(Reading time: 13 - 26 minutes)

உன்னை பிரியேனடி - சஹானி

(இது பாசம் என்பது சிறுகதையின் பகுதி 2)

நாட்கள் பல சென்றன. துவாரகீஸ் ,துர்காவிற்கு இந்த கல்யாணத்தை ஏற்று கொள்ள சிறுது காலம் தேவை என்று எண்ணி அவளிடமிருந்து  இருந்தான் .ஆனால் ஒரு போதும் தான் செய்யும் ஒவ்வொரு செயலும் அவளை பாதிக்கா வண்ணம் நடந்து கொண்டாலும் அந்த செயலில் தன்  காதலை வெளிபடுத்திக்கொண்டு இருந்தான் .

அவளுக்கு தெரிய வேண்டிய மிக முக்கியமான விஷயம் ,அவள் மீதான அவன் காதலை  பற்றி தான். மூன்று வருடம் என்று தேவி சொன்னாளே , அப்போ நாகாலேஜ் போகும் போதுன்னு தானே அர்த்தம் (என்ன ஒரு அறிய கண்டு பிடிப்பு ) ஆனா எப்டி அவன்ட்ட இருந்து விசயத்த கறக்க என்று தீவிரமாக யோசித்தாள் (என்ன மேடம் தலை தட்டிட்டு இருக்காங்க ஓ யோசிக்கிராங்கலாம்  சரி யோசிங்க யோசிங்க )

ஐடியா , என்று விறுவிறு வென எழுந்து சென்றாள் தங்கள் அறைக்கு .

Pasam enbathu

அரை முழுவதும் அலசி விட்டு நிமிர்ந்தவள் கண்ணில் பட்டது அது ,அவனின் டைரி தினமும் எழுதுபவன் இல்லை அவன் ,என்பதால் அதை அங்கேயேவைத்து விட்டு திரும்பியவளின் காதில் முதலிரவு அன்று அவன் கூறிய வார்த்தைகள் காதில் விழுந்தன .

"என்னோட லைப் ல ரொம்ப முக்கியமான நாட்களும் அதோட ஸ்வீட்  மெமரீசும் தான் எழுதுவேன் ." என்பது அது .

அதை கையில் எடுத்தவள் அதற்கே வலிக்கா வண்ணம் தொட்டு பார்த்து விட்டு அதை பிரித்தாள் .

ஒரு கணம் தயங்கி விட்டாள்  ,அடுத்தவங்க டைரிய படிக்கறது அநாகரிகம் ஆச்சே என்ற மூளையை மனம் வலுவாக இடித்தது . அது அடுத்தவங்களுக்குதானே ,இது என் துவியோட டைரி. அத நா படிக்காம வேற யார் படிப்பா .. (பார்டா , நம்ம துவில இருந்து இப்போ என் துவிக்கு இம்ப்ரூமன்ட் ஆகிருக்கு போலரொம்ப சந்தோசம் போ )

டைரியில் முதல் பாதி பக்கங்கள் எழுதாமல் இருக்க , ஒரு வழியாக எழுதிய பக்கத்தை அடைந்தாள் துர்கா (பாருங்க , அவ துவி விரும்புனா எழுதாதபக்கத்துல கூட எதோ கவிதை இருக்க மாறி பீல் பண்ணி ஒவ்வொரு பேஜையும் திருப்புனா ,நாமளும் அதையே தான் செய்யணும்னு என்ன தலை எழுத்துசொல்லுங்க ஒரு வழியா படிக்க ஆரம்பிச்சிட்டா வாங்க போய் , என்னனு கேப்போம்)

ஜூன் 16,

ன்னடா இவ்ளோ பக்கத்தை விட்டுட்டு இந்த பக்கத்துல இருந்து எழுதுறேன் தானே யோசிக்கறீங்க , இந்த நாள் தான் என்னோட தேவதையை எனக்குஅறிமுக படுத்திய நாள் . அதான் இதுல இருந்து எழுதுறேன் . பொதுவா எனக்கு டைரி எழுத விருப்பமே கிடையாது .என்னோட பிரண்ட்ஸ் சொல்லும் போதுசொல்வேன் . அது எப்படி ஒரு நாள் பூரா நடக்றத ஒரே பக்கத்துல எழுத முடியும் போங்கடா,நீங்களும் உங்க ஹபிட்ட்சும் ,அப்படின்னு போயிருவேன் ஆனாஇன்னக்கி நா எழுதுறேனா அதுக்கு என் தும்ஸ் தான் காரணம் . நா இப்போ கூட இந்த நாள் பூரா எழுதுவேனானு தெரியாது இருந்தாலும் எழுதனும்னுதோனுச்சு அதான் எழுதுறேன்.

என் க்ளோஸ் ப்ரண்ட்  வருண்,படிப்பு  முடிச்சி எதோ ஒரு காலேஜ் ல முதல் தடவ வேலைக்கு சேர போறேன் டா அது உன் சொந்த ஊர் தானே ,நீ கொஞ்சம் வந்த எனக்கு மோரல் சப்போர்ட்டா  இருக்கும் டா  வாயேன் ,என்று கேட்க என்னால் மறுக்க முடியவில்லை . அம்மா கூட எத்தனையோ தடவ கூப்டுருக்காங்க நா தான் அப்புறம் பார்ப்போம்னு காலம் கடத்துனேன் . ஆனா அப்போவே போய்  இருந்தா என் தும்ஸ் கூட இன்னும் ப்ரீயா பேச சான்ஸ் கெடச்சிருக்குமோ என்னவோ . ஆனா அவள  பாக்கும் போது அவ தான் என்னோட தும்ஸ்னு தெரியாது . காலேஜ் குள்ள வரும் போதே திரு திருனு முழிச்சிக்கிட்டு அங்க இங்க பார்த்துட்டே வந்தவ யாரோ ஒருத்தன பார்த்ததும் முகம் நிறைய பல்லோட சிரிச்ச முகமா அவன் கிட்ட போய் எதோ குறும்பு பண்ணிட்டு இருந்தா ,

டேய் , அதோ அந்த ரெட் கலர் ஷர்ட் காரன் தான் போல வா போய்  பேசலாம் ,என்று என் கையை பிடித்து அழைத்து சென்றான் வருண் .

சார் ,என்று அழைக்க துர்கவிடம் பேசி கொண்டிருந்தவன் திரும்பி எஸ் ,என்றான்.

நீங்க விமல் தானே என்று வருண் கேட்க , ஆமா நீங்க ,என்றான் .

ஹலோ ஐ அம் வருண் . உங்கள போல எனக்கும் இன்னக்கி தான் first டே என்றான் கை குலுக்கிய வாறே , அதை கேட்ட துர்கா களுக் என்று சிரிக்க நானும் வருணும் அவளை புரியாமல் நோக்க .விமல் தான் அவளை கண்களால் அடக்கினான்.

சரி துர்கா நீ க்ளாஸ்க்கு  போ , தேவி லன்ச்க்கு அப்புறம் க்ளாஸ் அட்டண்ட் பண்ணுவா என்றான் இயல்பான குரலில் , அவர்களிடம் விடை பெற்று கிளம்பிய துர்காவையே , என் விழிகள் தொடர்ந்தன .

என்ன பெண் இவள் , தன்  கல்லூரியின் பேராசிரியர் என்ற முறையில் வருணுக்கு ஒரு சலாம் போட வேண்டாம் என்று நான் எண்ணி கொண்டிருக்கும் போதே  திரும்பி வந்தவள் ,குட் மோர்னிங் சார் ஐ அம்  துர்கா ,உங்கள போல எனக்கும் இன்னக்கி தான்  first டே , என்று அவனை போன்றே கூற வருண் அதிர்ச்சியோடு அவளை நோக்கினான்.( பாத்தீங்களா,எல்லாரும் ஸ்டுடென்ட தான் ராக் பண்ணுவாங்க இவளோ ப்ரொபசர  ராக்  பண்ணிட்டு போறா  , இவள என்ன செய்யலாம்)

ஹவ் ஸ்வீட்ல  என்னோட தும்ஸ் . அவளோட முதல் சந்திப்புலையே நா டோடல் ப்ளாட் .

(சரிங்க ,  நானே டைரெக்டா சொல்றேன் இந்த காதல் கதைய அப்போ தான் நிறைய கமெண்டரி கொடுக்க முடியும்)

அப்புறம் விமல் , இவன் என்னோட பெஸ்ட் ப்ரண்ட் துவாரகீஸ் , இது தான் அவனோட நேடிவ் பிளேஸ் . என்று கூற எங்களின்  நட்பு தொடர்ந்தது. அது யார் சார் உங்களுக்கு தெரிஞ்ச பொண்ணா  என்று அவன் இயல்பாய் கேட்க நண்பனை புரியாமல் நோக்கினான் வருண் . பொதுவாக  இவன் இப்படி கேட்பவன் இல்லையே என்று தான் .

அவளா , என் சிஸ்டர் ப்ரண்ட் . அவளும் எனக்கு சிஸ்டர் போல தான் . என்று  கூற அவன் மனதில் பட்டாம்பூச்சி பறந்தது .

தன்  நண்பன் முகத்தில் தெரிந்த தேஜசை கண்டு குறித்து கொண்டான் வருண்.

சில நாட்கள், வருணின் வீட்டில் தங்கி விட்டு , ஞாயிறு வீட்டிற்கு திரும்பும் சமயம் , அலமேலு விடம் இருந்து அழைப்பு , வருணிற்கு "எங்க அண்ணா வீட்க்கு ஒரு தடவ போயிட்டு வர சொல்லுப்பா ,அவன் போகலைனா அண்ணா ரொம்ப வருத்த படுவாங்க , நீ சொன்னா  தான் கேப்பான் ,என்று பலவாறு ஐஸ் வைக்க அதில் உருகி விட்டான் வருண் . ஒரு வழியாக மூன்றாம் உலக போர் நடத்தி அவனும்  உடன் செல்வது என்று ஒப்பந்தம் ஆனது.

வாப்பா துவி சின்ன வயசுல பாத்தது அப்படியே உங்க அப்பாவ போல இருக்க , வாங்க தம்பி , அமிர்தம் துவி தம்பி வந்திருக்கு பாரு , குடிக்க ஏதானும் கொண்டு வா ,என்று குரல் கொடுக்க அவரும் அவர் பங்கிற்கு அவர்களை வரவேற்றார் .

இத்தனை நாளாய் இதயெல்லாம் ரொம்ப மிஸ் பண்ணிட்டோமேன்னு மனதிற்குள் துவி புலம்பும் அளவிற்கு அவர்களின் அன்பு வெளிப்பட்டது. சிறிது நேரம் அவர்களோடு வளவளத்து கொண்டிருக்க அப்போது தான் வெளியில் சென்ற துர்கா வீட்டினுள் நுழைய மூவருமே அதிர்ச்சியின் உருவாய் இருந்தனர்.

இவளா? அப்படியானால், இது என்னவளின் வீடா?,என்று துவியும் , அய்யயோ, இவ காலேஜ்ல ப்ரொபசரயே  ராக்  பன்றவளாச்சே , இவ வீடா இது? .இவள காலேஜ்ல எங்க பாத்தாலும் ஓடி ஒளிஞ்சதெல்லாம்  வேஸ்ட் ஆகி போச்சேடா வருண் என்று அவன் தனக்குள் புலம்ப (பாத்தீங்களா ,லெக்ச்சரர் கூட பயந்து ஓடி ஒளியர அளவுக்கு வேல பண்ணி வச்சிருக்கா )

அதற்குள் அதிர்ச்சியில் இருந்து மீண்டனர் மூவரும் , முதலில் துர்கா தான் ,"சார் , நீங்க இங்க அய்யோ  சாரி சார் அன்னக்கி உங்கள்ட்ட நடந்து கிட்டதுக்கு சாரி சார் மன்னிச்சிகோங்க  இப்போ தான் விமல் அண்ணா சொன்னாங்க  நீங்க ரொம்ப வருத்த படுறதா நானே நாளைக்கு காலேஜ் ல  உங்கள மீட் பண்ணி மன்னிப்பு கேக்கணும்னு  நினச்சேன். அதுக்குள்ள இன்னக்கே மீட் பண்ணிட்டோம் , அது சரி நீங்க எங்க இங்க , என்று அங்குள்ள யாரையுமே பேச விடாமல் தானே பேச்சுரிமை அனைத்தையும் பயன் படுத்திக்கொண்டாள்  மற்றவர்களுடையதும் சேர்த்தே.

இட்ஸ் ஓகே துர்கா ,  நீங்க நினைக்கிற போலலாம் இல்ல . நீங்க தப்பா ஏதும் சொல்லலையே , எதுக்கு மன்னிபெல்லாம் ,என்று அவன் பதட்டமாக கூற, அவன் தோளை ,ஆதுரமாய் தொட்டான் துவி,  யாரும் அறியா வண்ணம் டேய் ,மச்சான் எதுக்கு டா இவ்ளோ பீல் பண்ணி பேசுற. கூல் டவுன் மச்சி  ,அவ ஒன்னும் நீ பீல் பண்ணி பேசுற அளவுக்கு உன்னோட கலீக் இல்லடா , உன் ஸ்டுடண்ட், நியாயமா பார்த்தா நீ தான் அவல பத்தி ப்ரின்சிபால்ட்ட கம்ப்ளைன்ட் பண்ணிருக்கணும் எதோ நீ நல்லவனா இருக்க போய்   இத ஒன்னும் பெருசா எடுத்துக்கல , என்று   சந்தோசமாக கூற  இது துர்கா வின் காதுகளில் விழ அவளோ பேயை போல் துவியை முறைக்க , கை எடுத்து கும்பிடாத குறையாக விடை பெற முற்பட்டான் வருண்.

யாரு சார் இது வந்ததுல இருந்து தொனதொனணு பேசுறாரு, என்று அவளும் பதிலுக்கு கடுப்படிக்க , அடுப்படியில் இருந்து குரல்

"அடி கழுத , வீட்டுக்கு வந்தவங்கள்ட்ட இப்டியா பேசுறது ,என்று அமிர்தம் எடுக்கும் போதே ,

இருக்கட்டும் அத்தை, என்ன யாருன்னு தெரியாம தானே பேசிருப்பா , பரவா  இல்லை ,என்று அவளுக்கே பரிந்து கொண்டு வந்தான் .(லவ்வர காப்பத்துறாராம் )

அதன் பின்னும் நேரம் ரெக்கை கட்டி பறக்க துவிக்கு அங்கு இருந்து புறப்பட மனமே இல்லை ,என்பதை கண்டு கொண்டான் வருண் . (பின்ன சின்ன வயசுல இருந்தே பிரண்ட்ல கண்டு புடிக்காம எப்புடி)

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.