(Reading time: 10 - 20 minutes)

சுமியின் திருமண வரவேற்பு க்கு தனியாக சென்றாள் அமுதா. அவளிடம் சுமித்ரா “ஸ்ரீ, வரலையா அம்மு” என்று கேட்டாள்.

“அவளால் இன்னும் எதையும் மறக்க முடியல சுமி. நீ வந்து பேசுனா எல்லாம் சரியாகும் னு நினைக்கிறேன்”

“அவளை பாக்கவே எனக்கு வருத்தமா இருக்கு.”

“இப்படியே இருந்தன்ன ரெண்டு பேரும் பேசாம அப்படியே இருக்கவேண்டியது தான். உன் மேல தப்பு இருக்கு, அவள் ஒன்னும் அவ்வளவு கோபக்காரி இல்லை. நீ ஸ்ரீ ன்னு கூப்பிட்டலே அவள் உருகிருவாள். அப்பறம் பிரச்சனை முடிவுக்கு வந்துரும்.” என்று இயல்பாய் முடிதவளின் பேச்சை அங்கு சென்று கொண்டு இருந்த வசந்தா அம்மாள் கேட்டு சிலாகித்தாள்.

“நானும் சுமியோட வந்து நம்ம நித்யாட்ட பேசுறேன் கண்ணு. அன்னைக்கு நானும் கோபத்துல எதுஎதுவோ பேசிட்டேன்.” என்று கூறிகொண்டு வந்த வசந்தா அம்மாவை பார்த்து இருவரும் புன்னகைத்தனர்.

அன்று மனநிறைவாய் வீடு திரும்பினாள் அமுதா. மறுநாள் பெரியம்மாவிடம் பேச வேண்டியதை அசை போட்டவளாய் இரவு உணவுக்கு தோசை வார்த்து கொண்டு இருந்தாள்.

வீடு திரும்பிய நித்யா நேராக அடுக்களைக்குள் நுழைந்து ”அம்மு சுமி, வசந்தா அம்மா, அப்பா எல்லாம் எப்படி இருக்காங்க. எதுவும் பிரச்சனை இல்லையே”. என்று கேட்டாள்.

‘இவ்வளவு பாசத்தை வைச்சிட்டு பின்ன ஏன் டி இப்படி வீம்பு புடிக்கிற?’ மனதில் நினைத்து கொண்டே அவளுக்கு புன்னகையை பதிலாய் தந்தாள் அமுதா.

அவள் புன்னகையே எல்லாம் சரியாய் நடந்ததை உணர்த்த அங்கிருந்து நகர்ந்தாள் நித்யா.

மறுநாள்,

அமுதாவை வந்து அழைத்து சென்றான் அஸ்வின். பெரியம்மாவிடம் சென்று சண்டையிட கிளம்பிய அவள் அவரை பார்த்ததும் எல்லாம் மறந்தவளாய் “ரொம்ப தேங்க்ஸ் பெரியம்மா” என்று அணைத்துகொண்டாள்.

“எதுக்குடா”

“சண்டை போடலாம்னு வந்தவளை நல்ல சிரிச்சி மயக்கிட்டு, இப்ப எதுவுமே தெரியாத மாதிரி எதுக்குடா ன்ன கேட்குறீங்க, உங்களை என்ன பண்ண தகும்” என்று கூறி முறைக்க நினைத்தாள். அது முடியாமல் போகவே “என்னோட பெரியம்மா ஸ்வீட் பெரியம்மா” என்று கன்னத்தில் முத்தமிட்டாள்.

“நான் எத்தனை தடவை நித்யா என் அண்ணி அ வரணும்னு கேட்டேன். அப்ப எல்லாம் வேண்டாம்னு சொல்லிட்டு இப்ப மட்டும் எப்படி ஓகே சொன்னீங்க.”

“அதுதான் எனக்கும் புரியல அம்மு, நானும் நிறைய தடவை கேட்டேன். அப்ப எல்லாம் கொஞ்சம் பொறு நான் யோசிக்கணும்னு சொன்னவங்க முந்தா நாள் நைட் சரி ன்னு சொல்லிட்டாங்க” என்று தனது அம்மாவை நோக்கினான் அஸ்வின்.

“நான் போன வாரம் மனசு சரியில்லைன்னு கோயிலுக்கு போய் இருந்தேன். எனக்கு நல்ல மருமகள் வரணும் னு வேண்டும் போது ஆலயமணி அடிக்கிற சத்தம் கேட்டு திரும்பி பாத்தா அங்க நித்யா தான் மணி அடிச்சிட்டு இருந்தா. அதை பார்த்தவுடனே இவள்தான் உன் மருமகள் னு கடவுளே நேர்ல வந்து சொன்ன மாதிரி இருந்தது. அதுனால எனக்கு மருமகள்னு வந்தா அது நித்யா தான் ன்னு” முடித்தார் காயத்ரி.

“சின்ன வயசுல இருந்து அம்மா, அப்பா இல்லாம அவள் ரொம்ப கஷ்டபட்டுடா, அவளை நீங்களும் அஸ்வின் னும் நல்லா பாத்துக்கணும்” என்று கண்கலங்கியவளை பார்த்து “எப்ப இருந்து என் பொண்ணு இவ்வளவு பேசிய மனுசிய பேச ஆரம்பிச்சா” என்று அவளை உச்சி முகர்ந்தார்.

“சரி இதை யாரு நித்யா கிட்ட சொல்றது” என்று கேட்டவனை வித்யாசமாக பார்த்தனர் இருவரும்.

“அஸ்வின் உனக்கு எதாவது ஆயிடுச்சா?”

“என்ன?” என்றான் புரியாதவனாய்.

“நீ தான் அவள்கிட்ட போய் பேசனும்”

“அப்பாடா, இப்ப தான் எனக்கு நிம்மதியா இருக்கு.” என்றான்.

“புரியற மாதிரி எதுவுமே பேச தெரியதா? இல்லை பேச கூடா துன்னு யார்கிட்டையாவது சத்யப்ரமானம் பண்ணி இருக்கியா?”

“இல்லை இந்த குரங்கு போய் எதாவது பேசி சொதப்பி வைசிடு மோன்னு நினைச்சேன். ஓகே பரவால்லை நம்பலாம்.” என்றான் தோரணையாக.

“என்னையா குரங்கன்னு சொன்ன” என்று அவனை துரத்திகொண்டே ஓடினாள் அமுதா. அதை பார்த்த காயத்ரியின் மனது மகிழ்ச்சியில் திளைத்தது.

அன்று மாலை,

சுமித்ரா, சந்திரன், வசந்தா அம்மா எல்லாரும் வந்தனர். அவர்களை முறைமைக்கு வரவழைத்து விட்டு அறைக்குள் நுழைய இருந்தவளை தடுத்து நிறுத்தியது வசந்தா அம்மாவின் நித்யா கண்ணு என்ற அழைப்பு.

“அம்மா வ மன்னிச்சிடு கண்ணு” என்று சொன்னது தான் தாமதம், அவள் வந்து அவர்களை கட்டி கொண்டு “என்ன அம்மா நீங்க போய் என்கிட்ட மன்னிப்பெல்லாம் கேட்டுகிட்டு” என்று கூறியவளின் விழிகளை கண்ணீர் நிறைத்தது.

“ஸ்ரீ, ஸ்ரீ” என்று அழைத்த சுமியை தழுவிக்கொண்டாள் நித்யா.

அங்கு அவர்களின் செய்கையை பார்த்து கொண்டே வீட்டுற்குள் நுழைத்தனர் அஸ்வின்னும், அமுதாவும்.

அமுதா அங்கு வந்து தொண்டையை கனைத்த பிறகே, அனைவரும் தன்னிலை பெற்றனர்.

அப்போது அஸ்வின் நித்யாவிடம் “நீ என்னை கல்யாணம் பண்ணிகிரியா?” என்று கேட்பான் என்று அமுதா நினைத்து கூட பார்க்கவில்லை.

சிறிது நேரம் அங்கு அமைதி நிலவியது. பின்பு நித்யா அவனிடம் “அத்தை என்ன சொன்னாங்க” என்றாள். அந்த ஒரு வரியில் அவளது சம்மதத்தை அறிவித்தாள்.

அவளே தொடர்ந்தாள் “என்ட்ட எல்லாத்தையும் அத்தை கோயில் ல பாத்த அன்னைக்கே சொல்லிட்டாங்க. நீங்க ரெண்டு எப்ப ஆரம்பிபிங்கன்னு காத்துட்டு இருந்தேன்.” என்று முடிதவளை ஓடி வந்து கட்டிகொண்டாள் அமுதா.

நித்யாவின் அம்மா நிலையில் வசந்தா அம்மாவே எல்லா கல்யாண வேலைகளையும் முன்நின்று செய்தார்.

அஸ்வின்- நித்யஸ்ரீ யின் திருமணம் செவ்வனே நடைபெற்று முடிந்தது.

திருமணதிற்கு பிறகு, அமுதா நித்யாவுடன் தங்கிவிட்டாள்.

இதுவரை வாழ்கையின் வெறுமையை பார்த்த நித்யாவிற்கு வண்ணமயமாய் அமைந்தது அவளின் புது வாழ்க்கை.

நித்யா தன் வாழ்வில் நடந்த அனைத்து நிகழ்வுகளையும் பகிர்ந்து கொண்டது நிலவிடம் மட்டும் தான்.

சிறுவயதில் “அம்மா எங்கே?” என்று கேட்ட நித்யாவிடம் நிலாவை கைகாட்டினார் அவளது தாத்தா குமரேசன்.

அதிலிருந்து நித்யாவின் அன்னையனாள் வானத்தில் ஒளிரும் அந்த வெண்ணிலா.

இன்றும் அதேபோல் மாடிக்கு சென்ற அவள் தனது அன்னையிடம் மானசீகமாக பேசலானாள். “அம்மா, நான் எவ்வளவு சந்தோசமா இருக்கேன்னு வார்த்தையால சொல்ல முடியல. நீ நேர்ல இருந்திருந்தா” என்று முடிப்பதற்குள் அங்கு வந்தார் காயத்ரி.

“அவங்க நேர்ல இருந்த என்ன பண்ணியிருப்ப” என்று காயத்ரியின் பின்னால் வந்த அமுதா கேட்க, அவள் அவளின் அத்தையை அணைத்துக்கொண்டே அவளை பார்த்து கண்ணடித்து “இப்படி பண்ணியிருப்பேன்” என்று கூறினாள்.

இந்த காட்சிகளை பார்த்து புன்னைகைத்து கொண்ட அந்த நிலா, வஞ்சகம் இல்லாமல் தனது ஒளியை அனைத்து இடங்களிலும் பரப்பி கொண்டு இருந்தது.

{kunena_discuss:785}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.