(Reading time: 11 - 22 minutes)

காஸ்மோபோளிடன் பாரம்பரியம் - மது

ரவு 9 மணி.  சென்னை பெசன்ட் நகரில் அழகிய பங்களா.

அந்த வீட்டில் டின்னர் மட்டும் குடும்ப உறுப்பினர்கள் எல்லோரும் ஒன்றாக அமர்ந்து சாப்பிடுவது தான் வழக்கம். அன்று கூடுதல் ஸ்பெஷலாக ஊரில் இருந்து  தாத்தா பாட்டீஸ் வந்திருந்தார்கள்.

"அப்பா!! கேன்  யு ஸ்பேர்  சம் டைம் பார் மீ  போஸ்ட் டின்னர்" தன் 17 வயது மகள் அவினி  கேட்க

Cosmopolitan Parambariyam

"மை லைப் டைம் பார் யு அவினி " என்று சந்தோஷமாகக் கூறினார் கதிர்.

"ஒ!! அப்பா..அதை தான் உங்க லோட்டஸ் பட்டா போட்டு வச்சிருக்காங்களே!! " என்று குறும்புடன் சொன்னான் அவினியின் அண்ணன் அகில் ( இருவரும் இரட்டையர்கள்.. 10 நிமிடம் முன் பிறந்ததால் அகில் அண்ணனாம். அவினியும் அண்ணா என்று தான் அழைப்பாள். முன் விகுதியாக டேய் , கழுதை, எருமை எல்லாம் கண்டிப்பாக இருக்கும்)

"அகில்!! மை லைப் இஸ் மை வைப்..அதனால உங்க ரெண்டு பேருக்கும் தான் எங்களோட ஹோல் லைப் டைம்" என்று மனைவி கமலியை  பார்த்து கண் சிமிட்டிய படியே மகனுக்கு பதில் சொல்லிக் கொண்டிருந்தார்.

" கல்யாணமே வேணாம்னு சாமியார் மாதிரி இருந்தவன் கமலிய பார்த்தவுடனே விழுந்துடானே" என்று தன் மகனை கேலி செய்தார் கதிரின் தந்தை .

"இவ மட்டும், நான் மக்களுக்கு சேவை செய்ய போறேன் அதுக்கு மேரேஜ் தடையா இருக்கும்னு சொல்லிட்டு இருந்தவ தானே. கதிர பார்த்ததும் எங்களையே மறந்துட்டா" என்று  கமலியின்  அம்மா சொல்ல

"அம்மா..நான் எப்போ உங்கள மறந்தேன்" என்று செல்லமாய் சிணுங்கினாள் கமலி.

"அப்புறம் கதிர் தான் மகனா எங்கள கவனிக்கிறான்" என்றார் அவள் அன்னை.

"கமலி  எங்க பொண்ணா எவ்ளோ பொறுப்பா எங்கள பார்த்துக்கிறா " என்று  தன் மருமகளை வாஞ்சையோடு  தடவிக் கொடுத்தார் கதிரின் தாயார்.

"ஐயோ!! நீங்க  சீரியல் எல்லாம் பார்த்ததில்லையா. மாமியார் மருமகன்னா சண்ட போடணும். மாப்பிள்ள மாமனார்னா  ஈகோ  காட்டணும்.. இது சரி இல்லையே " என்று கலகலவென சிரித்தாள் அவினி.

"அப்பா... நாளைக்கு அசஸ்மன்ட் இருக்கு. ஹேவ் எ டவுட்.. கிளியர் மீ" என்றாள் அவினி.

னைவரும் சாப்பிட்டு முடித்து சிறிது நேரம் ஹாலில் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தனர். கதிரின் பெற்றோருக்கு சதாபிஷேகம் . அதற்கான ஏற்பாடுகள்  பற்றி டிஸ்கஸ் செய்ய  சென்னை  வந்திருந்தனர். உடன்  கமலியின் பெற்றோரையும் அழைத்து வந்திருந்தனர்.

அப்போது அவினி தன் தாயின் தோள் கட்டிக் கொண்டு ," அம்மா நாளைக்கு செம் என்ட். சோ பிரண்ட்ஸ் எல்லோரும் டிஸ்கோ போறோம்மா. ஷாலுக்கு சண்டே பர்த்டே. சேர்த்து வி கோன்னா செலிபரேட்" என்றாள்.

"இஸ் இட். ஷாலுக்கு என்ன கிப்ட் குடுக்க போற" என்று மகளிடம் கேட்டார் கமலி.

"இன்னும் டிசைட் பண்ணல மா" என்றவள், "டேய் அண்ணா, அஞ்சலி பர்த்டேக்கு வாங்கினோமே. சேம் வாங்கலாமா.. நீ ஹெல்ப் பண்றியா " என்று தன் அம்மாவிற்கு பதில் கூறி அகிலிடம் கேள்வி கேட்டாள்.

"அப்போ அவனையும் அவன் பிரண்ட்சையும்  உன்  கூட  டிஸ்கோ  கூட்டிட்டு போ. அவனும் டிஸ்கோ போனதில்ல தானே " என்றார்  கமலி.

"என்னடா வரியா. உன் குரங்கு கூட்டத்து கிட்டேயும் சொல்லிடு. ஸ்நாக்ஸ் அண்ட் டிரிங்க்ஸ் ஹெல்ப் யுவர்செல்ப்" என்று  மிரட்டலாய்  கூறினாள்.

" அப்பாக்கு சரியான பிஸ்னஸ் வாரிசு நீ!!! எப்படி மா இப்படி ஒரு கஞ்ச பிசினாரியா இருக்கா " என்று அகில் அவினியை சீண்டவும்

"உங்க அம்மா ஜீன்ஸ் தானே உன் தங்கச்சிக்கும் இருக்கும். உன் அம்மாவை விடவா" என்று கமலியின் தாயார் கூற

"அம்மா இதை நான் பரிபூரணமாக வழி மொழிகிறேன்" என்று கதிர் சொல்ல அவரை செல்லமாய் அடித்தார் அவர் மனைவி.  

"கமலி  தனக்கு தான் ஏதும் வாங்கிக்க மாட்டா. ஆனா நம்ம எல்லோருக்கும் அவ தானே எப்போவும் பார்த்து பார்த்து வாங்கறா" என்று கதிரின் அம்மா பரிந்து கொண்டு வர

"அண்ணா ... நான் எஸ்ஸ்ஸ்ஸ் ஆகறேன். வாட் அபவுட் டுமாரோ" என்றாள் அவினி.

எனக்கும் நாளைக்கு பைனல் வைவா. எப்படியும் நாங்களும் பார்ட்டி பிளான் பண்ணுவோம். வில் ஜாயின் யு தென்… மா எனக்கு எம்ப்ரியோல கொஞ்சம் ஹெல்ப் பண்றியா" என்று கூறிக் கொண்டே எழுந்தான்.

"நீ மத்ததெல்லாம் ரிவைஸ் பண்ணு  வரேன் " என்றார் கமலி.

திர்  சென்னையில் மிக பிரபல தொழில் அதிபர். தன் சுய முயற்சியில் மிகப் பெரிய தொழில் சாம்ராஜ்யத்தை உருவாக்கி வளர்த்து வருகிறார். கமலி ஒரு கார்டியாலஜிஸ்ட். தற்போது இவர்கள் நடத்தும் அன்பு டிரஸ்ட் மருத்துவமனையின் தலைமைப் பொறுபேற்றுக் கொண்டிருக்கிறார். தன் மனைவியின்  கனவை இலட்சியத்தை கதிர் நனவாக்கினார்.

இவர்களின் இரட்டை பிள்ளைகள் அகில், அவினி. அகில் தாயின் வாரிசு. சென்னை மருத்துவ கல்லூரியில் முதல் ஆண்டு இறுதியில் இருக்கிறான். அவினியோ அப்பா செல்லம். அவரை  போலவே  சென்னை ஐ ஐ டி யில் ஈ. சி. ஈ முதல் ஆண்டு படிக்கிறாள்.

றுநாள் மாலை கமலியிடம் இரண்டு உடைகளை காட்டி எதைப் போட்டுக் கொள்வது என்று  பட்டி மன்றம் நடத்திக் கொண்டிருந்தாள் அவினி.

ஒன்று  பென்சில் ஸ்கர்ட்  சிலீவ்லஸ் குட்டை டாப். இன்னொன்று முழங்கால் வரை ஆன லெஸ் வைத்த  கவுன்.

பாட்டிமார்  இருவரும் பார்த்துக் கொண்டிருக்க கமலி," அவினிமா  இந்த ஸ்கர்ட் உனக்கு ரொம்ப அழகா இருக்கும்டா. ஆனா நீ ப்ரீ ஸ்டைல் டான்ஸ் ஆட முடியாது இதில். அது தான் பட் தட்ஸ் ஓகே பார் யு ன்னா" என்று முடிக்கும் முன்னே

"அப்போ இது வேணாம். இந்த கவுன் போட்டாலும் கஷ்டம் தான் இல்ல மா" என்று அவளே இரண்டும் வேண்டாம் என்று முடிவு கட்ட

"போன வாரம் அப்பா பேங்காக்ல இருந்து உனக்கு ப்லோரல்  பாண்ட்ஸ் பிரில் டாப் வாங்கிட்டு வந்தாரே. அது  டிரை பண்ணு. உன் பிரண்ட்ஸ் யாருமே பார்த்தது இல்லையே" எனவும்

"வாவ் ...சூப்பர் மா. அத நான் மறந்தே போனேன்" என்று மிக நேர்த்தியான  உடை போட்டுக் கொண்டு வந்தாள்.

பாட்டிகள்  இருவரும் கமலியின் சாமர்த்தியத்தை மெச்சிக் கொண்டனர்.

"அண்ணா ,அப்பா!! ரெடியா.. டைம் ஆச்சு..இந்த பசங்க இருக்காங்களே ரெடியாக இவ்ளோ நேரம் " என்று அவினி அலுத்துக் கொண்டாள்.

"நான் இவங்கள டிராப் பண்ணிட்டு வரேன்" என்று கதிர் கூற

"அவினி அண்ணாவோடவே  இரு..அவன் தண்ணி கிண்ணி போட்டா அம்மாகிட்ட வந்து சொல்லு என்ன" என  விளையாட்டாய் கூறி

"அகில் இந்த குரங்கு சேட்டை பண்ணாம பார்த்துக்கோ. அந்த ஹோட்டல் (ஈ சி ஆர் ரோட்டில் இருக்கும் ஸ்டார் ஹோட்டலில் உள்ள தரமான டிஸ்கோ) ஓனர் வேற அப்பாவோட சோசியல் சர்கிள்ள இருக்கிறவர். சோ எல்லா பிரண்ட்சையும் பத்திரமா பார்த்துக்கோ" என அவனை பொறுப்பான பையனாய் கமலி கூற அதில் மகிழ்ந்தான்  அகில்.

"சரிமா! ஓகே  பட்டூஸ் பை" என கோரசாக பிள்ளைகள் இருவரும் கூறி தங்கள் பாட்டிகளின் கன்னத்தில் கிஸ் பண்ணிவிட்டு பறந்தனர்.

கதிர் தன் மனைவியிடம் கண்ணாலே விடை பெற கமலி குழந்தைகள் பத்திரம் என கண்ணாலே கூறினார்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.