(Reading time: 24 - 47 minutes)

 

ந்த பேச்சு  மகேஷின் "ஈகோ"வை பாதித்தது. ஒருவரின்  "ஈகோ"வை தொட்டுவிட்டால் , அவர்  தானாக உணர்ச்சிகளுக்கு அடிமை  ஆகி விடுகிறார். மகேஷிர்க்கும்  அதுவே  நிகழ்ந்தது. மகேஷ்  எரிச்சலடைந்ததான். அனிதாவின் பேச்சை இனி கேட்பதில்லை என்று முடிவு செய்தான்.

"உங்க வீட்டுக்கு போக வேண்டாம். அங்க எதுக்கு போகனம்? என்றான் அனிதாவிடம்.

"உங்க அம்மா என்ன சொன்னாங்க" என்று கேட்டாள்  அனிதா.

"அவங்க எதுவும் சொல்லல. நீ சொல்லு , எதுக்கு உங்க வீட்டுக்கு போகனம்?" என்றான்  மகேஷ்.

"இல்லைங்க. நான் அவங்கள ரொம்ப மிஸ் பண்றேன்.அவங்கள பார்க்கணம்." என்று அழுதாள் அனிதா.

"நடிக்காத. நான் உன் பேச்ச கேட்கனம். அதுக்கு தான இவ்ளோ  நடிக்கற" என்றான் மகேஷ்.

அனிதா  தேம்பி தேம்பி அழ ஆரம்பித்தாள்.

"நான் அப்படி எல்லாம் நினைக்கவில்லைங்க." என்றாள் அனிதா.

அவளின் உண்மையினை கேட்க  யாரும் அங்கு இல்லை.

சிறிது நேரத்திற்கு பின் ...

குக்கர் இரண்டாவது விசில் வந்ததும் அடுப்பை ஆஃப் செய்தால் அனிதா.

"இன்னும் மூணு விசில் வரல.அடுப்ப 'ON' பண்ணு" என்றாள் மரகதம்.

"இல்லமா எங்க வீட்டில ரெண்டு விசில் தான் வைப்போம்" என்று அப்பாவியாக எதார்த்தமாக  பதில் கூறினாள் அனிதா.

"எப்பொழுதும் உங்க வீட்டு புராணம் தானா?.அப்பறம் எதுக்கு கல்யாணம் பண்ணிக்கிட்ட" என்று அதட்டினாள் மரகதம்.

அந்த வேளையில் , அனிதாவின்  கைபேசி சிணுங்கியது. மரகதம் அதனை எடுத்து பார்த்தார். caller  "அம்மா" என்று வந்தது. மொபைலை  தூக்கி எறிந்தார். சத்தம் கேட்டு  மகேஷ்  வந்தான். "உங்க ரெண்டு பேருக்கும் எப்பவும் சண்டை தானா" என்று கோபத்துடன் அனிதாவை  கடிந்துகொண்டான்.

மணி  இப்பொழுது  2  மணி. மகேஷ் , மரகதம் சாப்பிட தயாரானார்கள்.

பட்ட காலிலே படும். ஆம் , அனிதா , குக்கரை  திறந்து பார்த்தபொழுது , சாதம் குழைந்து இருந்தது. அனிதாவிற்கு  கை  கால்கள் நடுங்க ஆரம்பித்து விட்டன. தான் இரண்டு விசில் வைத்ததால் தான் இப்படி ஆனது என்று உணர்ந்தாள்.

அனிதா கிச்சனை  விட்டு வெளியில் வராததால் , மரகதம் kitchen உள்ளே சென்றாள். அனிதா  நடுக்கத்துடன் சாதம் குழைந்து விட்டது என்றாள். அவ்வளவு தான். மரகதம் கத்த  தொடங்கினாள். விஷயம் அறிந்து மகேஷ் "எனக்கு lunch  வேண்டாம்" என்று கோபத்துடன்  கூறி வெளியில் சென்றான்.

சிறிது நேரம் கழித்து ... 

அனிதா  தன்னை தேற்றிக்கொண்டு  , வீடு திரும்பிய  மகேஷிடம் பேசுவதற்க்கு சென்றாள்.

"என்னங்க நம்ம எல்லாரும் சேர்ந்து  restaurant போவோமா?. கொஞ்சம் change'காக"

மகேஷ்  "ok" என்றான். மரகதமும்  சம்மதித்தாள்.

பக்கத்தில் இருந்த restaurant'க்கு மரகதம் , அனிதா, மகேஷ் மூவரும்  சென்றார்கள்.

அதே restaurant'க்கு அனிதாவின் குடும்பத்தினர் தற்செயலாக வந்தார்கள்!! ..

அவர்களை கண்டதும் அனிதா அதிர்ச்சி அடைந்தாள். தான் தான் அவர்களை restaurant'க்கு வர சொன்னதாக மரகதம் மற்றும்  மகேஷ்  நினைப்பார்கள் என்று நினைத்தாள். மிக கொடுமையான  சம்பவம் அப்பொழுது நடந்தது. அனிதாவின் பெற்றோர்கள் & உறவினர்கள் இருக்கும் பக்கம் அனிதா திரும்பவே  இல்லை!!. அவர்களை நோக்கி ஒரு புன்னகை கூட செய்ய விடாமல் சூழ்நிலை அவளை கட்டிப்போட்டது.ஏதோ  தவறு  நடக்கிறது என்று அனிதாவின் பெற்றோர்கள் உணர்ந்தார்கள்.

"ஏன் அவள் ஒரு மாதிரி இருக்கா. நம்ம இருக்கோம்னு தெரிஞ்சும் இந்த பக்கம் பார்க்க மாட்டேங்கரா. நான் போய் என்னனு கேட்கிறேன்" என்றார் அனிதாவின் தாய் உமா.

"அவசர படாத. என்ன ப்ராப்லம்'னு தெரியல. நீ அவகிட்ட இப்போ பேசாத. அப்பறம் ஃபோந்'ல என்ன ப்ராப்லம்'னு கேளு" என்றார் சேகர்.

அனிதா , மரகதம் , மகேஷ் மூவரும் வாய் திறவாமல் ஏதும் பேசாமல் சாப்பிட்டுவிட்டு வீடு திரும்பினார்கள்.

வீடே சோக மயமாக அமைதியாக ஆனது.என்ன சொல்ல போகிறார்களோ என்று இரவு 10 மணி வரை அனிதா  பயந்து  கொண்டிருந்தாள்.அவளை  தேற்றுவதற்கு  யாரும் இல்லை. நேரம் மெதுவாக கடந்தது. சிறிது நேரம் கழித்து மரகதம் அனிதாவிடம்  வந்தாள். மரகதம் கூறியதை கேட்டு அனிதா அதிர்ந்து போனாள். மரகதம் கூறிய வார்த்தைகள் "நாளை காலை நீ உங்க வீட்டுக்கே போய்டு. இனிமேல் இங்க வர வேண்டாம்".

அனிதாவின் வாழ்க்கை கேள்விக்குறியானது.

ன்று இரவு அனிதா அழுது கொண்டே இருந்தாள்.காலை பொழுது விடிந்தது. அனிதா  தன் வீட்டுக்கு செல்ல தயாரானால். காலை 7 மணியளவில் , பக்கத்து வீட்டு  ஜானவி,  map இருக்கும் உலகப்பந்தை  எடுத்து வந்து , அனிதாவிடம்  கொடுத்து  "அக்கா , இந்த ball'அ இருக்கற countries names எல்லாத்தையும்  சொல்லுங்க". என்றாள்.

திடீரென்று வெட்டும் மின்னலை போல் அனிதாவின் தந்தையின் சொற்கள் அனிதாவின்  நினைவிற்கு வந்தது.

"விண்ணில் மிதக்கும் ஒரு கல்லை , கல்லாக பார்க்கலாம். பூமியாக பார்க்கலாம். இன்னும் கொஞ்சம் நமது தெளிவான மனத்தோடு அதனை கடவுளாக பார்க்கலாம்.".

சற்றே அனிதாவின்  பார்வை தெளிவானது. ஏதோ மாற்றம் வந்தது போல் உணர்ந்தாள். கடலாக  இருந்த கண்ணீர் ,சுவடு கூட இல்லாமல் போனது. உலகமே புதிதாக தெரிந்தது.வாழ்க்கை இனி வெளிச்சமாகும் என்பதை கண்டாள்.

அனிதாவின் ஆன்மா கூறிய வார்த்தைகளை அவளால் கேட்க முடிந்தது. அவ்வார்த்தைகள் "Intensity & Involvement". "வாழ்க்கையின் பால் அதீத ஈடுபாடு".

மேகம் விளையாடி சாரல் நடனத்தின் சலங்கை ஓசை கேட்க துவங்கியது. "என்ன ஆச்சு அக்கா" என்று கேட்டாள் ஜானவி.பதில் ஏதும் கூறாமல் , அனிதா  வெளியே சென்று மழையில் துள்ளி விளையாட ஆரம்பித்தாள்.

தனது கைகளை வானத்தை நோக்கி உயர்த்தி மழையினை வரவேற்றாள். நிறைய நனைந்தாள். ஜானவியும்  சிரித்துக்கொண்டே அனிதாவுடன்  மழையில் விளையாடினாள். அனிதாவின்  இந்த ஆனந்தத்தை கண்ட மரகதம் சற்றே கோபம் அடைந்தார். மழையில் முழுவதும் நனைந்து அனிதா வீட்டினுள் வரும் நேரம் , அனிதாவின்  துணிகள் அடைக்க பட்ட suitcase' சை தூக்கி எறிந்தார் மரகதம். "உன்னோட வீட்டுக்கு கிளம்பு " என்றார். மகேஷ் ஏதும் பேசாமல் ஓரத்தில் நின்று கொண்டிருந்தான்.

சற்றும் பதட்டப்படாத அனிதா "உங்க பையன்கிட்ட தனியா  கொஞ்சம் பேசிவிட்டு நான் கிளம்பிடறேன் " என்றாள்."சரி" என்றாள் மரகதம்.

அனிதா, மகேஷ் இருவரும் தனியாக சென்று பேசினார்கள். என்ன பேசினார்கள் என்பது "ரகசியம்".

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.