(Reading time: 11 - 22 minutes)

 

ண்டி நீயுமாடி நா எவ்ளோ தூரம் சொன்னேன் அன்னக்கி இப்போ மறுபடியும் கிண்டல் பண்ற என்றாள் இயலாமையோடு .(என்னங்க   நமக்கு தெரியாம எதோ ரகசியம் பேசிருக்காங்க போல அப்படின்னு நீங்க கோவப்படுறது தெரியுது ,டென்ஷன் ஆகாம தேவிய பாருங்க அவ தான்  ஓட்ட வாயாச்சே அவ சொல்வா)

 அடியே உன்ன என்ன தான் டி பண்றது இப்போ உனக்கென்ன சொல்லு என்றாள் .

நா தான் அன்னக்கே சொன்னேன்லடி என்னமோ தெரியல இந்த கல்யாணத்துல  விருப்பமா, இல்லையானே தெரியல டி என்றாள் (அச்சச்சோ அப்போ துவி நிலைமை)

 மறுபடியும் சொல்றேன் காதல் கல்யாணம் தப்பில்லை தான் அதே சமயம் இப்டி கல்யாணம் பண்ணிக்கிட்டும் காதலிக்கலாம் தான் அத ஏன் புரிஞ்சிக்க மாட்டுக்கற என்றாள் தேவி சற்று அழுத்தமாகவே,

அதுக்கு இல்லைடி , எனகென்ன தோனுதுனா ...... என்று இழுத்தவளிடம் உனக்கு ஒன்னும் தோண வேண்டாம் தான் நா சொல்றேன் மறுபடியும் இழுக்கற .

 இப்போ என்ன உனக்கு , எங்க அந்த மாப்பிள்ளை போட்டோ என்றவளுக்கு கபோர்டில் இருந்து எடுத்து நீட்டினாள் துர்கா

ம்ம்ம் இத பாக்க வேண்டியது நீ தானே பாத்தியா இல்லையா?

தலை குனிந்து கொண்டாள் துர்கா ,ம்ம்ம் அப்போ நீ பாக்கல என்று தானே பதிலும் கூறி கொண்டாள்

. என்னமா, மறுபடியும் வேதாளம்  முருங்கை மரம் ஏறிடுச்சா ? என்றாள் .

ப்ச், ஏண்டி திட்டுற,என்றவளுக்கு   ஆமாடி , நீ பண்ற அலப்பறைக்கு உன்ன திட்டாம கொஞ்ச வா சொல்ற,

 போடி எனக்குன்னு ஆசை  இருக்குறது தப்பா? என்று எதிர் கேள்வி கேட்டாலும்   தன் எண்ணம் மடத்தனம் என்று குட்டியது மூளை .

 உன் ஆசைய கேட்டா துவி அண்ணா கூட சிரிப்பாங்க, அப்படி இருக்கு உன் ஆசை (அப்படி என்ன ஆசைப்பா கொஞ்சம் புரியற மாறி தான் பேசுங்களேன்)

 சரி நா கேக்றதுக்கு பதில் சொல்லு , நீ போட்டோ வ பாத்தியா, இல்லையா?

ம்ம்ம், பாத்தேன் ஆனா,

 என்ன ஆனா ஆவன்னா னுட்டு ,இதோ பாரு துர்கா,இந்த கதைலயும் சினிமாலயும் காட்டுர மாறி ஹீரோவா பாத்ததும், மழை பொழியணும், பூ தூவணும், எங்கயோ பல்ப் எரியனும்னு நினைக்ரதுலாம் ஓவர் சொல்லிட்டேன் என்றாள்  கடுப்பாக (ஹாஹாஹாஹாஹா,துர்கா உன் ஆசை  நினைச்சி என்னால சிரிப்ப கண்ட்ரோல் பண்ண முடியல)

அதுக்கு இல்லைடி , நா இப்டிலாம் நடக்கனும்னு சொல்லல, இருந்தாலும் துவிய நா சின்ன வயசுல இருந்து பாக்றேன் அதனால தான் என்னமோ,எனக்கு உள்ளுக்குள்ள ஒரு பீளிங்க்சும் வர மாட்டேன்குதுன்னு சொல்றேன் .

அதான் நீயே சொல்றியே சின்ன வயசுல இருந்து பாக்குறதால உனக்கு அவர கணவன் ங்கற ஸ்தானத்துல வச்சி பாக்க முடியல ஆனா இந்த நிலையே தொடரும்னு சொல்ல முடியாதே, ஒரு வேலை அவரோட அப்பா சின்ன வயசுல தவறுனப்பரம் இந்த ஊர விட்டே போயிட்டாரு, மூணு வருசத்துக்கு முன்னாடி உன்ன பாத்தபோ அவர்க்கு பல்ப்  எரிஞ்சது போல, மூணு  வருஷம் உன் படிப்பு  முடியட்டும்னு வெயிட் பண்ணி இருக்கார் முடிஞ்ச அன்னக்கே அப்பாம்மாட்ட பேசிட்டார். என்று கூறியவள் அய்யோ ,ஒலரிட்டோமே என்று நாக்கை கடித்து கொண்டாள்.

ஏய், இப்போ என்ன சொன்ன, அப்போ நீ சொல்றது உண்மையா? துவிக்கு என்ன புடிக்குமா? என்றாள் விழி விரித்து.

சரி, முழுசா நினைஞ்சாச்சி இனிமே எதுக்கு முக்காடு என்று எண்ணி கொண்டவள் , ஆமா டி அவர் உன்ன ரொம்ம்பவே விரும்புறார் ,என்று அந்த 'ம்' ல் அழுத்தம் கொடுக்க ஓடி வந்து தேவியின் கன்னங்களில் தன்  முத்திரையை பதித்தாள் துர்கா .

ஆஆஆஆஆஆஆஆஆஆ  வென அலறினாள் தேவி. (என்னங்க முத்தம் கொடுக்கரதுக்கலாம் ஏன் அலறனும்னு கேக்ரிங்களா அது முத்தம் இல்லைங்க நம்ம துர்கா எப்போலாம் happy ஆகுராங்கலோ அப்போலாம் அவங்க சந்தோசத்துல கன்னத்தை கடிச்சிருவாங்க அதான் , துவி உனக்கு பெட்டர்மாஸ் லைட்டே தான் வேணுமா)

 நாயே, பல தடவ சொல்லிட்டேன் இப்டி கடிக்காதனு ஏன் தான் உனக்கு இப்டி ஒரு ஹாபிட் வந்துச்சோ இனிமே துவி அண்ணா பாவம் தான் போ, என்றாள்  வலித்த கன்னத்தை தடவிய வாறே , வாழ்வின் முதல் முறையாக முகம் சிவந்தாள்  துர்கா . (அச்சச்சோ இந்த கொடுமைய யார் பார்க்கறது ஹே, தும்ஸ் கட்ட இனிமே நீ உன் மாமா முன்னாடி மட்டும் வெக்க படு செல்லம் )

 சத்தம் கேட்டு ஓடி வந்த அமிர்தம் என்ன மா என்ன ஆச்சு? என்று பதறி போனார்.

 அது வந்துமா என்று தேவி தொடங்க . அவள் கையை அழுத்திய துர்கா , அம்மா நீ இவள இங்க லஞ்ச் சாப்ட சொன்னேல  ஆனா இவளுக்கு எதோ முக்கியமான வேலை இருக்காம் போறேன் சொல்றா அதுலாம் முடியாதுன்னு நா சொன்ன சத்தம் போடுறா ,என்று தன் ஆருயிர் தோழியை மாட்டிவிட அவளோ வேகமாக இல்லை என்பது போல் தலை அசைக்க, அதற்கும் துர்கா, பாத்தியாமா  உன் கிட்டயே இல்லை போகணும்னு சொல்றா என்று அடுத்த பிட்டை போட  ,

அதுலாம் முடியாது நீ இருந்து சாப்பிட்டு  தான் போகணும் , நா இவங்க அப்பாவ விட்டு மேகலாவையும் கூட்டி  வர சொல்லிட்டேன், இருந்து பொழுது போனப்றம் போனா போதும் என்று கறாராக கூறி விட்டார் .

 அய்யோ  அம்மா எதுக்கு அம்மாவலாம் வர சொல்லிட்டு நா மட்டும் இருந்து சாப்டுட்டு போறேன் என்றாள் அவசரமாக .

அம்மா டைம் க்கு மருந்து சாப்டணுமா, இங்க இருந்தா கொஞ்சம் கஷ்டம் அங்கனா விமல் கொடுத்துருவான்  என்று வெளியிலும் உள்ளுக்குள் அம்மா வருவார்களோ என்னவோ ,

 தான்  கிளம்பும் போது கூப்டதுக்கே விசேஷ வீடு என்ன போல நோயாளிலாம் வர கூடாதுமா, என்றாரே இப்போ அப்பாட்ட என்ன சொல்ல போறாங்களோ என்ற தவிப்பு அவளுக்கு

மருந்து இங்க இருந்தே சாப்டலாம் , நா டைம் க்கு கரக்டா கொடுக்கறேன் போதுமா என்று மேலோட்டமாக கூறினாலும் அவருக்கும் சரியான காரணம் புரியாமல் இல்லை.

இதோ  பாரு தேவிமா, உடம்பு சரி இல்லையேனு அவங்கள தள்ளி வைக்கிற அளவுக்கு நாங்க மோசமானவங்க இல்ல . நீ எங்கள புரிஞ்சிகிட்டது இவ்ளோ தானா , அதோட மேகலை ஒண்ணும் ரொம்ப முடியாதவ இல்லையே எதோ கொஞ்ச நாளா உடம்பு முடியாம இருக்கா இதுக்கு போய்  அம்மாவும் பொண்ணும்  பையனும், இப்படி பீல் பண்றீங்களே, நீ வேணா பாரு மேகலை இங்க வந்து இங்க எல்லார் கூடயும்  பேசிட்டு இருந்தாலே போன சந்தோசம் திரும்பி வந்துடும் டா. உடம்பு சரி இல்லாதவங்கனு தள்ளி தள்ளி வச்சா ,கூடுமே தவிர  அது குண மாகாது .என்று கூற ஓடி சென்று அவரை கட்டி கொண்டாள் தேவி.

தேங்க்ஸ் மா, எனக்கு ரொம்ப கஷ்டமா இருந்துச்சு , இபோ நீங்க பேசுறத கேக்கும் பொது மனசுக்கு ரொம்ப சந்தோசமா இருக்கு மா ,என்றாள் . அவளின் கண்ணீரை  துடைத்து விட்டார் அமிர்தம் .

நீயும் எனக்கு மக தான் ங்கறதை மறந்துட்டியா தேவி என்று அவர் கேட்க இல்லை என்பது போல வேகமாக தலை ஆட்டினாள் .

சீன்  ரொம்ப அழுகாச்சியா போதே சரி இல்லையே (இப்படி நினச்சது யாருன்னு நா சொல்ல தேவையே இல்ல இருந்தாலும் சொல்றேன் நம்ம துர்கா தான்)

அம்மா நீ வேர்ல்ட்  ரெகார்ட் பண்ணிட்ட போ, என்றாள்  புரியாமல் நோக்கிய இருவரையும் ஓர  கண்ணில் கண்டு கொண்டு மெல்லிய புன்னகை சிந்தியவள். ,

பின்ன எத்தனையோ தியரி படிச்சிருக்க  தேவி ,ஆனா இபோ நீ சொன்ன தியரி  நினச்சி அழுதே விட்டாள்  பாரு என்று வராத  கண்ணீரை துடைக்க மற்ற இருவரும் அவளை மொத்து மொத்து என்று மொத்தினர் என்பது நான் சொல்லாமலே உங்களுக்கு தெரியும் .

சிறிது நேரத்தில் மேகலையும் வந்து விட அமிர்தத்தின் கூற்று படி அவரும் அனைவரிடமும் இயல்பாக பழகினார் ,

அங்கே மகிழ்ச்சிக்கு அளவே இல்லை எனலாம்

நாட்கள் செல்ல திருமண நாளும் வந்தது. துர்காவின் மன நிலையை அவளே அறிய வில்லை எனும் போது நாம் அறிய வாய்ப்பில்லை. இருப்பினும், இந்த துர்கா வின் மன நிலையை பற்றியும் , அவளின் திருமணதிற்கு பின் ஏற்படும் காதல், பற்றியும் நம்ம துவியோட ப்ளாஷ் பேக் காதல் பற்றியும் என் அடுத்த சிறு கதையில் விவரிக்கிறேன். நன்றி 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.