(Reading time: 10 - 20 minutes)

 என்னுயிர் உன்னோடுதான்... - தங்கமணி சுவாமினாதன்

ன்னா..நான் குமரகோட்டம் கோவிலுக்குப் போயிட்டு முருகனபாத்துட்டு அப்பிடியே கொஞ்சம் மளிக சாமான் வாங்கணும் இன்னும் ரெண்டு நாளைக்குதான் சுகர் மாத்ர பிபி மாத்ர இருக்கு அதயும் வாங்கிண்டு வந்துர்ரேன்..என்ன சரியா..இப்பவே நால்ற மணியாயிடுச்சு..இப்ப கெளம்பினாதான் ஆறர மணிக்குள்ள திரும்பலாம்..

சொல்லிக்கொண்டே காபியைக் கொண்டு வந்து மேஜை மீது வைத்தார் கல்யாணி மாமி. ஐந்தரை அடி உயரம்  உயரத்திர்க்கேற்ற உடல்வாகு பளீரென்ற சிவந்த நிறம்.. அறுபத்து ஐந்து வயதிலும் ஒரு பல்லு கூட விழாமல் கோத்துவைத்ததுபோல் பல் வரிசை கருப்பும் வெளுப்புமாய் முடி மெரூன் கலரில் பெரிய சைஸ் ஸ்டிக்கர் பொட்டு......பார்க்கவே வெகுகம்பீரமாய்த் தெரிந்தார் கல்யாணி மாமி. பேச்சும் அப்படித்தான்.வெட்டு ஒண்ணு துண்டு ரெண்டு..

பட்டறிவு அதிகம்.எல்லா வயதினருக்கும் மாமியிடம் ஒரு மரியாதையும் பாசமும் உண்டு. டிவியில் செய்தி சேனலைப் பார்துக்கொண்டிருந்த சிவராமன் லேசாகக் கழுத்தைத் திருப்பி மாமியைப் பார்த்தார். சிவராமன் அரசு பணியிலிருந்து ஓய்வு பெற்று கணிசமாக பென்ஷன் வாங்குபவர்.உத்தியோகத்தில் இருந்தபொது மாற்று வழியில் சம்பாதிக்கத் தெரியாமல் பிழைக்கத் தெரியாதவர் என்ற பட்டத்தோடு ரிட்டயர் ஆனவர். மாமியிடம் அதீத பாசம். கிழித்தகோட்டைத் தாண்டாதவர்.வயது எழுபது சொச்சம்.

Ennuyir unnodu thaan

ஆனால் கொஞ்சம் முன் கோபம்.எத்தெனைக்கெத்தனை கோபம் வருகிறதோ அத்தனைக்கத்தெனை நல்ல மனது.இந்த கோபத்தாலேயே மாமிக்கும் இவருக்கும் சின்னச்சின்ன சண்டைவரும்.அது ரொம்ப நாழி நீ டிக்காது.சட்டென இறங்கி வந்து விடுவார். மாமிக்கு கொஞ்சம் ரோஷம் அதிகம்.மாமி தன்னோட எதிர்ப்ப காட்டும் வழியே தனி. கோபம் வந்தால் லேசில் காபி போட்டுத்தரமாட்டார்.அது ஒண்ணுதான் அவர் கோபத்தின் வெளிப்பாடு.

சிவராமன் கல்யாணி தம்பதிக்கு ரெண்டு பிள்ளைகள் ஒரு பெண். மூவருமே ஐந்தாறு மணி நேர பயண தூரத்தில்தான். யாருக்கும் தொந்தரவு தரக்கூடாது அது பெற்ற பிள்ளைகளாய் இருந்தாலும் சரி என்ற எண்ணெத்தில் காஞ்சிபுரத்தில் ஃப்ளாட் ஒன்றை வாங்கி இருவரும் தங்கிவிட பணங்காசும் கேட்டுத்தொந்தரவு கொடுக்காததால் உறவு சுமுகமாகவே போயிற்று.

ரி..நான் கெளம்பறேன் என்று சொல்லியபடி ஒயர் கூடையில் தண்ணி பாட்டிலையும் பர்சையும் எடுத்துப் போட்டுக்கொண்டு கிளம்பினார் கல்யாணி மாமி.

என்ன கல்யாணி தனியாவா போர...?.

என்னிக்கெல்லா நா தனியா போயிருக்கேன்..இன்னிக்குப்போக...இந்ரா மாமி வரா..

அதானே பாத்தேன்..நடந்து போகாதீங்கோ..ஷேர் ஆட்டோல போங்கோ...

ரொம்பத்தான் கரிசனம்....வெள்ள போறவாளுக்கு எப்பிடி போணுன்னு தெரியாதாக்கும்..நீங்க சொன்னாத்தான் தெரியுமோ..

இப்ப நா என்ன சொல்லிட்டேன் இப்பிடி வள்வள்னு விழர..

கெளம்பும் போது தொணதொணன்னு...ஒண்ணு சொல்ல மறந்துட்டெனே..சாங்காலம் ஆறு மணிக்கு சாமிண்ட வெளக்கேத்தி வாச லைட்ட போட்டுடுங்க்கோ..மறந்து பேடாதீங்கோ..ங்கேன்னு டிவி பாத்துண்டே வாசக்கதவ தாப்பாபோடாத வெட்டி மல்லாத்தி வெச்சுண்டு ஒக்காந்துடாதிங்கோ.. காலம் கெட்டு கெடக்கு...எவனாச்சும் உள்ளே நொழஞ்சாக்கூட தெரியாது..பத்ரம் பத்ரம்.. நா வரேன்..

Related Read: மனதை தொட்ட ராகங்கள் - 06 - வான மழை போலே...

ல்யாணி மாமி..வாசலுக்கு வரவும் மாமியின் தோழி இந்ரா மாமியும் ஆத்துக்குள்ளேந்து வெளியில் வருவதற்கும் சரியா இருந்தது.

அன்று செவ்வாய்க் கிழமையென்பதால் கோயிலில் கூட்டம் அதிகமாய் இருந்தது.மாமிகள் இருவரும் பிராகாரத்தைச் சுற்றி வரும்போதுதான் கல்யாணி மாமி சுந்தரேச சாஸ்த்திரிகளைப் பார்த்தார்.சாஸ்த்திரீள்

மாமா..

மாமி கூப்பிடவும்...

மாமி சொல்லுங்கோ..

அருகில் வந்தார் சாஸ்திரிகள்..மாமா....

எங்காத்துல நாளான்னிக்கி மாமனார் சிரார்தம் நெனவு இருக்கோன்னோ?

பிராமணாளுக்கு சொல்லிட்டேளா?

நன்னாருக்கே மாமி மறப்பேனா என்ன?ஏற்பாடு செஞ்சுட்டேனே... ரொம்ப நல்லது வரேன் மாமா.....சிரார்தம் பண்ணி வைக்க சீக்கிரம் வந்துடுங்கோ...எங்காத்து மாமா ஒடம்பு முடியாதவர்..ஒங்களுக்கே தெரியுமே...

த்துக்குத் திரும்பி வரும்போது மணி ஆறேகால்..வாசல் இருண்டு கிடந்தது..படிச்சுப் படிச்சுச் சொல்லியும் இந்த பிராமணர் இப்பிடி செவ்வக்கிழமையும் அதுவுமா வாச லைட்ட போடாம........

கோவத்தோடு கதவைத்தட்டினார் கல்யாணி மாமி.பார்த்துக்கொண்டிருந்த சேனலை சட்டென மாற்றி விட்டு அவசரமாய் வந்து கதவைத் திறந்தார் சிவராமன்.

எத்தன தடவ ஒங்ககிட்ட சொல்லிட்டுப்போனேன் வாச லைட்ட போடுங்கோ சாமிண்ட வெளக்கேத்துங்கோன்னு அப்பிடி என்னத்த டிவில பாத்துண்டு இருந்தேள்...நா அன்னெண்ட போனதுமே ந்யூஸ்ஸ மாத்திருப்பேளே...எவளாவது அரையும் கொரையுமா ட்ரஸ்ஸ போட்டுண்டு வந்து ஒடம்ப வெட்டிவெட்டி ஆடிருப்பா ங்கேன்னு பாத்துண்டு இருந்து வெளக்கு குட ஏத்தாம ஒக்காந்திருந்திருப்பேள்...

தூக்கிவாரிப்போட்டது சிவராமனுக்கு..அடி பாவி என்னமோ பக்கத்துலயே ஒளிஞ்சுண்டு இருந்துபாத்தாப்ல சொல்றாளே....

ஹி..ஹி..இல்ல...கல்லு....மறந்துட்டேன்...சம்மாதானம் செய்ய முயன்றார்.

போறும் போறும் கல்லு மண்ணுன்னிண்டு..கொஞ்சாதேள்...

விளக்கேற்றிவிட்டு டீ போட்டுத் தனக்கும் சிவராமனுக்குமாய் மேஜை மீது கொண்டு வந்து வைத்தார் மாமி.

கல்யாணி..எனக்கு திங்க ஒண்ணும் வாங்கிண்டு வல்லயா.....

இந்தாங்கோ..ஒயர் கூடையிலிருந்து நிலக்கடலைப் பொட்டலத்தை மாமி எடுத்துக்கொடுக்க ஆர்வமாய் தின்ன ஆரம்பித்தார் சிவராமன்.ஒரு சின்னப் பையனின் ஆசையோடு ஒவ்வொரு கடலையாக விரலால் தடவி மேல் தோலை நீக்கி வாயில் போட்டுக்கொள்ளும் கணவரைப் பார்க்க பாவமாய் இருநதது கல்யாணி மாமிக்கு.

ரவு மணி ஏழு...வாசலில் பெண்களின் பேச்சுக்குரல்...இரவு ஏழு மணியானால் ஃப்ளாட்டில் உள்ள எல்லா பெண்களும் படிக்கும் பொம்பள பசங்க நீங்கலாக மற்றவர்கள் ஒன்றாக கூட வேண்டும் என்பது எழுதப்படாத உடன்படிக்கை..பெண்கள் அனைவரும் ஒன்றாய்ச் சேர அங்கே சினிமா, சீரியல்,அரசியல்,நடந்த,நடக்கவிருக்கும் விசேஷங்கள் அனைத்து பற்றியும் அலசப்படும்...

கதவைத்திறந்து கொண்டு வெளியே வந்தார் கல்யாணி மாமி.வெளியே சென்றுவிட்டு மெய்ன் கேட்டைத் திறந்து கொண்டு உல்ளே வந்த பத்மா மாமி...

என்ன உங்களுக்கெல்லாம் ஒரு விஷயம் தெரியுமா..?சன்னதித்தெரு யோகாம்பா மாமி இன்னிக்கு மத்யானம் போய்ட்டாளாம்..மகராசி.. பூவோடயும் பொட்டோடயும் மஞ்ச குங்குமத்தோட போய்ச்சேர்ந்துட்டா..என்ன குடுப்பன..என்ன குடுப்பன..காமாக்ஷி அவுளுக்கு கண்ணத்தெறந்துட்டா...அதேமாரி நானும் பூவோடயும் பொட்டோடயும் பட்டுன்னு போயிடனும்..காமாக்ஷி..நீ என்ன என்னிக்கு அழ்ச்சுக்கப் போறியோ..

புலம்பிய பத்மா மாமியின் கூற்றை..

ஆமாம் மாமி...நமக்கென்ன கொடுப்பினையோ என்று ஜல்லியடித்தனர் சில பெண்கள்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.