(Reading time: 5 - 9 minutes)

சுகமோடி நிலாவே - சித்ரா

"ங்க என்ன நிக்கறே இந்நேரத்திலே ...."

கொஞ்சம் சட்டமாக வந்த அந்த அதட்டல் கேட்டவுடன் நிமிரும் முன்னே தெரிந்துவிட்டது அவளுக்கு அது யாருடைய அதிகார குரல் என்று ..

அவள்.... தையல்நாயகி 

sugamodi nilaave

அவன் ... வைதீஸ்வரன் 

அவர்கள் தற்போது ரெண்டு வருடமாய் பிரிந்து இருக்கும் கணவன் மனைவி 

அவள் இங்கே இப்போ நிற்கும் காரணம் வேறென்ன பஸ் கிடைக்கவில்லை 

அவன் மேலே கேட்கும் முன் அவ்வளவு  நேரமாக  வராத பஸ் வரவும் ஓடி சென்று ஏறி கொண்டால்,அட சட் இவன் எதற்கு பின்னே ...

ஏறக்குறைய எல்லா சீட்டும் காலியாகவே இருந்தது,டிக்கெட் வாங்க அவசியம் இல்லாமல் அவனே வாங்கினான்.பின் உரிமையாய் அவளது பக்கத்துக்கு இருக்கையில் அமர்ந்தான்  .   இங்கே கிராம புறங்களில் ஒரு எழுதாத சட்டம் உண்டு, கணவன் என்ற போதும்  அருகருகே அமர்வதோ,கை கோர்த்து நடப்பதோ அறவே கிடையாது,ஆனால் இவனோ  உரிமையாய்  பக்கத்தில் ......

இப்போ என்ன செய்வான் அடுத்து, rc mam கதையில்  வருவது போல் தோளை  சுற்றி கையை போட்டு முகத்து அருகே குனிந்து,சன்னலுக்கு வெளியே பிசாசு போல் விரையும் புளியமரத்தை எண்ணுவானோ அப்படி எந்த எண்ணமும் அவன் மனதில் இல்லை என்பது போல் அவன் சாதாரணமாக .....

'ஏன்  இவ்வளவு  லேட்'  என்றான் ஒற்றை வரியில் 

இவனுக்கு  என்ன பதில் சொல்வது என்று சுரு சுரு என்று அவளுக்கு கோவம் வந்தது,இருந்தும் அதை காட்டி கொள்ளாமல் " school la  விஜயா டீசெருக்கு திடீர்னு நெஞ்சு வலி , அவங்க அப்பாக்கு சமீ பத்துல தான்  ஹார்ட் அட்டாக் வந்ததாலே   ரொம்ப பயந்து போய்ட்டாங்க,டாக்டர் வந்து பார்த்து indigestion  தான் என்று மருந்து கொடுத்து ,அவரை வீட்டில் விட லேட் ஆயிற்று ".......

"அப்பா வரலையா" என்றன் மொட்டையாக ....

அப்பாவுக்கு ஜுர ம் ,அதான் நான் வீட்டுக்கு போன் பண்ணலே.....

,பொதுவா வைதீஸ்வரன் கோயில் இருந்து திருப்புன்கூர் வரை பஸ்சில் சென்று அங்கிருந்து பதினைந்து நிமிட நடை தூரத்தில் இருக்கும் அவள் ஊரு கண்னியாகுடிக்கு  நடந்து செல்வதில் எதுவும் பிரச்னை கிடையாது  .

ஆனால் இன்று இப்போதே மணி 7.30 ஆகிவிட்டது ,இருட்டி விட்டது ,அதை உத்தேசித்து தான்  அவன் கூட வருகிறான் என்று புரிந்த போதும் கோவம் குறையவில்லை .

"வனி கோவிலுக்கு வந்தாள் ,அவளை பஸ் ஏற்றிவிட்ட போது தான் உன்னை பார்த்தேன் " என்றான் .

அதற்குள் திருப்புன்கூர் வந்து விட இறங்கி நடக்க ஆரம்பித்தார்கள் 

சற்று தூரத்திலே சிவலோகநாதர் சன்னிதி  தெரிந்தது ,இந்த கோவிலுக்கு ஒரு விஷேசம் உண்டு .

சிவன் சன்னதி முன் நிற்கும் நந்தி சற்றே விலகி ஒரு ஓரமாய் இருக்கும்,நந்தனார்  பாடலுக்கு இணைகி நந்தி வழி விட்டதாக புராணம் உண்டு 

"சற்றே விலகிடும் சன்னிதானம் மறைகுதையா "       என்று அவளது ஆச்சி பாடுவது அவளுக்கு நினைவுக்கு வந்தது ,அவளது வழக்கம் போல் ஒரு கும்பிடு நின்ற இடத்தில இருந்து போட்டு விட்டு நடையை தொடர்தாள் . அவன் அவளை பின்பற்றி கும்பிடவில்லை என்ற போதும் அவளுக்காக காத்து நின்றான் .

பொதுவாக  அவன் ஒருபோதும் நிக்க மாட்டான்    விறு விறு என்று நடப்பதே அவன் பாணி ...

எப்போ இந்த மாற்றம்  என்று அவளுக்கு சிரிப்பு வந்தது ...உடனே வேலை மெனக்கெட்டு  தன்னுடன் கூட வரும் அவனை பாக்க  பாவமாகவும் இருந்தது ...

இனி சாலை என்ற ஒன்றே கிடையாது வெறும் கப்பி ரோடு தான்  என்பதால்  கவனமாக நடக்க ஆரம்பித்தாள் .

ஒரு அடி எடுத்து வைக்கும் முன்னே சர சர என சத்தம் கேட்கவும் பயந்து சட்டென நின்றாள் .

பின்னால் வந்த அவன் ஏதும் பேசாமல் பக்கத்தில் வளர்த்திருந்த கருவேல மரத்தில் இருந்து ஒரு குச்சி உடைத்து அவள் கையில் குடுத்தான் .   

 தட்டி  கிட்டே   நட பயமில்லை  ,பாம்பு இருந்தாலும் கிட்டே வராது  என்றபடியே  அவனும் ஒரு குச்சு வைத்து கொண்டு   நடக்க , சற்று தூரம் கடந்த போது ,எதிரே யாரோ வருவது நிழல்  போல் தெரிய மறுபடியும் அவள் தயங்க ,அவன் முன்னே சென்றான் .எதிரே வருபவர் ராசு தாத்தா என்று கண்டு கொண்டு   தயக்கம் இன்றி தைலா  கூட துணைக்கு போறேன் தாத்தா என்றான் .

புரை விழுந்த கண்ணுக்கு மேலே கையை வைத்தபடி பார்த்த தாத்தா வைதீஸ்வரன் தம்பியா ,நல்லா   இருக்கியா , பிரிஞ்சி கிடந்திக ,ஒன்னு சேர்ந்தா   சரி ,நல்லா  இருங்க ,என்று கைகளை உயர்த்தி ஆசிர்வதித்தார் .பாப்பா பத்திரமா  போம்மா என்றபடி அவர் சென்று விட, அவனை நிமிர்த்து பார்க்க அவளுக்கு தயகமாய் இருந்தது .

என்ன நினைப்பான் துணைக்கு வந்து வம்பில் மாட்டியா யிற்று  என நினைப்பானோ என அவளுக்கு கூசியது .

இருந்த போதும் அவளால் செய்ய முடிந்தது எதுவும் இல்லை என்பதால் மிச்ச தூரம் மௌனத்தில் கரைந்து ஒரு வழியாய்  வீடு வந்தது.

கேட் டில்  கை வைத்தவுடன் அப்பா ஏன்மா  இவாளவு லேட் என கேட்டபடி வந்தவர் மாப்பிளையை பார்த்து ஒரு அரை விநாடி தயங்கி பின் அவசரமாக வாங்க என்றார் 

அமைதியாய்  உள்ளே வந்து ஊஞ்சலில் அமர்தான் .அதன்பிறகு அவர்கள் பேசியதை கேட்க அவளுக்கு நேரமில்லை.

இன்னைக்கு அவனால் திரும்பி போக முடியாது, கடைசி பஸ் சென்றிருக்கும் .அதனால் அவன் இங்கே தான்  தங்க வேண்டும் எனில் ராத்திரி உணவு தயாரிக்க தான்  அவள் அவசரப்பட்டது .

அவனுக்கு பிடித்த பூரி உருளை கிழங்கு பண்ணி அவர்கள் சாப்பிட்டு முடித்தபின், இருவரும் முற் முற்றரத்து  குறட்டில் வந்து அமர்தார்கள் .

நீக்கமற நிறைத்திருந்த நிலவொளியில்  அவன் மெல்ல நான் நாளைக்கு தைலா வை  அழைத்து  போகிறேன் என்றான் , சற்று நேர இடைவெளிக்கு பின் அப்பா உங்க இஷ்டம் மாப்பிள்ளை ,வாழ தானே வாழ்க்கை ,நீங்க ரெண்டு பேரும் நல்லா  இருந்தா  சரி என்றபடி அவர்களுக்கு தனிமை கொடுத்து வெளியே சென்றார்.

பக்கத்தில் உட்கார் என்றான் .செய்தாள் .

அவள் கைகளை எடுத்து தன்  கைகளில் வைத்து கொண்டான் {நன்றி vino mam }

கண்ணம்மா என்றான் {நன்றி  vatsala }

நான்  இப்போ தோசை சுட கத்துகிட்டேன் என்றான் {நன்றி  Anna }

அப்புறமென்ன அவங்க சந்தோசமா இருந்தாங்க.

they lived happily ever after .

fairytale madri முடிக்கிறேன் pakiringala , எஸ்  இது உண்மையா 50yrs முன்னாடி நடந்த சம்பவம் 

துணைக்கு வந்து மறுபடியும் சேர்த்து கொண்ட துணைவன் .

ரியல் லைப் fantasy எப்பயுமே தூள் தான் .

*image used for illustration purpose only

{kunena_discuss:785}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.