(Reading time: 7 - 13 minutes)

ச்சேஸ் தெம்….. போய் பஸ்ஸை மரிச்சு முன்னால போய் ஸ்டாப் பண்ணுங்க ஜீப்பை….”

“ஐயோ வேண்டாம் மேடம்….கொன்னே போட்டுடுவாங்க நம்மளை…” தங்கநாதன் தன் தைரியம் அத்தனையும் இழந்து போய் அலறினார்.

இதற்குள் “ஏய் போலீஸ் நாய்களா இது யாரு வண்டின்னு நினச்சுகிட்டு நாண்டுகிட்டு நிக்க வர்றீங்க….” என கத்தியபடி அந்த பஸ்ஸிலிருந்து ஒருவன் கையில் வைத்திருந்த பீர் பாட்டிலை இவர்கள் ஜீப்பை நோக்கி எறிகிறான்.

அவ்வளவுதான் “ஐயையோ நான் பிள்ளகுட்டிகாரன் மேடம்…” ஜீப்பை நிறுத்திவிட்டு இறங்கி ஓடியே போனார் தங்கநாதன்.

ஓடிப் போன ட்ரைவரை ஒரு நொடி முறைத்துவிட்டு ட்ரைவர் இருக்கைக்கு மாறிய டிஎஸ்பி, ஜீப்பில் அந்த பஸ்ஸை துரத்திக் கொண்டு போய் …துரத்தும் போதே பஸ்ஸின் டயர்களை தன் ரிவால்வரால் ஷூட் செய்து , பஸ்ஸை நிறுத்த செய்து….குறுக்காக வழி மறித்து… உள்ளிருந்த அந்த இரு தடியன்களை ரிவால்வர் முனையில் நிறுத்திய போது பக்கத்தில் வந்து கொண்டிருந்த சில கார்காரர்கள் இவளுக்கு துணையாக வந்துவிட்டனர்.

அன்று பிடிபட்டது  எலெக்க்ஷனில் தன் கட்சிக்கு ஓட்டு போட சொல்லி மக்களுக்கு விநியோகிக்க அந்த கட்சிகாரர்கள் கொண்டு சென்ற பலகோடி பணம்.

இரவு தன் வீட்டிற்கு வந்த டிஎஸ்பி மங்கை தன் அறைக்குள் சென்று ரெஃப்ரெஷ் செய்து நைட்டியை மாற்றி வெளிவர, டிவியில் நியூஸ் சத்தம்.

‘ஐயோ அப்பா வர நேரமாகிட்டு…’ எந்த ரூமிலும் டவல் கலஞ்சு கிடக்கலையே ஓடத் தொடங்கியிருந்தாள் வீட்டில் நிலா என அழைக்கப்படும் மங்கை.

ரவு படுக்கையில் போய் விழுந்தாள் கையில் மொபைலுடன்.

“என்ன இன்னைக்கு என் புலிப்பொண்ணு என்னல்லாமோ செய்துருக்கு போல….டிவி நியூஸ் முழுக்க நீதான்….” எதிர்முனையிலிருந்த ப்ரமித்தின்  குரலில் அத்தனை பெருமிதம் அத்தனை பாராட்டு.

“ம்…..” மென்மையாய் சற்று சிணுங்கலாய் அந்த ம். தான் தானாய் இருக்க முடிகிறவனிடம் அவளின் இயல்பில் வருகிறது அது. அடுத்த மாதம் இந்நேரம் அவனது மனைவியாய் அவன் அருகில் இருப்பாள் இவள்.

“வீட்டுக்கு வர்ற வரைதான் ஹயர் அஃபீஷியல்ஸ் ப்ரெஸ்ஸ்னு பிஸியா இருந்திருப்ப….வரவுமாவது என்ட்ட பேசியிருக்கலாமில்ல நிலாகுட்டி…..நியூஸ் கேட்டதுல இருந்து உன்ட்ட பேச வெயிட் பண்ணிட்டு இருக்கேன்….” ஆஃபீஸ் அவர்ஸில் அவனுடன் பேசும் வழக்கம் இவளுக்கு கிடையாது. அது சரியாய் வராது.

“அதுக்கில்ல ப்ரமித்….நான் வீட்டுக்கு வர்றப்ப மணி 9, அப்பா வர்ற நேரம்….உங்களுக்கே தெரியும்….அம்மா இறந்ததுல இருந்தே அப்பா வீட்டுக்குள்ள நுழையுற நேரம் எடுத்தெதுக்கெல்லாம் கோபபட்டு கத்துவாங்க……இப்ப நம்ம எங்கேஜ்மென்டுக்கு பிறகு அது இன்னும் அதிகமாயிட்டு…..என்னை இப்பவே அப்பா மிஸ் செய்ய ஆரம்பிச்சுட்டாங்க….” இப்பொழுது இவள் குரல் தளுதளுக்க ஆரம்பிக்கிறது.

“அதுவும் அப்பாவுக்கு செகண்ட் அட்டாக் வந்த பிறகு அவங்க கத்துனாலே எனக்கும் மலருக்கும் ரொம்ப பயமாயிருக்கு….பிபி எங்க ஏறுமோ…? என்ன ஆகுமோன்னு ஒரே டென்ஷன்…..அதான் எல்லாத்தையும் பார்த்து பார்த்து எடுத்து வச்சுட்டு இருந்தேன்…..ஸ்டில் நேத்து அப்பா கத்தி தீர்த்துட்டாங்க….ஆனா இன்னைக்கு எதுவும் சொதப்பலை…அப்பா தூங்க போயாச்சு….நான் ரொம்ப சந்தோஷமா இருக்கேன்….” இப்பொழுது முழு மகிழ்ச்சி அவள் குரலில்.

“ ஓ இப்படித்தான் நான் வெளில புலினாலும் வீட்ல எலிதானாங்கும்னு ஏமாத்தி வச்சிருக்கியா அந்த சின்ன பையன?....அத்தான் சார் நீங்க ஒரு ராட்சசிட்ட ஏமாந்துட்டீங்க சொல்லிட்டேன்….”  இவள் பெட்டிற்கு பக்கவாட்டிலிருந்து மலரின் குரல்.

“ஏய் கழுத எப்ப உள்ள வந்த நீ…?....அவர் உனக்கு சின்ன பையனா? “  தன் தங்கையை துரத்த தொடங்கி இருந்தாள் மங்கை.

This is entry #19 of the current on-going short story contest! please visit contest page to know more about the contest

{kunena_discuss:926}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.