(Reading time: 4 - 7 minutes)

ஐயா....கூத்தாண்டவர் - சுதாகர்

Koothandavar

மாலை 6 மணி சேலம் பேருந்து நிலையத்தில் இருந்து அரசு பேருந்து சென்னை நோக்கி கிலம்ப தயாராகிக் கொண்டு இருந்தது. பயணிகள் அவரவர் இறுக்கையில் வந்து அமர்ந்த பின் அந்த பேருந்து புறப்பட்டது.வழியில் சில பயணிகளை ஏற்றிக்கொண்டு தனது வேகத்தை  கோட்டியது. அந்த பேருந்தில் குழந்தைகள் முதல் வயதானவர்கள் வரை இருந்தனர். முதல் இருக்கையில் பெண்களும் அடுத்து வயதான கிழவி, கவயதான ஜோடிகள் ஆரம்பித்து இளவயது காதலர்கள் வரை பேசிக்கொண்டு இருந்தனர். பேருந்தின் கடைசி இருக்கையில் ஒரு இளைஞன் அவனது கைப்பேசியில் எதையோ பார்த்துக்கொண்டு இருந்தான்.

காதலர்கள் தங்கள் சினுங்கள்களை சிந்திக்கொண்டு இருந்தனர். சிலர் இருக்கை சரி இல்லை, ஜன்னல் சரி இல்லை என்று பேசிக்கொண்டு இருந்தனர். இப்படி பலர் பேச்சுகளை வாங்கிக்கொண்டு பேருந்து சென்று கொண்டு இருந்தது, திடீர் என பேருந்து நின்றது, யாரோ ஏறுவது போல் தோன்ற. அந்த இளைஞன் தன் கவனத்தை கைப்பேசியில் இருந்து பேருந்தின் கதவை நோக்கினான். உள்ளே தீடீர் அன ஒரு குறல் ஜயா கூத்தாண்டவர் கோயிலுக்கு தாலி கட்டிக்க போறோம் உங்களாள முடிஞ்சத கொடுங்க.

அங்கே ஒரு திருநங்கை அவளோ? அவனோ? அழகான முகம், வாட்ட சாட்டமான உடம்பு. அவளாக கட்டினாளோ இல்லை சமுகம் அவளை அப்படி கட்டசொல்லியதோ, தெரியாத இடுப்பு தெரியும் அளவு சேலை மடிப்பு. தலை நிறைய பல்லிகை, கை நிறைய வளையல், பார்த்தவுடன் இழுக்கும் உதட்டுஸ் சாயம். ஒரு லட்சணமான முகம், சாமுத்ரீகா லட்சணம் பொறுந்துய அரவானை துணையாக ஏற்றுக்கொண்ட அரவாணி.

அவளோ? அவனோ? தெரியாது. நாம் அவள் என்று கொள்வோம். அவள் ஏரியவுடன் பேருந்தின் அத்தனை கண்களும் அவளை பார்த்தன அப்படி ஒரு குறல்.

"ஜயா எங்க குல சாமி கூத்தாண்டவருக்கு தாலி கட்டிக்க போறோம் உங்களாள முடிஞ்சத கொடுங்க"

அவள் பிச்சை எடுக்கவில்லை, யாரையும் அதட்டவும் இல்லை. இப்படி கேட்டுக் கொண்டே பேருந்தின் கடைசி இருக்கைக்கு வந்தாள், தன் கைகளை தட்டிக்கொண்டு.

"ஜயா முடிஞ்சத கொடுங்க"

கடைசி இருக்கையில் கை விரித்துவிட்டது. அடுத்து இளம் காதல் ஜோடியிடம் கேட்டாள்.

காதலி என்ன சொன்னாளோ, தன் சட்டையில் இருந்து ஜந்து ரூபாய் நாணயத்தை எடுத்து கொடுத்தான்.

அவன் கொடுத்த ஜந்து ரூபாய் தான். ஆனால் அவள் வாழ்த்தோ "சாமி நீ நல்லா இருப்ப" என்றாள். அடுத்து அந்த இளைஞன்.

அதே வார்த்தை "ஜயா முடிஞ்சத கொடுங்க". அவன் அவளை பார்க்காமல் கைப்பேசியை பார்த்துக்கொண்டே இருந்தான். அவள் செல்வதாக  இல்லை, என்ன செய்வது, தன் பண பையை எடுத்து பத்து ரூபாய் நோட்டை எடுத்த கொடுத்தேன். அவனுக்கு ஒரு பயம் எங்க பணம் கொடுக்காவிட்டால் எங்கே திருநங்கை கிண்டல் செய்வாளோ என்ற பயம். இதற்கு முன் திருநங்கை கிண்டலுக்கு அளானவன். பயணத்தை வாங்கியவுடன் அவன் தலையில் இரு கைகளையும் வைத்து "நீ மகராசனா இருப்ப சாமி" என்று வாழ்த்தினால். அது அவனுள் ஒரு சிலிர்ப்பை ஏற்படுத்தியது. அடுத்த இருக்கை அவர்கள் அவளுடன் கொஞ்சம் பேச்சு கொடுத்தனர். எந்த ஊர்,அவர்கள் ஊரில் தினமும் திருநங்கை வருவதும் இவர்கள் பேசுவதுமாக இருப்பார்களாம். கடைசியில் இவர்களும் கொஞ்சம் பணம் கொடுக்க. அவள் இருக்கைகளை கடந்து சென்றுகொண்டே இருந்தாள். இதில் பணம் கொடுக்காத சில மனிதர்களும் உண்டு. அவர்களிடம் பணம் இல்லையோ? இல்லை கொடுக்க மணம் இல்லையோ?. கடைசியில் பேருந்தின் முன் பகுதிக்கு சென்று எல்லோரையும் பார்த்து கை கூப்பி வணங்கி விட்டு இறங்கிவிட்டாள்.

அந்த இளைஞன் அவள் சென்றதை பார்த்துக்கொண்டே இருந்தான்.இந்த சமுதாயம் இப்படி இவர்களை சித்தரிக்கிறாதா இல்லை இவர்கள் இப்படி நடந்து சொல்கிறார்களா?.

இன்று இவனை வாழ்த்தியது திருநங்கை தான். அன்று இவனை கிண்டலடித்தது இதே திருநங்கை. ஒரு வேலை மனிதனின் கிண்டலுக்கு ஆளாகி, இவர்கள் மனிதனை கிண்டலடிக்க ஆரம்பித்துவிட்டார்களோ? ஆனால் இவன் கண்டது அவலங்களுக்கு ஆளான திருநங்கை.

அவன் தன் கைப்பேசியின் இனையதளம் மூலம் தேடத் தொடங்கினான் "சித்தரா பௌர்ணமி கூவாகம் கூத்தாண்டவர் கோயில்". திருநங்கையின் வரலாற்றை தேடத் தொடங்கினான்.

{kunena_discuss:785}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.