(Reading time: 11 - 22 minutes)

 

.எம்.ஆர் சாலையில் சீறி பறந்தான் எங்கேயும் குறிப்பு ஏதும் கிடைக்கவில்லை.

"யோவ் இதென்ன ரோடு "

"ஈசிஆர் ரோடு சேரும் சார் இந்தப்பக்கம்"

"அந்த ரோடு "

"தாம்பரம் போகும் சார் "

எந்த பக்கம் போவது என்று அவன் தடுமாறும் நேரத்தில் எதிர்க்கே அந்த பேருந்து நிலையத்தில் பார்த்த பெண் அவனை தீர்க்கமாக பார்த்துக்கொண்டே "ஹெலோ.... பாண்டியன் " என்று இயல்பாக சொல்லிக்கொண்டே "உங்களை தான் தேடினேன், என்னை என் வீட்டில் பத்திரமாக கொண்டு விட்டுவிடுங்களேன், பதிலுக்கு நல்ல காபி போட்டு தரேன் " என்று தெரிந்தவள் போல் பேசிக்கொண்டே 

"ஏன்ப்பா  வண்டியை எடு “ என்று சொல்லிக்கொண்டே பின் திரும்பி பார்த்துகொண்டே ஏறினாள்

பாண்டியனிர்க்கு "என்ன நாள் இது , யார் முகத்தில் முழித்தோம் " என்றிருந்தது.

"மேடம் யாரு நீங்க "

"சாரி சார், நான் மீரா மகேந்திரன்" என்றாள் 

பாண்டியனிர்க்கு கத்தி சிரிக்க வேண்டும் போல் இருந்தது. 

“என்னை இரண்டு பேர் துரத்திட்டு வந்தாங்க, அவங்களை பயமுறுத்தலாம் என்று இப்படி பண்ணேன் "

"ரொம்ப தைரியம் தான் உங்களிற்கு !!"

"பயத்தை வெளில காட்டிக்கொள்ள நேரமில்லை " என்றாள் 

பண்டியனிர்க்கு அவள் பேச்சு சுவாரசியமாக பட்டது. பேச்சு கொடுத்தான்.

அவர்கள் ஜீப்பை முந்திக்கொண்டு சென்று இடைமறித்தது அந்த அம்பாசிடர்.

அவசரமாக மீரா "அவங்க மூன்று பேர் தான்" என்றாள் 

காரிலிருந்து இறங்கியவன் ட்ரைவரிடம் "என்ன ஆறுமுகம் புது எஸ். ஐ போல ??" என்றான் 

டிரைவர் முழித்தான்.

"சார், மேடம் எங்களுக்கு தேவைப்படறாங்க விட்டு நீங்க கெளம்புங்க " என்றான் அதிகாரமாக 

பண்டியனிர்க்கு கோபம் தலைக்கு ஏற " நாயே, யார்கிட்ட பேசுற நீ " என்றான்.

இடையில் மீரா "இல்லை பாண்டியன் உங்களுக்கு எதுக்கு என்னால் பிரச்சனை, நான் போகிறேன்" என்றாள் 

பேசியபடியே எதிரே இருந்தவனை அவன் கையில் இருக்கும் ஆயுதத்தை கண்களில் செய்கை காட்டினாள்.

கண் இமைக்கும் நேரத்தில் ஒருவனின் காலை அவள் வாரி விட மீதி இருவரையும் ஆண்கள் இருவரும் மடக்கினர்.

கையிலிருந்த கைப்பையை வைத்து அவள் கைபிடித்த ஒருவனை அவள் அடிக்க அவன் எதிர்பாராத அடியால் சுருண்டான்.

ஜீப்பில் இருந்த லத்தியை எடுத்து அவன் தலையில் அடித்தாள்.  அவன் ஓயும் வரை அடித்தாள் 

பண்டியனுக்கே மெரசலாகி போனது. 

"போதும் நிறுத்துங்க, செத்துட போறான் "

"என் கையை பிடிக்கிற ராஸ்கல்" என்று கோபமாய் இன்னமும் இரண்டு அடி அடித்தாள்.

"ரொம்ப வீரமான பெண் தான் நீங்க !!"

"நான் இல்லையென்றால் என் குடும்பம் என்ன ஆகும் இன்ஸ்பெக்டர் " என்றாள் கவலைகளுடன்.

கடவுளையும் சாத்தானாக மாற்றும் பாசம். பாசத்தையும் மறக்கடிக்கும் பணம். பிணமும் துணைக்கு தேடும் பொன்னை.  தேவைகளை அன்பில் நிறுத்துவாள் பெண். சோகம் என்னெவென்றால் கடவுள் தேவைகளை பணத்தில் முடித்து வைத்து விட்டான் இயந்திர தனமான நகர வாழ்கையில்.

மயங்கி கிடந்த மூன்று பேர் நெற்றியிலும் கைகளால் சுண்டினாள் அவள்.

"என்னங்க பண்றீங்க ?"

"இவங்க மயக்கம் தெளிய கூடாதே. இப்படி நடு நெற்றியில் சுண்டி விட்டால் மயக்கம் தெளியாது." என்றாள்

"இவங்களை செல்லில் தள்ளிட்டு உங்களை வீட்டில் விடறோம்" என்றான்.

மயக்கமான மூன்று பேருடன் பக்கம் அமர்ந்து கொண்டு சென்றாள். சிரிப்பாக இருந்தது.

"நான் உண்மையான துப்பாக்கியை பார்த்ததேயில்லை" என்றாள்  அச்சத்தை வெளிபடுத்த

பாண்டியன் "இன்னொரு முறை பார்க்கறீங்களா " என்றான் கிண்டலாக 

வள் வீட்டு வாசலில் ஜீப்பில் வந்து இறங்கியதும் மகேந்திரன் ஓடி சென்று கட்டி அணைத்தான்.

"விடு மஹி எனக்கெதும் ஆகலை" என்றாள்

மித்துவும் சரணும் அம்மா என்று ஓடி வந்தனர். மழலை பேச்சு பண்டியனிர்க்கு சிலிர்த்தது.

மனம் "முதல்ல ஒரு கல்யாணத்தை பண்றோம்டா " என்றது.

பாண்டியனை உபசரித்தாள். அவன் மகேந்திரன் சொன்ன அடையாளங்களை சொல்ல மீரா வெட்கத்தில் சிவந்தாள்.

"சார் சொன்ன அடையாளம் ஒன்னு கூட தப்பில்லை மேடம் " என்றான். மகேந்திரனுக்கு தான் இயல்பாகி போனது புரிந்தது.

நாள்  முடிந்து இரவு தூங்க செல்லும் முன் மஹி "சாரி மீரா " என்றான் 

அவள் " எனக்கு என்ன ஆனாலும் பரவாயில்லை  மகேந்திரன் என் பசங்களுக்கு ஒன்னு என்றால் நான் மனுஷியாக இருக்க மாட்டேன் "என்றாள் 

அவன் "இந்த மாதிரி இனி நடக்காது " என்றான் 

இவ்வளவு நாள் தேக்கி இருந்த  கோபம் பொங்க அவள் " பசங்க உன்னை தேடுறாங்க, அம்மா உனக்காக ஏங்குறாங்க, அண்ணா உன் மேல கோபமா இருக்கறாங்க " என்றாள் 

"எல்லாம் எனக்கு புரியுது மீரா, இன்னு கொஞ்ச பிஸ்னெஸ் வளர்ந்தது என்றால் அதன் பின் சந்தோசமாக இருக்கலாம் "

"எல்லாத்தையும் இப்படியே தள்ளி போடு நான் என் கொழந்தைங்க உன்னை விட்டு தூரமாக போனப்பின் தேடு " என்றாள் 

" எல்லாம் உனக்கும் நம் பிள்ளைகலுக்காக தானே "

"என் பசங்களுக்கு பணம் வேண்டாம் பாசமான அப்பா வேண்டும். கோபபடாமல் சிரித்து பேசும் அப்பா வேண்டும் "

"மீரா டெண்டர் டென்ஷனில் நான் நானாக இல்லை "

"இப்படி பணத்துக்கு பின்னாடி ஓடுற உனக்கு குடும்பம் எதுக்கு மஹி, நம்ப கிட்ட போதும் என்கிற அளவிற்கு பணம் இருந்தால் போதும் இப்படி உயிரை கொடுத்து சம்பாதிக்கும் பணம் வேண்டாமே "

"சம்பாதிக்கிற திமிரில் பேசாதே மீரா ,என் சந்ததிக்கு நல்லதுக்கு கஷ்டபடறேன் " என்றான் 

"அப்போ அவங்களுக்கு ஒழுக்கமா இருக்க சொல்லிகொடு போதும் " என்றாள்.

படைத்தவன் "காதல் வெற்றி பெறுவது கல்யாணத்தில் அல்ல, அதன் பின் வாழ்ந்து காட்டுவதில் தான்” என்று சொல்லி சிரித்துக்கொண்டே மீரா மகேந்திரனின் சண்டையை சுவாரசியமாக பார்க்கலாயினார்.

சண்டை வளர்ந்ததே தவிர தீர்வு கிடைக்கவில்லை. அவனிற்கு எதிர்காலம் கருத்தில், அவளிற்கு நிகழ்காலம் கண்ணில். கண்ணாடி குவளைப்போல் நேரம் ஆபத்திலேயே இருக்கிறது என்பது புரியாமல் போனது இருவருக்கும்.

காதல் வளர்ச்சி அடைந்துகொண்டே இருக்கும். குடும்பத்தில் தலைவன் பணத்திலும், தலைவி சண்டையிலும் காதலை காட்டிவிடுவர். புரியாமலே அங்கு பாசம் பரிசுத்தமாக இருக்கும் யாருக்கும் தெரியாமல். 

This is entry #38 of the current on-going short story contest! please visit contest page to know more about the contest.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.