(Reading time: 8 - 15 minutes)

எதற்கு? - விசயநரசிம்மன்

வேலைக்குப் போறப்பக்கூட என்ன நிம்மதியா போகவிட மாட்டியாடி” - காலி காபி கோப்பையை அவள் கையில் வேகமாய்த் திணித்துவிட்டுக் கதவைத் திறந்து கொண்டு நடந்தான் தேவன்,

“என் மூஞ்சியப் பார்த்தாலே உன் நிம்மதி போயிடுது, அது என் குத்தமா” தப்பித்துவிட எண்ணியவனைப் போல அவசரமாக நடந்தவனின் காதுகளில் சொருகும்படி அம்புகளாய்க் கத்தினாள் குந்தவை. வந்தியத்தேவன், குந்தவை – பெயர்கள்தான் அவர்களுக்கிடையிலான முதல் பொறி,

“என் அம்மாக்கு பொன்னியின் செல்வன்னா உசுரு”

Etharku“என் அப்பாக்கும்!”

“வானதினு பேர் வெச்சிருக்கலாமே?”

“உனக்குக்கூட அருண்மொழினு வெச்சிருக்கலாம்ல?”

-பச்சை மிளகாய் – அப்படித்தான் தோன்றியது அவனுக்கு! பிடித்திருந்தது! கல்கிக்கு நன்றிகள்.

தவை அறைந்து சாத்திவிட்டுச் சமயலறைக்கு வந்தாள் குந்தவை, அவள் மனதைப் போலவே சாம்பாரும் கொதித்துக் கொண்டிருந்தது, அதையாவது அணைக்க முடிந்ததே! அடுத்த வேலை எதுவும் ஓடவில்லை அவளுக்கு, என்ன பொறியல் பண்ண முடிவு செய்திருந்தாள் என்பதே மறந்து விட்டிருந்தது,

’தேவன் ஏன் இப்படி நடந்துக்குறான்...’ மனத்தை அமைதிபடுத்த பிளேயரில் இசையை வழியவிட்டாள்,

’மயக்-க-மா... கலக்-க-மா... வாழ்--’ – வாசல் மணியின் மின்சாரக் குயில் கூவியது, “ச்ச!” என்று அலுத்துக் கொண்டே பிளேயரை ஸ்தம்பிக்கச் செய்துவிட்டுச் சென்று கதவைத் திறந்தாள்... தேவன்.

சிரித்தான். டிராகுலா புன்னகையைப் போலத் தோன்றியது குந்தவைக்கு.

“ஏன் போலனு கேக்க மாட்டீங்களோ?”

“எரிஞ்சுவிழ மிச்சம் ஏதாவது வெச்சிருக்கியா?”

”பச்ச மொளகா” – சிரித்தான், ரொமாண்டிக் – குந்தவைக்கு டிராகுலாதான்.

”கோவமா இருக்கியா டார்லிங்...” நெருங்கி அணைத்தான், திமிறினாள்,

“விடு” செயற்கையாகப்பட்டது அவளுக்கு, அவனது சிரிப்பைப் போலவே.

“நா வந்தது உனக்குப் பிடிக்கலயா? வேற யாரையாவது எதிர்பார்த்தியா என்ன?”  உதட்டில் லேசான சிரிப்பு இருந்தது, நகர்ந்து கொண்டான்,

“ச்சீ, நாயே! வேற ஒருத்தரை எதிர்பார்க்குறது நா கிடையாது” – பச்சை மிளகாய் பச்சை மிளகாய்தான் – “அப்ப நான் எதிர்பார்க்குறேங்குறியா?” அவனும் விடுவதாய் இல்லை, “அப்படினு நா சொல்லல!” சொற்போரில், ஏன் எந்தப் போரிலுமே, தேவன் குந்தவயை வென்றது கிடையாது – எந்தத் தேவனாலும் எந்தக் குந்தவையையும் வெல்ல முடியாது!

பேச்சைத் திசைத்திருப்பினான்,

”சரி நான் ஏன் வந்தேனு கேக்க மாட்ட?”

“கேட்டாத்தா சொல்லுவியா?”

“ஆமானே வெச்சுக்கோயேன்”

“சொல்லாத!” சமையலறைப் பக்கம் நகர்ந்தாள், அவளைப் பின் பக்கமாகச் சென்று அணைத்தான் தேவன்,

”ஏண்டி எப்ப பாரு இப்படி வம்பு பண்ணிட்டே இருக்க?”

“நீ சொல்லுவடா, உனக்கு இப்ப அப்படித்தான் தெரியும்” அணைப்பிலிருந்து விடுவித்துக் கொள்ள முயன்றாள்,

“இப்பைக்கென்ன?” இன்னும் இறுக்கினான்,

“ப்ச், விடுடா” விட்டான்,

”சரி கிளம்பு”

“எங்க?”

“வெளில போலாம், உன்னோட இன்னிக்குப் பூரா இருக்கலாம்னு தோனிச்சு, அதான் வேலைக்குப் போகல”

“என்ன திடீர்னு?”

“காதல்” மீண்டும் சிரித்தான் – செயற்கைத்தனம்.

ந்த செயற்கைத்தனம் அவளுக்குள் ஏதோவொரு எச்சரிக்கை மணியை அடித்தது. அவள் அதை வெளிக்காட்டிக்கொள்ளாமல் அடக்கிக் கொண்டாள். தன்னோடு அவன் கடைசியாக ஊர் சுற்றியது எப்போது என்று எண்ணிப் பார்த்தவளுக்கு ‘ஒன்னேகால் ஆண்டிற்கு முன்’ என்று பதில் கிடைத்தது. இப்பொழுது என்ன திடீர் காதல்? செயற்கைக் காதல்? இதில் ஏதோ விஷயம் இருக்கிறது, அவன் எதையோ ஒளிக்கிறான்,

“என்னடி?” – தேவனின் குரல் குந்தவையின் சிந்தனைக் குதிரையின் கடிவாளத்தைப் பிடித்து இழுத்தது,

“என்ன?” – ஏதோ பதிலளிக்க வேண்டுமே என்று கேட்டுவைத்தாள்,

“ப்ச்! கிளம்புடி, சீக்கிரம்!”

“ம்!” – எச்சரிக்கை மணி அடங்குவதாய் இல்லை. உடை மாற்றப் படுக்கை அறைக்குள் நுழைந்தாள், அவனும் பின்னாலேயே வந்தான்,

“என்ன வேணும்?”

“சும்மா, உதவலாமேனு வந்தேன்” வழிந்தான் – இப்படி இவன் வழிந்து எத்தணை நாட்கள் ஆகிறது – சிந்தனைத் தேடல் ‘கிட்டத்தட்ட ஒன்னேகால் ஆண்டு’ என்றது மீண்டும். இதுவும் செயற்கையா? ஆம் என்றது பாதி மனம், இல்லை என்றது மீதி.

“ப்ச். அதெல்லாம் ஒன்னும் வேண்டாம், வெளில போ, ப்ளீஸ்!”

“நா பாட்டுக்கு இங்க இருந்தா உனக்கென்ன? புருஷந்தானே!”

“ப்ச் ப்ச்”

அவள் தன் அலமாரியைத் திறந்து எந்த உடை அணியலாம் என்று யோசித்தாள்,

“எங்கப் போறோம்?”

“பீச்? பகல்ல பீச்சுக்குப் போய் எவ்ளோ நாளாச்சு!”, இம்முறை ‘இரண்டேகால் ஆண்டு’ என்றது குந்தவையின் மனம். “இந்த மெரூன் கலர் சுடியைப் போட்டுக்கோ, என் பேவரைட்” பின்னால் நின்று கொண்டு அவள் தோள் மேல் தன் முகத்தை வைத்துக் கொண்டு கொஞ்சலாகச் சொன்னான் வந்தியத்தேவன், குந்தவை அதைக் கையில் எடுத்துக் கொண்டாள், 

“உன் உதவி இத்தோட போதும்” அறை வாசலை நோக்கிக் கையை காட்டினாள், வழிந்து கொண்டே வெளியேறினான் தேவன். ‘இது செயற்கையா?” ஆம் என்றது பாதி, இல்லை என்றது மீதி. குந்தவை குழப்பத்துடனே தயாராகினாள்.

வீட்டிலிருந்து மெரினா வரையிலான அந்த முக்கால் மணி நேரப் பயனத்தில் குந்தவையின் மனத்தை ஆக்கிரமித்திருந்த்து ஒரே ஒரு கேள்விதான் – ‘எதற்காக இதெல்லாம்?’

டற்கரை.

“கடல் எவ்ளோ அழகா இருக்குல?” அவளை நெருங்கி அமர்ந்தான் தேவன், அனிச்சப்பூவைக் கையாளும் எச்சரிக்கையான மென்மையுடன், புது மனைவி!

“ம்ம்” அவளால் சொல்ல இயன்றது அப்போதைக்கு அதுதான், அவன் நெருங்குவதன் கலவரம் ரத்தத்தோடு கலந்து உடலுக்குள் பாய்ந்தது குந்தவைக்கு, சின்னச் சின்ன பூகம்பங்கள் அவள் உடலில், மனத்திலும்.

”எவ்ளோ பார்த்தாலும் கடல் எனக்கு அலுக்கவே அலுக்காது” கண்ணொடு கண்ணினை நோக்கு ஒக்கினான் “உன்னைப் போலவே” என்று முடித்தான், அவளுக்குள்ளான பூகம்பங்கள் ரிக்டர் ஏறின...

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.