(Reading time: 10 - 19 minutes)

மனதை தொட்ட ராகங்கள் - 08 - வத்சலா

மலரே மௌனமா

பூங்கொத்துக்களும், மலர்மாலைகளும் மணக்க, நண்பர்களும் உறவினர்களுமாய் மண்டபம் நிறைந்திருக்க, சிரிப்புகளும், கேலிப்பேச்சுகளும் அவனை சூழ்ந்திருக்க மகிழ்ச்சியின் எல்லையில் அவளுக்காக மணமேடையில் காத்திருந்தான் விஷ்ணு.

விபத்துக்கள் வாழ்கையில் வரமாகிப்போகுமா என்ன ? மூடிக்கிடந்த கதவுகளை திறந்து விடுமா என்ன ? இதோ இவனுக்கு திறந்து விட்டிருக்கிறதே.!!!!

சில மாதங்களுக்கு முன் அவனுக்கு அந்த நேர்ந்த விபத்து. அவனது கார் மலைச்சரிவில் உருண்டு, சில நாட்கள் அவனை மருத்துவமனையிலேயே தங்க வைத்த அந்த விபத்து.!!!! இதோ அதுவே இவனை மணமேடையில் கொண்டு நிறுத்தி இருக்கிறது.!!!!!

Malare mounamaஅவனது விழிகள் அவள் வரப்போகும் திசையையே நோக்கி இருந்தன. அவள் சிந்து. சிந்து  என்ற சிந்துஜா.!!!!

பள்ளிக்காலத்தில், அவனது பன்னிரெண்டாம் வகுப்பு தோழி அவள். அப்போதே அவனது மனதிற்குள் குடியேறி விட்டவள், தான் அவனுக்கு தகுதியானவள் இல்லை என்று விலகி விலகி போனவள் கிட்டத்தட்ட, பதினோரு ஆண்டுகள் காத்திருப்புக்கு பிறகு இன்று அவனிடம் வந்து சேர்ந்திருக்கிறாள்.

அவனை அவளுக்கு தகுதி உள்ளவனாக மாற்றி விட்ட அந்த விபத்துக்கு பல நூறு நன்றிகள்!!!!. புன்னகை ஓடியது அவனது இதழ்களில்.

அவள் சூடியிருந்த மலர்களும், அணிகலன்களும், அவள் முகத்தில் மிளிர்ந்துக்கொண்டிருந்த  புன்னகையிடம் தோற்றுக்கொண்டிருக்க, அவள் கைகளில் ஏறியிருந்த மருதாணி சிவப்பு, அவள் கன்ன சிவப்பை வென்று விட முயன்று தோற்றுக்கொண்டிருக்க, மணமாலைகள் மணக்க அவள் அவனருகில் வந்து அமர்ந்த நொடியில் அவளிடம் மொத்தமாக தோற்றுப்போனான் விஷ்ணு.. அவன் விழிகள் அவளை விட்டு விலகவில்லை

மலரே மௌனமா????? மௌனமே வேதமா????? 

ஒரு முறை கண்களை நிமிர்ந்தி அவனை பார்த்து விட்டு, புன்னைகையுடன் இமை தாழ்த்திக்கொண்டாள்.

மலர்கள் பேசுமா ???? பேசினால் ஓயுமா அன்பே????

அவளுக்குள்ளும் அதே பாடல் வரிகள். அவர்கள் பள்ளி விழாவில் இந்த பாடலை பாடியவன் அவன். அதன் வரிகள் அத்தனையும் அவளுக்கு சமர்ப்பணம் என்றான் அப்போது.

கனவு கண்டு எந்தன் கண்கள் மூடிக் கிடந்தேன்

காற்று போல வந்து கண்கள் மெல்லத் திறந்தேன்

தேவதை அவள்.!!!! மௌன தேவதை!!!!. மௌன தேவதையாய் தனது மனதில் இருந்த கனவுகளையெல்லாம் தனக்குள்ளே போட்டு புதைத்துக்கொண்டவள். இதோ எல்லாவற்றையும் உடைத்து திறந்துவிட்டான். இன்று எல்லா கனவுகளும் நனவாகிக்கொண்டிருக்கின்றன. அவனை விழவைத்த அந்த மலைச்சரிவுக்கு பல கோடி நன்றிகள்.!!!

கோடீஸ்வர பெற்றோரின் ஓர் மகன் விஷ்ணு. சிந்து சாதாரண குடும்பத்தில் பிறந்த பெண்.

விஷ்ணுவின் பெரியப்பா பெரிய மருத்துவர். ஒரு பெரிய மருத்துவமனையை நிர்வகித்துக்கொண்டிருப்பவர். மருத்துவ தொழிலையே தனது மனைவியாக்கிகொண்டவர். விஷ்ணுவுக்கு பெற்றோரைவிட பெரியப்பாவிடம் நெருக்கம் அதிகம். அவருக்காகவே அவர் சொன்னதற்காகவே அவனும் மருத்துவம் படித்தான்.

மேடைக்கு கீழே முன் வரிசையில் அமர்ந்திருந்த பெரியப்பாவை தேடிச்சேர்ந்தன அவனது கண்கள். இந்த திருமணம் நடக்க ஒரு மிகப்பெரிய காரணம் அவனது பெரியப்பா. சில நொடிகள் அவரை புன்னகையுடன் பார்த்தவன் கண் சிமிட்டி சிரித்தான் 'ஜெயித்து விட்டேன் பெரியப்பா'

'உதைப்படுவே' அழகான சிரிப்புடன் ஆள்காட்டி விரலை ஆட்டி எச்சரித்தார் பெரியப்பா.

அவனை பார்க்கும் போதெல்லாம் வியப்புதான் மேலிடுகிறது அவருக்கு. இப்படி கூட காதலிக்க முடியுமா என்ன? காதலுக்காக, காதலிக்காக எதை வேண்டுமானாலும் விட்டுக்கொடுக்க முடியுமா என்ன? சில மாதங்கள் முன்பு வரை அவருக்கு காதலின் மீது நம்பிக்கை இருந்ததில்லை. ஆனால் இப்போது பிரமிப்பின் எல்லையில் அவர்.!!!!

மிக அழகான ஜோடிப்பொருத்தம் இருவருக்கும். இருவரும் எப்போதும் மகிழ்ச்சியின் உச்சியிலேயே வாழ வேண்டும் மனதார வாழ்த்திக்கொண்டிருந்தார் அவர்.

மணமேடையில் அவர்களை சுற்றிலும் நண்பர் கூட்டம். இவர்கள் இருவரும் இணைவதில் அவர்கள் அனைவருக்கும் ஆனந்தம்.

அவனுக்கு அருகில் அவனது பெற்றோர் நின்றிருந்தனர். அவர்கள் முகத்திலும் நிறைவின் ரேகைகள். பள்ளிக்காலத்திலேயே அவர் காதுக்கு எட்டிய அவனது காதலுக்கு  பதிலாக கோபத்தையே தந்தார் அவனது தந்தை. 'முதல்லே படிச்சு முடிச்சு சொந்தக்காலிலே நில்லு. அதுக்கப்புறம் இந்த காதல் கத்திரிக்காய் எல்லாம் பார்த்துக்கலாம்'

அவன் மருத்துவனாகி நின்ற பிறகும் அவளது நிலையும், குடும்ப அந்தஸ்தும் அவர்கள் காதலுக்கு தடையாய் நின்றது. இப்பொழுது எல்லாம் மறக்கப்பட்டு, மகிழ்ச்சி வெள்ளத்தில் திளைத்துக்கொண்டிருக்கின்றனர் அவனது பெற்றோர்.

அவளுக்கு அருகில் அவளது குடும்பம். இவன் பணக்காரன் என்பதாலேயே இவன் மீது அவர்களுக்கு நம்பிக்கை வரவில்லை. 'பணக்கார நாயே. என் தங்கச்சி வாழ்கையை நாசமாக்கிட்டு கையை கழுவிட்டு போயிடுவே. நாங்க எல்லாரும் தூக்கிலே தொங்கவா?' அவன் காதல் அவள் குடும்பத்துக்கு தெரிந்த போது இப்படி சொல்லித்தான் கை ஓங்கினான் அவளது அண்ணன்.  இப்பொழுது முகமெல்லாம் சிரிப்பாக நிற்கிறான் அவன்.

எல்லாம் அந்த விபத்தின் மகிமை. விஷ்ணுவின் இதழோரம் வெற்றிப்புன்னகை.

மறுபடியும் அவளை தொட்டது அவனது பார்வை. அந்த பார்வையில் குறும்பின் ரேகைகள்.

காற்றே எனைக் கிள்ளாதிரு பூவே என்னைத் தள்ளாதிரு

ஒரு சந்தர்ப்பத்தில் அவன் அவன் துறு துறு விரல்கள் அவள் இடை உரசிப்போக அவள் திடுக்கிடட்டு சிலிர்த்து, சிவந்து மெல்ல சிரிக்க அதை கவனித்து விட்ட நண்பர்களின் ஆரவார கூச்சலினிடையே அவன் கைக்கு வந்து சேர்ந்தது தாலி.

பதினெட்டு வயதிலேயே மனதளவில் நடந்துபோன திருமணத்தை இன்று உறுதி செய்யும் விதமாக அவளுக்கு அணிவித்தான் அந்த தாலியை. அட்சதைப்பூக்களிலும், வாழ்த்து மழையிலும் மூழ்கி திளைத்தனர் இருவரும்.

உறவே உறவே உயிரின் உயிரே

புது வாழ்கை தந்த வள்ளலே

அவன் கரம் பற்றி அக்னிவலம் வந்து, அம்மி மிதித்து அருந்ததி பார்த்து.....  சிந்துஜாவின் இதயமெங்கும் சந்தோஷ அலைகள்.

ரவின் தனிமை!!!

பாதி ஜீவன் கொண்டு தேகம் வாழ்ந்து வந்ததோ

மீதி ஜீவன் என்னைப் பார்த்த போது வந்ததோ

தன் முன்னால் பூவணிந்த பூவாய் நின்றவளை குறும்பு புன்னகையுடன் அவன் இமைக்காமல் ரசித்திருக்க, அவன் எதிரில் வெட்க தவிப்புடன் நின்றிருந்தாள் சிந்துஜா.

சில நொடிகளுக்கு மேல் அப்படி நிற்க முடியாமல், வளையல்களும் கொலுசும் கலகலக்க வெட்க சிரிப்புடன் அங்கிருந்தது விலகி ஓட எத்தனிதவளை பின்னாலிருந்து அணைத்துக்கொண்டான் விஷ்ணு.

ஏதோ சுகம் உள்ளூறுதே ஏனோ மனம் தள்ளாடுதே

விரல்கள் தொடவா விருந்தைத் பெறவா

மார்போடு கண்கள் மூடவா

அவனது அணைப்பில், அவனது அன்பில் அப்படியே கொஞ்சம் கொஞ்சமாய் கரைந்துப்போனாள் சிந்துஜா.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.