(Reading time: 10 - 20 minutes)

வெண்ணிலாவே… - முத்துலக்ஷ்மி

ழகான விடியலில் குளிர்ந்த காற்று வீச படுக்கையில் இருந்து எழ மனம் இல்லாமல் அலாரத்தின் கதறலில் கண் விழித்தால் நித்யஸ்ரீ. அருகில் இருந்த அமுதா வை பார்த்து புன்னகைத்த வண்ணம் இருந்தவளை அழைத்தது அவளின் கைபேசி. அதில் அஸ்வின் பெயர் மிளிர்ந்து கொண்டிருந்தது.

“ஹலோ, சொல்லு அஸ்வின்.”

“நித்யா, அங்க அமுதா இருக்கா தானே?.”

vennilave“இங்க தான் இருக்க, எதாவது அவள் கிட்ட சொல்லனுமா?”

“இல்ல டா, அவ போன் எடுக்கல அதனால தான் உனக்கு போன் பண்ணினேன். அமுதாவ எனக்கு போன் பண்ண சொல்லு நித்யா.”

“அம்மு நேத்து லேட்டா தான் தூங்குனா. அவ எழுந்த உடனே உனக்கு போன் பண்ண சொல்றேன் ஓகே வா.”

“சரி கொஞ்சம் சீக்கிரம் பண்ண சொல்லு.”

போன் வெச்ச அரை மணி நேரத்தில் மறுபடியும் அழைத்தான் அஸ்வின். பாவம் அவனுக்கு என்ன அவசரமோ என்று அமுதாவை எழுப்பினால் . அவளோ நித்யா, ட்டு மினிட்ஸ் னு சொல்லிட்டு மறுபடியும் தூங்கி விட்டாள்.

“அம்மு அஸ்வின் காலைல இருந்து ரெண்டு தடவை கால் பண்ணிட்டான். இப்ப  நீ எழுந்திரிக்கல அப்படின்னா உடனே அவன இங்க வரசொல்லிருவேன்” என்று மிரட்டியவளை பார்த்து கண் சிமிட்டிகொண்டே போன் ஐ வாங்கி பேசலானாள் அமுதா.

“என்ன அஸ்வின்?”

“அம்மு, அம்மா கிட்ட எல்லாம் சொல்லிட்டேன். அம்மா ஓகே சொல்லிடாங்க டா. உன்னை பார்க்கணும்னு சொன்னாங்க. எப்ப ப்ரீ ன்னு சொல்லு நா வந்து கூட்டிட்டு போறேன். இத சொல்லலாம்னு காலைல இருந்து  ட்ரை பண்ணிட்டு இருக்கேன். ஆனா நீ தான் போன் எடுக்கவே இல்லையே.”

“என்ன சொல்ற? பெரியம்மா இதுக்கு ஓகே சொல்லிடாங்க ளா?”

“அதை தான் நானும் சொன்னதா ஞாபகம். உனக்கு வேற மாதிரி கேட்டுச்சா டா?”

“போதும் விடு. காலை லயே உன் அலப்பல் தங்க முடியல. இன்னைக்கு ஒரு முக்கியமான வேலை இருக்கு. அதனால நாளைக்கு வரேன்னு பெரியம்மா கிட்ட சொல்லிடு.”

“ஓகே bye”.

‘நித்யஸ்ரீ கிட்ட எப்படி சொல்றது’ ன்னு யோசிட்டு போன் யை காதுல வைச்சிட்டு இருந்தவளை நடப்புக்கு கொண்டுவந்தது ஸ்ரீயின் கை அசைப்பு.

“ஹலோ மேடம், நீங்க இந்த லோகத்துல தான் இருக்கீங்களா”.

“ஸ்ரீ, நீ கோபத்துல கூட எப்படி இவ்வளவு அழகா இருக்க.” தூக்கத்திலிருந்து கண் விழிப்பவளை போல வாய்க்கு வந்ததை உளறினாள் அமுதா.

“இப்ப எதுக்கு டார்லிங் இந்த ஐஸ்.”

“அது வந்து.”

“எது வந்து?”

“இன்னைக்கு என்ன பிரேக்பாஸ்ட்?”

“பேச்ச மாத்தாத. என்ன சொல்ல நினைச்சையோ அதை சொல்லு.”

“இன்னைக்கு சுமி க்கு reception. நம்ம ரெண்டு பேரும் போலாமா?” என்று பேசியவளிடம் அனல் பார்வையை வீசிவிட்டு அங்கிருந்து நகர்ந்தால் நித்யஸ்ரீ.

“பதில் சொல்லாம போன நான் என்னனு நினைக்கிறது.”

“வர இஷ்டம் இல்லைன்னு.”

‘புடிச்ச உடும்பு புடி தான். இவளை எல்லாம் கல்யாணம் பண்ணிட்டு அஸ்வின் என்ன பாடு பட போறனோ?’ என்று மனதிற்குள் அர்ச்சனை செய்து கொண்டே அலுவலகத்துக்கு செல்ல தயாரானாள் அமுதா.

ஆபீஸ் செல்ல பஸ் ஏறியதுமே பல்வேறு விதமான எண்ண ஓட்டங்கள் நித்யஸ்ரீ யன் மனதில். ‘அந்த நாள் என் வாழ்கையில வராமல் இருந்திருக்கலாம்’ என்று எண்ணியவள் ஒரு மாதத்திற்கு முன் நடந்த நிகழ்வுகளை ஒவ்வொன்றாய் எண்ணலானால்.

“ஸ்ரீ, நான் ரெண்டு நாள் கோயம்புத்தூர் போயிட்டு வீட்ல எல்லாரையும் பாத்துட்டு வரேன்,” என்று சுமித்ரா சொல்லி கிளம்பினாள். அது தான் நித்யஸ்ரீ சுமித்ராவை பார்த்த கடைசி நாள்.

“எப்பவுமே வீட்டுக்கு போன கால் பண்றவ இன்னைக்கு கால் பண்ணலையே” என்று கவலையோடு அமுதாவிடம் சொன்னால் நித்யஸ்ரீ.

“அவளுக்கு எதாவது வேலை இருந்திருக்கும். நாளைக்கு கால் பண்ணுவா பாரு ” என்று அவளுக்கு சமாதானம் கூறினால் அமுதா. ஆனால் நடந்தது வேறாக இருந்தது.

மறுநாள் சுமித்ராவின் அம்மா வசந்தாவிடம் இருந்து போன் வந்தது,” நித்யா கண்ணு அங்க சுமி இருக்களா? நேத்துல இருந்து போன் பண்ணல. எதாவது வேலை நெருக்கடியில மறந்து இருப்பான்னு விட்டுடேன். இன்னைக்கு போன் பண்ணுனா சுவிட்ச்ஆப் ன்னு வருது கண்ணு. அங்க அவள் இருந்தா அவள் கிட்ட போன் குடு. அவள் கிட்ட பேசாம எந்த வேலையும் பண்ண முடியல ”

“என்ன அம்மா சொல்றீங்க. அவ வீட்டுக்கு போறேன்னு நேத்து தான் கிளம்பினாள். நீங்க என்னடா னா என்கிட்ட போன் பண்ணி அவ எங்கன்னு கேட்குறீங்க?.அவள் வீட்டுக்கு போனதா போன் பண்ணலேன்னு நான் உங்கள கேட்கலாம்னு நினைச்சேன். அதுக்குள்ள நீங்களே போன் பண்ணிடீங்க.”

“என்ன சொல்ற நித்யா” ன்னு அழுகுரலில் கேட்கும் போது நித்யாவிற்கு ரொம்ப வருத்தமா இருந்தது.

அவள் எங்க போயிட்டான்னு தேடும் போது அவள் மாலையும் கழுத்துமா சந்திரன் கூட வந்து நின்னா. என்ன பண்றதுன்னு தெரியாம, அவளோட அம்மாக்கு போன் பண்ணி வரசொல்லிட்டு, நித்யா க்கும் போன் பண்ணி சொன்னாள் அமுதா அங்கு நடக்கவிருக்கும் நிகழ்வுகளை பற்றி அறியாமல்.

நித்யா வந்ததும் சுமித்ரா விடம் பேசாமல், அவளையும் சந்திரனையும் வெறித்து விட்டு அறைக்குள் சென்று கதவை தாளிட்டு கொண்டாள். சுமி வந்து கதவை தட்டிய பிறகும் கதவை திறக்க வில்லை. வசந்தா அம்மாவின் கோப பேச்சு கேட்ட பின் தான் வெளியே வந்தாள்.

“ஏன் நித்யா உன்ன நம்பி தான என் பொண்ண இங்க அனுப்பினேன்.”

சுமியின் அம்மா நித்யா கண்ணுன்னு அழைப்பது இன்று நித்யா ஆனதை எண்ணி பேசாமல் அவளை பார்த்து கொண்டு நின்றாள்.

“கேட்டதுக்கு பதில் சொல்லாம அவளை பாத்துட்டு இருக்க. என் பொண்ண இந்த பக்கம் போக சொல்லிட்டு நீ என்கிட்ட எதுவும் தெரியாத மாதிரி பேசினா நா நம்பிருவேன்னு நினைச்சியா?”அந்த ஆக்ரோசமான பேச்சில் கலங்கிய கண்களோடு சுமியை பார்த்தாள் அவள் இதற்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை, அவர்கள் சொல்வது அனைத்தும் உண்மை போல சிலை போல் அசையாமல் நின்றாள்.

வார்த்தைகள் அற்று விழி களில் நீரோடு அந்த இடம் விட்டு நகர்ந்தாள் நித்யா. அமுதா விற்கு இந்த இக்கட்டான சுழலில் செய்வதறியாது வசந்தா அம்மாவை சமாதான படுத்த முயல்கையில், அவர்களோ சுமியிடம் நீ இனிமேல் என் பொண்ணே இல்லை ன்னு சொல்லிட்டு அங்கிருத்து புறப்பட்டு சென்று விட்டார்.

நித்யாவிற்கு வசந்தா அம்மா மேல் எந்த வருத்தமும் இல்லை. எல்லா அம்மாக்களும் அந்த நிலையில் அப்படி தான் பேசுவாங்க. ஆனா சுமி எல்லாத்தையும் பாத்துட்டு எதுவுமே சொல்லாம இருந்தது தான் அவளுக்கு வருத்தமே. அதற்கு பிறகு ரெண்டு பேரு வீட்லயும் அவங்கள சேத்துகிட்டாங்க. கல்யாணம் யாருக்கும் தெரியாம நடந்திரிச்சு, அதனால திருமண வரவேற்பை பெருசா செய்றாங்க.

பழைய நினைவுகளில் இருந்து அவளை தன்னிலைக்கு கொண்டுவந்தது உதட்டோரம் கரித்த அவளது கண்ணீர் துளிகள். கண்ணீரை துடைதவளாய் சுற்றிலும் பார்வையை செலுத்தினால். யாரும் அவளை கவனிக்க வில்லை என்பதே அவளுக்கு போதுமானதாக இருந்தது. அதன்பின் பேருந்தில் இருந்து இறங்கி அவளது அலுவல் வேலைகளை கவனிக்கலானாள்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.