(Reading time: 13 - 26 minutes)

 

ன்னடா , ஊருக்கு போக மனசே இல்லை போல என்று கேட்க அதற்கு அவனும் அசடு வழிய ,

டேய் சண்டாளா , தயவு செஞ்சி என் முன்னாடி வெட்கம் மட்டும் படாத அந்த கருமத்த பாக்க முடியல என்னால என்று அவன் நொந்து கொண்டான்(எங்களாலையும் தான் பாஸ்)

நாட்கள் செல்ல செல்ல , அவளை, பற்றிய உணர்வு அவானை பாடு படுத்த இறுதியில் தன்  நண்பனிடமே  சரண் அடைந்தான் துவி அவன் கூறிய அறிவுரை படி அவளின் கல்லூரி நாட்களை அவளை விட அவனே அதிகமாக எண்ண  ஆரம்பித்து அதையும் கடந்தவன் மேலும் காக்க முடியாது அவளின்   தொடங்கிய சமயமே இருவர் வீட்டிலும் பேசி அவளை திருமணம் செய்தும் கொண்டான் .(இத அவரோட ஸ்டைல் ல தாங்க டைரி எழுதி இருக்காரு இத படிச்ச துர்கா எந்த நிலைமைல இருக்காங்க பாப்போம் வாங்க )

ண்ணில் நீர் கோர்க்க டைரியை அதன் இடத்தில வைத்து விட்டாள்  துர்கா .(இதுல கண்ணீர் விட என்ன இருக்குனு நீங்க நினைக்கலாம் நா டைரிய  முழுசா  வாசிக்க விடலையே  பாதிய ம்யூட்  மோட்ல போட்டேன் . பின்ன, துவி டைரிய  படிக்க துர்காக்கு தான் ரைட்ஸ் இருக்கு நமக்கு இல்லைல , நமக்கு கடமை கண்ணியம்  கட்டுப்பாடு ரொம்ப முக்கியம் இல்ல )

தன்னவன் , தன்னை இந்த அளவிற்கு நேசித்தான் என்று என்னும் போதே அவள் தன்னிலையில் இல்லை  . இனி தன்னுள்ளும் அவனை போன்ற நேசம் வேண்டும் நிச்சயம் . என்று உறுதி பூண்டாள் . அதன் பின் வந்த நாட்களில் அவள் ,அவனிடம் அதிக விலக்கம்  காட்டுவதில்லை இதை அவனும் அறிய தான்  செய்தான் . இருந்தாலும் இது தன்  கற்பனையோ , என்று  அதை பெரிதாக எடுக்க வில்லை.

சில கால நாட்களுக்கு பின் .

இப்போது , துர்காவும் வேலைக்கு செல்கிறாள் . அவளுக்கு உபயோகமான ஒரு கம்ப்யூட்டர் துறையில் வேலை

அன்று இரவு உணவிற்கு பின் அவர்களின் அன்றாட செயலான வராண்டாவில் அமர்ந்து நிலவை ரசிக்கும் பணியில் ஈடு பட்டு கொண்டிருக்க அடிக்கடி சிரித்து  கொண்டே இருந்த தன் மனைவியை ரசித்து கொண்டிருந்தான் . துவி (ஒருத்தி ராத்திரில பேய் மாறி சிரிக்குறா அத இவன் ரசிக்குறான்  இவங்க ரெண்டு பேரையும் கீழ்பாக்கம்  கொண்டு போய் தான் விடனும்)

என்னனு  சொல்லிட்டு சிரியேன்  , நானும்   உன் கூட சேர்ந்து சிரிபென்ல என்றான்

சட்டென்று அவன் புறம் திரும்புயவள் , அவன் கண்களில் தோன்றிய காதலை கண்டு வெட்கி தலை குனிந்தாள் .

அப்பொழுது அவன் என்றோ படித்த கவிதை நினைவு வர அதை மெலிதாக அவள் கேட்கும் வண்ணம்  அவளருகில் நெருங்கி அவள் கத்தில் இதமாய் கிசுகிசுத்தான் . நீண்ட நாட்களாய் உன் வெட்கத்தை இந்த பூமி மட்டும் தரிசிக்கிறதே , ஒரு முறையேனும் வான் நோக்கி வெக்க படேன் ,உன் குங்கும முகத்தை காண துடிக்கிறது வானம் .

அவனின் அருகாமையில் கிரங்கியவள்  , அவனின் மெல்லிய மூச்சு காற்று அவளின் ஸ்பரிசம் தொட சில்லிட்டு நின்றாள் . தும்ஸ், நா உன்னை என் உயிரை விட மேலா விரும்புறேன்னு சொல்ல மாட்டேனடி  , என்று கூற

சிறிது நேரம் சென்றே அவன் கூறியதன் அர்த்தம் புரிய விழி விரித்தாள்  அந்த மங்கை .

குழந்தை போல் முழிக்கும் தன்னவளின் மூக்கை செல்லமாய் உரசியவன் ,

ஆமா டி தும்ஸ் , என்னோட உயிர் நீ ,  அந்த உயிரை விட எனக்கு வேற ஏதும் பெரிசு இல்ல குட்டிமா , இன்க்ளுடிங் மை  லவ் . என்று கூறியவனின் இதழ் மறு கணம் அவள் வசம் .

தன் மனைவியின் முதல் முத்தத்தில் இன்ப அதிர்ச்சி கொண்டவன்  அவளை  தன் மார்போடு அணைத்து கொண்டான் .கோழியின் இறகிற்குள் அடங்கும் குஞ்சி போல், அடங்கி விட்டாள்  அவள் . மோகன நிலை கலைக்க மனம் இல்லை இருவருக்கும் . எவ்வளவு நேரம் அப்படி நின்றனரோ அவர்களே அறியார் பிறகெப்படி நாம் அறிய இயலும் .

அவளை தன்னிடம் இருந்து  விலக்கியவன், அவளின் பூ நெற்றியில் முத்தமிட்டு , குட்டிமா , என்று மெல்ல அழைக்க அந்த அழைப்பு அவள் காதில் விழவே  இல்லை .(மேடம்  இன்னும் உலகம் திரும்ப வில்லை போல)

நாட்கள் யாருக்கும் காத்திராமல் நகர

தேவியும் தன் வேலையின் மாற்றல்  காரணமாக தேவியின் பக்கத்து வீட்டில் குடி ஏறினாள்.

ஆனா, இப்டி புருசனும் பொண்டாட்டியும் ஓவரா நடிக்க கூடாதுடி , என்றாள்  பேரு மூச்சோடு

புரியாது நோக்கினர் தம்பதியர்  இருவரும் ,

பின்ன என்ன அண்ணா , நா கூட கல்யாணத்துக்கு முன்னாடி இவளுக்கும்  , உங்களுக்கும் இதுக்கு முன்னாடி தொடர்பே இல்லன்னு நினச்சேன் தெரியுமா ? என்று கேட்க அவள் என்ன கூற வருகிறாள் என்பதை உணர்ந்த துர்கா , அவசரமாக அவள் வாயை அடைத்தாள் . நீ சும்மா இரு துர்கா நீ சொல்லுமா தங்கச்சி , என்று அவன் ஊக்க , அவள் கையை நறுக்கென கடித்து விட்டு

பின் பழிக்கு பழி  என்று கூறினாள் .

நிச்சயத்திற்கு முன் அவள் கூறியதையும் அதன் பின் நடந்தவை களையும் ஒன்று விடாமல் கூற துர்கா உச்ச ஸ்தாதியில் நின்றாள் ( அப்படி போடு வாங்க நம்ம துவி எப்படி ரியாக்ட் பண்னறாரு பாப்போம் )

ஒன்றும் கூறாமல் , சிறு புன்னகையை மட்டும் சிந்தினான் துவி (ச்ச சப்புன்னு ஆக்கிட்டாரே  துவி)

அவனின் இந்த சிரிப்பின் அர்த்தம் புரியாது விழி விரித்த துர்கா ஒரு வேலை அவன் நம்மள தப்பா நினச்சிடானோ என்று மிரண்டு விழிக்க அவன் லை என்பது போல் தலை ஆட்டினான் . (இவர் கேரக்டரையே  புரிஞ்சிக்க முடியலையே)

ன்றும் வழக்கம் போல் அவர்களின்  பணியை செவ்வனே செய்தனர் . அன்று நிலா மட்டும் வர வில்லை இருப்பினும் அந்த தெருவின் விளக்கு கம்பம் நிலவிற்கு போட்டியாக வெளிச்சம் கொடுத்து கொண்டிருந்தது .( அமாவாசைல கூட இவங்க நிலா சோறு சாப்டுவாங்க போல)

ரகிஸ் , ஈவ்னிங் ல இருந்து ஒரு மாறி இருக்கீங்க லே ஏன் என்ன ஆச்சு தேவி சொன்னத தப்பா நினச்சிகிடீங்களா  என்றவள்  குரல் விட்டால் அழுதுடுவேன் என்பது போல் இருந்தது .

தோட்டத்து  பக்கம் திரும்பி இருந்தவன் அவள் புறம் திரும்பி அவள் முகத்தை நோக்க அவள் கண்ணீரோ இப்பொது வருவேன் அப்போது வருவேன் என்று கண்ணாமூச்சி காட்டியது . அவள் முகத்தை கைகளில் ஏந்தியவன் , குட்டிமா, என்ன டா இதுக்கெல்லாம் போய் பீல் பண்ணிக்கிட்டு ,என்று கூற அவன் தொழில் வாகாக சாய்ந்து கொண்டாள் .

பின்ன ஏன் டா என்னை அப்படி சுத்தல்ல விட்ட , நா வழிய வந்து பேசுனா ஒரு வார்த்தையல பதில் சொல்லி கலண்டுக்கிட்ட , என்று கேட்க ,

ம்ம் இப்போ கேளுடி , சரி அத விடு எனக்கு சொல்லு , என் போட்டோவ தேவி சொன்னதுக்கு அப்புரமாவது பார்த்தியா இல்லையா ? என்றுகேட்க  அவள்  இல்லை என்றே தலை ஆட்டினாள் . ஏனாம்?- துவி

ப்ச் , ரகிஸ் , நா என்ன உன்ன இதுக்கு முன்னாடி பார்த்ததே இல்லையா , புதுசா போட்டோ பாக்றதுக்கு என்ன வந்துச்சு என்று  உதட்டை பிதுக்கினாள் . (அடிபாவி, உனக்குலாம் காதல் டைலாகே வராதா)

கிட்ட தட்ட இது போன்றொரு நிலையில் தான் நானும் இருந்தேன் தும்ஸ் , இருந்தாலும் என்ன மொத்தமே ரெண்டு தடவ பார்த்திருப்ப அதுலயும்  ஒரு தடவ என்னை பாக்கவே இல்ல , அப்புறம் உங்க வீட்ல வச்சு ஒரு தடவ பார்த்திருக்க , அதான் ஒரு வேல என் பேஸ்  உனக்கு நியாபகம் இல்லைனா. அதுக்கு தான் நா போட்டோவே அனுப்னது , என்று அவன் கூறினான்.

ப்ச் போடா அது எப்படி மறக்கும் உன் பேஸ் , என்று அவள் எதோ கூற வரும் போதே ,

ஹே , ரகிஸ்  ஆமாடா உன் பேஸ்  எனக்குள்ள மறக்காம அப்படியே இருக்குனா என்ன அர்த்தம்  என்று எதோ எட்டாவது அதிசயம் போல் ,அவனும் ஆம் என்பது போல் தலை ஆடினான் .

ஹேய் , ரகிஸ்  என்று அவன் முகமெங்கும் முத்தமிட்டவள் , அப்போ எனக்கும் உன் மேல ஆரம்பத்துல இருந்தே லவ் இருந்திருக்கு டா ஆனா , நா தான் அத சரியாய் புரிஞ்சிக்கவே இல்ல என்று தலையை தட்டினாள்  .(நீ தான் டியுப் லைட்னு எங்களுக்கு ஏற்கனவே தெரியுமே)

தும்ஸ், பார்த்துடி தலைல உள்ள மண்ணுலாம்  சிந்துது பாரு என்று கூற அவனை நாலு சாத்து  சாத்தினாள் .

அடித்து கொண்டிருந்த அவள் கையை லாவகமாக பற்றி தன்னோடு அணைத்து கொண்டான் துவி அந்த அணைப்பு இனி என் வாழ் நாள் முழுதும் உன்னை பிரியேனடி ....... என்று சொல்லாமல் சொல்லியது

முதலில் உங்கள் அனைவருக்கும் மிக்க நன்றி  தோழி களே , இந்த பகுதியை  நான் அடுத்த மாதம் தொடங்கலாம் என்று தான் இருந்தேன் , இதன் முந்திய பகுதிக்கு நீங்கள் கொடுத்த கருத்து தான் இதை விரைவில் முடிக்க எனக்கு உதவியது , ஏதும் பிழை இருந்தால் தயை கூர்ந்து மன்னித்து விடுங்கள் . இந்த பகுதிக்கும் உங்கள் கருத்துக்களை ஆவலோடு எதிர் காத்திருக்கும் உங்கள் அன்பு தோழி சகா @ நிஷா

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.