(Reading time: 4 - 8 minutes)

என்னமோ இருக்கு.. - ஷரோன்

This is entry #20 of the current on-going short story contest! please visit contest page to know more about the contest

சொல்லுங்க பிரசன்னா, உங்களுக்கு என்ன பிரச்சனை?”

“எனக்கு ஏன் இப்படி தோணுதுனே தெரில. ஆனா, ஏதோ... அதை எப்படி சொல்றதுனு சரியா தெரியல. ஏதோ தப்பாயிருக்குற மாதிரி. என்னை சுத்தி, அந்த காலி ரூம்ல யார் யாரோ இருக்குற போல. இப்போ சொல்லும் போது கூட உடம்பெல்லாம் சிலுக்குது பாருங்க.”

தன் முன்னால் அமர்ந்திருந்த மனநல மருத்துவர் ஹரிஷிடம் தன் உணர்வுகளை விளக்கத் தொடங்கினாள் பிரசன்னா.

Ennamo irukkuசற்றே படபடத்த இதயத்துடன் அமர்ந்திருந்த அவளை அமைதியாக்க எண்ணிய ஹரிஷ், “எக்ஸைட் ஆகாதீங்க. கூல். மேல சொல்லுங்க. நீ அப்படி ஃபீல் பண்ண இடம் எது? ஐ மீன், சம்பவம் எது? கொஞ்சம் தெளிவா சொல்லுங்களேன்.”

“நான் வேலை செயுற ஆபீஸ்ல எனக்கு ரீலொக்கேஷன் கிடைச்சு நான் பெங்களூர்க்கு ஷிப்ட் ஆனேன். பொதுவா எனக்கு தனியா இருக்க தான் பிடிக்கும். நான் அசைன் ஆகியிருக்குற ப்ரொஜேக்ட் முடிய எப்படியும் ரெண்டு வருஷம் ஆகும்னு தெரியும். ஸொ, வீட்ல இருந்து வரவங்க தங்கவும் வசதியா இருக்கும்னு நினைச்சு, ஒரு தனி வீடு வாடகைக்கு எடுத்தேன்.”

“ஹம்ம்.. சரி. அப்புறம்..”

“ஒரு வாரம் எல்லாம் சரியா தான் இருந்துச்சு. அப்புறம், என்னை தவிர யாரோ, ஏதோ அங்க இருக்குற போல ஒரு உணர்வு. நம்ம பிரம்மையா இருக்கும்னு விட்டுடேன். அப்போ தான், என் அப்பா, அம்மா, தம்பி எல்லாரும் ஒரு கல்யாணத்தை அட்டெண்ட் செய்ய என் வீட்டுக்கு வந்திருந்தாங்க.”

“ஒரு நாள் நைட், பயங்கர மழை பெய்து, அப்போ தான் விட்டிச்சு. வீட்ல கரண்ட் இல்ல. நான் ரூம்ல லப்டாப்ல வேலை பார்த்துட்டு இருந்தேன். அங்க வித்யாசமான சில சத்தம், வாசம் எல்லாம் வந்துச்சு. எனக்குள்ள ஒரு பயம் பரவ ஆரம்பிச்சுது. திடீர்னு அம்மா உள்ள வந்தாங்க. ‘கரண்ட் தான் இல்லையே, வா.. மாடில போய் கொஞ்ச நேரம் இருக்கலாம்’னு கூப்டாங்க. அவங்கள போக சொல்லிட்டு, நானும் லப்டாப்- ஐ ஷட் டவுன் பண்ணி எடுத்து வச்சுட்டு கிளம்பினேன். செல் போனை நோண்டிகிட்டே நடந்தேன்.”

“நான் என் பக்கத்து ரூமை கிராஸ் பண்ணும்போது, யாரோ உட்கார்ந்து இருக்குறது போல இருந்துச்சு. பின்னாடி பொறுமையா நடந்து வந்து பார்த்தா, இருட்டுல கேண்டில் ஏத்தி வச்சுட்டு, அம்மா மட்டும் தனியா இருந்தாங்க. என்னடானு நான் யோசிக்கும் போது, என் கைய யாரோ பிடிச்சாங்க. எனக்கு தூக்கி வாரி போட்டுச்சு. திரும்பி பார்த்தால், என் தம்பி.”

“ என்னடா, மாடிக்கு போகல? னு நான் கேட்க, இடம் வலமாக தலையசைத்தவன், அம்மாவை பார்த்து, அந்த அறைக்குள் நுழைந்தான். சிலையா உட்கார்ந்த அம்மாவின் கரம் பற்றி எதேதோ பேசிக்கிட்டு இருந்தான்.”

“பட், அவங்க கிட்ட எந்த ரெஸ்பான்ஸ்ஸும் இல்ல. முன்னடி இருந்த சுவத்தையே வெறிச்சு பாத்துக்கிட்டே இருந்தாங்க. ‘இது என் அம்மா தானா???’ அப்படினு ஒரு கலக்கம். டக்குனு என் தம்பியோட கை பிடிச்சு இழுக்க ஆரம்பிச்சேன்.

‘வா டா, வெளிய போகலாம்..’

‘நீ போ டி, நான் அம்மாவோட தான் இருப்பேன்’

‘சொல்றத கேளு, வா னு சொல்றேன்ல..’

கோபம் வந்தவனாக, ‘உனக்கு புரியல, நான் இங்கயே தான் இருப்பேன். நீ தான் போகனும்.’

“அவன் சொல்லி முடிச்சதும், டக்குனு கேண்டில் அணைஞ்சு போச்சு. பயத்துல மூச்சு வாங்க, என் செல் போன் டார்ச்சை ஆன் செய்தேன். ஆனா அங்க....”

டாக்டர், “ உங்க அம்மா இல்லாத இருந்தாங்களா? “

“ இல்ல, அதே போல தான் அம்மா.. அதாவது அம்மா போல இருந்த உருவம் இருந்துச்சு. ஆனா, என் தம்பி அங்க இல்ல. சுத்தி லைட் அடிச்சு பார்த்துக்கிட்டு இருக்கும்போது, திடீர்னு ஒரு சௌண்ட். ரூம் வாசல்ல என் தம்பி, ‘ ஹேய், நீ மேல வரலையா?’ னு கேட்டுகிட்டு...”

“ அவ்ளோ தான். உள்ள இருக்குற உருவத்தை அவன் கவனிக்குறதுக்கு முன்னமே, அவன் கைய பிடிச்சு தரதரனு இழுத்துக்கிட்டே நடந்தேன். அவனும் மறுபேச்சே பேசாம நடந்தான்.

“வராண்டால அம்மாவையும் அப்பாவையும் பார்த்ததும் தான் உயிரே வந்துச்சு. அவங்க முன்னாடி அவன் கைய விட்டுட்டு, நடந்ததை சொல்ல ஆரம்பிச்சேன். ‘அம்மா, உள்ள உங்களை போல.. இவனை போல...’ அதுக்கு மேல என்னால பேச முடில. கண்ணை இருக்க மூடிக்கிட்டு, மூச்சை இழுத்து விட்டேன்.

“ அப்போ ‘டங்’குனு ஒரு சத்தம். நான் திரும்பி பார்த்தேன். கரண்ட் வந்திடுச்சு. அங்க.... என் வீட்டு மாடில இருந்து இறங்கி வந்தாங்க,

என் அம்மா என் அப்பா, என் தம்பி

அப்போ, ஒரு நிமிஷத்துக்கு முன்னாடி நான் பார்த்த என் குடும்பம்..???”

சொல்லி முடித்தவள் முகமெல்லாம் வியர்வை துளிகள்.

ஹரிஷ் அவளிடம் தண்ணி பாட்டிலை நீட்ட, அதற்குள் அலறியது அவன் செல் போன். “ ஒரு நிமிஷம் “ என்று அந்த அறையை விட்டு வெளியேறினான்.

சரியாக பத்து நொடிகளில் உள்ளே வந்தான் ஹரிஷ், கையில் சிறு பெட்டியுடன்.

“ ஸாரி மிஸ். பிரசன்னா. நீங்க வருவீங்கனு உங்க ப்ரெண்ட் சொல்லியிருந்தாங்க. டிராபிக்ல மாட்டிக்கிட்டேன். அதான் லேட். ஐ யம் எக்ஸ்டிரிமிலி ஸாரி.”

சொல்லுங்க பிரசன்னா, உங்களுக்கு என்ன பிரச்சனை????????”

This is entry #20 of the current on-going short story contest! please visit contest page to know more about the contest

{kunena_discuss:926}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.