(Reading time: 24 - 47 minutes)

 

சிறிது நேரம் மகேஷிடம் பேசிவிட்டு அறையிலிருந்து வெளியே வந்த அனிதா தன் வீட்டிற்க்கு கிளம்பினாள். ஆனால்!. ஆம் மகேஷும் அவளோடு கிளம்பினான். அதிர்ச்சி அடைந்த மரகதம் "டேய் நீ எங்க டா போகற?".

"நானும் அவகூடவே போய்டறேன் மா"  என்றான்.

"இவள் ஏதோ சொல்லி என் பையனை  மயக்கி விட்டாள்" என்று யோசித்த மரகதம். "டேய் அவ உண்ண ஏமாத்தறா. அவள வீடு." என்றாள்.

மகேஷ்  அமைதியாக இருந்தான். " நான்  சொன்னா  கேட்க மாட்ட?" என்று அதட்டினாள். மகேஷ் அமைதியாக இருந்தான். "என்மேல் உனக்கு உண்மையான அன்பு இருந்தால் அவள விடு" என்றாள். மகேஷ்  அமைதியாக இருந்தான். மரகதம் அழ தொடங்கினாள். மறுபடியும் மகேஷ்  அமைதியாக இருந்தான். "சரி அவ இங்கயே இருக்கட்டும். அவள யாரும் கண்டுக்க வேண்டாம்." என்றாள் மரகதம்.

அனிதா  சொன்ன அந்த "ரகசியம்" மகேஷின் கண்ணை திறந்தது. மகேஷிற்கு அனிதாவின்  மேல் உண்மையான அன்பு மலர தொடங்கியது.

பதறிப்போய்  தொடர்ந்து call  செய்துகொண்டிருந்தார் அனிதாவின்  தாய்  உமா. அழைப்பை attend செய்து , "எனக்கு ஒண்ணும் இல்லைமா.ஒரு சின்ன ப்ராப்லம். எல்லாம் ஸால்வ் ஆகிடுச்சு. நீங்க பயப்படாதீங்க. அப்பா'கிட்டயும் பயப்பட வேண்டாம்ணு சொல்லுங்க" என்றாள் அனிதா. உமாவும், சேகரும் அமைதியானார்கள்.

ன்று இரவு அனிதா உற்சாகமாக "ப்ளான்" செய்தால். என்ன ப்ளான்? காலை எழுந்தவுடன்  மரகதத்தை  எப்படி சந்தோஷப்படுத்தலாம். எது செய்தால் மரகதம் "Happy" ஆவார் என்று யோசித்தாள்.

மரகதம் 5:30' க்கு எழும் முன் , காலை 3:30 மணிக்கு எழுந்து, ஒரு விருந்து தயார் செய்துவிட்டால் எப்படி இருக்கும் என்று யோசித்தாள். ஆனால் காலை 3:30'க்கு யாராவது சமைப்பார்களா? என்று அவள் மனம் கூறியது. "Intensity  & Involvement" என்று அவள் இதயம் கூறியது.

அடுத்த நாள் மரகதத்தின் குதர்க்க பேச்சுகளும் , வசைமொழிகளும் தொடர்ந்தன. அனிதா கண்டு கொள்ளவில்லை. "Intensity & Involvement" என்று தன்னுள் நினைவு படுத்தி கொண்டாள். சமையலுக்கு வேண்டிய காய்கள் மற்றும் பொருட்களை வாங்கினாள். பக்கத்து வீட்டு ஜானவியின்  தாயிடம் தன்னுடைய  ப்ளான் பற்றி கூறினாள். 3:30 மணிக்கு சமைத்தாள் சத்தம் கேட்டு  மரகதம் எழுந்து விடுவார் என்றும் , ஆகவே என்ன செய்வதென்று தெரியவில்லை என்றாள் அனிதா.

"புரியுதுமா. தாராளமா நீ எங்க வீட்டில்  வந்து சமைக்கலாம். சரியா" என்றாள் ஜானவியின்  தாய் ஹேமா.

ஆவலாக எதிர் பார்த்த நாள் வந்தது. காலை 3:30'க்கு எழுந்து, பக்கத்தில் இருக்கும் ஜானவியின்  வீட்டிற்க்கு சென்றாள். 3:30'க்கு ஆரம்பமான சமையல் , 5 மணிக்கு முடிந்தது. சாம்பார்,ரசம் , அவியல் , கூட்டு , அப்பளம் , கிச்சடி என்று அனைத்தும் தயார்.

அனைத்தையும் வீட்டிற்கு எடுத்து வந்து Dining Table' லில் arrange செய்தாள். மரகதம் எழுவதற்காக காத்திருந்தாள். 5:30 ஆனதும் , மரகதம் எழுந்தார். Dining Table’லை பார்த்து ஆச்சரிய பட்டார். "என்ன?" என்று கையாள் செய்கை காண்பித்து கேட்டாள்.

"உங்களுக்கு Surprise தரணும்னு நான் தான் சீக்கிரமா எழுந்து எல்லாத்தையும்  செய்தேன்மா. ஜானவியின் அம்மா ஹெல்ப் பண்ணாங்க" என்றாள்.

மரகதம் வாசலை நோக்கினார். "வாசல் தெளிச்சு கோலம் போட்டேன்" என்றாள் அனிதா.  மரகதம் லேசாக தலையில் அடித்து கொண்டு "நீ என்ன லூசா" என்று கேட்டுவிட்டு தனது அறைக்குள் சென்றார்.

மகேஷ்  இந்த விஷயம் அறிந்ததும் மகிழ்ச்சி அடைந்தான்.

வேலைகள் அனைத்தையும் முடித்துவிட்டு கலைத்து படுக்கும் வேளையில் , அனிதாவின்  இதயம் கூறியது "Intensity & Involvement". "ஏதாவது  adventure செய்யனமே" என்று யோசித்தாள். Apartment secretary ‘ய்  சந்தித்து  cultural competitions வைக்கலாம் என்றாள்.

"Dance , பாட்டு,Spoon Running , பேச்சு போட்டின்னு ஜமாய்ச்சிடலாம் " என்றாள் அனிதா.

"Double Ok Madam" என்றார் ஸெக்ரெடரீ. போட்டிகளுக்கான வேலைகள் ஆரம்பித்தன.

தினமும் மரகதத்தின்  கண் கண்ணாடி உடையும் அளவிற்கு  வீட்டில் பாட்டு பயிற்சி செய்தாள் அனிதா.

பேப்பர்  படித்து கொண்டிருந்த மகேஷின் காதிற்குள்  பேணாவினால் சீண்டினாள்.

Russian Salad'லிருந்து ,உடுக்கு பட்டி உழுந்து வாடை வரை  சமையலில் Try செய்து அனைவருக்கும் சாப்பிட கொடுத்தாள்.

காலை 5 மணிக்கு apartment'னுள் தனது சக நண்பர்களுடன் walking சென்றாள்.

மகேஷ், மரகதம் மற்றும்  யாவருக்கும்  அனிதாவின்  இந்த புதிய "Intensity & Involvement" ஆச்சர்யமாக இருந்தது.

தினமும் காலை சமையல் , வீட்டு வேலைகளை சீக்கிரமாக காலை 10 மணிக்கே முடித்து விடுவாள் அனிதா. 10:30 மணியிலிருந்து 12 மணிவரை பரத நாட்டியம் class செல்லலாம் என்று திட்டமிட்டாள். ஆனால் மரகதம்!!!. விடுவாரா என்ன.

மரகதத்திடம்  சென்றாள். "காலை 10:30'லிருந்து 12 மணிவரை நான் dance class போகட்டுமா அம்மா?" என்று பாசமாக கேட்டாள்.

"எதுக்கு dance'லாம்.முடியாது" என்றாள் மரகதம்.

"நீங்க நினைக்கிற மாதிரி ரிஸ்க் எதுவும் இல்ல அம்மா." என்றாள் உள்ளர்த்தத்துடன்.

"முடியாதுணு ஒரு தடவை சொன்னா  உனக்கு புரியாது?". என்றாள் மரகதம்.

"எதிர்த்து பேச மன்னிக்கணம். நான் உங்கள ஐஸ் வெச்சு  காரியத்த சாதிக்கலாம். உங்க பையன  கைக்குள்ள போட்டு காரியத்த சாதிக்கலாம். இங்க இருக்கற friends'கிட்ட உங்கள பத்தி தப்பா சொல்லி எல்லாரையும் எனக்கு சாதகமாக்கி உங்கள  ஒரு ஹிட்லர் அளவுக்கு ஆக்கலாம். இது எதுவும் நான் செய்யல. ஏன் என்றாள்........" என்று இழுத்தாள்.

அனிதாவிடம்  புதிதாக வந்திருக்கும் Intensity  இருந்த நிலைக்கு அவள் கூறிய யாவும் சாத்தியமே என்று உணர்ந்த மரகதம் ...

"ஏன்??" என்று கேட்டாள்.

"Because, I Love You" என்று சிரித்த படியே கண்சிமிட்டிக்கொண்டே போட்டாளே ஒரு போடு.

இனிமேல் இவளை எதுவும் சொல்வதற்கில்லை என்று நினைத்த படியே , மௌனமாக "Ok" என்றாள் மரகதம்.

அனிதா Dance Class செல்ல தொடங்கினாள்.

பக்கத்து வீட்டு சிறு குழந்தைகள் யாவருக்கும் அனிதாவை ரொம்ப பிடித்தது.

அதே போல் , apartment'ல் பலருக்கும் அனிதாவை ரொம்ப பிடித்து போனது.

அணை இல்லாத அருவியாக துள்ளி ஓட ஆரம்பித்தாள் அனிதா.

தூங்கி கொண்டிருந்த மகேஷின் மேல் குளிர்ந்த நீரை கொட்டினாள் அனிதா. கோபம் தலைக்கேறிய நிலையில் எழுந்த மகேஷ் , அனிதாவின் innocent முகத்தை பார்த்ததும் , சிரித்து கொண்டே தலையில் அடித்து கொண்டு towel எடுக்க சென்றான்.

அனிதா  "யேய் யேய்  யேய்  யேய்  யேய் ஜாலி ஜாலி ஜாலி.." என்று வெற்றி கோஷம் போட்டுவிட்டு அடுத்த adventure' க் கு தயார் ஆனாள்.

அடுத்தது  மகேஷ்  tiffin சாப்பிடும் நேரம். "அய்யோ இப்போ என்ன செய்ய போறாளோ" என்று யோசித்தான்  மகேஷ்.

Dining Table'ல் இட்லி & சட்னி ரெடியாக இருந்தது. மரகதம் , மகேஷ் இருவரும் சாப்பிட்டனர். அனிதா அமைதியாக இருந்தாள். மரகதம் & மகேஷிற்கு ஒரே ஆச்சரியம். "எப்படி இவள் அமைதியாக இருக்கிறாள். ஏதாவது குறும்பு தனம் பண்ணாம இருக்க மாட்டாளே" என்று யோசித்தினர்.மெதுவாக அனிதா  பேச ஆரம்பித்தாள்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.