(Reading time: 4 - 8 minutes)

வளர்ந்தாலும் நான் இன்னும் சிறு பிள்ளை தான் - சஹானி

னனம் ,, பிறக்கும்  போதே மனிதன் வலியோடு தான் பிறக்கிறான். ஆனால் வலிகொண்ட ஜனனம் ஏதேனும் ஒரு சாதனையை படைக்கிறது.

சாதனை,  ஒவ்வொருவரின் சாதனையும் ஒரு விதமானது. சிலர் கல்வியில் சாதிக்கினறனர். சிலர் உத்தியோகத்தில் சாதிக்கிறனர். 

இவர்கள் அனைவரும் பல்வேறு வெற்றிகளை,  தோல்விகளை கடந்து  சாதிக்கின்றனர். இங்கு தோல்வியால் அவர்களுக்கு படிப்பினையும் வெற்றியால் அவர்களுக்கு பேரும் கிடைப்பது நாமறிவது. ஆனால்,  இங்கோ நாம் காணப்போவது???

Valarnthalum nan inum sirupilai thanயார் சொன்னது  பெண் மகவு என்றால் தந்தைக்கே மிகவும் பிடித்தம் என்று இதோ காண்கிறேன் என் தமையனின் கண்களில் தெரியும் அன்பை .

நான்  பிறந்த மறு கணம்  அவன் முத்திரையை என் கன்னங்களில் பதிக்க குனிகிறான்  

கணநேரத்தில் என் முத்திரை அவன் மீது  இதழாலால் இன்றி கையால்

அவன் மிகவும் கோபக்காரனாம், தன் மேல் தவறின்றி தண்டித்தால் அவரிடம் முகம் கொடுத்து பேச மாட்டானாம். பின்னாளில் அன்னை கூறி அறிவேன் இதை.

ஒரு தவறும் செய்யாது நான் தண்டித்ததை புன்கையோடு ஏற்று கொண்டானே எதற்காகவாம்?  

எனக்காக தன் இயல்பை துறந்தவன்.

நான் வந்ததன் பின்பு அவனின் சூட்டிகை தனம் வெகுவாக குறைந்தது,  "பாப்பா மேல அடிபட்ரும்  அமைதியா விளையாடு " இதுதான் அன்னையின் அன்றாட வாய்மொழி

என்னால் அவன் சுதந்திரம் பறிக்க பட்டதே ஆனாலும் என் மீது ஏன் சிறு வருத்தம் கூட ஏற்படவில்லையாம்?

எனக்காக தன் குறும்பை இழந்தவன்

பள்ளி பருவம்  அவனின்  ஆசை நாயகன்   "ஹீரோ பென்"  

" எப்படியாவது இந்த தேர்வில் முதல் மதிப்பெண் பெற்று இதை வாங்கியே தீருவேன் " 

என்று தந்தையிடம் இட்ட சவாலில் ஜெயித்து அவன் கையில் ஆசை ஹீரோ தவழ,  

அதன்  மேல் என் பார்வை படிந்த மறுகணம் அவன்  " ஆசை நாயகன் " என் வசம்.

தன் நண்பர்களிடம் காட்டி மகிழ வேண்டும் என்ற தன் கனவை துளியும் வருத்தம் இன்றி முகம் கொள்ளா சந்தோஷத்தோடு விட்டு கொடுத்தது யாருக்காகவாம்?

எனக்காக தன் கனவை துறந்தவன்.

பதின் வயது பருவம் என் தோழியின் மேல் அவனுக்கு ஏற்பட்ட பிணைப்பு  சில நாட்களில்  அப்படி ஒரு பிணைப்பு தன் மனதில் ஏற்படவே இல்லை என்பது போல் அவனின் நடவடிக்கை 

பின்னொரு நாளில் எனக்கு காரணம் தெரியவர என்   முகத்தில் அப்பட்டமான அதிர்ச்சி

"தங்கையின் தோழியை தங்கையாய் பாவிக்காமல் தவறான கண்ணோட்டத்தில் கண்டுவிட்டேன். இது என் பாப்பாவுக்கு தெரியவந்தால் இனி அவள் முகத்தில் எங்கணம் விழிப்பேன் . அத்தோடு தங்கையை நம்பி அனுப்பும் தோழியின்  வீட்டில் தங்கையின் பெயருக்கல்லவோ இழுக்கு." 

என்பதாகும்.

அனுபவ வயதில் ஏற்படும் காதலில் வெற்றி பெறுவதற்கு பெற்றோரையே எதிர்ப்பவர்களின்  மத்தியில்  எனக்காக,  என் நலனுக்காக அவன்  தன் காதலை துறந்தது ஏனாம்?

எனக்காக தன் காதலை துறந்தவன்

இளமை பருவம். அவனுக்கு மருத்துவ படிப்பில் அதீத ஈடுபாடு. ஆனால் வீட்டின் பொருளாதார வசதி,  கால அளவுகள்  இவைகளை கருத்தில் கொண்டு  தந்தை அதை மறுத்ததுமல்லாமல் அவர் கூறியது 

நீ சீக்கரம் படிச்சு வேலைக்கு போனாத்தானே  பாப்பாவ காலாகாலத்துல கரை சேர்க்க முடியும் 

இப்படி பல காரணங்கள் என்னை முன்னிருத்தி  

இறுதியில் அவனின் மருத்துவ கனவு பரண் மேலேறி  தொழில்  கல்வி படிப்பு அரங்கேறியது.

எனக்காக தன் லட்சியத்தை மறந்தவன்.

அவன் வயதொத்தவர்கள்,

இப்போவே சம்பாதிச்சு என்ன பண்ண போறேன். இன்னும் கொஞ்ச நாள் போகட்டும் என்று இளமை கொண்டாட்டம் போட்டு சுற்றி வந்தபோதிலும் நல்லதொரு தொழிலமைத்து வெற்றி கண்டவன் இதோ என் திருமணத்தை முன்னின்று நடத்துகிறான்.

மணப்பெண்ணின் ஒப்பணையில் நான். என் கழுத்தில் மங்கள நாண் ஏற அவன் இதழோடு சேர்ந்து கண்களும் சிரிக்கின்றதே அதற்கு ஒப்பணையும் தேவையோ??

என்னவரின் கரம் பற்றி கண்ணொற்றியவன்

இவ சின்ன குழந்தை ஏதேனும் தவறு செய்தால் பெரியமனதிட்டு மன்னியுங்கள். 

என்று கூறுபவனின் கண்கள் கண்ணீரை  சிந்த காரணம்  எனக்கொரு நல் வாழ்க்கை அமைத்து கொடுத்ததாலா?  இல்லை என்னை பிரியப்போதாலா?

இங்கு அவன் எனக்காக தன்னையே இழந்தான்.

தனிமையில் அவனிடம் கேட்டு விட்டேன,எதற்காக இத்தனை இழப்பும்?  ஏனாம்?  இப்படி பல, என் மனதில்  சிறு வயது முதல் தோன்றியவை அவை.

அவன் கூறியதோ,,,

""எல்லாம் என் பாப்பாவுக்காக ""

"இங்கிவனை யான்  பெறவே என்ன தவம் செய்து விட்டேன் "

அவன் அனைத்தையும் இழந்தாலும் ஜெயித்து விட்டான் 

என் அன்பை!!!

இன்று என் மகளின் காது குத்து விழா அதுவும் அவன் மடியில்,  என்னை விட ஏன் என் குழந்தையை விட அதிகம் பயந்தது அவன் தான்.

அவன் மடியில் முத்தாய்ப்பாய் சிரிக்கும் என் மகளின் மீதே எனக்கு பொறாமை ஏற்படத்தான் செய்கிறது. பின்னே எனக்கு கிட்டாத பாக்கியமன்றோ??

என் குழந்தைக்கு தாயானாலும்,  என் கணவருக்கு மனைவியானாலும்,  என் பெற்றோருக்கு நான் மகளானாலும்,  ஏன் என் அண்ணாவுக்கு நான் தங்கையே ஆனாலும் எனக்குள் பொறாமை ஏற்படத்தான் செய்யும்.  ஏனெனில்

""வளர்ந்தாலும் நான் இன்னும் சிறு பிள்ளை தான்.""

ஹாய்  ப்ரண்ட்ஸ்,  ரொம்ப நாளைக்கப்பறம் உங்க எல்லாரையும் மீட் பண்றேன். எல்லாரும் எப்படி இருக்கீங்க.  இந்த கதை என்னோட கற்பனை சகோதரனை பற்றியது. நா அடிக்கடி பீல்  பண்ற ஒரு விஷயம் " எனக்கும் ஒரு அண்ணா இருந்தா எப்டியிருந்திருக்கும் "

அதான் என்னோட இந்த கற்பனை அண்ணா.  இதில் சில விஷயம் ரொம்ப ஓவரா கூட இருக்கலாம். அட்ஜஸ்ட் பண்ணி படிச்சுக்கோங்க.  படிச்சி முடிச்சி உங்களோட கருத்தை சொல்ல மறக்கவே மறக்காதீங்க. Ok. பை பை....

{kunena_discuss:785}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.