(Reading time: 17 - 33 minutes)

துவின் நெடி...பேருந்தில் நின்று கொண்டிருந்தவர்கள் அவன் அருகாமையைத் தவிற்க நகர்ந்து

கொண்டார்கள்.உள்ளே வந்து நின்றவன் ஏய் என்னங்கடா..நா வந்திருக்கேன்ல என்ன ஒக்காரச் சொல்லாம  ந்ல்லா அழுத்திக்கிட்டு ஒக்கந்திருக்கீங்க..வரவர மருவாதியே இல்லாம போச்சு..

கண்டக்டர் மூக்கைப் பொத்திக்கொண்டே அவனருகில் சென்று டிக்கட் டிக்கெட் எஙக போணும்..

என்று கேட்க என்னாது டிக்கிட்டா கவருமெண்டு பஸ்ஸுக்கு எதுக்குடா டிக்கிட்டு வாங்கணும்?

என்னய  என்ன கூமுட்டன்னு நெனிச்சியா?கத்தினான்.

இவன்லாம் பஸ்ல ஏறி ஏந்தான் இப்பிடி உயிர எடுக்கிறான்களோ?தலையில் அடித்துக் கொண்டார்

கண்டக்டர்.

என்னாது என்னாது..ஒ உயிர எடுக்கிறேனா..ஒன்னய கத்தியால குத்துனேனா..அரிவாலால வெட்னேனா..உயிர எடுக்குரேன்ற..கத்த ஆரம்பிக்க...

டிரைவர்..வண்டிய நிருத்துங்க ..யோவ்..கீழ எறங்கு.இப்ப எறங்குறயா கழுத்த புடிச்சு வெளியே தள்ளட்டுமா?..கண்டக்டர் பதிலுக்குக் கத்த..

பரசு சும்மா இருந்திருக்கலாம்..சனி அவர் நாக்கில் நின்று ஒருவினாடி நடனம் ஆடினார் போலும்..

விடுங்க கண்டக்டர் சார்..அவந்தான் முட்ட முட்ட குடிச்சிருக்கான்..அவங்கிட்ட போய்..மெதுவாகத்

தான் சொன்னார்.

எப்படித்தான் குடிமகனின் காதில் விழுந்ததோ..கண்டக்டரை விட்டுவிட்டு பரசு பக்கம் அவன் பார்வை விழ சனி தன் வேலையை ஆரம்பித்தார்.

என்ன சொன்ன என்ன சொன்ன நாங் குடுச்சிருக்கேனா..நாங் குடுச்சத நீ பாத்தியா பாத்தியா..

எம்பின்னாடியே டாஸ்மாக் வந்து நாங் குடிக்கரத நீ பாத்தியா..எத்தினி குடிச்சேன்..க்வாட்டரா

ஆப்பா புல்லா  எவ்ளோ குடிச்சேன்...சொல்லு..சொல்லு..இப்ப சொல்லு..எம்மாங் குடிச்சேன்..

நடுவில் நின்ற ஐந்தாறு பேரை விலக்கிக்கொண்டு தள்ளாடிய படி சத்தம்போட்டுக்கொண்டு பரசுவை

நோக்கி அவன் வரவும் பயந்து போனார் பரசு.

பஸ்ஸில் இருந்த அனைவரும் வாயைத் திறக்காது சும்மா இருக்க தான் மட்டும ஏன் வாயைக்

கொடுத்து மாட்டிக்கொண்டோம் என்று விதியை நொந்தபடி நின்றிருந்த பரசுவின் அருகில் வந்தான் குடிமகன்.

ஃப்பூ....பரசுவின் முகத்தில் ஊதினான்...மூஞ்சில ஊதினேனே நாருதா..இல்லீல்ல..அப்பரம் குடிச்சிருக்கேன்ர..

தாங்க முடியாத மதுவின் நெடி பக்கென்று மூக்கை மூடிக் கொண்டார் பரசு..

இவர் மூக்கை மூடவும் அவன் கோபம் அதிகமாயிற்று.

சட்டென்று போட்டிருந்த தன் சட்டையைத் தூக்கி இடுப்பில் இருந்த வேட்டியின் அருகில் அவன் கையைக் கொண்டு போக நடுங்கிப் போனார் பரசு..முடிஞ்சுது முடுஞ்சுது..இடுப்பில் செருகியிருக்கும்

கத்தியாலயோ அரிவாளாலயோ நம்ம தீத்துக் கட்டப் போரான்..என்று நினைக்கும் போதே மனைவி

மஞ்சு மற்றும் குழந்தைகளின் தானின்றி இனி அனாதையாகப் போகும் முகங்கள் தெரிய ராமா..ராமா என்று கத்தினார் தன்னை அறியாமல்.

இடுப்பில் செருகி இருந்த குவார்ட்டர் பாட்டிலை எடுத்த குடிமகன் அதை இடது கையில் வைத்து

வலது கையால் அதன் மூடியில் ஒரு தட்டு அதன் அடியில் ஒரு தட்டு தட்டி சக்கென்று திறக்க..

அப்பாடா என்று மூச்சு வந்தது பரசுவுக்கு.நல்ல வேளை உயிர் தப்பியது என்று நினைக்கும் போதே

பாட்டிலிலிருந்து கொஞ்சம் சரக்கைக் கையில் ஊற்றி பொளேரென்று பரசுவின் முகத்தில் அடித்தான் அவன்.ஐயோ இதென்ன என்று பரசு சுதாரித்துக் கொள்ளும் முன்பே பாட்டிலில் மீதமிருந்த சரக்கை

பரசுவின் இரு புரத் தோள் மீதும் சட்டைமீது ஊற்றி வழிய விட்டான்.

பரசு இதை சிறிதும் எதிர்பார்க்காததால் தடுமாறிப் போனார்.கெக்..கெக்..கெக் என்று சிரித்த குடிமகன்

இப்ப.. நாறுதா.. நாறுதா..ஒங்கிட்டதானே நாறுது...நீதா குடிச்சிருக்க..நீதா..குடிச்கிருக்க..சொல்லிய

ய நேரம் டிரைவர் ஏதோ காரணத்துக்காக பிரேக் போட அப்படியே நின்றுகொண்டிருந்த சிலர் மீது

சாய்ந்து மட்டையானான்.

உடல் முழுதும் நாற்றமெடுக்க செய்வதறியாது திகைத்து தவித்துப்போனார் பரசு.சட்டையையும் உள்ளே போட்டிருந்த பனியனையும் கழற்றி எறிய வேண்டும் போல் இருந்தது.முகமெங்கும் எரிச்சலாய் இருந்தது.

அவர் இறங்க வேண்டிய ஸ்டாப்பிங்.பேருந்திலிருந்து இறங்கிய பரசு வீட்டுக்கு நடந்தார் என்பதைவிட ஓடினார் என்றே சொல்ல வேண்டும்.

மஞ்சு கதவத்தொர..கதவ தொர..கத்தியபடியே பட்..பட்டென்று கதவைத் தட்டினார்.ஊள்ளே ஒரே

சப்தம்.

தாயம் ஐஞ்சு பன்னெண்டு..அக்கா..அக்கா ஒன்ன நா வெட்டிட்டேன்...அர்ஜுன் கத்த ..போடா....

நா ஒத்துக்க மாட்டேன் நீ அசுகுனி ஆட்டம் ஆடர..அம்மா... இவன பாரும்மா..பொய் சொல்ரான்..

பூஜா கத்த..ஒங்களுக்கு எப்பதான் ஸ்கூல் தெறக்குமோ..தினம் இதே பாடு என்று சமையல் ஊள்ளிலிருந்து மஞ்சு கத்த பரசுவின் கூப்பாடு யாரின் காதிலும் விழ வில்லை.

இன்னும் வேகமாய்க் கதவைத் தட்டி பலமாய்க் கத்தினார் பரசு.

ஏய் பூஜா..அப்பாடி..கதவ தட்றா பாரு..ஏன் இப்பிடி கத்தரார்...கதவைத்திறக்க வேகமாய் நடந்து வரும் சத்தம் கேட்டது பரசுவுக்கு.

கதவைத் திறந்ததுதான் தாமதம்..பாய்ந்து ஊள்ளே நுழைந்து ஒரே பாய்ச்சலாக பாத்ரூம் நோக்கி

ஓடினார் பரசு...அவரிட மிருந்த வீசிய மதுவின் நெடி மஞ்சு,குழந்தைகளின் நாசியைத் தொட

அதிர்ந்து போன மஞ்சு...அன்னா..கொஞ்சம் நில்லுங்கோ..என்ன ஒங்ககிட்ட சாராய வாட வீசரது

ஏன்னா..குடுச்சிருக்கேளா..இதென்ன கூத்து..எத்தன் நாளா இது நடக்கரது..ஐயோ..ஐயோ..

நா என்ன பண்ணுவே..நா என்ன பண்ணுவே..எங்குடும்பம் நாசமா போய்டுமே..ரெண்டு கொழந்

தேள வச்சுண்டு இனிமே நா என்ன செய்வேன்...ஐயோ கடவுளே மகமாயீ..நா என்னடி பண்ணுவே..

மஞ்சு கத்தி அழுவதைப் பார்த்து குழந்தைகளும் அழ..மஞ்சு..மஞ்சு..என்ன நம்பு நாங்குடிக்கல..

நாங்குடிக்கல...எல்லத்தியும் சொல்றேன் மஞ்சு சத்தியமா நா குடிக்கல குடிக்கல குடிக்கல..

கத்தினார் பரசு.

என்னன்னா..என்னன்னா..எதுக்கு இப்பிடி குடிக்கல குடிக்கலன்னு கத்தரேள்..கண்ண முழுச்சுக்

கோங்கோ...அப்பா..அப்பா என்னாச்சுப்பா..முழிச்சிக்கோங்கப்பா..மனைவியும் குழந்தைகளும் பிடித்து உலுக்க..பட்டென்று கண்களைத் திறந்த பரசு சட்டென்று எழுந்து உட்ட்கார்ந்து மலங்க மலங்க விழித்தார்.அட கண்ராவியே இத்தன நேரம் நான் அனுபவிச்சதெல்லாம் கனவா,,?

நல்ல வேள...

இதுக்குத்தான் நாத்திக்கெழமன்னாலும் கும்பகர்ணன் மாரி மணிக்கணக்குல தூங்ககூடாதுங்கரது

என்ன பகல்லயே கலர் கனவா..?குழந்தைகள் கலாட்டா பண்ண பஸ்ஸில் ஏறி சப்பல் அறுந்தது முதல் மது அபிஷேகம் வரை கனவில் நடந்ததைச் சொல்ல மனைவியும் குழந்தைகளும்

வயிற்றைப் பிடித்துக்கொண்டு சிரிக்க அசடு வழிய தானும் அவர்களோடு சேர்ந்துகொண்டார் பரசு பரசுராமன் பரசுராம சர்மா...வீடே சிரிப்பில் நிறைந்தது.

கதையே இல்லாத இக் கதையை இறுதிவரை படித்த என் அன்பு நெஞ்சங்களே..நீங்கள் கோபமாய்

முறைப்பதும் நற..நற வென பற்களை கடிப்பதும் உருட்டுக்கட்டையைத் தேடுவதும் புரிகிறது..

எப்போதும் டிராஜிடியாகவே கதைகளை முடிக்கும் எனக்கு கொஞ்சம் மாற்றி எழுதத் தோன்றியதின்

விளைவே  உப்பு இல்லாத ஊறுகாய்  போன்ற சப்பென்றிருக்கும் இக் கதை....ப்ளீஸ்..பாவம் நான்

மன்னித்து விட்டுவிடுங்கள்

{kunena_discuss:785}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.