(Reading time: 3 - 5 minutes)

முதல் காதல் - கீர்த்தனா

This is entry #22 of the current on-going short story contest! please visit contest page to know more about the contest

காதல்!காதல்!!காதல்!!! எங்கும் காதல் எதிலும் காதல்.

காதலில்லா இடமேது. ஓரறிவு முதல் ஆறறிவு உயிரினங்கள் வரை காதலிக்கின்றன.

ஏன் நம் தமிழ் சினிமா காட்டாத காதலா? பார்த்த உடன் காதல்,பார்க்காமலே காதல்,தொட்டவுடன் காதல்,தொடாமலே காதல்,பணத்திற்காக காதல் எனப் பல பல பரிமாணங்களை இவ்வுலகிற்கு காட்டி விட்டது.

first love"அண்ணலும் நோக்கினான் அவளும் நோக்கினாள்" என கண்டவுடன் காதல் கொண்ட ராமர்-சீதையின் முதல் காதல் கூட வெற்றியே.

காதலர்கள் அழிந்திருக்கலாம்.ஆனால் காதலுக்கு அழிவில்லை. இப்படி அழிவில்லாத என்னுடைய முதல் காதலைப் பற்றி கொஞ்சம் உங்களோடு பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.(நீயுமா???!! அப்படிலாம் அதிர்ச்சி அடையாம கதையை படிங்கப்பா)

அவள் என்னவள் . அவள் என் உயிர். ஆனால்.........???????

"முகம் பார்த்து வரும் காதல் முதுமை வரும்வரை,

அகம் பார்த்து வரும் காதல் ஆயுள் உள்ளவரை" - என்ற கூற்றில் நிறைய நம்பிக்கை எனக்கு உண்டு.

முகம் பார்க்க என்னால் இயலாது. இருக்கட்டுமே.அதனால் என்ன?!!!!"Love is blind”.

எனக்கு அவளை மிகவும் பிடிக்கும். அவள் எங்கு சென்றாலும் நானும் கூடவே செல்வேன். அவள் ரசிப்பதை நானும் ரசிப்பேன்.

உள்ளுக்குள் பொறாமை இருந்தாலும் அவள் அவளுடைய கணவருடன் பேசும் அழகை கேட்டு ரசிப்பேன். ஏனெனில் எனக்கு அவளை அவ்வளவு பிடிக்கும். அவளின் கணவரிடம் கூட என்னைப் பற்றியே அதிகம் பேசுகிறாள்.அவனும் கேட்டு ரசிக்கிறான் பொறாமை சிறிதும் இல்லாது. அவனுமே அவளிடம் என்னைப் பற்றி பெருமையாக பேசுகிறான்.

இது எனக்கு எப்பொழுதும் ஆச்சரியத்தையே தரும் எப்படி எனக்கு இருக்கும் பொறாமை அவனுக்கு இல்லையென்று. ஒருவேளை என்னளவுக்கு அவள் மேல் அவனுக்கு காதல் இல்லையோ??!! அப்படி நினைக்க முடியாதபடி அவளை கண்ணுக்குள் வைத்து அவன் தாங்குகிறான். இதனால் அவனையும் எனக்கு பிடிக்க ஆரம்பிக்கிறது.

அவள் செய்யும் ஒவ்வொரு செயலிலும் எனக்கான காதல் தெரியும். அது போதும் எனக்கு. அவள் உண்ணும் உணவு எனக்காக.அவள் உறங்குவது எனக்காக. இப்படி காதலை மட்டுமே காமிக்கும் அவளிடம் எப்படி என் கோவத்தை காட்ட இயலும். ஆனால் அவளை நான் உதைப்பேன். அதை கூட சந்தோசமாக வாங்கி கொள்வாள்.

என்ன இப்படி வெறும் நான் நான் என்று சொல்லிக் கொண்டிருக்கிறானே நான் யார் என்று அறிய ஆவல் உங்களுக்கு இல்லையா? நான் தான் தாயின் வயிற்றில் வளரும் கரு. என் முதல் காதல் என் தாய்.

என்னுடைய முதல் காதலுக்கு சொந்தக்காரி அவள் மட்டுமே. அவளைத் தவிர வேறு யார் இருக்க முடியும். நான் உலகை முதலில் பார்த்தது அவள் வழியாக. என்னை கண்ணால் காணும் முன்னே என் மேல் அன்பை மட்டுமே செலுத்தியவள். எனக்காக அவளுக்கு பிடித்த உணவுகளை தியாகம் செய்தவள். பல இரவுகள் என்னால் அவள் உறக்கத்தை தொலைத்த போதும் என் மேல் நேசத்தை மட்டுமே செலுத்தியவள். இருட்டில்(கருவறையில்) இருப்பது கூட சொர்க்கத்தில் வாழ்வது போல தான் என எனக்கு காட்டியவள். அன்பை அறிமுகப்படுத்தி அள்ள அள்ள குறையாமல் அள்ளி தரும் அக்ஷய பாத்திரம் அவள்.

பின்குறிப்பு: உலகில் உள்ள அனைத்து தாய்மார்களுக்கும் இக்கதை சமர்ப்பணம்.

 

This is entry #22 of the current on-going short story contest! please visit contest page to know more about the contest

{kunena_discuss:926}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.