(Reading time: 8 - 16 minutes)

பூமராங் - தங்கமணி சுவாமினாதன்

விசாலம்....தன் மனைவியைக் கூப்பிட்டார் பஞ்சாபகேச சாஸ்திரிகள்.

ம்..என்ன.. விசாலத்துக்கு...?சமையலறையிலிருந்து கேட்டார் விசாலம் மாமி..

தர்பய வெட்டற கத்திய பாத்தியா..?எங்கவெச்சேன்னு தெரியல..

Boomerangகத்தியயும் பாக்கல கேடயத்தயும் பாக்கல..எங்கயாவது வெக்க வேண்டிது அப்பரம் பாத்தியா பாத்தியாங்கிறது...சொல்லிக்கொண்டே டிகாஷன் போட வால் பாத்திரத்தில் தண்ணீரை அடுப்பில் வைத்தார் மாமி.

ஒன்னப் போய்க் கேட்டேம் பாரு..என்னச் சொல்லணும்....

கப்போர்டு சுவாமி அலமாரின்னு தேடியவருக்கு சட்டென்று நினைக்கு வந்தது.. தான் முதல் நாள்

சிரார்த்தம் பண்ணிவைக்க ஒத்ராத்துக்குப் போனபோது தர்ப்பைக் கட்டோடு கத்தியையும் எடுத்துச் சென்றது..ஹால் கப்போர்டின் கீழ்த்தட்டில் முதல் நாள் எடுத்துச் சென்ற அந்த பை இருக்கவே அதைத் திறந்து பார்த்தபோது கத்தி இருந்தது.

கத்தியையும்,தர்ப்பைக் கட்டையும் எடுத்துக்கொண்டு இடுப்பு வேஷ்ட்டியின் மீது இடுப்பைச் சுற்றிக் கட்டியிருந்த துண்டை எடுத்து உதறி தரையில் ஒரு தட்டு தட்டிவிட்டு கீழே உட்கார்ந்து கொண்டார்

சாஸ்திரிகள்.

காப்பிப்பொடி டப்பாவைத் திறந்து ஃபில்டரில் பொடியைப் போட்டு வென்னீரை ஊற்றினார் விசாலம் மாமி.கம கமத்தது காப்பிப் பொடியின் வாசனை,எந்தக்கடையில் வாங்கியதோ?அப்படி யொரு வாசனை.

லூஸாகிப்போன குடுமியை ஒருதட்டுத் தட்டி முடிந்து கொண்டார் சாஸ்த்ரிகள்.

மாமா..சாஸ்த்ரிகள் மாமா...சார்..சார்....அழைக்கும் சப்தம் கேட்டது வாசலிலிருந்து.

வாங்கோ..வாங்கோ..கதவு வெறுமதா சாத்திருக்கு..உள்ள வாங்கோ..வாசலில் இருந்து அழைத்தவரைக் கூப்பிட்டார் பஞ்சாமி சாஸ்த்ரிகள்.

உள்ளே நுழைந்தவருக்கு அறுபதை தாண்டிய வயதிருக்கும்.கிராப்புதலையில் பின்புறம் ஒரு விரற்

கட்டை அளவுக்குச் சிகை வைத்திருந்தார்.குடுமி போலும்...நிதானமான உயரம் ,பருமன்.சாதுவான

முகம்.

சமையலரையிலிருந்து எட்டிப் பார்த்தார் விசாலம் மாமி.ம்ம்ம்...என்ன காரியமா வந்திருக்காரோ..

இவரண்ட என்ன பாடு படப்போராரோ.. பாவம் என்று வந்தவருக்காக மனதிற்குள் பரிதாபப் பட்டுக்கொண்டார்.

ஒக்காருங்கோ..சேரைக் காண்பித்தார் சாஸ்த்ரிகள்.

இல்ல நீங்க கீழ ஒக்காந்திருக்கேள்..நா எப்பிடி...சொல்லிக்கொண்டே தானும் கீழேயே அமர்ந்து கொண்டார் வந்தவர்.உட்க்கார்ந்தவரின் பார்வை எதிரே சுவரில் மாட்டியிருந்த புகைப்படங்களின் மேல் படிந்தது.

போட்டோவா..இது என்னோட பொண்ணும், மாப்பளையும் மாப்ளக்கி ஐ.டி உத்யோகம்,பெங்களூர்ல

இருக்கா..அது எம் பொண்ணு வயத்துப் பேரன்..பூணூல் போட்டப்ப  எடுத்தது.ஏழு வயசுக்கே பூணூல்

போட்டுட்டேன்.மாலையும் கழுத்துமா அவன் நிக்க நானும் எம் பாரியாளும் பக்கத்துல..மூணு

வேளையும் காயத்ரி ஜபம் பண்றான்,என்னமா அபிவாதியே சொல்றான் தெரியுமோ..பரிசேஷணம்

பண்ணாம சாப்படமாட்டான்..எல்லாம் கத்துக் குடுத்துட்டேன்..மூச்சு விடாமல் சுய தம்பட்டம் அடித்துக் கொண்டார் பஞ்சாமி.

எரிசலாய் இருந்தது விசாலம் மாமிக்கு.வந்தவரை என்ன காரியமா வந்திருக்கேள்ன்னு கேக்காம

என்ன பீத்த பெரும வேண்டிக்கெடக்கு..பாக்கெட் பாலைக் கட் பண்ணி பாத்திரத்தில் ஊற்றினார் மாமி.

எம் பேரு சேதுராமன்.விளாங்குடில இருக்கேன்.ஒரு விஷயமா ஒங்கள பாக்க வந்தேன்...

அதான் வந்துட்டேளே..என்னவிஷயம் சொல்லுங்கோ..

அது வந்து...தயங்கினார் சேதுராமன்...

ம்..சொல்லுங்கோகாணும்..சொன்னாத்தானே தெரியும்..

எம் பேரனுக்கு உபனயனம் செய்லாம்ன்னு..அது விஷயமா பேசலான்னுதான் வந்தேன்..

அடடே... நல்ல விஷயம்தானே...பேரனுக்கு என்ன வயசாச்சு...புள்ள வயத்துப் பேரனா...நாள் பாத்துடலாமா...?பேரனுக்கு என்ன நட்சத்திரம் சொல்லுங்கோ...என்று சொல்லிய படியே மேஜை மீது

இருந்த பஞ்சாங்கத்தை எடுத்துக்கொண்டு அமர்ந்தார் பஞ்சாபகேச சாஸ்த்திரிகள்.மனது பூணூல்

போட்டுவைக்க வைதீக காரியம் செய்ய எவ்வளவு தட்சணை கறக்கலாம் என கணக்குப் போட்டது.

ஏதோ ஒரு சின்னத் தவிப்போடு சிறிது மௌனமாக இருந்தார் சேதுராமன்.

என்ன அமைதியாயிட்டேள்..பேரனோட நட்சத்திரம் மறந்து போச்சா..ஆத்துக்கு வேணா போன் பண்ணி கேளுங்கோளேன்...

இல்ல..அது..வந்து...துண்டால் முகத்தைத் துடைத்துக்கொண்டார் சேதுராமன்.

என்ன திடீர்ன்னு பூணல் போடவேண்டாம்ன்னு தோணிப்போச்சா..மௌனமாயிட்டேள்...

இல்ல அது வந்து எப்பிடி ஆரம்பிக்கறதுன்னு தெரியல அதான்..

அதான் பேரனுக்கு உபனயனம் பண்ணணும்ன்னு ஏற்கனவே சொல்லிட்டேளே புதுசா என்ன ஆரம்பிக்கணும்...?

மறுபடியும் முகத்தைத் துண்டால் துடைத்துக்கொண்டார் சேதுராமன்.எம் பொண்ணோட புள்ளைக்குதான் பூணூல் போடனும்..

பேஷா போட்டுள்ளாம்..இதச் சொல்லவா இப்பிடி தயங்கினேள்..?நன்னாருக்கு போங்கோ..

அதில்ல....என்னோட பொண்ணு எம் பொண்ணுங்கறதுனால பிராமிண்தான்..ஆனா எம் மாப்ள..

பிராமின் இல்ல..வேற ஜாதி..அதான் அவாளுக்குப் பிறந்த புள்ளைக்கு உபனயனம் செய்யலாமான்னு..

ஈஸ்வரா..ஈஸ்வரா...காதைப் பொத்திக்கொண்டார் பஞ்சாபகேச சாஸ்த்திரிகள்.என்ன கண்ராவி இது..கலி முத்திபோச்சு..ஒரு நல்ல குடும்பத்துப் பொண்ணு இப்பிடி பண்ணுமோ..இதுவே எம் பொண்ணாஇருந்திருக்கணும்..அப்பிடியே வெட்டிப் போட்டுட்டு ஜெயிலுக்குப் போயிருப்பேன்.அந்த பொண்ணு பெத்த புள்ளைக்கா உபனயனம் பண்ணனும்ன்னு அலையரேள்.ஓய் ஒம்ம பொண்ணு அந்தப் புள்ளைய பத்துமாசம் சொமந்து பெத்திருக்கலாம் ஆனா அந்தப் புள்ள யாரோட வித்து?வேத்து ஜாதிக்காரனோடதுதானே?சரி அந்த புள்ளைக்கே பூணூல் போடரதா வெச்சுக்குவம் யாரு மனையில ஒக்காந்து மந்திரம் சொல்லுவா ஹோமம் பண்ணுவாரா..?ஒம்ம மாப்ளைக்கு சங்கல்ப மந்ரம் சொல்லத் தெரியுமா?நாந்தி மந்ரம் சொல்லத்தெரியுமா..விரதம் பண்ணுவாரா..கர்ண மந்ரம் ஓதுவாரா?பெரியவாளுக்கு நம்ஸ்க்காரம் பண்ரச்சே அபிவாதயே சொல்லுவாரா..?சொல்லுங்கோ..

வந்தவர் முகத்தில் ஈயாடவில்லை..இல்ல நானும் என் ஆத்துக்காரியுமா செய்யலாமுன்னு..

நன்னாருக்கு..நன்னாருக்கு...நீங்களும் ஒங்காத்து மாமியுமா போட்டாலும் அந்த புள்ள நம்ம ஜாதியா

ஆயிடுமாங்காணும்..என்னால ஆகாது வே இதெல்லாம் ....வேர ஆளப் பாருங்கோ..இந்தக் கண்ராவியெல்லாம் செஞ்சு வெச்சு என்னோட தொழிலுக்கும் சாஸ்த்திர சம்ப்ரதாயங்களுக்கும்

துரோகம் பண்ண முடியாது..கொஞ்சமும் மனசாட்சி இன்றி அடுத்தவரின் மனம் நோகுமே என்று

துளியும் இல்லாமல் முகத்தில் அடித்தாற்போல் சொன்னார் சாஸ்த்திரிகள்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.