(Reading time: 2 - 4 minutes)

கடவுளின் வடிவில் அவள்... - மதன்

This is entry #41 of the current on-going short story contest! please visit contest page to know more about the contest

காந்திபுரம் பேருந்து நிலையம்,

   கடிகார நேரத்தை மென்றபடி நின்றிருந்தேன் நான்.....

எப்பவும் ஐந்து நிமிடம் முன்னதாகவே வந்துவிடுவாள் 19C கல்யாணி,இன்னும் அவளை காணவில்லை .அனைவரது முகமும் ஏதோ இலக்குகளை நோக்கி செல்வது போல் இருந்தது....ஆம் முதல் இலக்கு பேருந்தை பிடிப்பது......

Kadavalin vadivil aval

அதோ ...வந்துவிட்டாள் தன் எண்ணை பொருத்திக்கொண்டு கல்யாணி பேருந்து.இடமும் கிடைத்துவிட மகளிர் என எழுதப்பட்ட சீட்டில் அமர்ந்தேன். .

ஆணாக இருந்தாலும் உட்கார மறுக்கவில்லை.....வழித்துணைக்கு பிள்ளையாரை வேண்டி.சரியான சில்லறையை நீட்டினேன் நடத்துனரிடம்.......

"சூலூர் ஒன்னு”

"எல்லாரும் சில்லறை கொடுத்தா நான் எதுக்கு கத்த போறேன் ......"

".............".நான்

"எவன்யா பீடி குடிச்சிட்டு ஏறினது .....அறிவுங்கறதே இருக்கறதில்ல ...." பக்கத்தில் இருந்த கடா மீசை பெரியவர் கூற..., அனைவரிடமும் அறிமுகப்பட்டு கொண்டார் அவர்....

"சேதி தெரியுமா?? பாகிஸ்தான்ல குழந்தைகள சுட்டே கொன்னுருக்காணுக படு பாவிங்க ...கைல கட்ட மொளைக்க ..." மில்லுக்கு போகும் பெண் தன் சகாவிடம் கூற .....

"கடவுளே" மறுபடியும் கடா மீசை....

"அவங்கள அப்பவே பாகிஸ்தான் மிலிட்டரி கொன்ன்ருச்சு ....எங்க போய் கட்ட மொளைக்கும் .."என எகத்தாளமாய் இன்னொருவர் சொல்லினார்......

எதுவும் பேசாமல் நான் .........

வ்வளவும் நடந்து கொண்டிருக்க பேருந்து பீளமேட்டை தாண்டியது.

மாநிறம்...செம்பட்டை கூந்தல்......லச்சனமில்லா கர்ப்பிணி பெண்ணொருத்தி பேருந்தில் ஏறினாள்.

மெதுவாய் என் இருக்கை அருகில் நின்றாள்.

எழுந்து இடம் தர மனமில்லை.ஏன் என மனம் நினைத்தது.

அவள் அழகாய் இல்லாததாலா?

அவளின் உடை சரிஇல்லை என்பதாலா?

இல்லை ...திருமணம் அடைந்தவள் என்பதாலா?

கர்பினிதானே ....ஏன் இரக்கம் இல்லாமல் போனது?

பெண் இருக்கையில் தான் அமர்திருக்கிறேன், ஏன் அவளுக்கு இடம் தரவில்லை?

படித்த நான் பண்பில்லாமல் ஏன் மாறினேன்?

மனிதாபிமானம் இல்லாத மனிதனா நான் ....இல்லை.....என மனம் உறுத்த.....

"உட்காருங்க” என எழுந்தேன்.

"நான் இறங்கும் இடம் வந்துருச்சுங்க  ..."என சிரித்தபடி நகர்ந்தாள்..

மனிதாபிமானம் அற்ற என்னை பார்த்து "கடவுள்" சிரித்தது போல் இருந்தது.......

மனசாட்சியை எண்ணியவன் மனிதனெனில், மனசாட்சியை உணரவைத்த அவள் கடவுள், ஆம் காட்டிவிட்டாள் கடவுளை....

This is entry #41 of the current on-going short story contest! please visit contest page to know more about the contest.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.