(Reading time: 19 - 38 minutes)

காலடியில் நின்றிருந்த குழந்தையைத்தூக்கி அவள் கன்னங்களில் மாறிமாறி முத்தமிட்ட பார்த்தீபன் குழந்தையை தன் தோளில் ஏற்றிக்கொண்டு அக்கரையில் நின்றவர்களின் மறுப்பையும் மீறி ஆற்றில் இறங்கினான். இதுவரை இருந்த பசி ,பயம் என்பன மறந்து தன் தந்தையின் கழுத்தை சுற்றி கால்களைப்போட்டுக்கொண்டு ஒய்யாரமாக அமர்ந்திருந்தாள் குழந்தை. அவளைப்பொறுத்தவரை இது சுகமானதொரு பயணம் அப்படித்தான் குழந்தையிடம் சொல்லிவைத்திருந்தான் பார்த்தீபன். காத்திருக்கும் ஆபத்து அவள் அறியக்கூடாது என்பது அவன் எண்ணம்.

பையில் மீதமிருந்தமாயிருந்த பழங்களை வைத்திருந்த பையை  தந்தையின் தலையில் வைத்துப்பிடித்தபடி தன் சின்னஞ்சிறு கால்களால் நீரை எத்தி எத்தி விளையாடியபடியே அந்த பயணத்தை அனுபவதித்தாள் குழந்தை. ஆற்றின் பாதிதூரம்வரை இடுப்பளவு இருந்த தண்ணீர் போகப்போக அதிகரித்துக்கொண்டே வந்தது. மார்பளவு தண்ணீர். நள்ளிரவைத்தாண்டிய வேளை என்பதால் நீரின் குளுமை காற்றின் ஈரப்பதன் எல்லாமாக சேர்ந்து வாட்டி எடுத்தது .கரையில் இருப்பவர்களையே வாட்டி எடுக்கும் குளிர் நீரில் இருப்பவர்களை விட்டுவிடுமா என்ன ? உடல் நடுங்க ஆரம்பித்தது. பசிக்கு பழக்கப்பட்ட உடல் குளிரைத்தாங்க மறுத்தது. ஆனால் அவன் தகப்பனாயிற்றே போராடித்தான் ஆகவேண்டும். நடக்க மறுத்த கால்களை பலவந்தமாக இழுத்துக்கொண்டு நடந்தான். அடிபட்டகால் சுர் சுர் என வலித்தது. பார்த்தீபன் நடையின் வேகம் குறைந்துகொண்டே போனது.

நேரமாகஆக கால்கள் விறைத்துவிடும் நிலைக்கு வந்தபோது நீர்மட்டம் கழுத்தளவு உயர்ந்திருந்தது. கரையில் நின்றவர்கள் கண்ணில் மரணபயம் . நீரில் நின்றவர்களுக்கோ இவையே தங்களின் கடைசி நிமிடங்கள் என்ற இழப்புணர்வு. அந்த திக் திக் நிமிடங்களை கடந்தால்போதும் அவர்கள் விதியை வென்றவர்களாவர்.

கரையை கடக்க இன்னும் சில நொடிகள் என்ற நிலையில் நீர்மட்டம் வாய்வரை எட்டிவிட்டது. கழுத்திலிருந்த குழந்தைக்கு முழங்காலுக்கு மேல் தண்ணீர். பார்த்தீபனின் உடன் வந்தவர்கள் ஒருவாறு கரையை எட்டிவிட குழந்தையைச் சுமந்தவாறு வந்த பார்த்தீபன் பின்தங்கிவிட்டான். இன்னும்சில அடிகள். கரையைத்தொட.. இதோ இதோ என்ற நிலை கரையிலிருந்தவர்களும் கரையேறியவர்களும் கையைப்பிசைந்தபடி கரையோரம் செய்வதறியாது நின்றிருந்தனர். அந்த இரவுப்பொழுதில் இரு உயிர்கள் ஆபத்தில் இருக்கும் தருணத்தில் அந்த பலத்தகாற்றுக்கு அங்கு என்ன வேலையோ வீசித்தொலைத்தது. தோளில் குழந்தை, சோர்ந்துபோன உடல் சுழல் காற்றுக்கு தாக்குப்பிடிக்க முடியாமல் தள்ளாட குழந்தையுடன் தண்ணீரில் சரிந்தான் பார்த்தீபன். கண்ணால் கண்ட குழந்தை கைசேராமலேயே போய்விட்டாளா? கட்டிய கணவன் இறப்பைக் கண்ணால் காண்பதா? அலறியே விட்டாள் யாழினி. அவளின் அலறலின் எதிரொலி  அந்த இடத்தில் ஒரு அதிர்வைக்கொடுக்க தவறவில்லை.

சரிந்தவன் தலை நீரின் மேற்பரப்பிலிருந்து உள்ளே சென்றுவிட மூழ்கிவிட்டான் என நினைத்து மற்றவர்கள் வருந்த பார்த்தீபனின் கை கரையிலிருந்த ஒரு கம்பைப்பற்றியிருப்பதை அங்குநின்றவர்களில் ஒருவர் கண்டுகொள்ள துரிதமாக செயற்பட்டு பார்த்தீபனையும் குழந்தையையும் கரையேற்றிவிட்டனர். காற்றுவீசுவதற்கு சிலவிநாடிகள் முன்னரே முன்எச்சரிக்கையாக தனது வலது கையை நீட்டி எட்டி கரையில் நடப்பட்டிருந்த ஒரு கம்பைப்பற்றிக்கொள்ள உயிர்பிழைக்கும் வாய்ப்பு தந்தைக்கும் மகளுக்கும் கிடைத்தது. பார்த்தீபன் சரிய தோளில் இருந்த  அவனுடனேயே சரிந்த குழந்தை சரியும்போது சுதாகரித்துக் கொண்டு  பார்த்தீபன் கழுத்தை இறுகப்பற்றிவிட்டாள். கழுத்தை பலமாகப்பிடித்திருந்ததால் குழந்தை நீரில் மூழ்கும்போதும் கழுத்தை விடவில்லை. கரையில் நின்றிருந்தவர்கள் கைகொடுத்து பார்த்தீபனை கரையேற்றிவிட்டனர். தகப்பனிடமிருந்து தாயிடம் தஞ்சம் புகுந்தாள் அவள்.  அவள்பெயர் தமிழரசி. அவர்கள் இலங்கையின் வடபகுதி மக்கள். நடந்து கொண்டிருந்த போரில் மிச்சமிருக்கும் உடமைகளையும் உறவுகளையும் ஒட்டிக்கொண்டிருந்த உயிரையும் காத்துக்கொள்ள ஓடிக்கொண்டிருக்கிறார்கள் விடைதருமா இந்த வாழ்க்கை என ஏங்கி எதிர்பார்த்துக் கொண்டு…

This is entry #18 of the current on-going short story contest! please visit contest page to know more about the contest

{kunena_discuss:926}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.