(Reading time: 9 - 18 minutes)

ம்மாவும் அப்பாவும் அவளோடு போனில் பேசுவார்கள். நான் வாரம் ஒரு முறை வந்து பார்ப்பேன். ஆனால் அப்பா அம்மா வெளியில் சொல்ல வெட்கப்பட்டு கொண்டு ஒரே பெண் என்று விட்டார்கள். எனக்கு பிடிக்கவில்லை தான், ஆனால் நான் எதாவது சொன்னால் இன்னும் வேதனைபடுகிறார்கள். அதனால் தான் உங்களிடம் ஒன்றும் சொல்ல முடியவில்லை,

உங்களிடம் சொல்ல இவளும் ஒப்பு கொள்ளவில்லை. இதனால் நம் திருமணத்தில் பிரச்சினை ஏற்படுமோ என்று பயந்தாள். ஆனால் எனக்கு மனம் கேட்கவில்லை, திருமணதிற்கு முன் உங்களிடம் எல்லாம் சொல்லி விடவேண்டும் என்றுதான் இன்று வர சொன்னேன்.

நம் இருவருக்குள் ஒளிவு மறைவு கூடாது என்பது என் கருத்து. அதோடு என்னால் இவளை அவ்வப்போது வந்து பார்க்காமல் இருக்க முடியவில்லை. பிறகு தெரிந்தால் நன்றாக இருக்காது. அதனால் தான் இன்றைக்கு உங்களை வர சொன்னேன்” என்று முடிக்கவும் அவ்வளவு நேரம் பேசியதில் வேகமாக தண்ணீர் குடித்தாள்.

சித்துவின் மனமோ அந்த விண்ணில் பறந்தது. அவன் பயமும் , தவிப்பும் தீர்ந்து நிம்மதியாக இருந்தது. சற்று நேரம் அமைதியாக இருந்தவன், பிறகு அவர்கள் இருவரின் முகங்களை பார்த்து சிரித்து கொண்டே,

“ஏன் .. பார்கவி .. என்று தயங்கியவன் “ இப்போ உன் பெயர் என்ன?” என்றான்.

“அவன் ஹரி” எனவும் அவன் ஆச்சரியமாக விழிக்கவும் “என் அக்காதான் இந்த பிரச்சினையின் போது எனக்கு உறுதுணையாக இருந்து ஒவ்வொன்றும் செய்தாள். அவள் மட்டும் இல்லையெனில் நான் இன்று ஒரு கௌரவமான நிலையில் இருந்திருக்க மாட்டேன். அதனால் தான் அவள் பெயரில் பாதி ஹரி என்று வைத்துக் கொண்டேன்.” என்றான்.

மனோவை காதலாக பார்த்தவன் “ஹரி, உன் அக்காவிற்கு என்ன தண்டனை கொடுக்கலாம் சொல்லு “ எனவும் , இருவரும் “தண்டனையா எதற்கு “ என முழிக்கவும்,

“பின் என்ன ? ஒரு வாரத்தில் என்னோடு திருமணம் ஆகப் போகிறவள், வந்து இவ்வளவு நேரம் ஆகியும் , என் அருகில் உட்காராமல் , உன்னோடு அமர்ந்திருக்கிறாளே .. என்ன செய்யலாம் ?” என்று சிரிக்கவும்,

ஹரியோ சிரிக்க, மனோவோ அவனை முறைத்தவாறே அவனருகில் அமர்ந்தாள். அவர்கள் இருவரின் பொருத்தம் பார்த்து ஹரியின் மனம் நிறைந்தது.

மனோ “சித்து .. இதை பற்றி சொல்லாததில் என் அப்பா அம்மா மேல் உங்களுக்கு ஒன்றும் வருத்தமில்லையே ..  என்று கேட்க.. “ஹே.. இதில் என்ன வருத்தம் ? எனக்கு அவர்கள் நிலைமையும் புரிகிறது. நீங்கள் இருவரும் என்னிடம் சொன்னது நல்ல விஷயம். இனிமேல் இதை பற்றி கவலைபடாமல் மற்ற வேலையை பாருங்கள் “ என்று கூறியவன், பேரரை அழைத்து மூன்று பேருக்கும் ஸ்வீட் கொண்டு வர சொன்னான்.

சற்று நேரம் பேசி கொண்டிருந்து விட்டு, “ஹரி .. நீ எங்கள் கல்யாணத்திற்கு வருகிறாய் அல்லவா ?” என்று கேட்க, இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்து விட்டு,

“இல்லை ... மாமா ..எங்கள் சொந்தங்களுக்கு நான் இறந்து விட்டதாகத்தான் தெரியும். இப்போது நான் வந்தால் எப்படியும் ஜாடை காட்டி விடும். அதனால் வேண்டாம். நீங்கள் இருவரும் திருமணம் முடிந்து, உங்கள் ரொமாண்ஸ் எல்லாம் முடித்து விட்டு என்னை பார்க்க வாருங்கள்”

ஹே.. எங்கள் ரொமாண்ஸ் 6௦ ம் கல்யாணம் வரை தொடரும். அதனால் அதில் கை வைக்காதே. ஆனால் நாங்கள் வருகிறோம்.”

என்று கூறவும், இருவரையும் பார்த்து தன்னோடு அணைத்து விடுத்தான் ஹரி.

பிறகு இருவரும் கிளம்பவும் “எப்படி வந்தாய் மனோ ? என்றான் சித்து.

“நான் ஆபீஸ் விட்டு பஸ் பிடித்து நேராக இங்கே வந்து விட்டேன். ஹரியின் இல்லம் பக்கத்தில்தான். அவன் ஆட்டோவில் வந்து விட்டான் என்றாள்.

சித்து “சரி.. காரில் ஏறுங்கள் இருவரையும் கொண்டு விடுகிறேன்.” என்றான்

மனோ ஹரியோடு பின்னால் ஏறப் போக, ஹரியோ அவளை பிடித்து முன்னால் அவனோடு அமர வைத்தாள். சித்து ஹரிக்கு ஹாய் பை கொடுத்தான்.

ல்லத்தில் ஹரியை கொண்டு விட்டு கொஞ்ச நேரம் அங்கே செலவழித்தனர். திரும்பும் போது சித்து “தேங்க்ஸ் அண்ட் ப்ரௌட் ஆப் யு .. மனோ.. நான் இப்படியெல்லாம் நினைத்து பார்த்ததில்லை. இவர்களை கேலி செய்ய மாட்டேன். பாவம் என்று எண்ணுவேன் தவிர, அவர்களோடு சகஜமாக இருக்க மாட்டேன். நீ ரொம்ப கிரேட்.” என்றான்.

“அதெல்லாம் இல்லை சித்து. நான் பார்கவிக்கு இந்த பிரச்சினை வந்த பிறகு அவளை விட்டு கொடுக்க முடியாமல் தேடிய போதுதான் இவர்களை பற்றி தெரிந்து கொண்டேன். இப்போ அவர்களோடு பழகும் போதுதான் நம்மை விட அவர்கள் எந்த விதத்திலும் குறைந்தவர்கள் அல்ல ... என்று புரிய ஆரம்பித்தது. ஆனால் எல்லோரும் இதை ஒப்புக் கொள்வதில்லை என்பதால், நான் யாரிடமும் இதை பற்றி விவாதம் செய்வதில்லை “ என்றாள்.

பிறகு கொஞ்ச நேரம் ஸ்வீட் நதிங்க்ஸ் பேசிக் கொண்டு வீட்டில் விட்டவன். தன் திருமண நாளை ஆவலோடு எதிர்பார்த்தான். அவனின் மனம் முழுவதும் அவளின் நினைவுகளே..

This is entry #07 of the current on-going short story contest! please visit contest page to know more about the contest

 

{kunena_discuss:926}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.