(Reading time: 17 - 33 minutes)

இல்ல..இல்ல...நாங்குடிக்கல... - தங்கமணி சுவாமினாதன்

ய்யென்று விசிலடித்தார் கண்டக்டர்...ஜீவா நகர்லாம் எறங்கு..சத்தம்போடவும் பஸ்ஸுக்குள்

நின்றிருந்த கூட்டத்தைப் பிளந்து கொண்டு அவசரமாய் இறங்கினார் பரசு.அவரைத் தொடர்ந்து

இறங்கியவர் இவரது செருப்பின் பின் பகுதியை மிதிக்கவே பட்டென அறுந்தது பரசுவின் ஹவாய்ச்

Illai illa naan kudikalaiசப்பல்.

அடச் சே..விடிஞ்சுது போ..போர காரியம் முடுஞ்சாப்லதான்...வாய்விட்டுப் புலம்ப..இவரின் சப்பல்

அறுபடத்  தான்தான் காரணம் என்று புரிந்துபோன பின்னால் வந்த ஆசாமி..சாரி சார்..என்று ஒற்றை வார்த்தை சொல்லிவிட்டு நடையைக்கட்ட நொந்து போனார் பரசு.

காலை பத்து மணிக்கே வெயில் வாட்டியெடுத்தது..பரசுவுக்குஅந்த இடம் புதுசு...தான் தேடி வந்தவரின் வீடு எங்கே இருக்கிரதென்றே தெரியாத நிலையில் காலில் செருப்பில்லாமல் கொளுத்தும் வெயிலில் அவரின் வீட்டைத்தேடி எவ்வளவு தூரம் அலைய வேண்டுமோ என்று நினைத்தபோது மலைப்பாயும் பயமாயும் இருந்தது. அறுந்த சப்பலை ரோட்டின் ஓரமாய் கழற்றிப் போட்டுவிட்டு நடக்க ஆரம்பிக்க தார். ரோட்டின் சூடு காலைப் பதம் பார்த்தது.

ஆ..ஐயோ..உஸ்.. அப்பா.. என்ன சூடு..என்ன சூடு..தவித்துப்போனார் பரசு.வீடுக்கே திரும்பிப் போய்

விடலாமா என்று தோன்றியது.நாளை அவர் வெளியூர் செல்லவிருப்பதாகச் சொன்னது நினைவுக்கு வர வேறு வழியின்றி எங்காவது கொஞ்சம் நிழல் கிடைத்தால் நிற்பதும் மீண்டும் வெயிலில்

நடப்பதுமாய்ப் படாதபாடு பட்டார்.

கொஞ்ச தூரம் நடந்ததுமே சாலையின் இறக்கத்தில் இருந்த பலகை ஜீவா நகர் என்றபெயரை அம்புக்குறியிட்டுக் காட்டியபடி நின்று கொண்டிருந்தது.அப்பாடா என்றிருந்தது பரசுவுக்கு.சட்டைப்

பையிலிருந்து தேடிவந்தவரின் முகவரியை எழுதிவைத்திருந்த துண்டுச் சீட்டை எடுத்துப் பார்த்தார்.

பி.செந்திகுமார்,நெ.54,வள்ளலார் தெரு,ஜீவா நகர் என்றிருந்தது.ஜீவா நகர் வந்தாச்சு..வள்ளலார் தெரு கண்டுபுடிக்கணுமே தனக்குத்தானே சொல்லிக்கொண்டார் பரசு.நிறைய தனி வீடுகளும், அப்பார்ட்மென்ஸும், டியூப்ளெஸ்சுமாக கட்டிடங்கள் முளைத்துக்கிடந்தன நகரில்.நிறைய

தெருக்கள் இருக்கும் போலும்.இதில் வள்ளலார் தெருவை எங்கே என்று தேடுவது என்ற குழப்

பத்தோடு பார்வையை இங்குமங்கும் அலைய விட்டார் பரசு.பத்தடி தூரத்தில் சின்னதாய் ஒரு போர்டு

தெரிய ஆவலோடு அருகில் சென்று பார்த்தபோது அருள்ராஜ் தெரு என்றிருக்க எமாற்றமாய்

இருந்தது பரசுவுக்கு.அப்போது வரிசையாய் நான்கைந்து பசுமாடுகள் முன்னே வர அடம்பிடிக்கும் கன்றுக்குட்டியொன்றை அதன் தாம்புக் கயிற்றைச் சுண்டிச் சுண்டி இழுத்து ந்தா..ந்தா.என்று சப்தம்

போட்டபடி தெருக்கோடியிலிருந்து வந்துகொடிருந்தார் முண்டாசு கட்டிய ஆசாமி ஒருவர்.நல்ல

வேளை இவர் இந்த நகரில் பல வீடுகளுக்குப் பால் ஊற்றுபவராக இருப்பார் இவரிடம் கேட்டால் செந்தில்குமாரின் வீடு தெரிந்து விடும் என்று ஆர்வமாய் அவரிடம் விசாரிக்க ஒரு நிமிடம் நின்ற

முண்டாசு ஆசாமி... சொல்லப்போகிறார் என்று பரசு அவர் முகம் பார்க்க தெரியாதுங்களே என்று ஒரேவார்த்தையில் பதில் சொல்லிவிட்டு கன்றுக்குட்டியை இழுத்தபடி நடக்க ஆரம்பித்தார்.

அட..ராமா..சொல்லியபடியே அருள்ராஜ் தெருவுக்குள் தொடர்ந்து நடந்தார் பரசு.பத்து வீடுகள் தாண்டியதுமே வலது பக்கத்தில் குறுக்குச் சந்து ஒன்று வர அந்த சந்தில் இருந்த ஒரு வீட்டு வாசலில் நின்றிருந்த முருங்கை மரத்திலிருந்து கொத்தாய்த் தொங்கும் முருங்கக்காய் சரமொன்றை

அலக்கால் வளைத்து வளைத்து இழுத்து அறுத்துக்கொண்டிருந்தாள் ஒரு பெண்.

சரக்...அறுபட்டுக் கீழே விழுந்தது முருங்கைக்காய்க் கொத்து.அப்பெண் கீழே விழுந்த முருங்கைக்

காய்களை குனிந்து எடுத்து நிமிர்வதற்கும் பரசு அவள் அருகில் சென்று நிற்பதற்கும் சரியாக இருந்தது.சட்டென ஓரடி பின்வாங்கினாள் அப்பெண் இவரைப் பார்த்து.

சாரி மேடம்.. ஒண்ணுல்ல இங்க வள்ளளார் தெரு எங்க இருக்கு..அங்க ஒத்தர பாக்க வந்தேன்..

கொஞ்சம் நிதானத்திற்கு வந்தாள் அப்பெண்...வள்ளளார் தெரு...இழுத்தபடியே இரண்டு விரலால் தலையைச் சொரிய ...யாருட்ட பேசிகிட்டிருக்க..உள்ளிருந்து இடியாய்க் குரல் வந்தது..கணவனோ..

யாரோ ..இல்லீங்க வள்ளளார் தெரு எங்க இருக்குன்னு ஒத்தரு கேக்கறாரு..

அடி இவளே...வாடி உள்ள..இப்பிடித்தான் அட்ரெஸ் தெரியாத மாரி கேப்பானுக.  நெசந்தான்னு நம்பி

சொல்லிக்கிட்டு இருக்கும்போதே கழுத்துல இருக்குற செயின காதுல இருக்குற கம்மல அறுத்துக்கிட்டு ஓடுவானுக...அறிவில்ல ஒனக்கு அட்ரெஸ் சொல்ராளாம் அட்ரெசு..கத்தியபடியே

இடி அமீன் போலிருந்த ஒரு ஆண் வெளியே வர பயந்து போனார் பரசு.சட்டென பாய்ந்து உள்ளே

போனாள் அப்பெண்.

அட..ராமா இரெண்டாம் முறையாக ராமனை அழைத்துவிட்டு..அவங்களைச் சொல்லிக் குத்தமில்லை..இப்ப காலம் அப்பிடித்தான் இருக்கு..என்று முணுமுணுத்தபடியே நடந்தார் பரசு.

வெயில் ஏற ஏற..சூடு அனல் பறந்தது..தெரியாம வந்து மாட்டிண்டிட்டோமே..திரும்பிப்போகவும் மனசில்ல...தன்னையே நொந்தபடி நடந்துகொண்டிருந்த பரசுவின் கண்களில் எதிரே வந்தவர் பட

நம்பிக்கையோடு அவரை அணுகினார்.அவர் நம்பிக்கை வீண் போகவில்லை.

வள்ளலார் தெருவா..நேரா ஸ்ட்ரைட்டா போயி லெஃப்ட்டுல திரும்பினா அதுதான் நீங்க கேட்ட வள்லலார் தெரு..அங்க யார பாக்கணும்?தானாகவே கேட்ட அவரை நன்றியோடு பார்த்தார் பரசு.

செந்திகுமார்ன்னு..

ஓ..அவரா நாற்காலி,சுருட்டுப்பாய்..ஜமுக்காளம்..பெட்ரமாஸ் லைட்டெல்லம் விசேஷங்களுக்கு

சப்ளை பண்ணுவாரே அவரா?

அமாம் ஆமாம்..அவரேதான்..அவசர அவசரமாய் சொன்னார் பரசு..

அவர் வீடு... ம்ம்ம்ம்... ஒண்ணு.. ரெண்டு.. மூணு..நாலாவது வீடு பச்சை கேட் போட்ருக்கும்..போய் பாருங்கோ...

ரொம்ப நன்றி ரொம்ப நன்றி...

இருக்கட்டும். சொல்லிவிட்டு நடக்க ஆரம்பித்தார் அந்த நல்ல மனிதாபிமானம் உள்ள அவர்.

அப்படா என்றிருந்தது பரசுவுக்கு.தேடிவந்தவரின் வீடு இருக்குமிடத்தை அறிந்து கொண்ட மகிழ்ச்

சியோடு நடந்தார்.

மிகச் சரியாய் பச்சை கேட் வீட்டு வாசலில் போய் நின்ற பரசுவுக்குக் கேட்டில் தொங்கிய பெரிய பூட்டு அதிர்ச்சியைத் தந்தது.

அட ராமா..அட நாராயணா...எங்க போயிருப்பார்..கடைக்கு கிடைக்குப் போயிருப்பாறோ..எப்ப

வருவாரோ தெரியலயே..யார கேக்கரது.?.தெருவில் ஆள் நடமாட்டமே இல்லை..எல்லா வீடுகளும்

சாத்தியிருந்தன.வீட்டுக்குள் இருப்பவர்களெல்லாம் டி.வியில் மூழ்கியிருப்பார்கள்..யாரைப்போய்க் கேட்க..செய்வதறியாது நின்றார் பரசு.

எதிர் வீட்டுக் கதவு படீர்ரென்று திறக்கும் ஓசைகேட்க சட்டென்று திரும்பிப் பார்த்தார்.அறுபதைத்

தாண்டியிருக்கும் வயது இடுப்பில் வேஷ்டியோடு கையில் சிறு கத்தியோடு ஒருவர் வெளியே

வந்தார்.மார்பில் பூணூல் தொங்கியது.காம்பவுண்டுக்குள் இருந்த வாழைமரத்திலிருந்து வாழை இலையொன்றை நறுக்கினார் அவர்.

அந்த வீட்டின் கேட்டருகே போய் நின்றார் பரசு...நல்லவேளை இவரும் "அவாள்"தான்..நாமளும்

அவாள் தான் என்பதைக் காட்டிக் கொண்டால் உதவுவார் என்ற நம்பிக்கை ஏற்பட்டது பரசுவுக்கு.

சார்..சார்..

திரும்பவே இல்லை அவர்..

சார்..சார்..ஒங்களத்தானே..

ம்கும்..திரும்பவே இல்லை அவர்..

ஒரு வேளை செவிடாய் இருப்பாரோ..சந்தேகம் வந்தது பரசுவுக்கு.

சார்..சார்.. சப்த்தத்தை அதிகப்படுத்தி கூப்பிட்டார்..

சடாரெனத்திரும்பினார் அவர்..

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.