(Reading time: 11 - 22 minutes)

பாசம் என்பது - சஹானி

வேண்டாம் வேண்டாம் வேண்டாடாடாம் , என்று கத்தி கொண்டிருந்தாள்  துர்கா .

அடிங்க , அப்படியே  வாயில ஒன்னு போட்டா தெரியும் என்றபடி அங்கு வந்தார் அமிர்தம் பொண்ணா லட்சணமா சாயந்தரம் வரவங்கள சிரிச்ச முகமா  வாங்கனு சொல்ற வழிய பாரு, என்று பொரிந்து விட்டு போனார் அவர்.

 சற்று நேரத்திற்கு முன் தன்னை கொஞ்சிய அம்மாவா இது என்று விழி விரித்தாள் அந்த பேதை.. 

Pasam enbathu

ற்று நேரத்திற்கு முன்...

கல்லூரியின் இறுதி நாளை நண்பர்களுடன் கழித்து விட்டு ,வீட்டிற்கு வந்தவளை இன்முகமாக வரவேற்றார் அமிர்தம். 

வாம்மா, பரிட்சைலாம் எப்படி எழுதிருக்க?  என்றார் .

ம்ம்ம் நல்ல எழுதிருகேன் மா,  நீ வெனா பாரேன் நா யுனிவெர்சிட்டி லெவெல்ல  ஃபர்ஸ்ட் மாணவியா வருவேன் ,என்றாள் பெருமையாக.

ரொம்ப சந்தோசம் டா கண்ணு ,நீ படிச்சி எங்களுக்கு பெருமை சேர்த்தது மாறி  போற இடத்துலயும்  எங்களுக்கு நல்ல பேர் வாங்கி கொடுப்பேன்னு நாங்க நம்புறோம், என்று தூண்டில் போட்டார் பெரியவர்.

அம்மா இப்போ எனக்கு கல்யாணம் பண்ணி வைங்கன்னு நா கேட்டேனா?  ஏன்மா, இப்டி படிச்சி முடிச்ச உடனே கல்யாணம் தான் பண்ணிகனுமா. நா வேலைக்கு போறேன் ஒரு ரெண்டு வருஷம் ப்ளீஸ் மா. என்று அவள் கெஞ்சி கொண்டிருக்கும் போதே உள்ளே நுழைந்தார் ஆறுமுகம், துர்கா வின் தந்தை .

 சொன்னேனே , கேட்டீங்களா,  பொட்ட புள்ளைய அதிகமா படிக்க வைக்க வேண்டாம்னு இப்போ பாருங்க ,என்ன பேச்சு பேசுதுன்னு . என்று உள்ளே நுழைந்த உடன் தன் அர்ச்சனையை பொழிந்தார்.

ஒன்றும் புரியாமல், திருதிருவென முழிக்கும் தந்தையை கண்டவளுக்கு சிரிப்பு பொங்கி விட்டது.

எப்படி பா இப்டி செய்ரதலாம் செஞ்சிட்டு ஒண்ணுமே தெரியாத பச்சை கொழந்த போல மூஞ்சிய வைக்றீங்க,என்றாள் .

அவளின் தலையை வருடி கொடுத்தவர், சரி இப்போ அது முக்கியமில்லை நா வரும் போது அம்மாவும்  பொண்ணும் அவ்ளோ சீரியஸா டிஸ்கஸ் பண்ணிட்டு இருந்தீங்களே அது என்ன இப்போ எதுக்கு உன் அம்மா என்ன திட்டுறா?என்றதும் அவள் முகமே தொங்கி விட்டது. இப்போ உடனே எனக்கு கல்யாணத்துக்கு என்ன பா  அவசரம், என்றாள் அதே வாடிய முகத்துடன்.

இப்போ  உடனே உனக்கு யார்மா கல்யாணம் வைக்கறதா சொன்னா , என்ற வார்த்தையில் அவளுக்கு ஒரு வேலை அம்மா எப்போதும் போல் தான் கூறி இருப்பார்களோ நாம் தான்  உணர்ச்சி வசப்பட்டு ஓவர் இமேஜினெட் பண்ணிட்டோமோ என்று யோசித்து கொண்டிருக்கும் போதே தாயின் வார்த்தை தன்  எண்ணம் தவறில்லை என்று உணர்த்தியது.

என்னங்க, இன்னக்கி சாயங்காலம் அலமேலு மதினிய வர சொல்லிருந்தீங்களே , அப்போ அவங்க வரலையா ?என்றார் அமிர்தம்

எவடி இவ ,அவ என் கூட பொறந்த தங்கச்சி டி அவ என்னமோ இது வரை என் பொண்ண பாத்ததே இல்லைங்கற மாறி  பேசுற?

அப்போ பொண்ணு பாக்க  வரது உண்மை அப்டிதானே என்று இடையில் புகுந்தாள் துர்கா

 ப்ச், துர்கா என்னது இது கொழந்த மாறி,  என்னக்கினாலும் உனக்கு கல்யாம் பண்ணி வைக்க தான் போறோம் உன்ட்ட போன வாரமே சொல்லலாம்னு தான் நினைச்சேன். சரி படிக்கற புள்ளய தொந்தரவு பண்ண வேண்டாமேனு தான், விட்டுட்டேன். நா அன்னக்கி உனக்குனு எதாவது விருப்பம் இருந்தா சொல்லுனு சொன்னதுக்கு, நீ அப்டி எதுவுமில்லைனு சொல்லிட்ட அதான் நம்ம சொந்தத்துலயே துவி கூட ரொம்ப நல்ல பையன்., அலமுக்குன்னு யாரும் இல்ல. ஒரே பையன் வேற.  அதான் சாயந்தரம் சும்மா பேசி வச்சிக்கலாம்னு வர சொல்லிட்டேன். நீ சொல்றது போல உடனே உனக்கு கல்யாணம் வைக்கல சும்மா வந்து பேசிட்டு போறாங்க அவ்ளோதான் ,என்று அமிர்தத்தின் வயிற்றில் பாலை  வார்த்தார், அதே சமயம் பெண்ணின் வயிற்றில் புளியை  கரைத்தார்  .இத்தோடு பேச்சு முடிந்து விட்டது என்பது போல் சென்றுவிட்டார்,

அதன் பின் அவள் கூறிய எதுவுமே அங்கு எடுபடவில்லை.

மாலையில் வந்த அலமேலுவும் நல்லதொரு பதிலை கூற அங்கே ஒரு மாதத்தில் நல்ல முஹூர்த்த தேதி குறிக்க பட்டது.ஆறுமுகத்திற்கு அதிர்ச்சியாயினும் சில பல பேச்சுவார்த்தைகள் அவரை சம்மதிக்க வைத்தன.

வழக்கம் போல் அவள் அவனையே திட்டி கொடிருந்தாள்'?( அதாங்க, எல்லா பொண்ணுகளும் பண்ற மாறி நம்ம ஹீரோ வ தான்  திட்டுறாங்க)

இங்கு , துவி என்று எல்லோராலும் அழைக்கப்படும் துவாரகீஸ் ,துர்காவின் புகைப்படத்தை கண்ணிமைக்காமல் பார்த்து கொண்டு இருந்தான்.

 ஹே,தும்ஸ் கட்ட,நீ எனக்கு சொந்தமாக முழுசா இன்னும் ஒரு மாசம் இருக்கு டி .

இந்த அம்மாட்ட படிச்சு படிச்சு சொன்னேன், சீக்ரமே முடிஞ்சா நாளைக்கே னாலும் கல்யாணத வச்சிகோங்க னு பட் இப்டி ஒரு மாசம் காக்க வேண்டியது போச்சு, என்று பெரு மூச்சி விட்டான் .

 (ஆனால் நம்ம ஹீரோயின் , துவி சார கரிச்சு கொட்டிட்டு இருக்காங்க பாவம் ஹீரோ சார் இது தெரியாம ட்ரீம்ல இருக்கார் , சரி இந்த புள்ள மனச ஏன் கெடுக்கணும் வாங்க நாம ஹீரோயின்ட்ட போவோம்)

 டேய் துவி கொரங்கு நீ இப்போ மட்டும் என் கைல மாட்டுன மவனே சட்டினி தான் டா . உன்னால தானே இப்போ நா வேலைக்கு போக முடியாம இருக்கேன் என்று கருவ அவள் மனமோ "ஆமா  துவி இல்லாட்டாலும் நீ வேலைக்கு போய் இருப்ப பாரு போடி இவளே பெருசா பேச வந்துட்டா,"

ஆமால,  இப்போ கூட ஒன்னும் கெட்டு போய்டல நம்ம துவி தானே,அவன்ட்ட பொய் நா வேலைக்கு போவேன்னு சொன்ன அவன் ஒன்னும் தப்பா எடுத்துக்க மாட்டன் தானே" என்று ஆலோசனையும் சேர்த்து கூற அவளும் அதை சரி என்று ஒத்து கொண்டாள்

(ஆனா பாருங்க அவ மனசு நம்ம துவினு எவ்ளோ அழுத்தமா கூறுச்சு அத இந்த மண்டு கவனிக்கவே இல்ல பட் நாம கவனிசிட்டோம்ல )

ரு   வாரம் கழித்து ,

 துர்காவின் வீட்டில் நுழைந்த அவள் தோழி தேவியை  கண்ட ஆறுமுகம் "வாம்மா பரிச்சைலாம் நல்லபடியா எழுதியாச்சா , என்று விசாரிக்க, ம்ம்ம் நல்ல எழுதி இருக்கேன் ப்பா  , கல்யாண வேலைலாம் எப்படி போயிட்டு இருக்கு எங்க இந்த கல்யாண பொண்ண காணோம்,என்றாள் .

வாம்மா,தேவி அவளுக்கென்ன எப்பவும் போல உம்முன்னு ரூம்ல உக்காந்து இருக்கா  நீ போய்  பாரு , மதியம் உனக்கும் சேர்த்து சாப்பாடு பண்றேன் சாப்ட்டுட்டு போ நிச்சயத்தபோ கூட சீக்கிரமே போயிட்டல  அதான் (சாரிங்க,மூணு நாளுக்கு முன்னாடி தான் நிச்சயம் பண்ணாங்க  ,சொல்ல  மறந்துட்டேன் என்ன துர்கா நம்மள மொரைக்கிறாங்க ஓ  நம்மள இல்ல அதோ அங்க வர தேவிய, சரி வாங்க என்ன பேசுறாங்கனு கேப்போம்)

வாடி இவளே, என்று ராகம் பாடினாள் துர்கா. வந்துட்டேன்டி மவளே என்று பதிலுக்கு ராகம் பாடினாள் தேவி.

 ஏண்டி அன்னக்கி சீக்கிரமே போய்ட்ட, எவ்ளோ கஷ்டமா இருந்துச்சு தெரியுமா? என்றவளிடம் அப்படியா,என்று எதோ அதிசயம் கேட்பது போல் கேட்டாள்  தேவி. ஏண்டி இப்டி பாக்குற என்றவளுக்கு , இல்ல சாதாரணமா எல்லா பொண்ணுங்களும் இந்த மாறி நேரத்துல மாபிள்ளைய தானே மிஸ் பண்ணுவாங்க நீ அப்டியே உல்ட்டாவா இருக்க என்றாள் .(மனதில் ஒரு குறிக்கோளுடன்)

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.