(Reading time: 5 - 10 minutes)

பாசம்  - ராசு

This is entry #37 of the current on-going short story contest! please visit contest page to know more about the contest

"வனுக்கு எல்லாம் நல்ல சாவே வராது."

"அவன் எல்லாம் ஒரு மனுசனா.?"

"பெத்த பொண்ணுக்கு கல்யாணம் பண்ணி வச்சா சொத்து கொறைஞ்சு போயிடுமாம். அதுக்காக வீட்டோட வச்சிருக்கான். எப்படி மனசு வருது அவனுக்கு?"

Paasam

"அந்த மகராசி பொண்ணுக்கு கல்யாணம் ஆகலைன்னு கவலையில் நெஞ்சு வெடிச்சு செத்தாளோ? இல்லை இவனோட போராட தெம்பு இல்லாமல் தற்கொலை பண்ணிக்கிட்டாளோ? தெரியலையே"

"நாமதான் இவ்வளவு சொல்றோமே! நீ வீட்டை விட்டு வந்திடு. நாங்க உனக்கு கல்யாணம் பண்ணி வைக்கிறோம்னு. ஆனால் இந்தப் பொண்ணு கேக்குதா? இவனுக்கு போய் இப்படி ஒரு நல்ல பொண்ணா பொறந்திருக்காளே. ஊர் உலகத்தில் நல்ல அம்மா அப்பாவையே ஏமாத்திட்டு போற எத்தனை பொண்ணுங்களை பார்க்கிறோம்? இப்படியாப்பட்ட பொண்ணை தங்கம் தங்கம்னு தாங்காமல் சொத்துதான் பெரிசுன்னு நினைக்கிறானே?"

 "அவ தாய் மாமன் தன்னோட பையனுக்கு இவளை கட்ட ரொம்ப முயற்;சி பண்ணான். இவன் சொத்து தகராறு பண்ணி அதையும் கெடுத்துட்டான். இப்ப அந்த பையனுக்கு கல்யாணம் ஆகி இரண்டு புள்ளைகளும் பொறந்துட்டு."

"கேட்டால் அன்னை தெரசாஇ காமராஜர்இ அப்துல் கலாம் இவங்கெல்லாம் கல்யாணமா பண்ணிக்கிட்டாங்க? மக்களுக்காக சேவை செய்யலை? அதுபோல இவளையும் பார்வையற்றோர் பள்ளியில் வேலை பார்த்து சேவை செய் என்று கொண்டு போய் விட்டுவிட்டானே! அவங்க எல்லாம் மக்களுக்காக சொந்த விருப்பத்தோட சேவை செய்ய போனாங்க. ஆனால் இவளை கட்டயப்படுத்தில்ல கொண்டு போய் விட்டுட்டான்.

ப்பாவைப் பற்றிய இந்த விமர்சனங்களை கேட்டு சந்தோஷிக்கு மிகவும் வருத்தமாக இருந்தது. அவர்கள் மேல் கோபப்படவும் முடியவில்லை. அவர்கள் அவள் மேல் மிகவும் அன்பு கொண்டே பேசுவதனுடன் அவர்கள் பேசியதிலும் உண்மை இருந்தது. இந்த அப்பா வேறு ஏதாவது காரணம் சொல்லியிருக்கக் கூடாதா? மனதில் புலம்பியபடியே தன் தந்தையை பார்த்தாள். அவரால் காதில் எதுவுமே விழாதது மாதிரி எப்படி இருக்க முடியுது? யோசித்தபடியே தன் வேலையைப் பார்க்க சென்றாள்.

வேலையின் இடையே மீண்டும் அவர்கள் பேச்சு ஞாபகம் வந்தது.

பார்வை இல்லாதோர் பள்ளிக்கு வேலைக்கு அவளை கட்டாயப்படுத்தி அனுப்பியது அவர்தான். "அவர்களை பார்க்கும்போது அவர்களை வாழ வைக்க வேண்டும் என்ற எண்ணம்தான் நமக்கு தோணும். நாம வாழணும்னு தோணாது." என்று சொல்லியது இன்றும் ஞாபகம் வந்தது.

ப்பா ஏனோ இன்று சோர்ந்து போன மாதிரி தெரிந்தார். இப்போதெல்லாம் அடிக்கடி இதே மாதிரிதான். இரவு உணவுக்குப்பின் அப்பாவின் அருகில் வந்து அமர்ந்தாள்.

"அப்பா! என்னாச்சுப்பா? ஏன் சோர்ந்து போன மாதிரி தெரியறீங்க?"

அவளையே பார்த்தார் மோகன்.

"ஏம்மா உனக்கு என் மேல் கோபம் இல்லியா?"

"எப்படிப்பா கோபம் வரும்? எனக்கு செய்ய வேண்டிய எதிலும் நீங்க குறை வைத்தது இல்லை. கல்யாண விசயத்தில் இப்படி நடந்துக்கறீங்கன்னா அதில் ஏதாவது காரணம் இருக்கும். எனக்கு என்ன வருத்தம்னா நீங்க பணத்தை காரணமா சொன்னதுதான்."

அப்பா அவளை பார்த்த பார்வையில் எதுவும் புரியாமல் பார்த்தாள்.

"போம்மா நீ போய் தூங்கு."

தூங்க போயும் அவளுக்கு நீண்ட நேரம் தூக்கம் வரவில்லை.

றுநாள் காலை.

மோகனை பார்த்த சந்தோஷிக்கு ஏதோ சந்தேகம் வந்தது. அப்பாவின் நண்பர் வக்கீல் சேகருக்கு போன் செய்தாள்.

விசயம் தெரிந்து வந்த அனைவரும் அவரின் இறப்புக்கு வருத்தப்படவில்லை.

"இவன் இந்த பொண்ணுக்கு செஞ்ச கொடுமைக்கு அனாதைப் பொணமா போகட்டும். இனியாவது இந்தப் பொண்ணுக்கு ஒரு விடிவுகாலம் வரட்டும்." என்றனர்.

ஆனால் சேகர் வந்த உடன் எல்லாமே மாறிவிட்டது. அப்போதுதான் இறந்திருந்தார். சிறிது நேரத்தில் ஆம்புலன்ஸ் வந்தது.

மோகனின் கண்கள் தானமாகப் பெறப்பட்டன. அவர் உடம்பு மருத்துவக்கல்லூரிக்கு தானமாக எடுத்துச்செல்லப்பட்டது.

"இந்த மோகனை புரிந்து கொள்ளவே முடியவில்லையே. இருக்கும்போது ஒரு மாதிரி பேச வச்சான். இப்போ இறந்தபிறகும் வேற மாதிரி பேச வச்சுட்டுப் போயிட்டானே. இனியாவது இந்தப் பொண்ணுக்கு நல்லது நடந்தால் சரி;."

ஆனால் அந்த நல்லதைப் பற்றி ஏனோ சந்தோஷிக்கு ஏற்கப்பிடிக்கவில்லை. பாசமாய் இருந்த அப்பா ஏன் அப்படி நடந்துகொண்டார் என்று தெரியாமல் அவளுக்கு கல்யாணமே பிடிக்கவில்லை. ஆனால் காரணம் தெரிய வந்த போதோ அவளால் தாங்க முடியவில்லை.

அந்த காரணம் சேகர் மூலம் தெரிய வந்தது. அது மோகனின் கடிதம்.

"அம்மாடி சந்தோஷி! எப்போதுமே நீ சந்தோஷமாக இருக்க வேண்டும் என்றுதான் உனக்கு இப்படி பெயர் வைத்தோம். உன் குழந்தைகளை தூக்கி கொஞ்ச ரொம்ப ஆசைப்பட்டோம். நீ கல்லூரியில் சேரும் முன் உனக்கு மூச்சு திணறல் வந்தபோதுதான் எனக்கு அந்த ஆசையில் இடி விழுந்தது. உனக்கு இதயம் பலவீனமாக இருப்பதால் சம்சார பாரத்தை தாங்க கூடிய சக்தி இல்லையாம். நான் என்ன செய்யட்டும்? உன் அம்மா எப்படி இறந்தாள் தெரியுமா? உனக்கு கல்யாணம் பண்ணியே தீருவேன் என்று அவள் பிடிவாதம் பிடித்ததால் நான் உண்மையை சொல்ல வேண்டி வந்தது. அது அவளால் தாங்க முடியவில்லை. இதை அப்போதே எப்படி தாங்கியிருப்பாள். அதான் ஏதேதோ காரணம் சொன்னேன். உன் இதயம் பலவீனமானது என்று தெரிந்தால் இன்று உனக்காக பேசும் இவர்கள் உன் சொத்துக்காக என்ன வேண்டுமானாலும் செய்யக்கூடும். நீ இருக்கும் வரையிலாவது சந்தோஷமாக இருக்க வேண்டும் என்றுதான் உன்னை சேவை செய்ய திசை திருப்பினேன். நான் இறந்தபிறகுதான் இந்த கடிதம் உனக்கு கிடைக்கும். இனியும் உன் நிலைமையை வெளியில் சொல்ல வேண்டாம். பணம் யாரை எப்படி வேண்டுமானாலும் மாற்றக்கூடும். இப்போது உன் மேல் ஒரு பரிதாபம் இருக்கிறது. அது அப்படியே இருக்கட்டும். நான் கடவுளிடம் உனக்காக சண்டை போடப் போகிறேன். நீ என் மேல் கோபப்படாதது மட்டுமே எனக்கு ஆறுதல் அம்மா. கவனமாக இரு."

இந்த ரீதியில் சென்ற கடிதத்தை படித்த சந்தோஷியால் துக்கத்தை கட்டுப்படுத்த முடியவில்லை.    

தேற்றுவாரின்றி அவள் ஓங்கி அழ ஆரம்பித்தாள். அது தனக்கு வந்த நோயைப்பற்றி எண்ணி அழவில்லை. தனக்காக தனது நல்ல பெயரை தியாகம் செய்து கெட்ட பெயருடன் இறந்த அப்பாவுக்காக தன்னால் எதுவும் செய்ய முடியவில்லைவே என்றுதான். 

This is entry #37 of the current on-going short story contest! please visit contest page to know more about the contest.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.