாகஷன் போட்டு டிபனுக்கு தயார் செய்து டப்பாவுக்கு சாப்பாடு செய்து என்று வயதுக்குமீறி பம்பரமாய்ச் சுழலுவார்.இடையே பாலுக்காக அழும் ஸ்வேதாவையும்கவனித்துக்கொள்ளவேண்டும்.பெற்றதோடு தன் கடமை தீர்ந்ததாக நினைப்-பவள் குமுதா.எல்லாத்தையும் கிழவியே பாத்துக்கட்டமேன்னு ஒரு துரும்பயும்கிள்ளிப்போடமாட்டாள்.

கணேசனோ மனைவி சொல்லே மந்திரம் என்று நினைப்பவன்.வயதானதனது தாய் ஓய்வின்றி உழைப்பதைக் கண்டும் காணாதுபோல் இருப்பவன்.அப்படி ஓன்றும் அவன் தன் தாயை பாசம் காரணமாகத் தன்னோடு வைத்துக்-கொள்ளவில்லை.தாய் ஒரு சம்பளம் இல்லாத வேலைக்காரி.இரு வேளைசோறு வருஷம் ரெண்டு புடவை,ஜுரம் தலைவலி என்றால் ஒரு பத்துமாத்திரை அடங்கிய கால்பல் அட்டை.அதோடு முடிந்தது அவன் தாயிடம்காட்டும் பாசம்.

தூக்கமின்றி தவித்த கோமதியம்மாவின் கண்களின் இரு ஓரங்களில்கண்ணீர் வழிந்தது.மூன்று பிள்ளைகளைப்பெற்றும் பாசத்திற்காக ஏங்கும்தாய்.தாய் என்பவள் பிள்ளைகளிடம் பட்டும்,வைரமுமா எதிர்பார்க்கிறார்கள்?அன்பாய்,பாசமாய்,கனிவாய் நாலு வார்த்தைகள்.அம்மா...சாப்டீங்களா?ஒடம்பு நன்னா இருக்கீங்களா?க்ண்ணாடி மாத்தனும்னு சொன்னீங்களேபோய் மாத்தீட்டு வரலாம்மா.....நீங்க எதுக்கும் கவலப்படாதீங்கம்மா...இது போன்ற வார்த்தைகள் போதுமே ஒரு தாயின் மனம் குளிர...இந்தவார்த்தைகளைக்கூட பெற்றபிள்ளைகளால் ஏன் தரமுடியவில்லை?பாசமும் நேசமும் எங்கே போயின?

நாள் முழுதும் உழைக்கும் கோமதியம்மாளுக்கு ஒரே வடிகால் பேத்திஸ்வேதாதான்.அழும் பேத்தியைத் தூக்கி மடியில் வைத்துக்கொள்ளும்-போது அழுகை மறந்து பாட்டியின் முகம் பார்த்து பொக்கை வாய் திறந்துசிரிக்கும் போது படும் வலியெல்லாம் பறந்துபோகும் கோமதியம்மாளுக்கு.பேத்தியை நெஞ்ஜோடு சேர்த்து அணைக்கும் போது இரண்டு இதயமும்பாசத்தைப் பரிமாறிக்கொள்ளுமோ என்னவோ?

ணேசனும் குமுதாவும் படுத்திருக்கும் அறையிலிருந்து ஸ்வேதாமெலிதான குரலில் அழும் சப்தம் கேட்டது கோமதியம்மாளுக்கு.சில நிமிடங்களில் குழந்தை சப்தமாக அழ ஆரம்பித்தது.சனியனே..ஏன் அழுது தொலைக்கிற......என்னாச்சு ஒனக்கு...என்று குமுதாகுழந்தயை அதட்டும் சப்தம் கேட்டது..கொழந்தைக்கு பசிக்கிறதோஎன்னவோ?இது கூடவா தெரியாது ஒரு பொம்பளைக்கு என்று கோமதியம்மாள் நினைக்கும் போதே ஏய் குமுதா ஏண்டி இவ அழறா..என்னன்னு பாரு..மனுஷன் பகல் முழுக்க ஒழச்சுட்டு வந்து ராத்திரிநிம்மதியாபடுத்துத் தூங்கலாம்ன்னு பாத்தா ..தூங்க முடியுதா ...சனியன் வாய பொத்து...கணேசன் கத்துவது கேட்டது.ஏன் நீங்கமட்டும்தான் ஒழைக்கிறேளா? நான் மட்டும் ஆபீஸ்ல மாடா ஒழெக்கலயா?நீங்க எழுந்து இவள பாத்துக்கோங்க...கத்தினாள் குமுதா...நடு ராத்திரியில்தன்பொருட்டு தாயும் தந்தையும் சண்டை போட்டுக்கொள்வதைப்புரிந்து கொள்ளமுடியாத குழந்தை அழுகையை நிறுத்தாமல் தொடர்ந்தது.

கோமதியம்மாளுக்குத் தவிப்பாய் இருந்தது.கதவைத்தட்டி குழந்தையைவாங்கிக்கொள்ளலாமா என்று நினைத்த உடனேயே..அப்படிச் செய்தால்மருமகள் அமிலமாய் வார்த்தைகளைத் துப்புவாள் என்பதை அறிந்துபேசாமல் படுத்துக்கிடந்தார்.

படாரென்று கதவைத் திறந்து கொண்டு வெளியே வந்த கணேசன்இந்தா..இத பாத்துக்கோ...என்றபடி தாயின் அருகில் குழந்தையைக்கிடத்திவிட்டுக் கதவைச்சாத்திக்கொண்டு உள்ளே போனான்.

பேத்தியைத் தன்னோடு பாசத்தோடு இழுத்து அணைத்துக்-கொண்டார் கோமதியம்மாள்.அந்த பாச அணைப்பில் அழுகையைமறந்து வாயில் விரலைப்போட்டுக்கொண்டு அமைதியாய்த்தூங்க ஆரம்பித்தது குழந்தை. 

This is entry #36 of the current on-going short story contest! please visit contest page to know more about the contest.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.