(Reading time: 11 - 22 minutes)

வ சமைச்சா எங்க பசங்க சாப்புட மாட்டாங்க’

‘அவள முதல வேலைய விட்டு நிறுத்துங்க’, என்று கூச்சல் போடத்தொடங்கினர்.

‘அப்டியெல்லாம் எதுவும் இல்ல, நீங்க எந்த காலத்துல இருக்கீங்க? இந்த மாதிரி உப்பு பெறாததுக்காக எல்லாம் யாரையும் வேலையை விட்டு நிறுத்தமுடியாது. நீங்க எல்லாம் முதல கிளம்புங்க’, என்ற கணேசன் சாரின் கண்டிப்பான பேச்சுகள் யாரையும் அசைக்கவில்லை.

‘ஐயோ இந்த வேலை இல்லனா நானும் என் பிள்ளைகளும் தெருவுல தானே நிக்கனும்’, என்ற பரிமளாவின் கதறல் யாருக்கும் கேட்கவேயில்லை.

‘பரிமளா இங்க சமைச்சா நாங்க எங்க பசங்கள பள்ளிகூடத்துக்கே அனுப்பமாட்டோம், பள்ளிகூடத்தையே மூடிடுவோம்’ என்றதோடு நில்லாமல் பிள்ளைகளை வெளியே விரட்டிவிட்டு பள்ளியைப் பூட்டினர். அந்த பள்ளியின் மூன்று ஆசிரியர்களால் அவர்களை சமாளிக்க முடியவில்லை.

மூடநம்பிக்கையில் மூழ்கிய மூடர்கள் நிறைந்த கிராமத்தில் அடுத்து வந்த மூன்று நாட்களும் பள்ளி மூடப்பட்டு கிடந்தது.

பரிமளாவால் நடந்த சம்பவத்தின் அதிர்ச்சியில் இருந்து மீளமுடியவில்லை. எதிர்காலத்தை எண்ணி மனதுடைந்து வீட்டுக்குள்ளே முடங்கி போன பரிமளாவை சந்தித்த தலைமையாசிரியர் கணேசன், ‘அம்மாடி இந்த மனுவ எடுத்துகிட்டு மேலதிகாரிகளை போய் பாருமா, நல்லது நடக்கும்னு நம்புவோம்’ என்று அனுப்பிவைத்தார்.

கிராம நிர்வாக அலுவலகம், கல்வி அதிகாரி அலுவலகம் என ஒரு மாதமாக அலைந்ததுதான் மிச்சம். பரிமளாவின் மனு கேட்பாரற்று கிடந்தது.

இதற்கிடையில் பரிமளா  இல்லாமல் பள்ளி திறக்கப்பட்டு வழக்கம்போல் இயங்கிக்கொண்டிருந்தது.

சில தினங்களுக்குப் பிறகு,

அடுத்து என்ன செய்வது என்று தெரியாத பரிமளா கணேசன் சாரை சந்தித்து தன் பிரச்சனையை எந்த அதிகாரியும் கேட்ககூட இல்லை என்பதை வருத்தத்துடன் தெரிவித்தாள்.

‘இனிமே இவுங்கள நம்பியிருந்தா சரிவராது, நாளைக்கு காலையில நீ கலெக்டர் ஆபிஸுக்கு போம்மா, அங்க மக்கள் குறைதீர் கூட்டம் நடக்குது. அங்க உன் பிரச்சனையை சொல்லு நிச்சயம் தீர்வு கிடைக்கும்’ என்று நம்பிக்கையூட்டினார்.

 ஏதோ ஒரு நம்பிக்கையில் மக்கள் குறைதீர் கூட்டத்திற்கு சென்றாள் பரிமளா. அவளுடைய மனு மாவட்ட ஆட்சியர் ராகுல்குமாரின் கவனத்திற்கு வந்தது. உடனே அவளை அழைத்த ஆட்சியர், ’நீங்க நாளைக்கு எப்போதும் போல பள்ளிக்கூடத்துக்கு போய் உங்க வேலையை பாருங்க, இனிமே எந்த பிரச்சனையும் வராது’ என்று அனுப்பிவிட்டார்.

மறுநாள் காலை, திரும்பவும் பிரச்சனை வந்துடுமோ பள்ளிக்கூடத்த மூடி நம்மல வேலையை விட்டு போகச் சொல்லிடுவாங்களோ என்ற பெரும் தயக்கத்துடனும் பயத்துடனுமே பரிமளா பள்ளிக்குச் சென்று தன் வேலையை பார்க்க தொடங்கினாள்.

அவள் மறுபடியும் வேலைக்கு வந்தது தெரிந்து ஊர்மக்கள் சிலர் சலசலத்துக் கொண்டிருந்தனர். நேரம் ஆக ஆகக் பள்ளியின்முன் கூட்டம் சேரத்தொடங்கியது. அந்த நேரத்தில் மாவட்ட ஆட்சியரின் கார் பள்ளிக்கு வந்தது.

காரில் இருந்து இறங்கிய ஆட்சியர் ராகுல்குமார் , விடுவிடுவென சமையல் கூடத்தின் உள்ளே சென்றார். எல்லோரும் திகைத்து நிற்கையில்  அவர் பரிமளாவை பார்த்து, ’ ஒரு தட்டுல சாப்பாடு போட்டு எடுத்துட்டு வாங்க ‘ என்றார்.

முதலில் திகைத்தாலும் அவர் சொன்னதை செய்தாள் பரிமளா. அவள் நீட்டிய சாப்பாட்டுத் தட்டினை வாங்கிக்கொண்டு அங்கேயிருந்த திண்ணையில் உட்கார்ந்து சாப்பிட ஆரம்பித்தார் ஆட்சியர் ராகுல்குமார்.

அவர் சாப்பிடுவதை கண்ட ஊர்மக்கள் தங்களுக்குள் பேசிக்கொண்டனர். தட்டிலிருந்த சாப்பாடு முழுவதையும் சாப்பிட்டுவிட்டு வெளியே வந்த ராகுல்குமார், ‘கணவனை இழந்த ஒருத்தர் சமைச்ச சாப்பாடு எந்த விதத்துலயும் பாவமில்ல, இது உங்க எல்லாருக்கும் புரியனும்னுதான் நான் அந்த சாப்பாட்ட சாப்பிட்டேன். பரிமளா இந்த பள்ளிக்கூடத்துக்கு தொடர்ந்து வேலைக்கு வந்துட்டுதான் இருப்பாங்க. இப்ப நீங்க எல்லாம் கூட்டம் போடாம கிளம்புங்க’, என்று சொல்லிவிட்டு அவர் சென்றுவிட்டார்.

விதவை என்பது வலி, அடையாளம் அல்ல.

இனியேனும் புரிந்துக்கொள்வார்களா??

பீகார் மாநிலத்தில் ஒரு கிராமத்தில் நடந்த சம்பவத்தை சமீபத்தில் இணையத்தில் படித்ததின் தாக்கமே இந்த சிறுகதை. இது என்னுடைய முதல் முயற்சி. என்னை எழுத தூண்டிய சில்சீக்கும் அதன் எழுத்தாளர்களுக்கும் நன்றி. தயவுசெய்து நிறை,குறைகளை சுட்டிக்காட்டவும்.

{kunena_discuss:785}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.