(Reading time: 19 - 37 minutes)

மனம் கொண்டேன் - அன்னா ஸ்வீட்டி

ல்லாருக்கும் வணக்கம்ங்க. என் பேரு ஜெயமலர். ஜீவநதி தற்சொரூபன் கதையை படிச்சதும் எனக்கு இதை உங்கட்ட ஷேர் செய்யனும்னு ஒரு ஆசை. இப்போ தேன்மொழி மேம் காலேஜ் கலாட்டான்னு ஃபாரம் டாபிக் ஆரம்பிக்கவும் அதில இத எழுதலாமான்னு ஒரு எண்ணம்.

அடுத்தவங்க இல்லாத இடத்தில அவங்கள பத்தி நல்லத பேசலாம் ஆனா கெட்டதை பேச கூடாது...அதுதான் புறம் பேசறது...அவங்களுக்கு போன்மரோல நோய் வரும்னு பைபிள்ள இருக்குன்னு நான் யாரை பத்தி பேச போறேன்னோ அவ அடிக்கடி சொல்லுவா....அவளை பத்தியே புறம் பேசலாமான்னு ஒரு மன தடை.

அப்புறம் என்னோட இன்னொரு ஃப்ரெண்டு தான் குறை சொல்றதுதான தப்பு...நீ சொல்லப்போற விஷயம் எனக்கு குறையாவே தெரியலைனு சொன்னதும் உங்கட்ட சொல்றதுன்னு முடிவு செய்துட்டேன்.

manam konden

சொல்றதே சொல்றேன் அதை விளக்கமாவே சொல்லிடலாம்னு கதையா சொல்றேன்.

அவ பேரு பொன்மதி. நான் முதன் முதலா அவள பார்த்தது நான் முதல் தடவையா காலேஜ் போன அன்னைக்கு.

 ஃஸ்கார்ப்பியோல வந்தவ காலேஜ் மெயின் கேட்லயே இறங்கிட்டா. கேட்ல இருந்து ஒரு அரை கிலோமீட்டர் நடந்தாதான் க்ளாஸ் ரூம் வரும். நான் கவர்மெண்ட் பஸ்ல காலேஜ் போறவ. நடந்துதான் ஆகனும். ஆனா இவ ஏன் இங்க இறங்கனும்னு  புரியாம பார்த்தேன்.

அவ அந்த நேரம் கேட் பக்கத்தில உட்கார்ந்து பூ வித்துகிட்டு இருந்த பாட்டிட்ட போய் பூ விலை கேட்டா. முத நாள் பூ வச்சுகட்டு போலாமேன்னு நானும் அவளுக்கு அடுத்து போய் நின்னேன்.

“நூறு பூ எவ்ளவு..?” எங்க ஊர்ல பூ முழம் கணக்கில வாங்க மாட்டோம். நூறு இருநூறுன்னு எண்ணிக்கை தான்.

“25 ரூவா பாப்பா..” பூக்கார பாட்டியின் கண்ணு ரெண்டும் அவள இறக்கிவிட்டுட்டு திரும்பிகிட்டு இருந்த கார் மேலதான்.

“பாட்டிமா நான் பூக்கு தான் வில கேட்டேன்...” இது அவ தான்.

“அஞ்சு பத்துல்லாம் நீங்க கணக்கு பாக்கலாமா பாப்பா...” பாட்டியின் குரல் குழைந்தது.

“இன்னைக்கு நான் முத நாள் காலெஜ் வந்துருக்கேன் பாட்டிமா....முத நாளே பூ விஷயத்தில ஏமாந்துட்டோம்னு எனக்கு கஷ்டமா இருக்குமே பாட்டிமா....”

குனிஞ்சு நின்னதுல அவ முன்னால தொங்கிகிட்டு இருந்த அந்த நீள சடைய பார்த்த பாட்டி நீளமா ஒரு துண்டு பூவ வெட்டி அவட்ட நீட்டுது. “வச்சுக்கோ பாப்பா...முத நாளுன்னுட்ட....நல்லா இரு.....பொட்டபிள்ள பூல ஏமாற வேண்டாம்...”

அதுவரைக்கும் அந்த பாட்டி மேல் எனக்கு ஒருவித எரிச்சல் இருந்தது. ஆனா இப்போ சந்தோஷம்.

பூவ வாங்கிகிட்ட அவ தன் பர்ஸை திறந்து பணத்தை எடுத்து நீட்டினா.

“முப்பது ரூபா பாட்டி....நீங்க குடுத்த பூ முன்னூறு இருக்கும்....நூறு பத்து ரூபாதானே...முத நாளே ஓசிக்கு வாங்கினா நல்லா இருக்காது....” இதில் தான் எனக்கு அவள பிடிக்க ஆரம்பிச்சது.

“இன்னைக்கு விஷேஷம்...நூறு 15 ரூபா..” நான் மெல்ல சொல்ல திரும்பி என்னை பார்த்து புன்னகையுடன் “தேங்ஸ்” என்றவள் இன்னுமொரு பதினஞ்சு ரூபாயை எடுத்து பாட்டிட்ட நீட்டினா .

அடுத்து நானும் பூ வாங்க, எனக்காக காத்திருந்து என்னோடு சேர்ந்து நடக்க ஆரம்பிச்சா.

ஃபர்ஸ்ட் இயர் க்ளாஸ் ரூம்ஸ்  இருந்த பகுதியை அடஞ்ச போது நாங்க ஃப்ரெண்ட்ஸ்.

வளும் நானும் வேற டிபார்ட்மென்ட். ஆனா எங்க க்ளாஸ் ரூம் அடுத்து, அடுத்து இருந்துது. ஃபர்ஸ்ட் இயர் எல்லாம் ஒரே ப்ளாக். அவ க்ளாஸில் இன்னும் யாரும் வரலை. ரூம் காலியா இருக்குது. என் க்ளாஸில் நாலஞ்சு தல தெரிஞ்சுது. சரின்னு என் க்ளஸுக்கு கூட்டிடுட்டு போய்ட்டேன்.

திடீர்னு ஒரு மனுஷ யான மாதிரி உருவத்துல ஒரு மொட்ட தலையன் உள்ள வந்தான். அழுக்கு ட்ரெஸ்காரன்.

அவள எழுப்பிவிட்டு கேள்வி மேல கேள்வி. இதான் வெள்ளையும் சொள்ளயுமா பணகளையோட இருக்ககூடாதுங்கது.

எங்க யாருக்கும் எதுவும் புரியல.

முதல்ல கேள்வில்லாம் சாதாரணமா இருந்துது. அவளும் இயல்பா பதில் சொல்லிகிட்டு இருந்தா. அடுத்து சின்ன சின்ன ஜாலி ராகிங். அவளும் சொன்னதெல்லாம் செஞ்சா. ஆனா அந்த தடியனுக்கு எரிச்சல் அதிகமாகிட்டே போச்சு.

நாங்கெல்லாம் பயந்து நடுங்கி போய் நின்னுகிட்டு இருக்கோம். அவ மட்டும் எந்த டென்ஷ்னும் இல்லாம முகத்தில இருந்த மலர்ச்சி மாறாம இருந்தா. அதுதான் அவனுக்கு பிடிக்கல போல.

அவன் வக்ரமா பேச ஆரம்பிச்சான்.

அவ சிரிப்பு நின்னுட்டு. ஆனா பயம் வரவே இல்லை. முகமெல்லாம் தைரியம்.

எனக்கு இங்க தொண்ட காஞ்சிட்டு.

அடுத்து அவன் செய்ய சொன்னதை அவன் அம்மா கேட்டிருக்கனும்..

அவ கோப படலை. ஆனா செய்ய முடியாது அப்படின்னு சொல்லிட்டு அவன் முகத்தை பார்த்துட்டு நின்னா.

அவ்ளவுதான் ...அந்த மொட்டையன் பக்கத்தில இருந்த ஸ்டீல் சேர எடுத்து அவ தலைல ஓங்கி அடி...

டமார்னு வந்த சத்தத்தில தான் கண்ண விழிச்சேன். தலைல அடி விழுந்தா இப்டியா சத்தம் வரும்?

அவன் அடிச்ச அடி அங்க இருந்த ஸ்டீல் டேபிள் மேல விழுந்து இருந்துது. அவ விலகி இருந்திருக்கா...டேபிள் நடுவுல பள்ளம்.

சட்டுனு கால வச்சு ஓங்கி ஒரு உதை. அவ இப்பவும் விலகிட்டா அடுத்த டேபிள்ள விழுந்த இந்த உதைக்கு சாட்சியா அதுக்கும் நடுவுல பள்ளம்.

இதுக்குள்ள திபு திபுன்னு ஒரு பட்டாளம். வந்தவங்க அவன பிடிச்சு இழுக்க அந்த குண்டன் சொல்றான் “எப்படி காலேஜ தாண்டி நீ வெளிய போறன்னு நானும் பாக்கேன்டி...உன் சாவு என்கைல தான்....”

டுத்த நாள் காலை வந்தவட்ட கேட்டேன் “மதி வீட்ல சொல்லிட்டியா?”

“பச்...இதெல்லாம் சொன்னா சரியா வராது....நம்ம காலெஜ் ஏற்கனவே ஸ்ரிக்ட்...டிசி கொடுத்துடுவாங்க...இன்னும் ஒரு வருஷம் தான் இருக்காம் அவனுக்கு கோர்ஸ் முடிய ....என் டிபார்ட்மெண்ட் சீனியர் தானாம்...எங்க சீனியர்ஸ் சொன்னாங்க... “ அவ வீட்ல சொல்லலைனு எனக்கு நல்லா தெரியும். அதோடு மதி பொய் சொல்லவும் மாட்டா.

ஆனாலும் அவ வீட்டுக்கு விஷயம் போயிருக்குது. அத்தனை ப்யூன், செக்யூரிட்டி, கேமிரா எல்லாம் இருக்குதே.  ஆனா மேனேஜ்மென்ட் அந்த சீனியர் மேல எந்த ஆக்க்ஷனும் எடுக்கலை. அதுக்கு பதிலா ஸேஃப்டி மெஷர்ஷை பக்காவா பண்ணிட்டாங்க.

க்ளாஸ் ஆரம்பிக்கிற வரை கேர்ள்ஸ் அவங்களுக்கான வெயிட்டிங் ரூம்ல தான் வெயிட் செய்யனும்....ஒரு பீரியட் முடிஞ்சு அடுத்த லெக்சரர் வந்தா தான் முதல் லெக்சரர் வெளிய போகலாம். அதோட லன்ச் பாய்ஸுக்கு க்ளாஸ் ரூமிலேயே...கேர்ள்ஸுக்கு கன்னி மாடத்தில...அதான்ங்க எங்க வெயிட்டிங் ரூம்ல...இதுக்காக ஒரு ஹால் கட்டினாங்க காலேஜ்ல இருந்து அவசர அவசரமா. அதுவரைக்கும் அவங்கவங்க லேப்தான் தற்காலிக  கன்னிமாடமா பயன்பட்டுச்சு.

எல்லாத்துக்கும் மேல ஒரு ரூல் போட்டாங்க பாருங்க...பாய்ஸ்  அண்ட் கேர்ள்ஸ் ஒருத்தர்ட்ட ஒருத்தர் பேசவே கூடாது...

அப்படி பேசின ரெண்டு மூனு ஜோடிய சஸ்பெண்ட் செய்தாங்க...

இதெல்லாம் ப்ரின்ஸிபால் செய்தது. அவ அப்பா எல்லோரும் பார்க்க இரண்டு மூனு தடவை அவளை க்ளாஸ் ரூம் வாசல்ல வந்து ட்ராப் செய்தாங்க. அப்பதான் யாரும் மகட்ட ப்ரச்சனை பண்ண மாட்டாங்கன்னு அவங்க நினச்சாங்களாம்.

அப்ப தான் எங்களுக்கு தெரியும் பொன்மதி காலேஜ் சேர்மனோட பொண்ணுனு.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.