(Reading time: 24 - 47 minutes)

 

"ன்னங்க இன்னிக்கு இட்லி எப்படி இருந்துச்சு?" என்றாள்.

"ஹ்ம்ம்ம். பரவால." என்றான் மகேஷ்.

"Ok Fine'ங்க" என்றாள் அனிதா.

"என்னடி fine'ங்ர" என்றான் மகேஷ்.

" ஏன் நா இங்கிலீஷ் பேசக்கூடாதா?.I talk English. Walk English. If Possible , Even I Can Cook English Also’ங்ர"  என்றாள் அனிதா. சிரித்தான்  மகேஷ்.

"ஏதோ பண்ணிருக்கேன்னு  நீ கேட்கும் போதே தெரியுது. சொல்லு என்ன பண்ண". என்றான் மகேஷ்.

"இல்ல கொஞ்சம் ஸ்வீட்'அ  இருக்கட்டம்னு Bournvita'வா இட்லி'ல கலந்தேன், அவ்ளோதான்" என்றாள் அனிதா.

அந்த நேரம் பக்கத்து வீட்டு ஜானவி அனிதாவிடம் வந்து "அக்கா , காலைல ஏன் Pencil கேட்டீங்க " என்றாள்.

உடனே இட்லி முழுக்க Pencil' லை தேடினார்கள் மரகதமும் , மகேஷும்.

"என்னங்க பண்றேங்க" என்றாள் அனிதா.

"சொல்ல முடியாது , different'அ try பண்றேன்னு Pencil'லை இட்லி மாவுல கலந்தாலும் கலந்துருப்ப" என்றான் மகேஷ்.

"ஐயோ ஏங்க நீங்க" என்றாள் அனிதா.

"Pencil'லாம் போடல. சொன்னாப்ல Bournvita போட்டேன் அவ்ளோதான்." என்றாள் அனிதா.

பின்பு ஆஃபீஸ் சென்ற மகேஷின் மனம் முழுவதும் அனிதாவும் அனிதாவின் விளையாட்டுகள் தான்  நிறைந்திருந்தன. Half Day லீவ் சொல்லிவிட்டு மதியம் 2 மணிக்கெ வீட்டுக்கு வந்தான் மகேஷ்.

வீட்டிற்க்கு வந்த மகேஷிற்கு ஆச்சரியம். வீடு முழுக்க வண்ண வண்ண கோலங்கள். வீடே கோலாகலமாக காட்சி தந்தது.

மகேஷை  பார்த்த அனிதா , "Wowwwwww. சீக்கிரம் வந்துட்டீங்களா. வாங்க நீங்களும் வந்து  Rangoli'ல கலந்துக்கோங்க" என்றாள். "என்ன ரங்கோலி போட்டியா?. Culturals'க்கு இன்னும் 10 நாள் இருக்குனு சொன்னியே" என்றான். " “போட்டி இல்ல. இவங்க எல்லாரும் Bore அடிக்குதுனு சொன்னாங்க அதனால வீட colourful ஆக்கிடலாம்னு எறங்கிட்டோம்." என்றாள்.

Rangoli,  வெட்டி பேச்சு என்று Busy' யாக இருந்த அனிதா , ஒரு வழியாக 6 மணிக்கு free’ யானாள். மகேஷ்  அனிதாவிடம்  கேட்டான்  "என்னையும் கொஞ்சம் கவனிக்க கூடாதா" . "சரிங்க எனக்கு Bike சொல்லி தறீங்களா?" என்று கேட்டாள்."Ok"  என்று  உற்ச்சாகமாக கூறினான்  மகேஷ்.

அனிதா Bike ஓட்ட மகேஷ்  சொல்லி தர என்று மிக Romantic'காக போய் கொண்டிருந்தது.Bike Balance இல்லாமல் விழ , அனிதா விழாமல் தாங்கி பிடித்தான்  மகேஷ். இருவரும் மௌனமானார்கள். இருவரின் கண்களும் பேசிக்கொண்டன. இருவரும் கரங்களை பற்றி கொண்டு ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டிருந்த நேரம் திடீரென்று ஒரு குரல் கேட்டது " ரெடியா மா".

"என்னது ஒரு பத்து பதினஞ்சு கெழவிகள் கோரஸ் பாடற மாதிரி இருக்கு" என்று திரும்பி பார்த்த மகேஷிற்கு அதிர்ச்சி. அது கிழவிகளே தான்.

"எதுக்கு டி இவங்கலாம் வந்துருக்காங்க" என்று அனிதாவிடம் கேட்டான் மகேஷ். "அவங்களுக்கு Bike  கத்துக்கனம்னு ஆசைங்க,அதான் ..." என்று இழுத்தாள் அனிதா.  "பரலோகத்துக்கு Bike'ல போக வேண்டிய நேரத்துல உங்களுக்கு எதுக்கு Bike Driving " என்று சலித்து கொண்ட மகேஷின்  நிலைமை அனிதாவிற்கு  புரிந்தது. மெல்ல மகேஷின்  பக்கத்தில் வந்த அனிதா , ரகசியமாக அவனிடம் கூறினாள் "என்ன பாருங்க. எனக்காக சொல்லி தர மாட்டீங்களா" என்றாள்.

மகேஷ் clean bowled ஆனான். பூம் பூம் மாடு போல் தலையட்டினான்.

பின்பு 10 பாட்டிகளுக்கு Bike சொல்லிக்கொடுத்த பெருமை அவனுக்கு கிடைத்தது.

அடுத்த நாள் காலை விடிந்தது. வழக்கம் போல் 4:30 மணிக்கு எழுந்தாள் அனிதா. பக்கத்து வீட்டு தேவயானி  சில குடும்ப பிரச்சனைகள் காரணமாக  மிகவும் வருத்தத்தில் இருப்பதால் , அவளை எப்படி சந்தோஷ படுத்தலாம் என்று யோசித்தாள். அனிதாவிற்கு  ஐடியா  வராமலா இருக்கும். வந்துச்சே ஒரு செம ஐடியா.

4:30 மணிக்கு மகேஷை  எழுப்பினாள். "ஏன் டி எழுப்பின?". என்றான்  மகேஷ்.

"இல்ல ஒரு adventure"  என்றாள்.

"அடிப்பாவி. காலைல 4:30'கே adventure'அ.சரி சொல்லு." என்றான் மகேஷ்

"நீங்க யாருக்கும் தெரியாம சுவர் ஏறி குதிச்சு  , தேவயானி வீட்டுக்குள்ள போய் , அங்க இருக்கற jewels எல்லாத்தையும் திருடிட்டு. அப்படியே ஒரு "U turn" போட்டு அவங்களோட மாமியார கடத்திட்டு வந்துடுங்க" என்றாள்.

இரண்டு முறை பலார் பலார் என்று அரைந்தது போல் இருந்தது மகேஷிற்கு.

"என்னடி ப்ளான் இது. என்ன செருப்படி வாங்க வெக்கறதுக்கு இவ்ளோ கஷ்ட பட வேண்டாம்டி. நீயே செருப்பாலா அடிச்சிடு" என்றான் நக்கலாக.

"பண்ணுவீங்களா  மாட்டீங்களா" என்றாள் அனிதா.

"முடியாது" என்றான் மகேஷ்.

மெல்ல மகேஷின் காதோரத்தில்  வந்த அனிதா , ரகசியமாக கூறினாள் "என்ன பாருங்க. எனக்காக பண்ண மாட்டீங்களா" என்றாள் romantic' காக. மறுபடியும் மகேஷ் clean bowled ஆனான்.

"சரி Ok. அவங்க மாமியாரை கடத்தறது கஷ்டம் டா. jewels' சை மட்டும் திருடறேன் டா செல்லம்." என்றான்.

"Ok. யேய் யேய்  யேய்  யேய்  யேய் ஜாலி ஜாலி ஜாலி.." என்று தன்னுடைய  பாணியில் மகிழியாய் தெரிவித்தாள்  அனிதா.

கெளம்பினான் வேட்டைக்கு.

"என்னங்க அந்த கர்‌சீஃப்'ஆல முகத்த மூடிக்கொங்க" என்றாள் அனிதா.

"அடி பாவி. அது கூட தெரியாத முட்டாளா  நான்" என்றான் மகேஷ்.

"அட அதே தான்" என்றாள் அநித.முறைத்தான் மகேஷ்.

ப்ளான் செய்த படி தேவயானி வீட்டிற்குள் எகிரி குதித்தான்  மகேஷ். jewels' சை திருடினான். தப்பித்து ஓடி  jewels' சை அனிதாவிடம் கொடுத்தான்.

அனிதா  "Wowwwwwwwwwww" என்றாள்.

"சரி வா.இந்த jewels எல்லாத்தையும் நம்ம பேங்க் லாக்கர்'ல போட்டுடலாம்" என்றான் மகேஷ்.

"ச்ச.. புத்தி போகுது பாரு." என்றாள் அனிதா.

"அப்போ . இந்த jewels எல்லாத்தையும் என்ன பண்றது டா " என்று கேட்டான்  மகேஷ்.

"Wait & See " என்றாள் அனிதா.

வீட்டில் jewels திருடு போனதை கண்டு காலை 8 மணிக்கு தேவயானி அலறினாள். போலீஸ் வந்தனர். மகேஷ் கூட்டத்துடன்  கூட்டமாக எதுவும் தெரியாதது போல் "ஐயோ  இப்படிஆகிடுச்சே" என்று சக நண்பர்களுடன் அளவளாவினான்.

போலீஸ் தடயங்களை சேகரித்து கொண்டிருந்த நேரம் , அனிதா மகேஷிடம் கேட்டாள்  "லூசு தனமா  தடயம் ஏதாவது விட்டுட்டு வந்தீங்களா?. மாட்டினீங்க அப்புறம் சட்னி தான்" என்றாள்.

"அடிப்பாவி" என்றான் மகேஷ்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.