(Reading time: 12 - 24 minutes)

தாயைக் காணாமல் மகனும் மகனைக் காணாமல் தாயும் தவித்துத் துடிக்கிறார்கள்.சிறு பிள்ளைதானே அழுது கதறுகிறான்.தாயும் அழுதபடியே மகனைத் தேடுகிறாள்.அது மன்னராட்சி காலம்.தாயைக் காணாது  அழுது தவிக்கும் அச்சிறுவன் காவலர்களால் மன்னனிடம் அழைத்துச் செல்லப்படுகிறான்.மன்னன் அச்சிறுவனிடம் உன் தாய் எப்படி இருப்பார் எனக் கேட்க அவன்.. என் தாய் மிகவும் அழகாக இருப்பாள் என்று சொல்கிறான்.அரசனும் மிக அழகான ஐந்தாறு பெண்களை அவன் முன் நிறுத்தி இவர்களில் உன் தாய் இருக்கிறாறா எனக்கேட்கிறான்.அச் சிறுவன் என் தாய் இன்னும் மிக அழகா இருப்பார் என்கிறான்.அரசனும் மேலும் மிக மிக அழகான நான்கைந்து பெண்களைக் கொண்டுவந்து நிறுத்த அச்சிறுவன் அவர்களில் யாரும் என் தாய் இல்லை.என் தாய் மேலும் அழகு என்கிறான்.மன்னனுக்கு என்ன செய்வதென்று புரியவில்லை.சிறுவன் தொடர்ந்து அழுகிறான்.

அப்போது மகனைக் காணாது அழுது திரியும் அச்சிறுவனின் தாய் மன்னனின் தர்பாரில் சிறுவனொருவன் தாயைப் பிரிந்து அழுதபடி இருப்பதாக அறிந்து அச்சிறுவன் தன் மகனாக இருக்கலாமோ என்று தேடி வருகிறாள்.தன் தாயைக் கண்ட அச்சிறுவன் அம்மா..அம்மா என்று கத்திக்கொண்டே அவளை நோக்கி ஒட தாயும் மகனே என்று ஓடிவந்து அணைத்துக்கொள்ள அங்கே தாய்ப் பாசம் பொங்கிப் பெருகுகிறது.அந்தத் தாயின் முகத்தைப் பார்த்த மன்னனுக்குத் தூக்கி வாரிப் போடுகிறது.ஐயோ!! என்ன? முகமா இது?எவ்வளவு அவலட்சணம்..?எவ்வளவு குரூரி இந்தப் பெண்..கொஞ்சமும் அழகற்ற இப்பெண்ணையா என் தாய் இங்கு பார்த்த அழகிற் சிறந்த பெண்களைவிட மிக அழகு என்றான் இச்சிறுவன்?சிந்தித்தான் மன்னன்.அப்போதுதான் ஒரு உண்மை அவனுக்குப் புலப்பட்டது.எந்தக் குழந்தைக்கும் தன் தாய்தான் மற்றவர்களைக் காட்டிலும் அழகானவள். அதுவும் ஒரு ஆணின் கண்களுக்கு தன் தாய்தான் முதல் அழகி என்றுமே.அதன்பின் தான் மனைவி என்றே எண்ணுவான் அதுதான் உண்மையும் கூட என்று தோன்றியது மன்னனுக்கு.

இவ்வாறு முடிந்தது கதை.ஷிட்..இதெல்லாம் கதைன்னு எழுத வந்துட்டான்..இவன பெத்தவங்க அழகா இருப்பாங்க..கதைக்காகவேண்ணா எழுதலாம்..நிஜ வாழ்க்கைக்கு..?என்று நினைத்தபடி பத்திரிகயைத் தூக்கி எறிந்தான்.

"ங்க..முரளிக்கு கல்யாண வயசு வந்தாச்சே..?..நல்ல பொண்ணா பாக்கச்சொல்லி தரகர்கிட்ட சொல்லலாமா?"ஆரம்பித்தாள் கோலவிழி.

ஆமா..நீயும் நானும் பாக்கர பொண்ணதான் அவன் கட்டுவான்...சொல்ல வந்துட்டா.. என்னதானிருந்தாலும் அவன் நம்ம புள்ளைங்க...அவன் கிட்ட ஒரு வார்த்த கல்யாணத்துக்குப் பொண்ணு பாக்கவான்னு கேளுங்க...மனைவியின் பிடுங்கல் தாங்க முடியாமல் முரளியிடம் போனில் கல்யாணப் பேச்சை ஆரம்பித்தார் தங்கவேலு..

நெருப்பை அள்ளிக் கொட்டுவது போல் வார்த்தைகளை அனலாய்க் கக்கினான் முரளி.

போதும் நிறுத்துங்க...என் கல்யாண விஷயத்துல நீங்க தலையிட வேண்டாம்..என் மனசுக்குப் பிடித்த பெண்ணை நானே தேடிக்கிறேன்..வைங்க போனை...தொடர்பைத் துண்டித்தான்.

எண்ணி ஒரே மாதத்தில் தனக்கு ஒரு பெண்ணைப் பிடித்திருப்பதாகவும் பெண் வீட்டாரின் சம்மதத்தோடு அவர்களை பக்கத்தில் வைத்துத் திருமணத்தை முடித்துக்கொள்வதாகவும் பெண் வீட்டார்கள் சினிமா ஸ்டார்கள் போல் அழகாக இருப்பார்கள் எனவே நீங்கள் அவர்கள் முன் திருமணத்திற்கு வந்து நிற்கவேண்டாம் என்றும் போனிலேயே தெரிவித்த போது இருவரும் உடைந்தே போனார்கள்.

பத்து நாட்கள் சென்றிருக்கும் வாசலில் கார் வந்து நிற்கும் சப்த்தம் கேட்க கோலவிழியும் தங்கவேலும் வாசலை எட்டிப் பார்த்தார்கள்.மகன் முரளியும் ஒரு பெண்ணும் காரிலிருந்து இறங்கி வருவதைப் பார்த்தார்கள்.கோலவிழிக்குப் புரிந்துபோயிற்று.வரும் பெண் முரளியின் மனைவி தங்களது மருமகள் என்று.சட்டென சமயலறைக்குச் சென்று ஆரத்தித் தட்டோடு வந்தார்.

இருவருக்கும் ஆரத்தி எடுத்துவிட்டு மருமகளைப் பார்த்து..வாம்மா..வா..வலது காலை எடுத்து வைத்து உள்ளே வாம்மா..என்றார்.சிலைபோல் பிரமித்துப்போய் நின்றுகொண்டிருந்தார் தங்கவேலு.

இவர்கள் இருவரையும் பார்த்த அந்த புது மருமகளின் கண்களிள் ஏளனம் தெரிந்தது.

பத்தே நிமிடம்தான் கிளம்பிவிட்டாரகள் இருவரும்.முரளி ஏம்ப்பா..ஒடனே கிளம்புற..ரெண்டு நாளாவது இருக்கக் கூடாதா?ஏக்கத்தோடு கெஞ்சுவதுபோல் கேட்டார் கோலவிழி.

இங்கியா..ஒங்க மூஞ்சல்லாம் பாத்துக்கிட்டு ரெண்டு நாள்லாம் இருக்க முடியுமா....கஷ்டம்..கஷ்டம்

சொல்லிக் கொண்டே வாசலை நோக்கி மனைவியுடன் நடந்தான் முரளி.

டேய்..நில்லுடா...கத்தினார் தங்கவேலு.

கணவர் இப்படி கோவமாய்க் கத்தி பார்த்த்தே இல்லை கோலவிழி.திகைத்துப் போய் நின்றாள்.

முரளியும் கொஞ்சம் திகைப்போடு திரும்பிப் பார்த்தான்.

டேய் என்னடா சொன்ன?எங்க மூஞ்ச பாத்துக்கிட்டு ரெண்டு நாளளிருப்பதே கஷ்டமா?பெத்தவங்களொட ஒடம்பு கொறைய இப்படி கேவலமா பேசுறையே..நாளைக்கே என்னமாரியோ.. ஒங்கம்மா மாரியோ ஒரு புள்ளையொ பொண்ணோ உனக்குப் பொறந்தா அந்தக் கொழந்தைய என்னடா செய்யுவ?ஆவேசமாய்க் கேட்ட கணவனின் வாயைப் பொத்தினார் கோலவிழி.ஐயொ.. நம்ம புள்ளைய பாத்து இப்பிடில்லாம் சொல்லாதீங்க..அவனுக்கு அவன் மாரி அழகான புள்ளையோ மருமக மாரி அழகான பொண்ணோ பொறக்கணுங்க...ஒங்க வாயால வேர எதையும் சொல்லாதிங்க.

மனைவியின் கையை விலக்கினார் தங்கவேலு.

சீறும் பாம்பாய் பதில் சொன்னான் முரளி...ஒங்க மாதிரி பிள்ளையோ பொண்ணோ எனக்குப் பொறந்தா அத என் கையாலயே கழுத்த நெறிச்சுக் கொன்னுடுவேன். சொல்லிவிட்டு வேகமாய்ச் சென்று காரி ஏறி விருட் என வண்டியை எடுத்தான்.

புடவைத் தலைப்பை வாயில் அழுத்தி அழுகொண்டு நின்றிருந்தார் கோலவிழி.

அது புகழ் பெற்ற மருத்துவமனை.முரளியின் மனைவி ரோகிணி பிரசவத்திற்காக சேர்க்கப்பட்டி ருக்க அறை வாசலில் கவலையோடு நின்று கொண்டிருதான் முரளி.பக்கத்தில் மாமனார் மாமியார் ம்ற்ற  உறவுகள் என்று பெரும் கூட்டமே இருந்தது.குழந்தை எவ்விதக் குறையும்  இல்லாமல் பிறக்கவேண்டுமே என்ற கவலை அவனுக்கு.தன்  தாய் கோலவிழியாளைப் போலவோ தந்தை தங்கவேலுவைப் போலவோ தன் குழந்தை இருந்து விடக்கூடாது என்பது அவனது பெருங்கவலை.

குழந்தையோடு  முகம் முழுதும் மகிழ்ச்சியோடு வெளிவந்த நர்ஸ்.. வாழ்த்துக்கள் ..நீங்க அப்பாவாய்ட்டீங்க ஒங்களுக்கு ஆண் குழந்த பொறந்திருக்கு என்றபடியே முரளியிடம் குழந்தையைக் காட்டினார். உடலில்  எந்தக் குறையும்  இல்லாமல்  அழகாய் இருந்தது குழந்தை.

அப்பாடா என்று நிம்மதிப் பெருமூச்சு விட்டான் முரளி. 

ஒரு வயதுக் குழந்தை செய்யும்  எந்த செயல்பாடுகளும் தங்கள் குழந்தை சரணிடம் இல்லாதது கண்டு முரளிக்கும் ரோகிணிக்கும் கவலையாய்  இருந்தது.மூன்று வயதில் குழந்தை சரண் ஆடிஸம் குழந்தை என மருத்துவர் சொல்ல இடிந்தே போனான் முரளி.ஆடிஸம் சரிபடுத்தக்கூடிய ஒன்றுதான்  என்றாலும் அதற்காக எடுக்க வேண்டியிருக்கும் முயற்சிகளை நினைத்து அயர்ச்சியாக இருந்தது முரளிக்கு.தன்  தாய் தந்தையின்  உடல் ஊனத்தை சுட்டிக்காட்டி அவர்களை எந்த அளவு  மனதை நோக அடித்திருப்போம்..ஒரு நல்ல மகனாய் ஒரு நாளாவது நட்ந்து கொண்டிருப்போமா?அந்த பாவத்தின் சம்பளம்தான் இப்படியொரு மகன் பிறந்திருக்கிறான்.புரிந்து போயிற்று முரளிக்கு.

தாயின் மடியில் படுத்து அழவேண்டும்போல்  இருந்தது அவனுக்கு.திருந்தி வந்திருக்கும் மகனை கட்டாயம்  ஏற்றுக் கொள்வாள்  அந்த  தாய். தாய் என்றைக்குமே  தாய்தான்.

{kunena_discuss:785}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.