குடி-மகன்கள் - Shafrin

ரம், வோட்கா, ஜின், பிராண்டி, விஸ்கி, பீர், வைன், ஸ்காட்ச் கேட்கும் போதே இரண்டு ரவுண்ட் போன மாதிரி சும்மா ஜிங்கின்னு ஏறுகிறதா பாஸ்? ஏறியே ஆகனும் அப்பொழுதுதான் நீங்கள் ஒரு சிறந்த குடி-மகன். இந்த உலகத்தில் எத்தனை லட்சம் கோடி மனிதர்கள் வாழ்ந்தாலும் அவர்கள் அனைவரையும் இரண்டே வகையில் அடக்கிடலாம். ஒன்று மகிழ்ச்சியானவர்கள்இ இரண்டு துக்கமானவர்கள். இந்த இரண்டு மாதிரி மனிதர்களையும் ஒரே இடத்தில் ஒன்றாக பார்க்க வேண்டுமானால் அவர்களை எங்கு தேடினாலும் பார்க்க முடியாது ஒரு இடத்தை தவிர அதுதான் ‘வைன் சாப்’இ ‘பார்’ மனுசங்க மகிழ்ச்சியாக இருந்தாலும் குடிப்பாங்க் என்ன தான் கவலையில் கண்ணுல கண்ணீர் தேங்கினாலும் உள்ளேயும் நாலு ரவுண்ட் தண்ணி இறக்கினால்தான் அது குடி-மகன்கள் பரம்பரைக்கே பெருமை.
மன ஆனந்தத்தில் குடிக்கிறவங்க நல்லா குடிச்சிட்டு பார்ல டான்ஸ் ஆடுவாங்க் துக்கத்துல குடிக்கிறவங்க நல்லா குடிச்சிட்டு நடுராத்திரியில் ரோட்டுல டான்ஸ் ஆடுவாங்க. இன்னும் சில பேர் யார்கிட்ட லிஃப்ட் கேட்கிறோம்னே தெரியாம போலீஸிடமே லிஃப்ட் கேட்டு மாமியார் வீட்டுக்குப் போய் முறைவாசல் செய்றவங்களும் இருக்காங்க. ஆனா இந்த மூன்று பேரும் அதுக்கும் மேல பாஸ்!!
“ஓல்ட் ஆன்! நிப்பாட்டு.. நிப்பாட்டே!!” இரவு ஒரு மணி யாருமே இல்லாத ரோட்டில் வந்த டாக்ஸியை அந்த மூன்று பேரும் வழிமறித்து நிப்பாட்டினர். அதில் ஒருவன் “என்னா? நிறுத்த சொல்ல சொல்ல போய்கின்னே இருக்க… நீ என்ன அவ்ளோ பெரிய அப்பாடக்கரா?!” பதிலுக்கு மற்றொருவன் “அப்பாடக்கர் கார் இல்லடா டப்பா அம்பாசிடர் கார் மச்சி” போதையில் நன்றாகவே உளறினான். டிரைவர் கூறாமலே மூவரும் காரில் ஏறிவிட்டனர். உள்ளே இருந்த டிரைவர் வண்டியின் விழக்கை போட்டு அவர்களின் முகத்தை பார்த்தார். பார்ப்பதற்கு கல்லூரி படிக்கும் பசங்களைப் போல் தெரிந்தது. எத்தனை ரவுண்ட் அடித்திருப்பார்கள் என்றே அவரால் யூகிக்க முடியவில்லை. வண்டியில் அழைத்துச் சென்றால் அவர்களிடம் பணம் வாங்குவது மிகவும் கடினம் என எண்ணினார் டிரைவர். அந்த அளவுக்கு போதையில் மிதந்தனர் ழூவரும். ஆகவே இவர்களை காரை விட்டு எப்படியாவது இறக்கிவிட வேண்டும் என்று டாக்ஸி டிரைவர் மனதில் ஒரு கணக்கு போட்டார்.
காரை ஸ்டார்ட் செய்வது போல் செய்து ஒரு நிமிடத்திற்கு வண்டியை எங்கும் நகர்த்தாமல் அப்படியே வைத்து ஆஃப் செய்தார். பின் அவர்இ “தம்பிங்களா! வீடு வந்துடிச்சு இறங்குங்க” என்றார். “அதுக்குல்லேயா வந்திருச்சு?!” என்று காரிலிருந்து இறங்கிய முதல் நபர் பணம் கொடுத்துவிட்டுச் சென்றான். இரண்டாவது ஆள் “ரொம்ப தாங்ஸ் நா” என்று மட்டும் சொல்லிவிட்டுச் சென்றான்.
ஆனால்இ மூன்றாவதாக இறங்கியவன் சுற்றி சுற்றி பார்த்துவிட்டு டிரைவரை ‘பொள்ளீர்;’ என அறைந்தான். “ஏன்டா உனக்கு கண்ணில்ல உன்ன நம்பி கார்ல ஏற்றவங்களுக்கு இப்படியா செய்வ?” என்றான். கார் டிரைவரோ எங்கு தான் செய்த வேலை தெரிந்துவிட்டதென நினைத்து பயத்தில் வாயடைத்துப் போய் விட்டார்.
“என்னடா? தாறமாறா காரை ஓட்டிட்டு இப்ப திரு திருன்னு முழிக்கிற நீ இவ்வளோ வேகமா வண்டி ஓட்டி எங்க உயிருக்கு ஏதாச்சும் ஆயிடிச்சுன்னா என்ன ஆகும்! அறிவில்ல! இடியட்!”
டிரைவரின் மைன்ட் வாய்ஸ்: அட பேய்க்குப் பேன் பாத்தப் பேப் பயலே!!!
{kunena_discuss:785}
The above article / story / poem is a copyright material and is published with the consent of the author. If you find any unauthorized content do let us know at
Chillzee is an entertainment website and all the content published here are for entertainment purpose only. Most of the content are fictional work and should be treated accordingly. Information on this website may contain errors or inaccuracies; we do not make warranty as to the correctness or reliability of the site's content. The views and comments expressed here are solely those of the author(s) in his/her (their) private capacity and do not in any way represent the views of the website and its management. We appreciate your high quality of listening to every point of view. Thank you.