(Reading time: 19 - 38 minutes)

வானிறங்கி நிலம் நோக்கி வந்த இடி துரத்தி வந்தவர்கள் தலையில் இறங்கியது. மரணத்தை கண்முன் காண்பது பார்த்தீபனுக்கோ குழந்தைக்கோ புதிதல்லவே.  சிறுதுநாட்களுக்கு முன்புதானே குழந்தை தன் இருவழி பாட்டி-தாத்தாவையும் இழந்திருந்தாள். அந்த மரணமும் அவள் கண்முன்தானே நிகழ்ந்திருந்தது. அதிர்ச்சியில் நின்றிருந்த தந்தையும் மகளும் சில நிமிடங்களின் பின்னரே சுயநியைவிற்கு வந்தனர் . கடவுள் கண்திறந்துவிட்டார் போலும் என்று எண்ணியபடி கடவுளுக்கு நன்றியை கூறியபடியே நடந்தான் பார்த்தீபன். ஓடும் தெம்பு அவனிடம் இல்லை. மனித மிருகங்களை பார்த்து பழகிவிட்டதால் காட்டுவிலங்குகளைக் எண்ணி பயமும் இல்லை. எனவே நடந்தான்.

போகும் பாதை தெரியவில்லை ஆனாலும் வெளியேறவேண்டும் என்ற எண்ணம் அவனுக்கு பாதை காட்டியது. இருட்டில் தட்டுதடுமாறி எப்படி வெளியேறினோம் என்பதே தெரியாமல் வெளியேறி ஒரு ஒற்றையடிப்பாதையில் வந்து நின்றான்  அடுத்த கண்டம் அவனை வரவேற்கக் காத்திருந்தது. களைத்து வேர்த்து கிட்டத்தட்ட அரைமயக்க நிலைக்கான அறிகுறிகளுடன் காணப்பட்ட பார்த்தீபன்  உச்சிவானைத்தொட்டிருந்த நிலவு வெளிச்சத்தின் உதவியால் அடைந்திருந்த இடம் ஒரு ஆற்றங்கரை மரத்தடி. இனி விடியும்வரை அவனுக்கும் குழந்தைக்கும் மரத்தடிதான் தஞ்சம் விடிந்த பின் மனைவியைத் தேடிச் செல்லலாம் என முடிவெடுத்தான்.

பயத்தினால் தன்னை இறுகப்பற்றியிருந்த மகளை மெல்ல விலக்கி இனி ஆபத்தில்லை என்பதை புரிய வைத்தபடி இருவரும் அந்த மரத்தடியில் உட்கார்ந்துகொண்டனர். அடிவாங்கி வீங்கிய தந்தையின் முகத்தை தன் சின்ன கைகளால் தடிவிக் கொடுத்தாள். மயிலிறகின் வருடல்கூட தோற்றுப்போகும் அவளின் கை வருடலில். அந்த பிஞ்சுக் கைகளுக்குள்ளேயே அடைக்கலமாகிவிட்டால் என்ன என தோன்றியது அவனுக்கு.  கையில் இன்னமும் தான் வைத்திருந்த உணவுப் பொட்டல பையிலிருந்து ஒன்றை எடுத்து மகளுக்கு ஊட்டி அவளின் பசியாற்றினான். யாழினியின் நிலையறியாது உணவை எடுக்க விரும்பவில்லை அவன் உணவை ஒதுக்கிய தந்தைக்கு தன் பிஞ்சிக்கைகளால் உணவை ஊட்டி அவனையும் பசியாற வைத்தாள். அடுத்த முறை உணவு ஊட்டும் சந்தர்ப்பம் கிடைக்குமோ கிடைக்காதோ விதியின் ரகசியம் அது.

.உணவை உண்டு முடித்தவள் தண்ணீர் கேட்க தந்தையும் மகளும் ஆற்றங்கரைக்கு நடந்தனர். அங்கே ஆற்றின் மறுகரையில் யாழினியும் மேலும் சிலரும் இருந்தனர். தாயைக்கண்டதும் குழந்தை அழ ஆரம்பித்தாள். தன் கண்முன்னாலேயே கயவர்களால் தூக்கிச் செல்லப்பட்ட குழந்தை இனிபார்க்கவே முடியாது என நினைத்த குழந்தை கண்முன்னே நிற்கிறாள் அவள் தந்தையுடன். சுமந்தவள் குழந்தையை அள்ளிக் கொள்ளத்துடித்தாள்.  பெற்றவள் கைகளில் சேர்ந்துவிடத்துடித்தாள் குழந்தை. ஆறு அவர்களின் உணர்வுகளுக்கு தடைபோட்டது. பார்த்தீபனுடன் சென்ற ஏனையவர்களும் ஒருவாறு அந்த ஆற்றங்கரைக்கு வந்துசேர்ந்தனர். ஒன்றுக்கொன்று சம்மந்தமே இல்லாத உணவு வகைகளை அள்ளிக்கொண்டு வந்திருந்தனர். அதுவே காட்டியது அவை திருடப்பட்ட உணவுகள் என்று. அன்றாடம் உழைத்து உண்டு தானும் தன்குடும்பமும் என நிம்மதியாகவாழ்ந்தவர்களை விதி இன்று திருடர்களாகவும் கொலைகாரனாகவும் மாற்றியிருக்கிறது. . அடுத்து அவர்கள் சொன்ன செய்தி அவர்களை அங்கிருந்தும் விரட்டியது.  தங்களை சிலர் துரத்திக்கொண்டு வருவதாகக் கூற மற்றவர்களையும் அழைத்துக் கொண்டுவந்து அனைவரும் ஆற்றைக் கடந்து செல்வதாக முடிவெடுத்தனர்.

அந்த ஆற்றங்கரையோரத்தில் யாழினியையும் மற்றவர்களையும் அங்கு யாரும் எதிர்பார்த்திருக்கவில்லை மற்றவர்களைப்போன்றே தானும் கேள்வியாய் மனைவியைப்பார்த்தான் பார்த்தீபன்.  யாழினி தன் வயிற்றில் கைவைத்து கண்ணீருடன் பார்த்தீபனைப்பார்த்தாள். அவள் வாய் உரைக்காத வார்த்தைகளை கண் உரைத்தது .

கடத்திச் செல்லப்பட்ட மகள் திரும்ப கிடைப்பாள் என்பது அவர்களைப் பொறுத்தவரை வெறும் கனவு . ஆகவே வயிற்றில் வளரும் குழந்தையைக் காரணம் காட்டி மற்றவர்கள் தங்களுடன் யாழினியையும் அழைத்து வந்திருக்கிறார்கள். நாளை காலை இந்த ஆற்றைக் கடப்பது என  அவர்கள் முன்னமே திட்டம்.போட்டிருந்தனர். எனவே உணவுதேடிப்போனவர்கள் திரும்பிவந்து பார்க்கும்போது அரசமரத்தடியில் தங்களைக் காணாவிட்டால் ஆற்றங்கரைக்கு தேடிவரக்கூடும் என நினைத்து வந்தவர்கள் ஆற்றைக் கடந்து காத்திருந்தனர். 

விடியும் வரை பொறுத்திருந்தால் ஆற்றைக்கடந்து அக்கரைக்கு செல்லமுடியாது. குழந்தை மீண்டும் அழ ஆரம்பித்தாள். எந்த சமாதானத்தையும் அவள் ஏற்க மறுத்தாள். தாயிடம் சேர்ந்துவிடுவதில்தான் அவள் அழுகை முற்றுப்பெறும் என்பதை அனைவரும் புரிந்துகொண்டனர். குழந்தையின் அழுகை சத்தம் யாரின் காதில் கேட்டாலும் ஆபத்து அனைவருக்கும்தான். தவிர அவர்களுக்கு எப்போது எப்படி எங்கிருந்து ஆபத்து வரும் என்பது தெரியாதே. ஆக அக்கரையைக்கடப்பது என முடிவெடுத்தனர். ஆற்றின் நீளம் குறைவு ஆனால் ஆழம்?  நள்ளிரவிற்கு மேல் இந்த ஆற்றின் நீர்மட்டம் கூடும் என்பதை அனைரும் அறிவர். நள்ளிரவிற்கு முன் ஆற்றைக்கடந்தால் உயிருக்கு உத்தரவாதம் உண்டு. அதன் பின்னர் கடக்க முயல்பவர்கள் நிலை ……?

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.