(Reading time: 7 - 13 minutes)

பெண் என்னும் மங்கைக்குள்…. - அன்னா ஸ்வீட்டி

This is entry #19 of the current on-going short story contest! please visit contest page to know more about the contest

ப்பொழுதுதான் நைட்டியை மாற்றிக் கொண்டு தன் அறையை விட்டு வெளியில் வந்த நிலாவின் காதில் விழுகிறது வரவேற்பறையிலிருந்து வரும் டி வி நியூஸ் ஆரம்பிக்கும் சத்தம். சட்டென அவள் கண்கள் கடிகாரத்திற்குப் போகின்றன. கடவுளே மணி 9 ஆகிட்டா…? ஐயோ!!! அப்பா வரும் நேரம். பதறிப் போனவள் வீட்டின் ஒவ்வொரு அறையாய் ஓடி ஓடி நுழைந்து பார்த்தாள்.

‘எல்லா டவலும் ஒழுங்கா மடிச்சு அதது இடத்துல இருக்கா? தப்பி தவறி எதாவது ஒரு டவல் கலஞ்சு எங்கயாவது பெட்லயோ சேர்லயோ கிடந்துதோ அவ்ளவுதான்….’

‘ஓ மை காட்…. வாட்டர் பியூரிஃபயர் பக்கத்துல அப்பாவோட செம்பும் அது மேல மூடியும் ஒழுங்கா இருக்கா….?’ கிட்ச்சனை நோக்கி ஓடியவள் சமையலறையில் சிந்தியிருந்த தண்ணீரில் தெரியாமல் கால் வைக்க ஸ்கிட்டாகி அடுப்படி மேடையில் போய் இடுப்பு இடித்து நின்றாள். அவள் கை பட்டு உருண்டு விழுந்தன விளக்கி கவிழ்த்தியிருந்த பாத்திரங்களில் சில.

pen enum mangaikkul“ஏபிள (ஏய் பிள்ளையின் பேச்சு வழக்கு)  என்னாச்சு…?” சத்தம் கேட்டு வந்து நின்றாள் தங்கை வெண்மலர். அந்த வெண்மலரின் கண்ணில் படுகிறது இப்பொழுது இவள் கையை ஏதோ கிழித்ததால் உண்டாகி இருந்த ஃப்ரெஷ் ஊண்ட்…

”ரத்தம் வருதுபிள….” அவசரமாக வந்து இவள் கையை பிடித்தாள்.

“ஸ்ஸ்ஸ் அப்பா வர்ற நேரம்….இப்ப போய் இத பேசிகிட்டு……” அவசரமாக தன் கையை தங்கையிடமிருந்து உருவிக் கொண்ட நிலா “நல்லவேளை நான் கால் வச்சு வழுக்கினேன்…இல்லைனா இங்க தண்ணி கிடக்கதே தெரிஞ்சிருக்காது…அப்பா மட்டும் இந்த தண்ணிய பார்த்திருந்தாங்களோ…?”. சொல்லியபடி ஓடிப் போய் மேட்டை எடுத்துப் போட்டு தரையில் கிடந்த தண்ணீரை துடைத்தாள்.

‘நேத்தே லிக்விட் ஹேண்ட் வாஷ் கம்மியா தெரிஞ்சுதே…..அப்பா வரவும் அந்த வாஷ்பேசின்ல தான் போய் நிப்பாங்க…’ இப்பொழுது பாத்ரூமிற்கு ஓடியவள் மீண்டுமாய் கிட்சன் அருகிலிருக்கும் ஸ்டோர் ரூமிற்கு வந்து அவசர அவசரமாக அந்த  லிக்விட் ஹேண்ட்வாஷ் சேஷேவை எடுத்துக் கொண்டு போய் பாத்ரூமிலிருந்த அதற்கான கன்டெய்னரில் நிறைத்து வைத்தாள்.

இதற்குள் அப்பா காரின் சத்தம். ‘அச்சச்சோ வந்தாச்சு….எல்லாம் ஒழுங்கா இருக்கா…? எதாவது ஒன்னு அப்பாவுக்கு பிடிக்காத மாதிரி இருந்தாலும் போச்சு….’

இதோ  வந்துவிட்டார் அப்பா.

தன் ஷுவை கழற்றிவிட்டு உள்ளே நுழைந்த அப்பா நேராக சென்று நின்றது பாத்ரூம் வாஷ் பேசின் அருகில் தான். அடுத்த நொடி அவர் கத்திய கத்தில் நிலாவின் உடல் தூக்கி அடித்து தன் நடுக்கத்தை ஆரம்பிக்கிறது.

“கழுத அறிவுகெட்ட கழுத….மோட்டர் போட்டு தண்ணி டேங்க நிரப்பி வைக்கனும்னு கூடவா தெரியாது?...நாளைக்கு கல்யாணமாகி மாப்ள வீட்ல அதுவும் மாமியாரோட இருக்கப்போறவ…” என ஆரம்பித்த அவர் கத்தல்…..கன்னா பின்னாவென எதை எதையோ சொல்லி இவளை திட்ட தொடங்க…

கண்ணில் முட்டும் கண்ணீரும் நடுங்கும் உடலுமாய் ஓடிச் சென்று மோட்டரை ஆன் செய்கிறாள் நிலா.

அடுத்து அவளும் மலரும் என்னதான் சமாதானம் சாரி…இனி கவனமா இருப்போம் என எல்லாவகையிலும் கெஞ்சினாலும் இவள் மனம் வலித்து அழும் வரும் வரை திட்டித் தீர்த்தார் அப்பா.

ந்த போலீஸ் ஜீப் NHசில் போய் கொண்டு இருக்கிறது.

தங்கநாதன் தான் ட்ரைவர். அருகிலிருந்த டி எஸ் பி மங்கை. “ ட்ரைவர் அந்த வல்வோ பஸ் பக்கத்துல போங்க……ஏதோ சரி இல்லை…..செக் போஸ்ட்ல இதை மட்டும் செக் பண்ணாம திறந்துவிடுறாங்க…..”

“மேடம்….வேணாம் மேடம்….கட்சி கொடி இருக்குது முன்னால…” தங்கநாதன் தயங்கினார்.

“அதுக்கு?”

“மேடம்….அவனுங்கல்லாம் எதுக்கும் துணிஞ்சவங்க மேடம்….எதையும் செய்துட்டு போறாங்க….நமக்கு எதுக்கு வம்பு….விடுங்க மேடம்….”

“இப்ப அங்க போறீங்களா இல்லை நாளைக்கு டியூட்டில கோ ஆப்ரேட் செய்யலைனு மெமோ கொடுக்கவா?” மங்கையின் குரலில் உறுதி இருந்தது.

‘வந்துட்டா வந்து…நமக்குன்னு வந்து வாய்க்கா பாரு….திமிர் பிடிச்ச ராங்கி…’ மனதிற்குள் முனகியபடி ஜீப்பை அதன் அருகில் செலுத்தினார் தங்கநாதன்.

“அந்த பஸ்ஸை நிறுத்த சொல்லி இன்டிகேட் செய்ங்க…”

“ஐயோ வேண்டாம் மேடம்….”

“டூ வாட் ஐ சே…”

கீழ் படிந்தார் தங்கநாதன். வேற வழி.

பஸ் தொடர்ந்து செல்ல இங்கிருந்து மைக்கில் அறிவித்தாள் அவள் “ மெரூன் கலர் வல்வோ பஸ் டி என் 64 யு 539 உடனே பஸ்ஸை நிறுத்துங்க”

அவள் அனவ்ன்ஸ்மென்டை தொடர்ந்து அந்த வல்வோ தாறுமாறான வேகத்தில் தலை தெறிக்க பறக்கிறது.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.