(Reading time: 7 - 14 minutes)

என்னவளே! - அமுதா

திடுக்கிட்டு விழித்தேன். இன்று என் கனவில் ‘அவள்’ ஏன் வந்தாள்?. யோசித்துக் கொண்டே, கடிகாரத்தைப் பார்த்தேன். காலை 8.00 மணி. மனைவி ஒரு கையில் காபியும், மறு கையில், அன்றைய செய்திதாளோடும் எதி¡¢ல் வந்து நின்றாள். "என்னங்க, இன்றைக்கு ஒரு நாள் மட்டும் புத்தக கண்காட்சி விஷ்ணு மாலில் நடக்கிறது. அந்த இடத்தில், என் இலக்கிய ஆராய்ச்சிக்கான புத்தகம் கண்டிப்பாக கிடைக்கும். வேற யாருக்கும் வித்து போறதுக்குள்ள, நீங்க போய் அதை வாங்கிட்டு வந்துருங்க", என அவசரப்படுத்தினாள். “கல்யாணமாகி விட்டால்...ஞாயிறு கூட ஓய்வு கிடைக்காது போல!”, வேறு வழியின்றி கண்காட்சிக்கு கிளம்பினேன். கணிணீ காலத்தில், இலக்கிய புத்தகத்திற்கு ஏது கூட்டம்? விஷ்ணு மாலில் உள்ள புத்தகங்களை எல்லாம் ஒரு நோட்டம் விட்டு, என் மனைவி கேட்ட புத்தகம் கிடைத்த சந்தோஷத்தில், நுழைவு வாயிலுக்கு வந்தவன், எதையோ மறந்தவன் போல் நின்றேன்.

ஏன் நின்றேன்? எதுக்காக நின்றேன்?”, காரணம் தேடுகையில், ஒரு பெண் என்னருகில் வந்தாள். “சார், இந்த புத்தகம், ஒரு காப்பி தான் இங்க இருக்காம். எனக்கும், இந்த புத்தகம் தேவைப் படுது. இங்க பக்கத்தில செராக்ஸ் எடுக்க எந்த கடையும் இல்ல. இதோட ஸ்கேன் காப்பி, என்னோட இமெயிலுக்கு அனுப்ப முடியுமா?”, கெஞ்சுவது போல் கேட்டாள். இது - இன்னொறு வேலையா! சலிப்போடு அவளைப் பார்த்தேன். ‘இவள் முகம்’...ஒரு கணம் அதிர்ந்து போனேன். “உங்க பேரு வந்தனா. பாரதி காலேஜ் தானே?”, அவளுடைய விவரங்களை, நான் அவளுக்கே சொன்னேன். வியப்போடு, என் பெயரையும் கேட்டாள். ‘வருண்’, என்று என்னை அறிமுகப் படுத்தியதோடு, “உங்களுக்கு எத்தனை குழந்தைகள்? உங்க கணவர் எங்க வேலை பார்க்கிறார்?”, அவள் கழுத்தில் தாலி இல்லாததால், சந்தேகத்தோடு கேட்டேன்.

எனக்கு, இன்னும் கல்யாணம் ஆகல. சா¢யான வரன் எதுவும் அமையல”, மெதுவாக சொன்னாள். "அப்படியா! ஆனா வரன் பார்க்கும் போது ரொம்ப படிப்பு, பதவி என எதிர் பார்க்காதீங்க. இந்த வயசுல அதை எல்லாம் எதிர்பார்த்தா வரன் கிடைக்கிறது ரொம்ப சிரமம்", என்றேன் ஏளனத்தோடு. “வரன், எப்படி அமையும்? கல்லூ¡¢யில் எத்தனை முறை பாரா முகம் கொண்டு என் காதலை மறுத்திருப்பாள்?”, எனக்குள்ளே எட்டி பார்த்த, அடிபட்ட மிருகம், இந்த ஏளன வார்த்தைகளில் அடங்கியது. அவளோ, என் ஏளன வார்த்தைகளுக்கு செவி கொடுத்து, "சா¢ங்க, சார்", அமைதியாக தலையசைதாள். “என் வார்த்தைகளால், இவளை காயப் படுத்தி விட்டேனோ?”. ஏனோ, அவளின் இந்த அமைதி, எனக்குள் ஒரு சிறு வலியை உண்டாக்கியது. "சார், உங்க ஈமெயில் முகவா¢ கிடைக்குமா? மறக்காம புத்தகத்தின் ஸ்கேன் காப்பி அனுப்பிடுங்க", கெஞ்சினாள்.

Ennavale

"கட்டாயம் அனுப்புறேங்க". அவளுக்கு, நான்  இந்த உதவி கண்டிப்பா பண்ணனும் - தீர்மானத்தோடு அவளிடம் விடை பெற்றேன். அன்று, இரவு முழுவதும் எனக்கு தூக்கம் வரவில்லை. கல்லூ¡¢ காலங்களில்...அவள், என் கனவு தேவதை. இருந்தும், என்னைப் பற்றி அதிகம் அறியாதவள். ஒரு நாள் மாலை வேளையில், எங்கள் நூலகத்தில் புதிதாக தொடங்கிய கணிணீ பி¡¢வை தேடியவளுக்கு வழியில் அகப்பட்டவன் நான். அவள் பெயர் ‘வந்தனா’ என நூலகப் பதிவேட்டில் அறிந்து கொண்டேன். அன்றிலிருந்து, அவள் தங்கியிருக்கும் விடுதி வழியாக தினமும் என் பாதைகள் திரும்பின. அவள் வழக்கமாக செல்லும் பாதைகளில், என் காத்திருப்புகள் தொடர்ந்தன. என் விழியில், அவள் விழாத நாட்கள் எல்லாம் வெறுப்பாக கழிந்தன. என் வாழ்க்கை முழுதும், அவளுக்காக வாழ - என் மனம் ஏங்கியது. அவளிடம், என் காதலை தொ¢யப்படுத்த முயன்ற போதெல்லாம் பதில் ஏதும் சொல்லாமல் அவ்விடம் விட்டு ஓடி விடுவாள்.

அவள், என்னை விட்டு எட்டி செல்லும் போதெல்லாம், என் மனமோ அவளை விடாமல் துரத்த ஆரம்பித்தது. ஆனால், எப்போதும் அவளிடம் நாகா¢கமாகதான் நடந்து கொண்டேன். கல்லூ¡¢ வாழ்க்கை முடியும் போது அவளை விட முடியாமல் காதலுக்காக கெஞ்சினேன். எதுவும் பலனளிக்க வில்லை. அவளின் பி¡¢வில், இந்த உலகமே வெறுத்தது. வேலைக்கும் போகாமல், வீட்டிலேயே முடங்கி கிடந்தேன். இந்த நடவடிக்கைகள், என் பெற்றோரை புலம்ப வைத்தது. கல்யாண வயதும் போய் கொண்டிருந்தது. “ஏண்டா, யாரோ ஒருத்திக்காக, அதுவும், உன்னை கண்டு கொள்ளாதவளுக்காக, உன் வாழ்க்கையை வீணாக்குற?”, நண்பர்களின் உ¡¢மை கோபங்கள் என் நிலைமையை மாற்றியது. வாழ ஒரு வேலை - கடமைக்காக ஒரு கல்யாணம் என, என் வாழ்க்கை முறை மாறியது. ‘அந்த...அவள்தான்’ ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு காலையில் கனவிலும், பின் விஷ்ணு மாலில் எதி¡¢ல் நிஜத்திலும் நின்றவள்!.

ங்கு காத்திருக்காமல், அவ்விடம் கடந்திருந்தால், நான் அவளை பார்த்திருக்க முடியாது. “அப்படியானால்,...என்னை நுழைவு வாயிலில், காத்திருக்கச் செய்தது - நான் கொண்ட காதலா!”. அனைத்தும், மாயமாக இருந்தது. “இதற்கு பெயர்தான் விதியா!. என்ன இருந்தும் என்ன?, அன்றைக்கும், இன்றைக்கும் - நான் அவளுக்கு மூன்றாம் நபர்தான்”, அவள் பேசி சென்ற விதம், என் நெஞ்சில் வலியை கொடுத்தது.  “உருகி உருகி நான் நேசித்த, என் உள்ளம் நிறைத்த முதல் பெண் அவள்!”. அவள் அறியாத அந்த நேசம் இப்போது அனாதை போல தவித்தது. அன்று, இரவு முழுதும் - மனைவிக்கு தொ¢யாமல் மௌனமாய் அழுதேன்; எனக்கு தூக்கம் வரவில்லை. மறுநாள், விடிந்தும் விட்டது. என்னை அமைதி படுத்திக் கொள்ள, அவசர அவசரமாக அலுவலகம் கிளம்பினேன். அலுவலகத்தில், சீக்கிரமாக வந்ததால் மெத்தனமாக என் ஈமெயில் சா¢ பார்க்கையில், முதலாவதாக - அவள் அனுப்பிய கடிதம் வி¡¢ந்தது.

என் கண்களை என்னால் நம்ப முடிய வில்லை. “எனக்காக...அவளின் கடிதம்!”. அதில், அவள் என்னை கண்காட்சியில் சந்தித்ததை அறிமுகம் செய்து, தனது அந்த ஈமெயில் முகவா¢க்கு ஸ்கேன் காப்பி அனுப்ப சொல்லி, மொபைல் நம்பரும் கொடுத்திருந்தாள். “எனக்குப் போய்...அவளை பற்றிய...அவளின் அறிமுகம்!”, சி¡¢ப்பு வந்தது. எது எப்படி இருந்தால் என்ன? நான், என் கடந்த காலத்திற்கே சென்று விட்டேன். “இது அவளிடம் இருந்து, எனக்காக வந்த - முதல் கடிதம்!”. மனம் அதை கொண்டாடியது. என்னால் அப்போது, அவளிடம் பேசாமல் இருக்க முடிய வில்லை. “பேசி...எத்தனை வருடங்கள் ஆகி விட்டது!”. யோசித்துக் கொண்டிருக்கும் போதே, என் மொபைல் அவளை அழைத்தது கொண்டிருந்தது. "ஹலோ!" மறு முனையில் அவளின் குரல். "உங்க மெயில் பார்த்தேன். போனவுடனே அனுப்பிட்டிங்களோ?", நான் குழந்தையாய் மாறினேன்.

"ஆமாங்க, சார். கொஞ்சம் அவசரம். அதுதான்", அவள் பதில் தந்தாள். "கண்டிப்பா அனுப்புறேங்க", என்றவுடன் நன்றி சொல்லி போனை வைத்து விட்டாள். “அடி பாவி! அதற்குள் வைத்து விட்டாளே!”, அவசரப்பட்டு மறுபடியும் அவளை அழைத்தேன். "என்னங்க, சாப்பிட்டீங்களா?", என தொடங்கி, "ஒன்னு சொன்னா, தப்பா எடுத்துக்காதீங்க. ஏதோ, அந்த வயசு!...ஆனா, உங்கள எனக்கு ரொம்ப பிடிக்குங்க. நீங்க அப்ப நல்லா அழகா இருப்பீங்க!", என்று அவசரமாக சுருக்கமாக என் காதலையும், அவளுக்கான என் காத்திருப்புகளையும் சொல்லி முடித்தேன். அமைதியாக அனைத்தையும் கேட்டவள், "எனக்கு, அப்ப காதல், கல்யாணம்...இதெல்லாம் ரொம்ப பயங்க. அதுதான், நான் அப்படி நடந்து கொண்டேன். உங்க மனச நான் காயப்படுத்திருந்தா, மன்னிச்சுடுங்க", அவள் தரப்பு நியாயத்துடன் நிஜமாக மன்னிப்பு கேட்டாள்.

"பரவாயில்லங்க", இனி சொல்வதற்கு எதுவும் இல்லை. ஒரு நொடியில், என் காதல் அலைகள் அனைத்தும் ஓசையின்றி ஓய்ந்து போயின. மிச்சமிருந்த காதலும், அழைக்கப் படாத விருந்தாளி போல், கண்களின் ஓரமாய் கண்ணீ¡¢ல் கரைந்து போய் கொண்டிருந்தது. "ஆலம் விழுதினைப் போல், சொந்தம் ஆயிரம் வந்து என்ன? வேரென நீ இருந்தாய்...அதனால் விழுந்து விடாதிருந்தேன்...”, அவள் ஞாபகங்களை சுமக்க வைக்கும், எனக்கு பிடித்த, இந்தப் பாடல் வா¢கள், என் காதல் வலியை மேலும் அதிகப் படுத்தியது. “இனி, அவள் - என்னவள் ஆக முடியாது. என் எல்லை கடந்து வர, என்னாலும் முடியாது!”. அவள் நிலையும், என் இயலாமையும் - என்னை கொஞ்சம் அழ வைத்தது. ஆனால், “இவளுக்கு யார் துணையாக இருப்பார்? யார் பாதுகாப்பு தருவார்?”

ஏதோ சில காரணங்களுக்காக, மண வாழ்க்கையை தள்ளி போட்டால், நாகா¢கமின்றி அடுத்தவர் வாழ்வில் மூக்கை நுழைக்கும் மனிதர்கள்...அவளுக்காகவே வாழும் குடும்பத்தினர் மேல் அநாவசியமாக பழி போடுவார்களே!. நல்ல தகுதிகள் பல இருந்தாலும், கல்யாணம் மட்டுமே அந்தஸ்தாக கருதும் வக்கிர மனிதர்கள் ஜாடை பேசுவார்களே!”, என் மனம், அவளுக்காக வக்கீல் இல்லாமல் வாதாடியது. “அவளை எப்போதும் என்னருகிலே வைத்துக் கொள்ளவும் முடியாது. அதற்காக, அவளை அப்படியே விட்டு செல்லவும் மனம் வரவில்லை. நான் அவளுக்கு, ஏதாவது செய்ய வேண்டும். என்ன செய்வது?”, குழம்பினேன். நீண்ட யோசனைக்குப் பின், ஒரு முடிவுக்கு வந்தேன் - அவளுக்கு வரன் தேடத் தொடங்கி விட்டேன், தற்போதைய நிலையில், அவள் என் வார்த்தைகளுக்கு மதிப்பளிப்பாள் என்ற நம்பிக்கையில்.

ஆனால், அவளுக்கு வாழ்க்கை முழுதும் துணையாக வர...என்னை விட, அதிகமாக... அவளை நேசிக்கும்... ‘அந்த ஒருவர்’...எங்கிருப்பார்?”.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.