நான் கண்ட புதுமைப்பெண் - மதன்
This is entry #52 of the current on-going short story contest! Please visit the contest page to know more about the contest.
அழகிய மாலை நேரத்தில்,
பிறந்த அன்று பார்த்த பால் முகம் மாறாமல் இருந்தாள் என் மகள் கண்மணி,
புதிதாய் பூப்பெய்த அவள் என் மடியில் படுத்திருந்தாள் .பருவம் எய்தாலும் எனக்கு அவள் மகள்தானே,
"ஏம்மா கொஞ்ச நாள்ல எனக்கு கல்யாணம் பண்ணிடுவீல???”
".........."
"ம்மா சொல்லுமா??”
"ஏன் இப்ப இந்த கேள்வி உனக்கு??”
"இல்லமா நீ இப்ப அப்பா சொல்றதெல்லாம் கேக்குற, அப்ப நா இன்னொரு வீட்டுக்கு போனாலும் அப்டித்தான இருக்கணும்? அதா கேட்டேன் "......
"இல்லடா இது அப்பா மேல இருக்கிற மரியாதை டா ......."
"இல்லமா என் டீச்சர் பாடத்துல சொல்லிருக்காங்க கணவன்மார் இறந்தா ...அவங்க மனைவியும் தீக்குள்ள குதிக்கணும், இல்லன சொந்தகாரங்களே தள்ளி விட்டுடுவாங்களாம்”
"........"
எழுந்து அமர்ந்து கொண்டாள் கண்மணி .தொடர்ந்தாள்.........
"எப்பவுமே பெண்கள்தா பாவம், நிறைய வரலாறு சொன்னாங்க .........இதெல்லாம் கேக்கும் போது நானும் இப்படிதா ஆவனோனு பயமா இருக்கு”
"அதெல்லாம் இல்லடா செல்லம் ...அது வரலாறுல வர கதைகள் தா அது...."
நான் சொல்வதை ஏதோ மிரட்சியுடன் கேட்டுகொண்டிருந்தாள் கண்மணி.....பாவம் சமூகம் அவளை கவலைக்குள்ளாக்கியது ....பார்க்கின்ற, கேட்கின்ற எல்லாம் நன்றாய் பதிந்து விட்டது அவளுக்கு .
கண்மணி, அந்த காலத்துல பெண்கள் தான் ராஜா, அவங்கள பாத்தா எல்லோருக்கும் மரியாதை இருக்கும் ....நல்லா படிசிருந்தவன்களே பெண்கள்தா தெரியுமா?”
"உன்ன மாதிரி நிறைய மெடல், கோப்பைலாம் ஜெயிச்சுருக்காங்க ......." என நான் சொல்லிகொண்டிருக்கும்போதே அவள் முகம் பிரகாசம் ஆனது தெரிந்தது........
"நீயும் நல்லா படிச்சு தைரியமா இருந்தா நல்ல நிலைமைக்கு வரலாம் .....சரியா !!!..."என கேட்டுகொண்டிருக்கும்போதே அவள் மெதுவாய் 'உம்ம் 'என்றாள் .......
"தூக்கம் வருதாடா "என்றேன் .......
"இல்லமா ......"என்றால் கொஞ்சம் உற்சாகமாக.......
"தெரியுமா !!!! ஒரு ராணி உலகத்தையே தன் கட்டுப்பாட்டில் வைத்திருந்தாள் ......என பொய்க்கதை கூறிக்கொண்டிருக்கும்போதே என் உள்மனம் அவசரமாய் சுழன்றது கண்மணிக்கு தெறியாமல் .........
"புராதன நாகரிகங்கள் முதல் அடிமைப்பட்டு, அகோரன்களின் இச்சைக்கு இலக்காகி, காமத்தில் கசங்கி இன்னும் சொல்லவியலா கஷ்டம் பெற்ற பெண்களின் கதை இவளுக்கு வேண்டாம் .......
பெண்களை நாசமாக்கிய நாகரிகங்கள் பலவும் நசுங்கிபோயின என்ற திருப்தி தரும் கதையும் வேண்டாம்......
பாழ்பட்டு நின்ற பெண்களின் வரலாறை கூறும் வரலாற்று கதையும் இவளுக்கு வேண்டாம்....
இவ்வளவு கதைகளுக்கு மத்தியில் மூன்றாவது மனைவியாய் வாக்கப்பட்ட என் கதையும் என் கண்மணிக்கு வேண்டாம்.........
பாரதி கண்ட பெண் மட்டுமில்லாமல் என் கனவுப்படியும் வளரட்டும் ........."என என் மன ஓட்டம் மெதுவாய் நின்றது ...........
இன்று,
கோவை விமான நிலையம்........
"அம்மா என் முதல் நாள் ட்ரைனிங் இன்னைக்கு ......இன்னும் கொஞ்ச நாள்ல நாம விருப்பபட்டபடியே பைலட் ஆகப்போறேன்......என்ன ஆசீர்வாதம் பண்ணு ......"என்று குனிந்தாள் கண்மணி.
"பாரதி கண்ட புதுமைப்பெண் நீதான்மா ...!”என உச்சியில் முத்தமிட்டேன்......
"நீ கண்ட புதுமைபென்னும் நான்தாம்மா ...!”என கட்டி அணைத்தாள்........
விமானம் கிளம்பும் நேரம் ஒலிக்க.......
"நீ சொன்ன உலக ராஜா பெண்ணுங்கற கதை பொய்ன்னு எப்பவோ தெரிஞ்சிடுச்சு ....நான் வரேன் ....லவ் யூ அம்மா ................."என கூறி சிரிப்பை விட்டு சென்றாள் கண்மணி............
அவள் ஓட்டும் விமானத்திற்கு கையசைக்க காத்திருந்தேன் ............
"ஆம் நான் கண்ட புதுமைப்பெண்”
This is entry #52 of the current on-going short story contest! Please visit the contest page to know more about the contest.
The above article / story / poem is a copyright material and is published with the consent of the author. If you find any unauthorized content do let us know at
Chillzee is an entertainment website and all the content published here are for entertainment purpose only. Most of the content are fictional work and should be treated accordingly. Information on this website may contain errors or inaccuracies; we do not make warranty as to the correctness or reliability of the site's content. The views and comments expressed here are solely those of the author(s) in his/her (their) private capacity and do not in any way represent the views of the website and its management. We appreciate your high quality of listening to every point of view. Thank you.