(Reading time: 12 - 24 minutes)

அம்மாவே முதல் அழகி... - தங்கமணி சுவாமினாதன்

டிவின் வளைகாப்புக்கு இன்னும் இரெண்டே நாள் தான் இருக்கும் நிலையில் சொந்தக்காரர்களின் வருகையால் வீடே நிறைந்திருந்தது. வடிவின் மாமியார் ஷண்முக சுந்தரிக்கு தாங்கமுடியாத சந்தோஷம்.தலைகால் புரியவில்லை.இருக்காதா பின்னே?எட்டு வருஷம் கழிந்து மருமகள் உண்டாகி இருப்பதும் வளைக்காப்பு நடக்க இருப்பதும் தலைகால் புரியாத சந்தோஷத்தைக் கொடுக்காதா என்ன?மகனுக்குத் திருமணமாகி அடுத்தவருடமே ஒரு பேரனையோ பேத்தியையோ எதிர்பார்த்தவருக்கு வருஷம் ஒவ்வொன்றாய் போய்க்கொண்டிருக்க மருமகள் வயிற்றில் ஒரு பூச்சி புழு கூட உருவாகாதது மிகுந்த கவலையை ஏற்படுத்த மகனையும் மருமகளையும் கோயில் கோயிலாக அழைத்துச் செல்வதும் குளம் குளமாக முழுகச் செய்வதுமாக இருந்தார்.பரிகாரங்கள் செய்வதும் இருவரையும் விரதங்கள் இருக்கச் சொல்வது மாக எத்தனையொ செய்து தவமாய் தவமிருந்து இப்போதுதான் மருமகள் உண்டாகியிருப்பது ஷண்முகசுந்தரிக்கு அளவில்லா மகிழ்ச்சியை ஏற்படுத்திீருந்தது.மருமகளை தரையிலேயே நடக்கவிடாமல் அப்படியொரு தாங்கு தாங்கினார். வடிவின் மாமியார் இப்படி என்றால் அம்மாவைப் பற்றி கேட்கவே வேண்டாம்.வடிவின் தாய்க்கும் தந்தைக்கும் அப்படியொரு மகிழ்ச்சி.எப்போது வளைக்காப்பு முடியும் எப்போது மகளைத் தங்கள் வீட்டுக்கு பிரசவத்துக்கு  அழைத்து வந்து மகளைப் பாராட்டி சீராட்டுவோம் என்று காத்துக்கிடந்தார்கள்.

வளைகாப்பு முடிந்து தாய்வீட்டுக்கு வந்தாயிற்று வடிவு.புகுந்த வீட்டிலேயே சந்தோஷத்தோடு வளைய வந்தவளுக்கு அம்மாவீடு பற்றி கேட்கவா வேண்டும்.வேளா வேளைக்கு விதவிதமான   உணவு வகைகளும் பட்சணங்களுமாக அக்கம் பக்கத்து வீட்டுப் பெண்களோடு அரட்டையுமாக வெகு ஜாலியாக பொழுது போயிற்று ஆயிற்று பிரசவத்திற்கான நாள் வந்த போது மருத்துவமனையில் சேர்க்கப் பட்டாள் வடிவு.பிரசவ அறைக்கு வெளியே வடிவின் மாமியார் மாமனார் வடிவின் அம்மா அப்பா,இன்னும் இரண்டு மூன்று உறவினர்கள் என்று ஒரு சின்னக் கூட்டமே கவலையோடு அமர்ந்திருந்தது.

பிரசவ அறைக்குள்லிருந்து குழந்தையின் அழுகுரல் கேட்டதும் பரபரப்பானார்கள் அனைவரும்.

Ammave muthal azhagiகொழந்த பொறந்தாச்சு..கொழந்த பொறந்தாச்சு...ஆளாளுக்கு சொல்லிக்கொண்டார்கள்.நர்ஸ் ஒருவர் டவலுக்குள் குழந்தையைச் சுற்றிக் கொண்டு வெளியே வந்தார்.வழக்கமாய் குழந்தையைத் தூக்கிக்கொண்டு வெளியேவரும் நர்ஸ் சிரித்த முகத்தோடு வருவது வழக்கம்.அதுவும் ஆண்குழந்தை என்றால் 500 ரூபாயும் பெண்குழந்தை என்றால் 300 ரூபாயும் கிடைக்கும் என்ற நினைப்பே  அவர்கள் முகத்தில் மகிழ்ச்சியை ஏற்படுத்தி இருக்கும்.ஆனால் இந்த நர்ஸின் முகத்தில் சந்தோஷம் என்பதே இல்லை.

காத்துக்கிடந்தவர்கள் குழந்தையைப் பார்க்க..நர்ஸம்மா..நர்ஸம்மா.. என்ன கொழந்த? கேட்டுக்கொண்டே ஆவலோடு ஓடினார்கள்.பொம்பளபுள்ள..சொல்லிக்கொண்டே குழந்தையை அவர்களிடம் நீட்டினார் நர்ஸ்.குழந்தையைக் குனிந்து ஆசையோடு பார்த்தவர்கள் தீயை மிதித்தவர்கள்போல் இரண்டடி பின்வாங்கினார்கள்.ஐயோ இது என்ன..?கத்திவிட்டார் ஷண்முகசுந்தரியம்மா.குழந்தையின் கண்கள் இமைக்குள் அடங்காமல் பெரிது பெரிதாய் முட்டை முட்டையாய் இருந்தன.கிட்டத்தட்ட ஏலியன் கண்களைப்போல்.அதுமட்டு மல்லாது கண்விழிகள் ஓரிடத்தில் நில்லாமல் சின்னச் சின்ன இமைகளுக்குள் பம்பரம் சுற்றுவதுபோல் சுற்றிக்கொண்டே இருந்தன.குழந்தையின் கண்களைப்பார்த்த அனைவரின் முகமும் வடிந்துபோயிற்று.யாரும் பேசிக்கொள்ளவே இல்லை.வடிவின் தாய் கதறி அழ ஆரம்பித்தார்.

வடிவு குழந்தையைப் பார்த்ததும் அலறிய அலறல்..சொல்ல முடியாது.குழந்தையைத் தன் அருகில் படுக்க வைக்க மறுத்ததோடு பால் கொடுக்கவும் மறுத்துவிட்டாள்.அவள் மனதை மாற்றி அவளை சம்மதிக்கவைப்பது பெரும் பாடாயிற்று.

கோலவிழியாள் என்ற பெயரோடு கொஞ்சம் குறைவான பார்வையோடு செவிவழிக் கல்வி அறிவோடு வளர்ந்த கோலவிழியாளுக்கு திருமண வயது வந்தபோது திண்டாடிப் போனார்கள் வடிவும் அவளது கணவரும்.வேறு வழியின்றி தனது மளிகைக் கடையில் வேலைபார்க்கும்   கிட்டத்தட்ட பாகப்பிரிவினை சிவாஜிபோல் கைகால்களைக் கொண்டிருந்த தங்கவேலுக்கு மகளைக் கட்டிக்கொடுத்தார் வடிவின் கணவரும் கோலவிழியாளின் அப்பாவுமான முருகேசன்.தங்கவேலு மிகவும் நல்லவன்.அவன் தன்குறையை அறிந்திருந்ததால் கோலவிழியின் குறை பற்றி பெரிதாய் நினைக்கவில்லை.ஒரே வருடத்தில் அவர்களுக்கு ஒரு ஆண் குழந்தைஎந்தக் குறையும் இல்லாமல் பிறந்ததும் மகிழ்ந்து போனார்கள் வடிவும் முருகேசனும்.பேரனைப் பார்த்த திருப்தியோடு ஒருவர்பின் ஒருவராகப் போய்ச் சேர்ந்தார்கள்.

எல்லாத் தாயும் போலவே கோலவிழியாள் தன் மகனிடம் அளவு கடந்த பாசத்தோடு அவன் மீது உயிரையே வைத்திருந்தாள்.எல்லாக் குழந்தையும் போலவே குழந்தை முரளியும் தாயோடு ஒட்டிக்கொண்டுதான் இருந்தான்.ஒரு நிமிடம் கூட அம்மாவை விட்டுப் பிரியாமல் குறிப்பிட்டுச் சொல்லவேண்டுமானால் அம்மா பாத்ரூம் போனால்கூட பின்னாடியே போவான்.எல்லாம் ஐந்தாம் வகுப்புக்கு வரும்வரைதான்.அதுவரை அவனுக்குத் தாயின் குறை தெரியவில்லை.கொஞ்சம் விபரம் தெரிய ஆரம்பித்தபோது.. அம்மா..எனக்கு..அடுத்தவீட்டு..பக்கத்துவீட்டு ஆன்ட்டிக்கு..எங்க டீச்சருக்கு..என்னோட ஃப்ரண்டு வைபவ்,சாய்,நீத்து,அனு,எல்லாரோட கண்ணும் அழகா இருக்கே ஒனக்கு மட்டும் என் இப்பிடி அசிங்கமா,,,பெருஸ்ஸ்ஸா...முட்ட முட்டயா இருக்கு?அதுவும் கரகரன்னு சுத்திக்கிட்டே இருக்கு?ஒன்ன பாத்தாலே அசிங்கமா வாந்தி எடுக்க வரா மாதிரி இருக்கும்மா..என்னோட ஃப்ரண்டெல்லாம் ஒங்கம்மா என்னடா இப்பிடி இருக்காங்கன்னு  சிரிக்கிறாங்கம்மா.அப்பாவும் இப்பிடி இருக்காரு நீயும் இப்பிடி இருக்குற.....நீங்க ரெண்டு பேருமே என்ன ஸ்கூல் கொண்டுவிட வராதீங்க..எனக்குப் புடிக்கில...மகன் முரளி ஒரு நாள் இப்படிச் சொன்னபோது தவித்துப் போனாள் கோலவிழி.முரளி..முரளிக் கண்ணா அம்மா அப்பாவ இப்பிடில்லாம் சொல்லக் கூடாது.நான் ஒன்னோட அம்மாடா..அவர் ஒன்னோட அப்பாடா.. என்னோட தங்கம்..என்..செல்லம்...எம்புள்ள..எங்கண்ணு.சட்டென அந்த இடத்தைவிட்டு அகன்றான் முரளி.

அதன் பிறகும் கோலவிழி மகன் முரளியிடம் பாசத்தால் நெருங்கி நெருங்கி போனாலும் முரளி விலகியே போனான்.நன்றாகப் படிக்கக் கூடியவனாக இருந்ததால் தாய் தந்தையிடம் வீட்டில் கற்றுக்கொள்ளவேண்டிய தேவை அவனுக்கு இல்லை.கோலவிழியும் சரி தங்கவேலும் சரி அவ்வளவாய் படிப்பறிவு இல்லாதவர்கள் என்பதால் அவர்களிடம் ஏதும் கற்றுக்கொள்ளவும் அவனால் முடியாது.அது அவனுக்கு சாதகமாகவே இருந்தது.தாய் தனக்கு உணவு பறிமாறுவதைக் கூட தவிர்த்தான்.பெற்ற பிள்ளை பெற்றோரின்  பாசத்தைத் தவிற்பதும் அவர்களை மறுப்பதும் எவ்வளவு கொடுமையானது.அக்கொடுமையை அனுபவித்தார்கள் கோலவிழியும் தங்கவேலுவும்.

வீட்டிற்குள்ளேயே மௌன நாடகம் நடந்தது.

கோலவிழியும் தங்கவேலுவும் ஒரு பெற்றோராய் மகனுக்குச் செய்யவேண்டிய கடமையிலிருந்து சிறிதும் நழுவவில்லை.அவன் விருப்பம் எதுவோ அதுவே அவர்களின் விருப்பமுமாய் ஆயிற்று.

ப்போது முரளி ஐ.டி துறையில் வேலைபார்க்கும் ஒரு பி.இ.பட்டதாரி.படிப்பு அவனுக்கு பெற்றோரின் உயர்வையும்  உன்னதத்தையும் சிறப்பையும் கற்றுத்தரவில்லை.மாறாக இன்னும் அவர்களிடமிருந்து தூர விலகிப் போனான்.ஒருமுறை அவனுக்கு பத்திரிகை ஒன்றில் வந்திருந்த கதை ஒன்றைப் படிக்க நேர்ந்தது.

ஒரு தாய்.ஒரு ஏழு அல்லது எட்டு வயதிருக்கும் ஒரு மகன்.அந்த தாய் பார்க்க மிகவும் அவலட்சணமாய்,அழகற்றவளாய்,ஒரு குரூபியாய் கண்கொண்டு பார்க்க முடியாதவளாய் இருப்பாள்.அவளுக்கு தன் மகன் மீது அப்படியொரு பாசம்.குழந்தைக்கும் தான்.இது இயற்கையானது.ஒரு சமயம் அவள் தன் மகனோடு திருவிழா ஒன்றுக்குப் போகிறாள்.திருவிழா என்றால் கூட்டம்தானே?கூட்டத்தில் தாயும் மகனும் பிரிந்து விடுகிறார்கள்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.