(Reading time: 11 - 22 minutes)

 

" நைட் பார்டிக்கு வெளில டிஸ்கோ போறது இது தான் பர்ஸ்ட் டைம். நம்ம குழந்தைகளுக்கு வேற 18 முடியல  இன்னும். யு எஸ்ல இருந்து திரும்ப வரும் போது இங்க சிக்ஸ்த் சேர்த்துடோம்ல . மத்த பசங்கள விட இவங்க சின்னவங்க. அதான் அவர்  ஹோட்டல்  மேனேஜர  பார்த்து சொல்லிட்டு வர கூட போறார் " என்று  கமலி கூற 

"அப்போ போக வேண்டாம்ன்னு சொல்ல வேண்டியது தானே" என்றார் கமலியின் அம்மா.

அம்மா!! நீ கிழிச்ச கோட்ட நானோ குழலியோ தாண்டினது இல்ல. நாம இருந்ததும் சின்ன ஊர். இந்த காலத்துக் குழந்தைகள் ரொம்ப ஷார்ப் அதே சமயம் சென்சிடிவ். இந்த வயசில் நாம் வேண்டாம்னு அதட்டி சொன்னா ரிபல் பண்ண ஆரம்பிச்சிடுவாங்க. அதே சமயம் அன்பா நியாயமான ரீசனோட சொன்னா புரிஞ்சுப்பாங்க" என்றார்  கமலி.

"அதுவும் சரி தான். அவி காமிச்ச ரெண்டு டிரசையும்அவ வாயாலேயே நல்ல இல்லைன்னு சொல்ல வச்சுட்டியே" என்று மெச்சுதலாய் கூறினார் கமலின் மாமியார்.

"அந்த ஸ்கர்ட் போன வகேஷன்க்கு குழலி வீட்டுக்குப் போயிருக்கும் போது  இவளும் நிலாவும் ஒரே மாதிரி எடுத்தாங்க. அது அமெரிக்காவில் போடலாம். நம்ம ஊர்ல அதும் தனியா  டிஸ்கோ மாதிரி இடங்களில் வேண்டாமேன்னு தான் அப்படி சொன்னேன். அந்த பிளக் கவுன் கூட இவளுக்கு அழகா இருக்கும். இவர் ஒரு பார்ட்டிக்குப் பிள்ளைங்கள கூட்டிட்டு  போன போது போட்டிருந்தா. அவர் கூட இருந்ததால நானே தான் போட்டு விட்டேன்" என்று  தன் செயலுக்கு விளக்கம் சொன்னார் கமலி.

"இந்த டிரஸ் போடாதேன்னு கண்டிக்கவா முடியும் தோளுக்கு மேல் வளர்ந்த பிள்ளைங்கள" என கமலியின் தாய் கூறவும்

"அத நீ சொல்றியா மா. பாட்டி ஊருக்குப் போகும் போது ஜீன்ஸ் குர்தா போட்டுட்டு வரேன்னு சொன்னதுக்கு என்ன திட்டு திட்டின" என தன் அம்மாவிடம் வம்பு இழுத்தார் கமலி.

"அது கிராமம் மா. நீ டில்லியில் போட்டுட்டு இருந்ததுக்கு ஏதும் சொன்னேனா என்ன " என்று சமாதானம் சொன்னார்  அன்னை.

" அப்போ எனக்கு கோபம் உன் மேல. இப்போ நானே ஒரு அம்மாவா ஆன பிறகு தான் புரிஞ்சுகிட்டேன்" என தன் அன்னையை அணைத்துக் கொண்டார்.

திர் வந்து விட தந்தைகளையும் அழைத்து உணவருந்தி கொண்டிருந்தனர்.

"கதிர்.. பார்ட்டினா டிரிங்க்ஸ் எல்லாம் இருக்குமே. நம்ம பசங்க " என கமலியின் அப்பா தயக்கமாய் அதே சமயம் அக்கறையுடன் கேட்க

" அப்பா, அகில் மெடிக்கல் காலேஜ் சேர்ந்த புதுசு. ஒரு நாள் பர்த்டே பார்ட்டின்னு போயிருக்கான். அங்க பசங்க கம்பெல் பண்ண  பீர் சாப்பிட்டிருக்கான். வீட்டுக்கு வந்தான் தள்ளாடிக்கிட்டே" என்று அன்றைய தினத்திற்கு கதிர் கமலி இருவரும் சென்றனர்.

" இவர் தான் கதவை  திறந்தார். அவன தாங்கி சோபாவில் உக்கார  வச்சு என்னையும் அவினியையும் எழுப்பி கூட்டிட்டு வந்தார். கூடவே  ஹான்டிகாம் எடுத்துட்டு வந்தார்" என கமலி தொடர

"  போதையில் என்னனவோ உளறினான்.. அவினிய வா டான்ஸ் ஆடலாம்னு கூப்பிடறான். நான் அமைதியா விடியோ ரிகார்ட் பண்ணி அவனை தூங்க வச்சேன்" கதிர் சொல்ல

"அப்புறம் என்ன சொன்னான் அகில். காலையில மன்னிப்பு கேட்டான்னா" என  பாட்டிகள் கேட்க

அடுத்த நாள் சண்டே மா. மதியம் தான் எந்திருச்சு வந்தான். அவன் வரவும் அவினி அண்ணா  வா வா ஒரு சூப்பர் விடியோ பார்க்கிறேன். நீயும் பாரேன்னு அவன எடுத்த விடியோவ காமிச்சா.

எத்தன தடவ  என்னோட டான்ஸ் ஆடுன்னு கூப்பிட்டிருப்பேன். என்னவோ தங்கச்சியோட எல்லாமா  பேர் டான்ஸ் ஆடுவங்கன்னு ஷோ காமிப்ப.. இனிமே என் கூட டான்ஸ் ஆட வைக்கணும்னா உனக்கு தண்ணி  ஊத்திக் குடுக்கிறேன்னு விளையாட்டா அவன சீண்டி விட தான் சொன்னா.. நானோ அவரோ அவினிகிட்ட எதுமே சொல்லல.

அவினிய கட்டிப் பிடிச்சிட்டு அழுதுட்டான்.அவன் எப்போவுமே அவினினா உயிரா இருப்பான்" என கமலி  அன்று நடந்ததை சொன்னார்.

“என்ககிட்டேயும் மன்னிப்பு கேட்டான். சாரி எல்லாம் நமக்குள்ள எதுக்கு அகில். நீ ரியலைஸ் பண்ணினா போதும். போதை எவ்வளோ டேன்ஜெரஸ்ன்னு. பிரண்ட்ஸ் கூட என்ஜாய் பண்ணு. பட் அவங்க இழுக்கும் இழுப்புக்கு போகாம யு ஷுட் பி ஸ்ட்ராங் ன்னு சொன்னேன்” என  கதிர்  சொல்ல

கமலி தான் ஒரு படி இன்னும் மேல போய் அகில் தலைய  கோதி விட்டு எப்படி இருக்கும்ன்னு பார்க்க ஆசையா இருந்துச்சா  கண்ணா ன்னு கேக்க  கொஞ்சம் ஆமாம் மா எப்படி இருக்கும்னு தெரிஞ்சுக்க கியுரியஸா இருந்துச்சுனு சொல்லி அவ  மடில படுத்து அழுதான்.

"ஏண்டா அகில் குட்டி அழற. இப்போ தெரிஞ்சிகிட்ட ல  அது என்ன எல்லாம் பண்ணும்னு. உனக்கு நல்லதுன்னா அம்மாவே  வாங்கி குடுப்பேன்ல. ஹ்ம்ம் " என  கமலி கூறவும் தாயின் செல்லப் பிள்ளையும் "ஆமாம்மா" என தன் அன்னையை அணைத்துக் கொண்டான்.

"அகில் அவினி ரெண்டு பேருமே கமலி எதுக்கும் வருத்தப் படுறத தாங்க மாட்டங்க. உங்களுக்கு ஞாபகம் இருக்க மா.. நான் கமலி உண்டாயிருக்கிற போது எல்லாத்தையும் விடியோ செய்து வச்சிருந்தேனே" என கதிர் கூறவும்

"ஆமாம். நீ தான் அவ கஷ்டப்பட்டதை  எல்லாம் கூட ரிகார்ட் பண்ணியே. அப்போவே என்ன காரியம் பண்றேன்னு உன்ன திட்டினேன்" என கதிரின் அன்னை கூற

" அம்மா. அகில் அவினி 13 பர்த்டே போது அந்த வீடியோ தான் அவங்களுக்கு கிப்ட். குழந்தைங்க அத பார்த்துட்டு  நம்ம அம்மா நமக்காக எவ்ளோ கஷ்டபட்டிருக்கான்னு தெரிஞ்சுக்கிடாங்க. அது அவங்க மனசிலும் ஆழமா  பதிஞ்சு போச்சு. டீன் ஏஜ் ஒரு டெலிகேட் கட்டம். நம்ம செல்லங்க பணம் வசதி இருந்தும் வழி மாறாம நல்ல பிள்ளைங்கள,. பொறுப்பா, படிப்பிலும் கெட்டியா நம்ம குடும்ப பேர காப்பாத்திட்டு இருக்காங்க" என  பெருமையுடன் கதிர் சொல்ல கமலிக்கும் தான் பெற்ற பொக்கிஷங்களை  எண்ணி பூரிப்பு.

கதிர் மொபைல் ஒலிக்க," அப்பா.. பார்ட்டி லேட் நைட் கண்டினியு பிளான் பண்றாங்க. நானும் அவியும் அஞ்சலியும் கலண்டுகிறோம். அஞ்சலி வீட்டு டிரைவர் மாமா வந்திருக்கார். ஷி வில் ட்ரோப்" எனக் கூற

"ஏன் அகில் எனி  ப்ராப்ஸ்" என கதிர் கேட்க

"நத்திங் பா. சாட்டர்டே நைட். கிரவுட் போரிங் இன். அவினி அஞ்சலிக்கு ஸேப் இல்லையோன்னு பீல் ஆகுது பா.  புஷ்ஷிங் ஆப்" என  பொறுப்பான அண்ணனாக  அகில் கூற சரி வீட்டுக்கு வாங்க என அவனுக்குப் பதில் கூறி விட்டு

" நீ அவினியோட அகில்ல அனுப்ப ஏன் இவ்ளோ பர்டிகுலரா இருந்தேன்னு தெரியுது. தே ஆர் கமிங் பேக். ஹி இஸ் சோ ப்ரோடக்டிவ் அபவுட் ஹிஸ் சிஸ்" என சிரித்தார் கதிர்.

"சோ இஸ் ஷி!! நாம ஓவர் ப்ரொடக்ட் பண்ணினா தான் அது சில நேரம் வில்லங்கமா போய்டும். பட் அவங்களுக்குள்ளே இதை வளர்த்து விட்டுட்டா தே பீல் கம்பர்டபில்" என கமலி சொல்ல

"நம்ம வீட்ல ரெண்டு குழந்தைகள் இருக்கு. ஒத்த பிள்ளையா போச்சுன்னா" என கமலியின் தாய் கேட்க

"அஞ்சலி ஒரே பொண்ணு. அவ சின்ன வயசில் இருந்து இவங்க  பிரண்ட். அவளையும் தான் பொறுப்பா அகில் கூட்டிட்டு வர்றான் ம்மா. நல்ல பிரண்ட்ஸ் ரத்த பந்தத்திற்கு சமமா உசத்தி தானே மா" என்று பதில் சொன்னார் கமலி.

பெரியோர்கள் ஓய்வெடுக்க செல்ல," அம்மா அப்பா " என  கமலி கதிரை ஆளுக்கு ஒரு புறம் கட்டிக் கொண்டு தங்கள் முதல் டிஸ்கோ அனுபவங்களை பெற்றோரிடம் கதை அளந்து கொண்டிருந்தனர் அகிலும் அவினியும்.

திருக்கடையூர் கோவிலில் கதிரின் பெற்றோருக்கு சதாபிஷேகம்  விழா நடைபெற்றது.

அவினி காதில் ஜிமிக்கி காலில் கொலுசு அணிந்து அழகிய பாவாடை தாவணியில் வலம் வந்து கொண்டிருந்தாள். அகிலோ வேஷ்டி ஜிப்பா அணிந்து பொறுப்பாய் உறவினர்களை உபசரித்துக் கொண்டிருந்தான். தாத்தா பாட்டியின் கால் தொட்டு பணிந்த குழந்தைகளை சுற்றமும் நட்பும் அருமையான குழந்தைகள் என பாராட்ட ஈன்ற பொழுதின் பெரிதுவக்க மகிழ்ந்தனர் கமலி கதிர்.

இன்றைய ஜெனெரேஷன் அறிவா  மெச்சுர்ட்டா இருக்காங்க. அன்பான அணுகுமுறை, தகுந்த ரீசன்ஸ் உடன்  நட்பான வழிகாட்டுதல் இவை இருந்தால் எந்த வித கலாச்சார உட்புகுதலும் நம் பாரம்பரியத்தைக் குலைக்க முடியாது

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.