(Reading time: 19 - 38 minutes)

விடைதருமா இந்த வாழ்க்கை ? - நித்யா பத்மநாதன்

This is entry #18 of the current on-going short story contest! please visit contest page to know more about the contest

ன்று ,நேரம் இரவு 8.00

உணவைக்கண்ணால் கண்டே ஒருவாரம் ஆகியிருந்த அவன் உடலிற்கு தன் கையில் சிக்கியவனை அடிக்க எங்கிருந்து பலம் வந்ததோ அடித்து கடித்து என தன்னால் இயன்றவரை முயன்று தாக்கினான்.  அடித்துக்கொண்டேயிருந்தான் சில நிமிடங்களுக்க முன்பே தன் கையால் இறந்துபோனவனை. குழந்தையை தூக்கி தோளில் போட்டுக்கொண்டு கால்போன பாதையில் ஓடினான் பார்த்தீபன். இரத்தம் படிந்த கைளில் இரத்தம் படியாத ஒரு உணவுப்பொட்டலமும் சில பழங்களும் அடங்கிய பை.

lifeசில மணி நேரம் முன்பு

காலை நேரம் மணி பதினொன்று

‘’அம்மா பசிக்குது…’’  பசியால் அழும் குழந்தையை நெஞ்சோடு அணைத்து கண்ணீர் சிந்துவதைத்தவிர யாழினிக்கு வேறு வழி தெரியவில்லை. அருகில் இருந்த அவள் கணவன் பார்த்தீபனுக்கோ இந்தக்காட்சி ஆத்திரத்தையும் அழுகையையும் தந்தது. பால்மணம் மாறாத பச்சிளங்குழந்தையாக இருந்தால் தாய்ப்பால் ஊட்டலாம். வளர்ந்த குழந்தையாக இருந்தால் அவளே நிலைமையைப்புரிந்து கொள்வாள். இல்லை சொல்லிப் புரியவைக்க முடியும். இவளோ இரண்டுகட்டான், நான்கு வயதுக் குழந்தை. பிறந்தலிருந்து பணத்தில் புரள்பவர்கள் அல்ல யாழினி-பார்த்தீபன் குடும்பம் ஆனாலும் பணத்திற்கோ பாசத்திற்கோ பஞ்சம் இல்லை அவர்கள் இருவர் குடும்பத்திலும் . திருமணத்திற்கு பிறகும் பார்த்தீபனால் மகாராணியாக நடத்தப்பட்டவள் யாழினி. இளவரசியாகவே வளர்ந்தவள் அவர்கள் ஒரே மகள். இன்றோ அவர்கள் நிலை பிச்சைக்காரர்களைவிடவும் மோசமான நிலையில் .. இந் நிலைக்கு காரணமானவர்கள் மீது ஆத்திரம் வந்தாலும் அவனால் என்ன செய்துவிட முடியும்?

மீண்டும் அழுதாள் குழந்தை. குழந்தையைத்தூக்கியபடி நடந்துகொண்டிருந்த யாழினியின் ஈரக் கண்கள் மீண்டும் பார்த்தீபன் பக்கம் பார்க்க அவனும் என்ன செய்வான். பிள்ளைக்காக கையேந்தலாம் என்றால் யாரிடம் கையேந்துவது? சுற்றி நடந்துவந்துகொண்டிருந்த மக்கள் கூட்டத்தைப்பார்த்தான். ஆண்டியாய் இருந்தவனும் அரசனாய் இருந்தவனும் இங்கே ஒரே நிலையில்; வாழவழி கிடைக்குமா என்ற நிலையில்! எல்லாம் இழந்தவனையே அணுக தயங்காத எதிர்பார்ப்பு ஏதோ ஒன்றிரண்டு மிச்சமிருக்கம் இவர்களைமட்டும் விட்டுவிடுமா என்ன?

குழந்தையின் அழுகை நின்றபாடில்லை. பசி அரக்கனும் அவர்களை விடுவதாயில்லை .பசியால் அழுத மூன்று வயதுக் குழந்தைக்கு ஞானப்பால் கொடுத்து பாமாலை பாடவைக்க ஒரு சிவசக்தி இருந்தது. இந்த நான்குவயதுக்குழந்தையின் பசியைப்போக்க மனிதசக்தியால் கூட முடியவில்லை.

‘’ மகள் அழாதிங்கோ .. என்ட செல்லம்  அழாதிங்கோ.’’

அவனால்  முடிந்த சமாதானத்தைக் கூறினான். ஆனால் குழந்தை அழுகையை நிறுத்தினாள் இல்லை அழுதழுது ஓய்ந்தவள் தாயின் தோளிலேயே சரிந்தாள். இரண்டு நாட்களாக அவள் அழுவதும் இவன் சமாதனம் செய்வதும் தந்தையின் தோளிலோ தாயின் மடியிலோ அவள் சரிவதும் பழக்கமாகிவிட்டதால் அதிர்ச்சிக்குபதில் அழுகை முட்டிக்கொண்டுவந்தது.

தியம் 1.00 மணி

சூரியன் கருணை மறந்து சுட்டெரிக்க நடந்து நடந்து களைத்த கால்கள் அடுத்த அடி எடுத்துவைக்க மறுக்கவே அனைவருமாய் அரசமரம் ஒன்றின் கீழ் இளைப்பாற முடிவெடுத்தனர் . களைத்துப்போயிருந்த யாழினி மயங்கி மண்ணில் வீழ்ந்தாள். அருகில் நடந்துவந்துகொண்டிருந்தவர்களில் ஒருவயதான பெண்மணி அவளைத்தாங்கிப் பிடித்து தன் மடியில் கிடத்திக் கொண்டார். நான்கு வயதுக்குழந்தை தாங்காத பசியை யாழினி வயிற்றில் வளரும் மூன்றுமாத சிசுமட்டும் எப்படித்தாங்கிக் கொள்ளும்? ஒருவாரமாய் எப்போதவது கிடைக்கும் தண்ணீரை மட்டுமே தாங்கள் குடித்தகொண்டு கைவசம் இருந்த உணவை கையில் இருந்த குழந்தைக்கு கொடுத்து சமாளித்து வந்தனர். அந்த உணவும் தீர்ந்து இரண்டுநாட்கள் முழுதாய் முடிந்திருந்தது. நேற்றுவரை குடிக்க கிடைத்த தண்ணியும் இன்று இதுவரை இல்லை.

 அம்மா மயங்கவும் விழித்தக்கொண்ட குழந்தை மீண்டும் அழ ஆரம்பித்தாள். வேறு வழியின்றி மகளையும் மனைவியையும் அங்கேயே விட்டு உணவு தேடிப்புறப்பட முடிவெடுத்தான் பார்த்தீபன். பார்த்தீபனின் குழந்தையைப்போன்று அங்கு பசியால் வாடிக்கிடந்த ஏனைய குழந்தைகளின் தகப்பன்களும் , கணவன் ,சகோதரன் ,மகன் என உடம்பில் தெம்பிருந்த ஆண்கள் புறப்பட வயதான ஒன்றிரண்டு பெரியவர்கள் பெண்களுக்கும் குழந்தைகளுக்கும் காவல் என அங்கேயே இருந்தனர்.  செய்தி சொல்லிவிட்டு  மனைவியையும் குழந்தையையும் அரசமர நிழலில் இளைப்பாறவிட்டு அருகில் இருந்தவர்களிடம் பொறுப்பாக பார்த்துக் கொள்ளும்படி கூறிவிட்டு புறப்பட்டான் பார்த்தீபன். அவனுடன் ஏனைய ஆண்களும் புறப்பட்டனர். புறப்படும் அவனுக்கு அப்போது தெரியாது அடுத்த சிலமணிநேரங்களில் அவன் கொலைகாரன் ஆகப்போவது!

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.