(Reading time: 24 - 47 minutes)

 

ந்த நேரம் ஆண்டாள் பாட்டி தேவயானியிடம் கூறினாள் " நீ ஒன்னும் கவல படாத மா. வெத்தலைல மை போட்டு பார்த்தா திருடனோட முகம் சிரிச்சாப்ல வரும். அத வெச்சு கண்டு புடிச்சிடலாம்" என்றாள்.  

அனிதா  "ஹெஹேஹே..  யேய் யேய்  யேய்  யேய்  யேய் ஜாலி ஜாலி ஜாலி.. " என்று சிரித்துகொண்டே  மகேஷிடம்  கூறினாள் "என்னங்க , யோசிச்சு பாருங்க வேத்தலயோட மை பூசின frame'ல  spiderman மாதிரி  ஒரு போஸ்'ல  நீங்க  தெரியரத. "... மகேஷ்  கற்பனையை தட்டிவிட்டு யோசித்தான். மிக கொடூரமாக இருந்தது. "ஐயோ... ஏன் டி இப்படி.... " என்றான். "சும்மா சொன்னேங்க " என்றாள்  அனிதா.

போலீஸ் சீக்கிரமாக திருடனை கண்டு பிடிப்போம் என்று வாக்கு குடுத்துவிட்டு சென்றனர்.

பின்பு  தேவயானியை  தனியாக  பூங்காவிற்கு அழைத்து சென்றாள் அனிதா.

Jewels தொலைந்ததை பற்றி பொலாம்பி தள்ளினாள் தேவயானி.

அனிதா  பேச ஆரம்பித்தாள்.

"அக்கா , நேத்திக்கு நாம பேசினப்போ நீங்க எத பத்தி பேசினீங்க?" - அனிதா

"என்னோட மாமியார் திட்டினத  பத்தி பேசினேன்." - தேவயானி

"அப்போ என்ன சொன்னீங்க?" - அனிதா

"அவங்க பேசினது என்னை ரொம்ப காயபடுத்துச்சுன்னு சொன்னேன்" - தேவயானி

"அவ்ளோ தான் சொன்னீங்களா?" என்றாள். - அனிதா

"நைட்  full’a  அத நினைச்சு அழுதுட்டு இருந்தேன்னு சொன்னேன்". - தேவயானி

"ஹ்ம்ம்ம் அப்பறம் வேற  என்ன சொன்னீங்க" - அனிதா

" தெரியலயே. நீயே  சொல்லு. என்ன சொன்னேன்?." - தேவயானி

"அவங்க பேசினத என்னால மண்ணிக்க முடியாது , மறக்கவும் முடியாது"னு சொன்னீங்க. - அனிதா

"ஆமா" - தேவயானி

"ஆனா  இன்னிக்கு அத பத்தி கொஞ்சமாவது யோசிச்சீங்களா?" - அனிதா

"இல்லை. ஏன் அத பத்தி நான் யோசிக்கல?" - தேவயானி

"ஏன்னா அத விட பெரிய ப்ராப்லம் உங்களுக்கு இப்போ கிடைச்சிடுச்சு . So அந்த ப்ராப்லம் சின்னதாகிடுச்சு . அதனால தான்." - அனிதா

"அப்போ நான் எப்பவுமே problems'க்கு தான் முக்கியத்துவம் தரேனா? ." - தேவயானி

"அதே தான். மனசுக்கு வேற வேளையே இல்ல. பிரச்சனைகளை  மட்டும் தான் யோசிக்கும். உங்க பிரச்சனைகள்  எல்லாத்தையும் தூக்கி எறிங்க.அது பாட்டுக்கு மனசோட ஓரத்துல இருக்கட்டம்.நீங்க enjoy  பண்ணுங்க." - அனிதா

"எனக்கு இப்போ ஏதோ புரியுது அனிதா " என்றாள். - தேவயானி

"ஹப்பா டா புரிஞ்சிடுச்சா. சரி இந்தாங்க உங்க  jewels." என்று கொடுத்தாள் அனிதா.

"இதெல்லாம் எப்படி உன்கிட்ட". - ஆச்சரியத்துடன் கேட்டாள் தேவயானி.

நடந்த அனைத்தையும் கூறினாள் அனிதா.

"உங்களுக்கு அனுபவபூர்வமா  பிரச்சனைகளை எப்படி handle பண்றதுணு  சொல்லத்தான்  jewels’ சை என்னோட husband  வெச்சு  திருடினேன்" என்றாள் அனிதா.

கண்ணீரும் சிரிப்புமாக அனிதாவை அணைத்துக்கொண்டாள் தேவயானி.

"உங்க jewels எல்லாம் கரெக்டா இருக்கானு பார்த்துக்கோங்க" என்றாள் அனிதா.

"I always trust you டா. நீ ஒரு gift டா அனிதா.நீ கடவுள் அனுப்பிய தேவதை ... நீ ஒரு ... " என்று இழுத்த தேவயானியிடம்

"போதும் போதும்" என்றாள் அனிதா. "சரி. ரோட்'ல jewels'லாம் இருந்துச்சு.திருடன் அங்கயே போட்டுட்டு ஓடிட்டான்"னு சொல்லி சமாளிச்சிடுங்க என்றாள் அனிதா.

வ்வாறாக அனிதாவின் adventures தொடர்ந்தது.தினமும் காலை எழுந்தவுடன் அனிதா  இன்றைக்கு என்ன மாயாஜாலம் செய்ய போகிறாள் என்று மகேஷ் மற்றும் அவள் சக தோழிகள் யாவரும் எதிர்பார்க்க தொடங்கினார்கள். மரகதமும் எதிர்பார்க்க தொடங்கினாள்.

Culturals day வந்தது. அனைத்து  போட்டிகளும் நடந்தன.கடைசியாக பரத நாட்டியம். அனிதா மேடை ஏறினாள்.ஆனால் அவளால் நாட்டியம் ஆட முடியாமல் போனது.

அதிர்ந்தது மேடை. ஆம். மிக அதிக வேகத்துடன் நில நடுக்கம் வந்தது!!!!.apartment building  இடிந்து விழுந்தது. பலர் இடிப்பாடுகளில் சிக்கி கொண்டார்கள்.

அனைவரும் தப்பி ஓடிக்கொண்டிருந்த நேரத்தில் , அனைவரையும்  காப்பாற்றிக்கொண்டிருந்தாள் அனிதா. ஜானவியின்  வீட்டுக்கு ஓடினாள் அனிதா. கிச்சனில்  சிக்கி இருந்த ஜானவியை  காப்பாற்றினாள். ஆனால் , ....

மேல் சுவர் அனிதாவின் மேல் விழுந்தது. பலத்த காயங்களுடன் மருத்துவமனையில்  சேர்க்கப் பட்டாள் அனிதா.

அதிர்ஷட வசமாக அனைவரும் culturals'காக apartment வெளியில் இருந்ததால், உயிர் சேதம் குறைவே.10 பெர் பலியானார்கள் , ஒருவர் கவலைக்கிடம் என்றது ந்யூஸ் ‌ பேப்பர். அந்த ஒருவர்   "அனிதா ". பலரை காப்பாற்றிய அனிதா நலம்பெற வேண்டி அனைவரும் pray செய்தனர். கண்ணீர்  மல்க அனைவரும் அனிதா மறுபடியும் வருவதற்காக வேண்டிக்கொண்டிருந்தனர். மகேஷிற்கு அதிர்ச்சியில் அழுகை கூட வரவில்லை.

மரகதம் ஒரு ரகசிய அன்பினை அனிதாவின் பால் வைத்திருந்தாள். அனிதாவின் குழந்தைத்தனம் அவளை impress செய்திருந்தது.மரகதம் டாக்டரிடம் சென்று கூறினாள். " அனிதாவை காப்பாத்திடுங்க. அவள் இல்லாமல் என்னால் வீட்டில் இருக்க முடியாது" என்றாள் கண்ணீர் கடலாக கொட்ட.

செய்தி கேட்டு அனிதாவின்  குடும்பத்தினர்  யாவரும் வந்தனர்.மரணத்தின் விளிம்பில் இருந்த அனிதாவை  சென்று மகேஷ் , மரகதம் மற்றும் யாவரும் பார்த்தனர். அப்பொழுது மகேஷிடம் அனிதா  கூறினாள். "True Love Gives Freedom." மகேஷ் அழுத படியே "இல்ல இல்ல. என்ன விட்டு நீ  போக கூடாது" என்றான்.

மெல்ல மகேஷின்  காதோரத்தில் வந்த அனிதா , ரகசியமாக கூறினாள் "என்ன பாருங்க. நீங்க என்ன போக விடுவீங்க. நான்  free bird’a  பறந்துட்டு இருப்பென். அத பார்த்து  நீங்க happy’a  இருப்பீங்க. சரியா" என்று மறைந்தாள் , பறந்தாள் அனிதா. அவளின் விருப்பப் படியே அவளின் உடல் உறுப்புகள் தானம் செய்யப்பட்டன.

இவ்வாறாக அனிதாவின்  கதையை கூறி முடித்தாள் ஜானவியின் தாய் ஹேமா. அனைவரின் மனமும் கனத்திருந்தது. ஆனால் அங்கு இருந்த அனைவரின் மனதிலும் அனிதாவின் தாரக மந்திரம் ஒட்டி கொண்டது.  அது  "Intensity & Involvement". "வாழ்க்கையின் பால் அதீத ஈடுபாடு".

சில நாட்களுக்கு பின் ...

மகேஷின்  சிரிப்பாள் சுருங்கிய கண்கள் பார்க்கும் திசையில் பறந்து கொண்டிருந்த அந்த வெண்ணிற புறா , விண்ணில் மிதந்த படியே  சென்றபொழுது , மகேஷின்  செவிகளில் ஒலித்தது இவ்வார்த்தைகள் ...

"விண்ணில் மிதக்கும் ஒரு கல்லை , கல்லாக பார்க்கலாம். பூமியாக பார்க்கலாம். இன்னும் கொஞ்சம் நமது தெளிவான மனதோடு அதனை கடவுளாக பார்க்கலாம்.

அனிதா  இன்னும் கொஞ்சம் மேலே போய் அந்த கல்லை அதிசயமாக பார்த்தாள். இந்த பூமியை, இந்த வாழ்க்கையை அதிசயமாக பார்ப்பவர்களை ஒரு குறுகிய வட்டத்திற்குள்  அடைத்து வைப்பது சரி ஆகாது. உயர பற என் அன்பே"

இவ்வார்த்தைகள் அடங்கிய அந்த தருணத்தில் அனிதா மறுபடியும் உயிர்த்தெழுந்தாள்.

"வந்துவிட்டாள் என் அனிதா " என்று தான் தத்தெடுத்த மூன்று வயது குழந்தையை  கொஞ்சியவாறு  முழங்கினான் மகேஷ். 

This is entry #39 of the current on-going short story contest! please visit contest page to know more about the contest.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.