(Reading time: 11 - 22 minutes)

திருமதி. மீரா மகேந்திரன் - ஸ்வேதா

(பணத்திற்கும் பாசத்திற்கும் போர் !!)

This is entry #38 of the current on-going short story contest! please visit contest page to know more about the contest

கிண்டி தொழில் பேட்டையில் ஒரு ஓரத்தில் சின்னதாய் ஆரம்பித்திருந்த எம்.பி எகுமென்ட் பிரைவேட் லிமிடெட் அதிவேகத்தில் வளரந்துக்கொண்டிருக்கிறது.

டைரக்டர் மகேந்திரன் அறையில் "பொட்டி கடை அளவுல ரெண்டு ரூம், வெல்டிங் மிஷின்  வெட்சிக்கிட்டு என்னோட மோதுற?? டேய் நான் எல்லாம் இந்த தொழில்ல மூழ்கி முத்து எடுத்தவன் டா" ஒருவன் மிரட்டி கொண்டிருந்தான்.

பிரதாப்  மிரண்டு கொண்டிருந்தான். மகேந்திரன் ஆயாசமாக பார்த்துக்கொண்டிருந்தான். "சார் கோட் சூட் எல்லாம் போட்டுக்கிட்டு, இது என்ன சார் இப்படி மீன் மார்க்கெட் ரவுடி மாதிரி மெறட்டிக்கிட்டு" கிண்டலாக சொல்லி அவன் கோபத்தை கிளறிவிட்டான் மஹி.

tmm

"நக்கல் கேட்குதா உங்களக்கு" என்று ஆவேசமாக நாற்காலியில் இருந்து எழுந்து கொண்டே யாருக்கோ போன் செய்து   "டேய் நான் தான், இவன் பொண்டாட்டி அந்த காலேஜில் தானே வேலை பாக்குது தூக்கு டா அவளை"

கேட்டவுடன் மஹி பதட்டமாக, அவன் "விசாரிச்சேன், அய்யாவுக்கு குடும்பம் மேல எவ்ளோ பாசம்?? இந்த டெண்டர் கோட் வாபஸ் வாங்கு உன் வீட்டுக்காரம்மா தானா வீட்டுக்கு வருவா" என்று சொல்லிவிட்டு வெளியேறி விட்டான்.

ணி பார்த்தான் மதியம் இரண்டு தான் கல்லுரி முடிய இன்னும் இரண்டரை  மணி  நேரம் இருக்க , மீராவை போனில் அழைத்தான். மீரா போன் எடுக்காமலிருக்க வீட்டிலிருக்கும் அவன் அம்மாவை அழைத்தான்.

"அம்மா, மீரா எப்போ வருவா?"

“கண்ணா, இன்னைக்கு உங்க அண்ணிக்கு பொறந்த நாள் அவங்க வீட்டுக்கு போயிட்டு வர லேட் ஆகும் சொல்லிட்டு போனாள் காலையில" என்று பொறுமையாக சொன்னார்

"சரிம்மா"அவர் மேற்கொண்டு  பேச விடாமல்  அழைப்பை துண்டித்தான் .
அடுத்து அவன் அண்ணனிற்கு போன் செய்தான்

"அண்ணா... மீரா..." என்று அவன் தொடங்கும் முன்னே 

நரேன், "மஹி எப்படி இருக்க, அப்படி என்ன வேலை உனக்கு என் கிட்ட பேச கூட நேரமில்லாமல் ??"

"அண்ணா!! மீரா வந்தா என் கிட்ட பேச சொல்லுங்க"

அடுத்து நரேன் பேச தொடங்குகையில் மஹி அந்த பக்கம் அழைப்பை துண்டித்திருந்தான் .

மனதில் ஒரு ஓரத்தில் பீதி தொடக்கமாக திரும்ப மீராவை போனில் அழைத்தான். இம்முறை "ஸ்விட்சிட் ஆப்". பயம் அடிவயிற்றில் பிறக்க ஆரம்பித்துவிட்டது.

ண்டியை பழுது பார்க்க விட்டிருந்தவள் நடந்து பஸ் ஸ்டாபிர்க்கு வந்தாள்.  அலுப்பும் சலிப்பும் கொஞ்ச நாட்களாய் அவளை ஆட்கொண்டிருந்தது. செய்ததையே திரும்ப திரும்ப செய்யும் இயந்திர தனமான வாழ்கை வெறுப்பாக்கி கொண்டிருந்தது.

பெண்ணிற்கே உரிய உள்ளுணர்வு எச்சரிக்கை கொடுக்க சுற்றத்தை நோட்டம் விட்டாள்.  கைப்பை திருடுபவன், சங்கலியை அறுப்பவன் என்று இந்த மாநகராட்சியில் தான் எத்தனை பேர். வித்தியாசமாக எவனும் கண்ணில் படவில்லை. சுதாரித்து காத்திருந்தாள் பேருந்திற்கு. அந்த நிலையமும் நிறைய மக்களுடன் தான் இருந்தது.

"சார் நம்ம பாட்ரோல் எப்பயும் இங்க நின்னு தான் பழக்கம், நான் டீ வாங்கிட்டு வரேன் சார்" டிரைவர் ஆறுமுகம் அவனிற்கு தகவல் சொல்லிவிட்டு கிளம்பினான்.

"நல்ல வேலைடா " என்று புலம்பிகொண்டே பாண்டியன் சீட்டில் சாய்ந்து அமர்ந்து சாலையை பார்க்கலானான்.

எதிரே அந்தப்பக்கம் பஸ் ஸ்டாப்பில் வெள்ளையும் ஊதாவும் கலந்த புடவையில் அந்த பெண் கை கட்டிக்கொண்டு நிற்பதை பார்க்கையில் பரவசமாய் இருந்தது, அவள் சேலைகேற்ப  கைப்பை, கையில் ஒரே கனமான தங்க வளையல், இன்னொரு கையில் அகலமான பட்டையாக கைக்கடிகாரம், கழுத்தில் கனமான சங்கலி அவனை குழப்பியது அவள் திருமணம் ஆனவளா இல்லையா என்று, நெற்றியில் மட்டும் பொட்டு, முகத்தில் எந்த சலனமும் இல்லாமல் பொறுமையுடனான காத்திருப்பு.அவனை போலவே அவள் பக்கம் நின்றிருந்த ஒருவனும் அவளை இரசித்துக்கொண்டிருந்தான். இவனிற்கு உள்ளுக்குள் காந்தியது.

"ராஸ்கல்" என்று சொல்லிக்கொண்டே அவன் இறங்கி பஸ் நிலையத்திற்கு போக அதற்குள் கடந்து சென்ற பஸ்ஸில் அவள்  ஏறிவிட்டிருந்தாள். பாண்டியனிர்க்கு எதுவோ இழந்தது போல் ஆனது.

வெறுப்பாகி டீ வாங்கிவந்த ட்ரைவரிடம் கோபத்தை காண்பித்தான். "எவளோ நேரம் டீ வாங்க ??"

அவன் குடித்து முடித்ததும் கிண்டி காவல் நிலையத்திற்கு பட்ரோல் வண்டி செல்ல நிலை கொள்ளாமல் வீற்றிருந்தான் அவன். வாக்கி டாக்கி இரைச்சலுடன் வண்டிகளுடன் ஊர்ந்து கூண்டே அவன் மனமும் கடந்து சென்ற பத்து நிமிடத்திலே ஊர்ந்து கொண்டிருந்தது.

ஜீப் நிலையத்தில் உள்ளே நுழைகையிலே சத்தம் கேட்டது.

" யோவ், பொண்டாட்டி ரெண்டு மணி நேரமா தானே காணல?? அவனவன் மூணுமாசமா, வருஷ கணக்கா  தொலைச்சிட்டு நிக்கிறான், நீ என்னயா நீ?? நாளைக்கு காலையில வா... எதாவது செய்ய முடியுமானு  பாக்கலாம் " ஹெட் கான்ஸ்டேபிள் ஒருவனை விரட்டி கொண்டிருந்தார்.

"விவரமா விசாரிக்க கூட மாட்டேன்கறீங்க?? என்னயா போலிஸ் நீங்கெல்லாம் " உணர்ச்சி கொந்தளிக்க மஹி கத்தி தீர்த்தான்.

பிரதாப் சமாதனம் செய்துக்கொண்டிருந்தான். மகேந்திரன் பேச்சு பாண்டியனிர்க்கு கோபம் கொடுத்தாலும்,செவந்த முகமாய், கண்ணில் நீர் கோர்வையுடன், பதற்றத்தில் இருக்கும் மஹியை பார்க்க பாவமாக இருந்தது அவனிற்கு.

"எக்ஸ்குயுஸ் மீ சார்... இங்க வாங்க என்ன பிரச்சனை உங்களிற்கு?? போலிஸ் ஸ்டேஷன் வந்து போலீஸை திட்டிட்டு இருக்கீங்க ??"

"சார், நான் மகேந்திரன் இன்னைக்கு என் மனைவியை கடத்துறேன் என்று என்கிட்டே ஒருத்தன் மிரட்டி  விட்டு போனான், இப்போது என் மனைவியை காணலை அவனை அர்ரெஸ்ட் பண்ணுங்க " என்றான் சிறுபிள்ளை போல்.

"விவரமாக சொல்லுங்க, உதவ முடியுமா என்று பார்கிறேன்" பாண்டியன்.

தொழிலில் போட்டி காரணமாக மிறட்டல் ஆரம்பித்து தேடியது வரை அவன் சொல்ல மகேந்திரனின் மனைவியின் அடையாளங்கள் பாண்டியன்  கேட்க மஹி காலை அவன் சாப்பிடும் நேரத்தில் அவன் கண்களில் ஐந்து பத்து நிமிடம் விழுந்த மீராவை நியாபகப்படுத்தி சொல்ல ஆரம்பித்தான் "வெள்ளையில் ஊதா பூ இருக்கும் காட்டன் புடவை, கழுத்தில் இரண்டு செயின் தாலியும் கழுத்தோட ஒட்டிய செயின் இன்னொன்று,ஒரு கையில் மட்டுமே வளையல்"  என்றவன் இடையில் நிறுத்தி கைபேசியை தேடி புகைப்படம் தேட எல்லாமும் சரண், மித்ரன் மட்டுமே இருக்க தவித்துப்போனான்.

இதயத்தில் சின்னதாக மின்சாரம் பாய்ந்தது அவனிற்கும் மீராவிற்கும் விழுந்த புலனாகாத அந்த திரையின் தடிமன் நினைத்து . கொஞ்ச நாட்களாக  பேசாமல் அவள் வேலையே மட்டும் பார்த்தது, எதற்குமே உதவி கேட்காமல் வீட்டின் நிர்வாகம் அவளே செய்தது, குழந்தைகள் இருவரையும் அவளே கவனித்தது எல்லாம் கண்முன் நிழலாய் வர கன்னத்தில் கண்ணீர் சூடாக இறங்கியது.

உடைந்த அவனை அவனே சேகரித்து தொடர்ந்தான் "கையில் டைடான் ராகா கடிகாரம், ஊதா நிற கைப்பை, காலேஜ் அடையாள அட்டை, பச்சை நிற டப்பர்வேர் லஞ்ச் பாக்ஸ், நெற்றியில் புருவத்தின் மேல் மச்சம்...." சொல்லிக்கொண்டே போனான்.

கண்களில் ஏனோ அந்த பேருந்து நிலையத்தில் நின்றிருந்த பெண் வந்துப்போனாள் பாண்டியனிர்க்கு.

விசாரிப்பை ஆரம்பித்தான் பாண்டியன் "உங்க அண்ணன் வீடு எங்க இருக்கு "

"சோழங்கநல்லூர், "

"காலேஜ் எப்போது முடியும் "

"நாலு மணிக்கு "

"இப்போ டைம்?? "

"ஐந்து மணி "

"ஒரு மணி நேரம் தான் ஆகியிருக்கு வீட்டில் இருக்க போறாங்க போய் பாருங்க "

"இல்லை சார் மூணு மணியிலிருந்து அவங்க போன் ஆப்ல இருக்கு "

"சரி நீங்க வீட்டுக்கு போங்க நான் சோழங்கநல்லூர் பக்கம் தான் போறேன் பார்கிறேன் "

கேந்திரன் புலம்பிக்கொண்டே வண்டியை செலுத்தினான்."எப்போ இந்த டெண்டர் விஷயம் ஆரம்பித்ததோ நான் நானாக இல்லை. போதும் கஷ்டமெல்லாம் கொடேஷன் கொடுக்க வேண்டாம், மீரா இல்லாமல் என்னால் இருக்க முடியாது,  மித்து, சரண் நிலைமை என்ன ஆகும் ??" அவன் வாய் பேசிக்கொண்டே இருந்தது. பிரதாபிர்க்கு பரிதாபமாக இருந்தது.

வீட்டில் அவன் இரட்டை பிள்ளைகள் சேர்ந்துக்கொண்டு "அப்பா அம்மா இன்னமும் வரல "என்று சொல்லிவிட்டு அவரவர் வேலையை பார்க்க சென்று விட்டனர்.

அவன் அம்மாவின் முதுமை கண்ணில் பட்டது. மித்ரனின் சேட்டையை ரசித்தப்படி ஈடு கொடுத்துக்கொண்டே அவர் காபி போடுவது ஏனோ அவன் மனதில் அழுத்தத்தை கொடுத்தது.

"அம்மா வந்ததும் டான்ஸ் கிளாஸ் போகலாம் என்ன??" என்று அவர் சரணை சமாதனம் சொல்வதை கேட்கையில் தன் பிள்ளைகள் வளர்ந்து விட்டனர் என்பதுப்போல் தோன்றியது.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.