(Reading time: 24 - 47 minutes)

அதிசயம் - மது கலைவாணன்

This is entry #39 of the current on-going short story contest! please visit contest page to know more about the contest

ன்றாக மலர்ந்து கொண்டிருக்கும் மலர்களை பார்க்கும்பொழுது உள்ளத்தில் எழும் ஆனந்தம் அளவிட முடியாதது. அது போலவே , பறந்து கொண்டிருந்த வெண்ணிற புறா தனது சிறகுகளை படபடவென வீசி அதனுள் இருக்கும் ஆனந்தத்தை காண்பித்தது.

"ஏன் அம்மா இந்த புறா இவ்ளோ fast'a பறக்குது" என்று தன் மழலை மாறாத குரலில் கேட்டால் ஆறாம் வகுப்பு படிக்கும் ஜான்வி.

"உங்க innocent childrens  எல்லாரையும்  பார்த்ததும் அதுக்கு ரொம்ப சந்தோஷம் டா" என்றால் ஜான்வியின் தாய் ஹேமா.

athisayam

"சீக்கிரம் வா டா குட்டி class ஆரம்பிக்க போகுது " என்று ஜான்வியை  இழுத்து கொண்டு போனாள் ஹேமா.

அன்று ஆறாம் வகுப்பு தொடங்கும் முதல் நாள் என்பதால் பெற்றோர் வந்திருந்தனர். Class’ல் அனைவரும் வந்ததும் பேச தொடங்கினார் ரம்யா டீச்சர்.

"இன்னிக்கு நான் உங்க எல்லாரோட goal / aim பத்தி கேட்க  போறேன் " என்றார்.

"goal'னா என்ன டீச்சர்" என்று கேட்டாள் கௌரி. first bench student.

"நீங்க பெரியவங்க ஆனதும் என்னவா ஆக போறீங்க. அது தான் goal." என்று விளக்கினாள் ரம்யா.

இது தான் உங்க life goal என்று பிள்ளைகளுக்கு திணிக்கும் டீச்சர்களுக்கு  மத்தியில் ரம்யா உண்மையாகவே  நல்லவர் தான்.

"டாக்டர்,போலீஸ்,சமையல் காரன் என்று வரிசையாக கூறி கொண்டிருந்தனர் பிள்ளைகள்.இவ்வாறாக வரிசையில் அடுத்து ஜான்வி எழுந்து நின்றாள்.

மாணாக்கர்களும் , வெளியே  நின்று கொண்டிருந்த பெற்றோர்களும் வியக்கும் வண்ணம் "நான் குடும்ப தலைவி  ஆக போறேன்" என்ற  ஜான்வியிடம்  ஆசிரியர்  ரம்யா  "ஏன்  குடும்பத்தலைவி  ஆக போற ?"  என்று  கேட்டார் "என்னோட  அனிதா  அக்கா குடும்பத் தலைவி  அதனால நானும் அவங்கள மாதிரி குடும்பத்தலைவி ஆகணும்"

"அனிதா அக்கா இங்க இருக்காங்களா" என்று ஜான்வியின் அம்மா ஹேமாவிடம் கேட்டார் ரம்யா.

ஹேமா அனிதாவின் கதையை கூற ஆரம்பித்தார்.

மதில் சுவற்றில் நின்று இக்காட்சிகளை கண்டுகொண்டிருந்த அந்த வெண்ணிற புறா மெலிதாக தன் கால்களை உயர்த்தி இறகுகளை சிலிர்த்து பறக்க தொடங்கியது.நாமும் அதனோடு சேர்ந்து காலசக்கரத்தில் பின்னோக்கி பறப்போம்.

"வின்னில் மிதக்கும் ஒரு கல்லை கல்லாக பார்க்கலாம் , பூமியாக பார்க்கலாம் , இன்னும் கொஞ்சம் தெளிவான மனதோடு அதனை கடவுளாக பார்க்கலாம்." என்றார் அனிதாவின் தந்தை சேகர்.

"போதும்பா உங்களோட philosophy" என்றாள் அனிதா.

"உனக்கு தெரியாது காலேஜ் படிக்கறப்ப நான் தான் first." என்று இழுத்த சேகரிடம்

"எதுல தேங்கா பொருக்கறதில்லையா"  என்ற அனிதாவிடம்

உடனே அனிதாவின் அம்மா ‘உமா’ கோபத்துடன் "என்னடி இது மரியாதை இல்லாம. அடி வாங்குவ" என்றார்.

"அனிதாவை திட்டாத. நாங்க ரெண்டு பேரும் friendly'ஆ பேசறதுல உனக்கு பொறாமை  டி" என்றார் சேகர்.

"அம்மா  நானும் அப்பாவும் தளபதி படத்துல வர மாதிரி close friends.எங்க friendship உனக்கு புரியாது."

"தப்பித்தவறி கூட உங்க அப்பாவ ரஜினிகாந்த் கூட compare பண்ணிடாத டி. அவர் நல்லா  ஸ்மார்டா  இருப்பார்.உங்க அப்பா மாதிரி இல்ல." என்று கேலியாக சொன்னார் உமா.

"My Lord. Please save" என்று தனக்கு தெரிந்த அரைகுறை இங்கிலிஷில் பிதற்றினார் சேகர்.

"என்னது லட்டுவ save பண்ணனுமா?. எப்பவுமே சாப்பாடு நெனப்பு தானா.உங்க அம்மாவைதான் சொல்லணும்.சூர புளி கொழம்பு வெச்சு உங்கள இப்படி சாப்பாட்டு  ராமன் ஆக்கிட்டாங்க " என்றார் உமா.

"அது என்னமா சூர புளி குழம்பு?" - கேட்டாள்  அனிதா

"சாதரணமா புளி கரைச்ச கொழம்புதான். ஆனா உங்க அப்பா அத சூர வேகத்துல சாப்ட்டு தீர்த்துடுவார்.So அது சூர புளி குழம்பு" என்றார் உமா.

"அப்டினா இவர தான சூர புளி சேகர்னு கூப்பிடனம் " என்ற அனிதாவிடம் "ஆள  விடுங்கடா சாமி " என்று சொல்லி ஓட்டம்பிடிதார்  சேகர்

காலம் இப்படியாக மிக சந்தோஷமாக ஓடியது அனிதாவின் வீட்டில்

"இந்த பையனோட profile  நல்லா பொருந்தியிருக்கு " என்று உமாவிடம்  சொன்னார்  சேகர்

"செப்புங்க பையன பத்தி" என்றார் உமா , அரைகுறை தெலுங்கில்

"பையன் பேரு மகேஷ். IT company ல வேலைபார்க்கிறான் .அப்பா கிடையாது.அம்மா retired bank  ஆபீசர்." என்று கூறிமுடித்தபின் அனிதாவின் வீட்டிற்கு திருமண பொலிவு வந்தது.

அனிதாவிற்கு  திருமணம் நன்றாக முடிந்தது.

பெண்ணிற்கு திருமணம்  முடிந்த அந்தநாளில் பெண்ணின்  பெற்றோர்களின் மனம் ஒரு உணர்ச்சி க்கடலாக இருக்கும் .அந்த கடலில் நீந்திகொண்டிருந்தனர் சேகரும் உமாவும்.இருவரும் ஆனந்தம் கலந்த கண்ணீருடன் அனிதாவை வழியனுப்பினார்கள். விருந்து ,தேன்நிலவு என்று ஒரு மாதம் மிக நன்றாக   ஓடியது மகேஷிர்க்கும்  அனிதாவிற்கும்.

ரு மாதத்திற்குபின் ...

அனிதாவின் குடும்ப வாழ்க்கை ஆரம்பமானது. அனிதாவின் மாமியார் கண்டிப்பானவர்.மகேஷ் அனிதாவின் மேல் அளவு கடந்த பாசம் வைத்திருந்தான். பூகம்பமே வந்தாலும் "ஒ அவளோதானா" என்று மிக எளிதாக எடுத்துக்கொள்ளும் சூழ்நிலையில் வாழ்ந்த அனிதாவிற்கு புகுந்த வீட்டின் சூழல் ஒரு சவாலாக இருந்தது.

"காலைல 4:30 மணிக்கு எந்திரிகனம் . புரியுதா?." லேட்டாக 7 மணிக்கு விழித்த அனிதாவிடம் கடிந்து பேசினார் மகேஷின் அம்மா மரகதம்.

"இல்லமா நைட் தூங்க லேட் ஆகிடுச்சு.அதான் சீக்கிரமா எந்திரிக்க முடியல." என்றால் அனிதா.

"இந்த கதையெல்லாம் வேண்டாம். என்திரின்னு சொன்னா oknu சொல்லனம்.புரியுதா" என்றார் மரகதம்.

மகேஷிடம் முறையிட்டாள்  அனிதா. "அட்ஜஸ்ட் பண்ணிட்டு போடா செல்லம்" என்று கொஞ்சிவிட்டு ஆபீஸ்க்கு எஸ்கேப் ஆனான் மகேஷ்.மகேஷிர்க்கும் அனிதாவிற்கும் இருக்கும் கொஞ்சல்கள் ஏனோ மரகதத்திற்கு பிடிக்கவில்லை. அனிதாவை ஒரு போட்டியாளராக பார்த்தாள் மரகதம். போட்டிபோட்டு தானும் மகன் மீது அளவு கடந்த அன்பை காட்டினார் மரகதம்.

அனிதா மிக ஆவலாக எதிர் பார்த்த  வார விடுமுறை வந்தது. தன்  அம்மா & அப்பா'வை ரொம்ப மிஸ் செய்த அனிதா'விற்கு அவர்களை  சென்று பார்க்க வேண்டும் என்ற ஆவல் இருந்தது. மரகதத்திடம்  அனுமதி கேட்டாள்.

"அம்மா , நானும் அவரும் எங்க வீட்டுக்கு போய்ட்டு வரட்டுமா?.இன்னிக்கு இரவே   திரும்ப வந்துடுவோம்" என்றாள்.

"முதலில் என்கிட்ட நீ  இப்படி நேர்ல நின்னு ஒரு மறியாதை இல்லாம கேட்க கூடாது. மகெஸ்கிட்ட நீ  ரிக்வெஸ்ட் சொல்லி அவன் தான் என்கிட்ட ரிக்வெஸ்ட் பண்ணனும். என்ன ஓவர் திமிரா உனக்கு." என்று மிரட்டினார் மரகதம்.

சற்றே அதிர்ச்சி அடைந்த அனிதா, மகேஷிடம்  தன் வீட்டிற்கு போகும் விருப்பத்தை சொன்னாள். மகேஷ், மரகதத்திடம் பேசினான்.ஆனால் , மரகதம் வேறு  மாதிரியாக சூழ்நிலையினை திசை திருப்பினாள்."ஏன்டா உண்ண என்கிட்ட கேட்க சொல்றா?.அவளே  என்கிட்ட நேர்ல கேட்களாம்ல. so இப்பவே நீ அவ பேச்ச கேட்க  ஆரம்பிச்சிட்ட. பொண்டாட்டி தாஸனா இருந்த நம்ம மாமாவோட நிலைமை என்ன ஆச்சுணு தெரியும்ல. நடு தெருவுல நின்னாரு". என்றார் மரகதம்

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.