(Reading time: 9 - 18 minutes)

அவளுக்கென்ன - தேவி

This is entry #07 of the current on-going short story contest! please visit contest page to know more about the contest

வனின் மனம் முழுவதும் அவள் நினைவுகளே. அவளை பார்த்து ஒரு மாதம் தான் ஆகிறது என்பதை அவனால் நம்ப முடியவில்லை. ஒரு மாதத்திலேயே பல வருடங்களாக அவனுக்கு உயிராக இருக்கும் பெற்றோர் தங்கையை போலே அவள் அவனுடைய மனதிற்கு வெகு நெருக்கமாகி இருந்தாள். பெற்றவர்கள் பேசி திருமணத்திற்கு தேதியும் நிச்சயத்திருந்தார்கள். இப்போதெல்லாம் அவனுக்கு அவளின் நினைவு மட்டுமே. இப்போது கூட அவனுக்கு முன் இருந்த பைக்கில் இருப்பவள் அவளாகவே அவனுக்கு தெரிந்தாள். ச்சேச்சே அவளாவது இப்படி இன்னொருவனுடன் நெருக்கமாக பைக்கில் பயணம் செய்வதாவது... அவன் நினைத்து முடிக்கும் முன் பைக்கில் இருந்தவள் திரும்பினாள். அது அவளே தான்...

வனால் நம்ப முடியவில்லை. ஆனால் நம்பித்தான் ஆக வேண்டும். ஏனென்றால்  ஒரு வாரத்தில் இது முன்றாம் முறை. முதல் இரண்டு முறை அவளை மாதிரி இருந்தாலும் இன்னும் கொஞ்சம் தூரத்தில் இருந்து பார்த்தான். ஆனால் இந்த முறை சிக்னலில் தெளிவாக பார்த்தான். அவன் காரில் அமர்ந்து பார்த்ததால் அவளுக்கு தெரியவில்லை. ஏதோ சீரியஸ் ஆக அவனோடு பேசிக் கொண்டிருந்தாள். இருவர் முகமும் வருத்தமும் மகிழ்ச்சியும் கலந்து இருந்தது,.

avalukkennaஅவன் .. சித்தரஞ்சன். சிவில் இன்ஜினியரிங் முடித்து விட்டு சொந்தமாக தொழில் செய்கிறான்.  அவள் .. மனோஹரி.... வணிகவியலில் பட்ட மேற் படிப்பு முடித்து விட்டு  ஒரு கார்பரேட் அலுவலகத்தில் பணியாற்றி வருகிறாள்.

ஒரு மாதத்திற்கு முன் தன் தாயின் நச்சரிப்பு தாங்காமல் பெண் பார்க்க சென்றவனுக்கு பார்த்ததும்  மனோவை பிடித்து விட, உடனே சம்மதம் சொல்லி விட்டான். அப்போதும் அவளின் சம்மதத்தையும் தனியாக அவளிடம் கேட்டுதான் தன் வீட்டில் சொன்னான்.

அன்றிலிருந்து உலக பொது வழக்கமான காதலர்களும் , எங்கேஜ்டு என்று சொல்லப்படும் நிச்சயிக்கபட்டவர்களுக்குமான விதிமுறையாக தினமும் போனில் பேசி அவளோடு கடலை போட்டான். அவளும் அவனுக்கு சளைக்காமல் பேசினாள். ஒரு நாள் அவன் போன் வர நேரமாகிவிட்டால் அவள் 5 நிமிடத்திற்கொருமுறை மெசேஜ் அனுப்புவாள்.

திருமண புடவை, நகைகள் எடுக்க செல்லும் போது பிறர் அறியாமல் அவளிடம் சில சிலுமிஷமும் செய்தான். அதை அவள் ரசிக்க, அவள் ரசிப்பதை பார்த்த அவன் அவளை ரசிக்க என்று நாட்கள் சென்று கொண்டிருந்தது. இந்த நிலையில்தான் அவளை வேறு ஒருவனோடு பார்த்தது. 

அவள் அவனை விட்டு சென்று விடுவாளா. வீட்டில் ஒத்துக் கொள்ள மாட்டார்கள் என்று திருமணத்தன்று ஓடி விடுவாளோ.. என்றெல்லாம் எண்ணினான். தானே திருமணத்தை நிறுத்தி விடுவோமா என்று யோசித்தாலும் அவனால் அவளை விட்டு கொடுக்க முடியும் என்று தோன்றவில்லை. ஆனால் பிடிக்காதவளை மணந்தால் வாழ்க்கை என்ன ஆகும் என்றும் தோன்றியது. ஒன்றும் புரியாமல் தலையை பிடித்த படி அமர்ந்திருந்தான்.

இந்த குழப்பத்தில் அவன் இரண்டு நாளாக மனோவிடம் பேசவில்லை. ஆனால் அதிசயமாக மனோஹரியும் அவனை அழைக்கவில்லை. இதுவே அவனை இன்னும் குழப்பத்தில் அழுத்தியது. இன்னும் திருமணதிற்கு ஒரு வாரமே என்ற நிலையில் அன்றைக்கு மனோ அவனை அழைத்தாள். முதலில் எடுக்க வேண்டாம் என்று எண்ணினான். பிறகு பேசினான்.

“ஹலோ ... “ என்றான்.

“சித்து .. நான் மனோ பேசுகிறேன்”

“ஹ்ம்ம். சொல்லு ..”

“வந்து.. நான் இன்றைக்கு உங்களை சந்திக்க வேண்டுமே “ என்றாள்.

“என்ன தீடிரென்று ..? இன்னும் ஒரு வாரம் தானே நம் திருமணத்திற்கு இருக்கிறது. இப்போ சந்தித்தால் யாரும் ஒன்றும் சொல்ல மாட்டார்களா?” என்றான். தன் குழப்பத்தை அவளிடம் காண்பிக்காமல் தான் பேசினான்.

மனோவோ “அதற்கு முன்னால் பேச வேண்டும் என்றுதான் உங்களை சந்திக்க விரும்புகிறேன்.” என்றாள்.

“கட்டாயம் சந்திக்க வேண்டுமா “ என்று தள்ளிபோட முயன்றபடி கேட்டான்.

“ஹ்ம்ம் “ என்று சொல்லவும், தன் தவிப்பை மறைத்து “சரி.. எங்கே வரட்டும் “ என்றான்.

ஒரு ஹோடேலின் பெயரை சொல்லி அங்கே மாலை ஆறு மணிக்கு வர சொன்னாள்.

அவளுக்கென்ன ? அங்கே வந்து அவனிடம் சொல்லி விட்டு தன் காதலனோடு சென்று விடுவாள். தன் நிலைமை என்ன ? என்று தவித்தான். தவிர்க்க முடியாமல், தவிப்போடு அவன் அங்கே சென்ற போது அங்கே மனோஹரியோடு அவன் அன்று பார்த்த அந்த பைக்காரனும் இருந்தான். அவன் சற்று நேரம் தன்னை நிதானப்படுத்தி பின் அவர்கள் அமர்ந்திருந்த இடத்திற்கு சென்றான்.

வனை பார்த்தவுடன் இருவரும் எழுந்து நின்றனர். அவனை பார்த்த மனோவின் கண்களில் மகிழ்ச்சியும், அதே சமயம் சஞ்சலமும் கண்டான். அவளையே பார்த்தபடி “சொல்லும்மா என்ன விஷயம் ?” என்றான்.

மனோவோ “முதலில் உட்காருங்கள்” என்றாள்.

அவன் அமரவும், அவள் அருகில் அமர்ந்திருந்த அவனும் மீண்டும் அதே இடத்திலேயே அமர்ந்தான். சித்துவிற்கு காதில் புகை வராத குறை. ஒன்றும் சொல்லவில்லை.

மனோ சற்று தயங்கி விட்டு, “சாப்பிட என்ன சொல்லலாம் “ என்றாள்.

சித்துவோ பொறுமை இழந்தனவாக “எதற்கு என்னை வர சொன்னாய்? அதை சொல்” என்றான் மீண்டும்.

மனோவோ “ப்ளீஸ் .. கொஞ்சம் பொறுமையாக நான் சொல்வதை கேளுங்கள்.” என்றவள், “வந்து... இவன் .. இவள்.. “ என்று தடுமாறி “ பார்கவி .. என் தங்கை இல்லை இல்லை தம்பி “ என்று உளறினாள்.

சித்து ஒன்றும் புரியாமல் முழித்தான்.

இப்போது மனோ கொஞ்சம் தைரியம் பெற்றவளாக “சித்து .. எங்கள் வீட்டில் நான் ஒரே பெண் என்று சொல்லி விட்டார்கள். ஆனால் எனக்கு ஒரு தங்கை உண்டு. அவளை  வீட்டில் சேர்ப்பதில்லை. ஏனென்றால் “ என்று தயங்கியவள்

“இவள் ஒரு திருநங்கை. பெண்ணாக பிறந்து ஆண் ஆனவள். “ என்று முடிக்கவும், சித்து இப்போது மிகவும் ஆச்சரியம் அடைந்தான்.

நன்றாக பார்க்கும் போது அந்த வித்தியாசம் தெரிந்தது. அதோடு அப்படியே ஜாடையும் இருந்தது. சற்று நேரம் அமைதியாக இருந்த சித்து

“எப்போதிலிருந்து இப்படி ? “ என்றான்.

“அவள் சிறு வயதிலேயே ஆண்கள் விளையாடும் கபடி போன்ற விளையட்டுதான் விளையாடுவாள். வீட்டிலேயே இருக்க மாட்டாள். வெளியில் நண்பர்களோடு சுற்றுவாள். மேலும் அலங்காரம் செய்து கொள்ள பிடிக்காது. நாங்கள் இதை எல்லாம் பெரிதாக எடுக்கவில்லை. கொஞ்ச நாட்கள் அவளின் டீனேஜ் வரும் போது மிகவும் வித்தியாசமாக நடந்தாள். அப்போது  டாக்டரிடம் காண்பித்தபோது அவர் அவளின் மாற்றத்தை சொன்னார்.

வீட்டில் எல்லோருக்கும் வேதனை. அப்பாவும் அம்மாவும் என்ன செய்ய என்று தெரியாமல் முழித்தனர். இவளோ ஸ்கூல் செல்லவில்லை. அப்போதுதான் ஒரு தொண்டு நிறுவனத்தின் மூலம் இவளை போன்றவர்களை பற்றி தெரிந்து அங்கே அவளை சேர்த்தோம். அங்கேயே அவள் தபால் மூலம் படித்து, இப்போது சொந்தமாக ஆன் லைன் பங்கு நிறுவனம் நடத்தி வருகிறாள்.

எங்கள் வீட்டில் இவளை வெறுக்கவில்லை. ஆனால் சேர்ந்து இருப்பதிலும் நிறைய நடைமுறை சிக்கல்கள் இருந்ததால் இவளை இறந்ததாக உறவினர்களை நம்ப வைத்தார்கள். தொண்டு நிறுவனத்தோடு சேர்ந்து இவளும் சில உடல் மாற்றங்களை ஏற்படுத்திக் கொண்டதால் யாருக்கும் வித்தியாசம் தெரிவதில்லை.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.